Monday, May 25, 2009

பெங்களூர் - டைம்பாஸ் வித் சயின்ஸ்

பெங்களூர் மையப்பகுதியில் உள்ளது விஸ்வேஸ்வரய்யா மியூசியம். இப்ப இல்ல, ரொம்ப வருஷமா இருக்குது. கிட்டத்தட்ட 47 வருசமா. யாரு விஸ்வேஸ்வரய்யா? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே, பொறியியல் வல்லுனரா பல சாதனைகளை பண்ணியவர். பல முக்கியமான இடங்கள் இன்றும் இவர் பெயரை சொல்லி கொண்டு இருக்கிறது. உதாரணமாக, மைசூர் அணை, திருப்பதி மலை சாலை. இவர் மைசூர் திவானாகவும் இருந்திருக்கிறார். கர்நாடகாவில் இவர் பெயரில் நிறைய கல்வி மையங்கள் உள்ளது.



இப்ப நீ எதுக்கு அந்த பக்கம் போனன்னு கேட்கறீங்களா? ஸ்கூல்ல படிக்குற பையன், பெங்களூர் சுத்தி பாக்கணும்ன்னு சொன்னா, இங்க தானே கூட்டிட்டு போகணும்? நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போது, என்னை இங்க தான் டூர்ல கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கு அப்புறம் இப்பதான் போறேன்.



அப்படி என்ன இருக்குது? அறிவியல் வளர்ச்சிகள், அறிவியல் பயன்பாடுகள், தொழில்நுட்ப புதுவரவுகள் என்று அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை காணலாம். நல்லா இருக்குதா? அறிவியல் ஆர்வம் இருந்தால், இந்த இடம் கண்டிப்பாக பிடிக்கும். அது மட்டும் இல்லை. குழந்தைகளை கவரும் நிறைய அறிவியல் விளையாட்டு சமாசாரங்களும் உள்ளது.



உள்ள போனவுடன் உங்களை வரவேற்பது இந்த டைனோசர்தான். அசையுது. உறுமுது. என்ன, திருப்பி திருப்பி அதையே செஞ்சிட்டு இருக்குது.



இங்க இருபது ரூபாய்க்கு 3டி படம் காட்டுறாங்க. அவுங்க கொடுக்குற கண்ணாடிய போட்டுக்கிட்டு பார்த்தா, பாம்பு வந்து மூக்க கொத்துது, மீன் நம்ம சுத்தி வருது, அலாவுதீன் கூட பறந்து போகலாம், தண்ணிக்குள்ள தவழ்ந்து போகலாம். இன்னும் பல. அதுக்காக ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்ப்பார்க்காதீங்க. 20 ரூபாய்க்கு எவ்வளவோ, அவ்வளவு. குழந்தைகளை விட, பெரியவுங்க தான் கைய, காலா ஆட்டிட்டு இருந்தாங்க.



இதோ, இந்த பையன் ஆடிட்டு இருக்குறது, வெர்சுவல் கேம். அந்த பையனுக்கு எதிர இருக்குற டிவில வருற கேமுக்கு ஏத்தப்படி கைய கால ஆட்டினா, அதாவது டிவில, பால் வரும். பையன் கைய, கால யூஸ் பண்ணி அத அடிப்பான். அவனோட செய்கைகள், அவன் முகத்தோட பின்னாடி இருக்குற டிவில வரும்.





இந்த மியூசியத்துல ஒவ்வொரு தளமாக, அறிவியல் களங்களை பிரித்திருக்கிறார்கள். ஒன்றில் விண்வெளி, இன்னொன்றில் மின்னணு, மற்றொன்றில் உயிரி தொழில்நுட்பம் என்று பல தளங்கள். இவற்றுக்கிடையே குழந்தைகள் விரும்பும் இயற்பியல் விளையாட்டுகளும் உண்டு.






பசித்தால் சாப்பிட கேண்டீனும் உண்டு. நல்ல அசைவ சாப்பாடு சாப்பிட விரும்புபவர்கள், பக்கத்தில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள நந்தினிக்கு சென்று நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிடவும்.



சரியான சகோதரர்கள், அதான் ரைட் பிரதர்ஸ் கண்டுபிடித்த முதல் விமானத்தின் மாடல், அதே சைஸில் இங்கு உள்ளது. அவரு அதுல எப்படி பறந்து போனாருன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.



எப்படித்தான் இப்படி பறக்க தோணிச்சோ?



பூட்டு உடைக்க ஆசைப்படுபவர்கள் இதை பார்த்து கற்று கொள்ளலாம்.



பொதுவா, சனி, ஞாயிறு நல்லா கூட்டமா இருக்கும். முக்கால்வாசி, சிறுவர் பட்டாளம் தான். வெளியூரில் இருந்து வந்திருக்கும் பள்ளி சுற்றுலா கூட்டங்களை காணலாம். நாம போன சுற்றுலா நினைவுக்கு வரலாம். மியூசியம் பார்க்கும் ஆர்வமில்லாதவர், ஏதோ காணாததை காணும் பரவசத்துடன் இருக்கும் இவர்களை காண கூட சென்று வரலாம்.

அதுவும் வேண்டாமா? இது பெண்களூர்ங்க! கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.

7 comments:

pudugaithendral said...

அறிவியலின் அற்புதங்களைக் காணச் செய்வதற்காகவே என் பிள்ளைகளை அழைத்துச் சென்றுள்ளேன்.

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம்.

பதிவிற்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

நானும் சென்றிருக்கிறேன் [பெங்களூர் வரும் உறவினர்களுக்காக பலமுறை:)!]. அருமையாக படங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

Tech Shankar said...

கலக்கல். சுத்தமா இருக்கா? அதைச் சொல்லுங்க முதலில். pollution free ஆ வைச்சுருக்காங்களா?

நான் இன்னும் போகல. 5 வருசமா இங்கே இருந்தும் போகல. உங்க பதிவை படிச்சதும் மனசுக்குள்ள பட்சி கத்து.. போகச்சொல்லி.

சரவணகுமரன் said...

நன்றி புதுகைத் தென்றல்...

சரவணகுமரன் said...

சுத்தமாத்தான் இருக்குதுங்க... தாராளமா போகலாம்...

Muruganantham Durairaj said...

Good Words.. presented in nice manner..

நல்ல பதிவு

சரவணகுமரன் said...

நன்றி முருகானந்தம் துரைராஜ்