Wednesday, December 17, 2008

புஷ் செருப்படியை ஆதரித்தவர் பெங்களூரில் கைது

நேற்று முன்தினம் புஷ் மீது எறியப்பட்ட செருப்பை பார்க்க, உலகமெங்கும் மக்கள் செருப்பு என்று கூகிளில் தேடி கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த மனுஷனுக்கு இது தேவைதான் என்று சொல்ல, சிலர் எவ்ளோ நேக்கா எஸ்கேப் ஆனாருன்னு புகழ்ந்திட்டு இருக்காங்க.

அவ்ளோ ஸ்பீடா வந்த செருப்புக்காக புஷ் குனிந்த வேகம், அபாரம். எப்பவும் இந்த மாதிரி ஏதாச்சும் எதிர்பார்த்திட்டே இருப்பாரு போல.

--------

பெங்களூர் மைக்கோ கம்பெனியில் நாற்பது வயதான ஜமீல் என்பவர் வேலை பார்த்து கொண்டு வருகிறார். நேத்து ஆபீஸில் இது பற்றி ஜமீலுடன், அவருடன் வேலை பார்ப்பவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள். ஜமீல் செருப்படியை ஆதரித்து, செருப்பை எறிந்த முந்ததர் அல்-செய்தியை புகழ்ந்து கொண்டிருந்தார். என்னடா ரொம்பத்தான் புகழுகிறாரேன்னு கூட இருந்தவுங்க போலீசுக்கு போன் போட்டுட்டாங்க.

வந்த போலீஸும் அவர ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அவர் இடத்தை சோதனை போட்டு பார்த்தப்ப, தீவிரவாத தாக்குதல் சம்பந்தமாக ஏகப்பட்ட நியூஸ் கட்டிங்க்ஸ் இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம, பாராளுமன்ற தாக்குதல் வழக்குல கைது செய்யபட்டிருந்த அப்சல் குருவை விடுதலை செய்ய கோரி, ஜனாதிபதிக்கு ஜமீல் அனுப்பியிருந்த லெட்டரும் இருந்திருக்கு.

இப்ப, ஜமீலுக்கு ஏதேனும் தீவிரவாத கும்பலுடன் சம்பந்தம் இருக்குதான்னு தீவிரமா விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.

---------

இனி, கருத்து சொல்லும் போது, ஜாக்கிரதையா கருத்து சொல்லுங்க...

நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா

14 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

அர டிக்கெட்டு ! said...

அட கேவலமே!....
இது என்ன பாஸிஸ நாடா....!

Anonymous said...

நீதி:
கூட இருக்கிறவன் அவனா இருந்தால்...
சும்மான்னாலும் போட்டு கொடுத்துட்டு வேடிக்கை பார்ப்பான். சாக்கிரதை
கூட இருப்பவன் நல்லவனா பார்.

said...

என்ன இது? எல்லோரும் பெயரில்லாமல் கருத்து சொல்றாங்க...

Anonymous said...

//என்ன இது? எல்லோரும் பெயரில்லாமல் கருத்து சொல்றாங்க...//

எல்லாரும் ஜாக்ரதையா கருத்து சொல்லணம்ன்னு தீர்மானிச்சுடாங்க.

said...

//எல்லாரும் ஜாக்ரதையா கருத்து சொல்லணம்ன்னு தீர்மானிச்சுடாங்க.//

:-))

Anonymous said...

//அட கேவலமே!....
இது என்ன பாஸிஸ நாடா....!//

What kind of question is that? It is one of the worst fascist nation you could ever find! ;-)

said...

புஷ் செருப்பெறியை எதிர்ப்பவர்களுக்கு பரிசு கொடுப்பாங்க போல் உள்ளதே!!!

said...

//
What kind of question is that? It is one of the worst fascist nation you could ever find! ;-)
//

Exactly, Its one of the WORST Fascist nation. The BEST Fascist nation is probably Saudi Arabia.

said...

வாங்க யோகன் பாரிஸ்

said...

வாங்க vajra

said...

///What kind of question is that? It is one of the worst fascist nation you could ever find! ;-)////

appidi podu!!!

said...

What kind of question is that? It is one of the worst fascist nation you could ever find! ;-)//


Romba sari!!!!

said...

வருகைக்கு நன்றி மோகன் கந்தசாமி

said...

ஜமீலை நேற்று விடுதலை செய்துவிட்டார்கள்.