Tuesday, January 18, 2011

ரொம்ப பிஸியாக்கும்

ஆமாங்க... நான் இப்பல்லாம் ரொம்ப பிஸி...

நாலைஞ்சு பதிவா போடுற விஷயத்தை சுருக்கமா ஒரு பதிவுல சொல்றேன். கேட்டுக்கோங்க.

போன வாரம், திருப்பதி போனேன். ஒரு பெருமாள் பக்தர் டைம் டேபிள் போட்டுக்கொடுத்தாரு. அப்படியே எக்ஸிக்யூட் பண்ணிட்டு வந்துட்டேன்.

வெள்ளி இரவு - பெங்களூரில் இருந்து திருப்பதிக்கு பஸ்.
சனி காலை - ஸ்ரீநிவாசத்தில் 400 ரூபாய் வாடகைக்கு வாசம். கபில தீர்த்தம். ஸ்ரீநிவாசமங்காபுரம். ஸ்ரீவாரி மெட்டு. அப்படியே மலைக்கு 1 மணி நேர நடைப்பயணம்.
சனி மதியம் - வராக புஷ்கரிணியில் குளியல். வைகுண்டம் க்யூ. சுவாரசிய மனிதர்கள்.
சனி மாலை - ஏழுமலையான் தரிசனம். கை நிறைய லட்டு.
சனி இரவு - ஸ்ரீநிவாசத்தில் ஏசி அறை தூக்கம்.
ஞாயிறு காலை - அலமேலுமங்காபுரம். கோவிந்தராஜ பெருமாள் கோவில்.
ஞாயிறு மதியம் - பென்ஸ் பஸ்ஸில் திருப்பதியில் இருந்து பெங்களூருக்கு திரும்பல்.
ஞாயிறு மாலை - பெங்களூர் மெஜஸ்டிக்.இரண்டு நாள் ப்ளானில் திருப்பதி செல்பவர்கள் இதை பாலோ செய்யலாம். தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பெற்றுக்கொண்டும் செல்லலாம். அல்லது, படியேறி செல்லும்போது வழியில் விற்கிறார்கள். அங்கு வாங்கினால், ஈசியாக உள்ளே செல்லலாம்.ரயில் நிலையம் அருகே இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் கோவில் வாசலில் தசாவதார படத்தின் முதல் எபிசோட் கதையை எழுதி வைத்திருக்கிறார்கள்.

மெஜஸ்டிக்கில் ஒருநாள் பைக் நிறுத்த வாடகை ஐம்பது ரூபாய். ரெண்டு நாளுக்கு நூறு ரூபாய். :-( கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருந்தால், பஸ்ஸில் சென்று இருக்கலாம்.

---

சென்ற வாரம், அலுவலக வேலையாக சென்னை சென்றிருந்தேன். ஹோட்டல் சவேராவில் ரூம் போட்டிருந்தார்கள். அங்கு மதியம் 12 மணிக்கு செக்-அவுட் டைம்மாம். காலை ஆறு மணிக்கு வந்து, இரவு எட்டு மணிக்கு சென்றால், இரண்டு நாட்கள் வாடகை கொடுக்க வேண்டும்.

மதியம் வேலை முடிய, புத்தகக்கண்காட்சி சென்று இருந்தேன். பெங்களூர் கண்காட்சியில் வாங்கியவற்றையே, இன்னும் படிக்காததால், வரலாற்று சுவடுகள் தவிர வேறு எதுவும் வாங்கக்கூடாது என்றுதான் சென்று இருந்தேன். கிழக்கில் மட்டும் கிரடிட் கார்டு ஒத்துக்கொண்டதால், அங்கு சில புத்தகங்கள் எடுத்தேன். காலையில் இருந்து நடந்துக்கொண்டே இருந்ததால், கிளம்பும் முன்பு கொஞ்ச நேரம் வெளியில் இருந்த சேரில் உட்கார்ந்துவிட்டு வந்தேன்.

திரும்பி செல்ல, கேபிஎன்னில் டிக்கெட் புக் செய்திருந்தார்கள். டி-நகரில் கேபிஎன் இருந்த சாலை எங்கும் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரித்து இருந்தார்கள். சென்னை சங்கமம். நேரமில்லாததால் உள்ளே செல்லவில்லை.

---

பொங்கலன்று இரவு ஆடுகளம் சென்றேன். ரொம்ப நாளைக்கு பிறகு, செகண்ட் ஷோ. ஆரம்பத்தில் கூட்டம் இல்லை. பிறகு, முழுதாக நிரம்பிவிட்டது. முதல் இரண்டு பாடலுக்கும், தியேட்டரில் செம ஆட்டம். படம் எனக்கு ஓகே.

---

ட்ரெயினில் டிக்கெட் புக் செய்யும்போது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தால் எனக்கு எப்பவுமே கன்பர்ம் ஆகும். அதுவே என் நண்பனுக்கு பண்ணும்போதெல்லாம் கன்பர்ம் ஆவதில்லை. இப்படியே, தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த பொங்கலுக்கு, எங்கள் இரண்டு பேருக்குமே சேர்த்து டிக்கெட் புக் செய்தோம். வெயிட் செய்து பார்த்துக்கொண்டே இருந்தோம். சார்ட் தயாராகுவதற்கு முன்பு வரை, இருவருக்குமே சீட் கன்பர்ம் ஆகவில்லை.

சார்ட் தயாரானது. எனக்கு ஆர்ஏசி. அவனுக்கு திரும்பவும் வெயிட்டிங் லிஸ்ட் 1.

.

Saturday, January 1, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2011

வருஷ துவக்கத்தின் முதல் பதிவு. சம்பிராதயமான பதிவு.அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

---

இதுவும் வழக்கம் போல் ஒரு நாள் என்றாலும், கடந்த ஒரு வருடம் எப்படி இருந்தது, என்ன சாதித்தோம் என்று நினைத்துப்பார்க்கவும், வரும் வருடம் என்ன செய்யப்போகிறோம், எப்படி செய்யப்போகிறோம் என்று திட்டமிடவும், இந்நாளை செலவு செய்யலாம்.

ஆனால் இந்த நாளில் பண செலவை இழுத்துவிட பலர் கிளம்பி வந்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு மூன்று நாட்களில், எனக்கு வந்த மெசேஜ்கள் அனைத்தும் 31ஆம் தேதி இரவு உண்ணவும், ஆடவும், தண்ணியடிக்கவும் அழைப்புவிடும்வண்ணமாக இருந்தது. இந்த ஹோட்டலில் 3500 ரூபாய், அந்த ஹோட்டலில் 5000 ரூபாய் என்று. 31ஆம் தேதி இரவு, காஸ்ட்லியான இரவாக மாறி வருகிறது.

---

ஏர்டெலில் இரண்டு நாட்கள் முன்பே சொல்லிவிட்டார்கள். 31ஆம் தேதியும், 1ஆம் தேதியும் மெசேஜ் கட்டணம் 1 ரூபாயாம். எவ்வளவு வெவரம்? எந்த எம்பிஏ மேலாண்மை நிபுணர், இப்படி மொள்ளமாறி ஐடியா கொடுக்கிறாரோ?

---

ஒரு கூட்டம் இரவு ஹோட்டல்களில் கூடுகிறது என்றால், இன்னொரு கூட்டம் காலை கோவில்களில் கூடுகிறது. நானும் இந்த வகைதான். ஒருமுறை நண்பர் ஒருவருடன், வருடப்பிறப்பிற்கு கோவிலுக்கு சென்று, அங்கிருந்த வரிசையை கண்டு மிரண்டு, தெய்வக்குற்றம் ஆகிவிடக்கூடாதென்று அந்த நீண்ட வரிசையில் நின்று, ஒரிரு மணி நேரத்திற்கு பிறகு சாமி கும்பிட்டுவிட்டு வந்தோம். இந்த முறை அப்படியெல்லாம் இல்லாமல், ஊரைவிட்டு தள்ளி இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சீக்கிரம் வந்துவிட்டேன்.

இந்த வருடம் எல்லாமே சீக்கிரம் நடந்துவிட்டால் நல்லது.

இதற்கு மேல் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருந்தால், இப்பதிவு இரண்டாம் தேதி தான் வருமென்பதால், இத்துடன் நிறுத்தி பப்ளிஷ் செய்கிறேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

.