Monday, March 17, 2008

அன்புமணி ராமதாஸின் நல்லெண்ணம்?

அன்புமணி ராமதாஸ் எப்படி எம்பி ஆனாரு, எப்படி மத்திய அமைச்சர் ஆனாரு, எய்ம்ஸ் தலைவருடனான ஈகோ அடிதடி எதுக்கு , அவரோட கட்சி எப்படிப்பட்டது, அவரோட அப்பா எப்படி என்பதெல்லாம் விட்டுடலாம். புகைபிடிப்பதற்கு எதிரான அவரின் நடவடிக்கைகளான சிகரெட் அட்டை பெட்டியில் எலும்பு கூடு, தொலைகாட்சி/சினிமாவில் சிகரெட்/மதுவுக்கான தடை, பிரபல நடிகர்களுக்கு (ரஜினி, விஜய், ஷாருக்கான்) திரையில் புகைபிடிப்பதை கைவிட வேண்டுகோள் போன்றவை இவர் 'ரொம்ப நல்லவரோ' ன்னு தோண வைப்பவை.

இப்ப அடுத்த கட்டமா உடல் உறுப்பு தான சட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறார். அதுதான் Presumed consent. அதாவது இதுவரை உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான ஒப்புதலை அளித்தால் மட்டுமே அவர் இறந்த பின்பு அவர் உடலில் இருந்து உறுப்பு தானம் செய்ய எடுக்கப்படும். இந்த சட்ட மாற்றத்தின் மூலம் இறந்தவர் தானத்திற்கு ஏதும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தாலோலிய அவர் உடலில் இருந்து உறுப்பு தானம் செய்ய ஏதும் தடை இல்லை.

இதை முதல் கட்டமாக கண்ணிலிருந்து ஆரம்பிக்க உள்ளார்கள். இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே spain போன்ற நாடுகளில் உள்ளன. இந்தியாவிலும் இது உடல் உறுப்பு தான சட்டம் 1994 இல் பரிந்துரைக்க பட்டுள்ளது.

இச்சட்டம் மூலம் இந்தியாவில் முழுமையான வாழ்க்கையை வாழ முடியாமல் கஷ்டப்படும் ஏராளமான பேர் பயனடைவார்கள். அது போல் தானத்தை பற்றி தெரிந்து இல்லாதோர், தெரிந்திருந்தும் உறவினர்களால் தானம் செய்ய முடியாமல் இருப்போர் திருப்தி அடைவார்கள்.

ஏற்கனவே இவர் நல்லதோ, கேட்டதோ எது செய்தாலும் விமர்சனம் செய்து வரும் வட இந்திய பத்திரிக்கைகள், சேனல்கள் இதற்க்கு என்ன சொல்ல போகிறார்களோ? அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பலாம்.

பொதுவாக இந்தியாவில் மருத்துவ துறை, மருத்துவமனைகள் அமைப்பதிலும், அங்கிகாரம் வழங்குவதிலும், மருத்துவ கட்டமைப்பிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வரும். எனக்கென்னவோ அன்புமணி மருத்துவ துறை அமைச்சர் ஆனபின்பு தான் அந்த துறையில் பல துறை தாண்டிய மாற்றங்கள் நடந்து வருவது போல் தோன்றுகிறது. ஒரு வேளை, இப்போது தான் பப்ளிசிட்டி செய்ய படுகிறதோ?

அவர் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க நிறைய காரணங்கள் இருக்கலாம். ஏற்கனவே பரிந்துரைக்க பட்டதை செயல் படுத்த நினைத்திருக்கலாம், அரசியல் ரீதியாக பிரபலமடைய நினைத்திருக்கலாம், ஒரு மருத்துவராக தான் நேரில் சந்திந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வாக நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் மக்களின் வாழ்வில் நல்ல முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருமேமானால், கண்டிப்பாக அதை நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.

Wednesday, March 5, 2008

சென்னையின் அடையாளம் தமிழ் பட ரசிகனா?

இன்று (05-03-2008) டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில் சென்னை பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. ஆசிய மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் தரவரிசையில், இந்திய நகரங்களில் முதலிடமாக சென்னை வந்துள்ளது. உலக நகரங்களில் 138 வது இடத்தில் சென்னை உள்ளது. முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இது பற்றிய செய்தியை இந்த படத்துடன் வெளியிட்டு உள்ளார்கள்.முன்பெல்லாம் சென்னை, தமிழகம் பற்றிய பொதுவான செய்திகளுக்கு கோவிலை அடையாளமாக போடுவார்கள். இன்று இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். செய்திக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத படம்.சென்னையின் அடையாளம் ரஜினியா? ரஜினியின் படங்களா? ரஜினி ரசிகர்களா? சினிமா பைத்தியங்களா? அவர்கள் செய்யும் கேனத்தனமான செயல்களா?இது அனைத்துமே சென்னை மக்களை, தமிழர்களை தரம் தாழ்த்துபவைகள். சிவாஜி படத்தின் போது தேசிய மீடியாக்கள் அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்து மகிழ்ந்த மனம் இன்று அசிங்கபடுகிறது.