Wednesday, August 27, 2008

கூகிள் இனி என்ன செய்யும்?

இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம். இனி?

--------------------------

"டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?"

"நீ எங்க வச்சியோ?"

மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க,
- உன் சட்டை பை (உன்னோடது)
- உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது)
- ஊரில் உள்ள உன் பெட்டியில்
என்று இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும்.


--------------------------

உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது.

கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீங்க. உடனே, கூகிள் மேப்ஸ் பக்கத்தில உலக வரைப்படத்துக்கு மேல புள்ளி புள்ளியா காட்டுது. எல்லாம், அதே பேருல உள்ள மக்கள்ஸ்.

நீங்க, ஒரு புள்ளிய கிளிக் பண்ணுணீங்கன்னா, அவரு இருக்குற எடத்து மேல போய் நிக்கும். நீங்க சந்தா செலுத்தி உறுப்பினர் ஆயிருந்தா, சேட்டிலைட் கூட கனெக்ட் பண்ணி, இடத்த ஆன்லைன்'ல காட்டும்.

உங்க ஃபிரண்ட் அவரோட அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்'ல "Share me" செலக்ட் பண்ணி இருந்தாருன்னா, அவரு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு அப்படியே பார்க்கலாம். மனச திட படுத்திட்டு பாருங்க. அவரு எந்த நிலையில வேணும்னாலும் இருப்பாரு.

--------------------------

உங்க ஃபிரண்ட கண்டு பிடிச்சிடிங்க. அடுத்தது அவன்/அவள் எப்படி இருக்காங்கன்னு தெரியனும். "Advance People Search" போங்க. பேர கொடுங்க. நம்ம மெயில், ப்லாக், நாம காப்பி பண்ணுன code, நம்ம நண்பர்கள், நம்ம புகைப்படங்கள்'ன்னு நம்ம பத்தின எக்கச்சக்கமான விவரங்கள் கூகிள் சர்வர்'ல இருக்கும். அத அப்படியே புரட்டி போட்டு, ஒரு அனலிசிஸ் பண்ணி,

- இவர் நேத்து இந்த படத்த இந்த தியேட்டர்ல பார்த்தார்.
- இவர் இங்கே சரக்கடித்தார்.
- இப்படி இருந்த இவர் ஆகிட்டார் (புகைப்பட சான்றுகளுடன்).
- இவர் இன்று காலை காப்பி பண்ணுன code, இரண்டு வருடம் இவர் எழுதியதுதான்.
- கொடுத்த கடனை திருப்பி கேட்டு நண்பர் அனுப்பிய மெயிலை, அப்படியே டெலிட் செய்து விட்டு, மெயிலில் வந்த "அந்த" மருந்து விளம்பரத்தை கண்டு, அதை ஆர்டர் செய்தார்.
- இவர் இந்த இந்த கம்பெனி'யில் இருந்து இந்திந்த தேதிகளில் துரத்தியடிக்கப்பட்டார்.

இப்படி அஞ்சாறு பக்கத்துக்கு தகவல் கொடுக்கும். இந்திய கண்ட மக்களுக்காக, ஜாதகமும் ஜெனரேட் செய்து கொடுக்கப்படும்.

வீட்டில் ரேசன் கடை கியுவில் நிற்க மாட்டேன் என்று சண்டை போட்டு விட்டு, யாருக்கு தெரியாமல் பலான பட தியேட்டர் கியுவில் நின்றதை, யூடூபில் கண்டு களிக்கலாம்.

--------------------------

திரைப்பட பிரியர்களுக்காக, Search Movies ஆப்சனில் ஒரு கதையையோ, வசனத்தையோ கொடுத்தால், அது சம்பந்தப்பட்ட படங்கள் வரும். படங்களையும் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு, கடைசியா வந்த ஒரு ரஜினி படத்து கதைய கொஞ்சம் கொடுத்தா, அவர் நடிச்ச இருபது முப்பது படங்களும், நாலஞ்சு மலையாள படங்களும், இரண்டு மூணு கன்னட படங்களும் வரும்.

ஏதாவது ஒரு கமல் பட கதைய கொடுத்தா, அதோட ஒரிஜினல் ஆங்கில, ஜெர்மனிய படங்களோட தொகுப்புகள் வரும்.

அப்புறம், டவுசர்'ன்னு கொடுத்தா ராமராஜன் படங்களும், பாகிஸ்தான் தீவிரவாதின்னு கொடுத்தா விஜயகாந்த் படங்களும், தமிழ் வார்த்தைகளை தப்பு தப்பா இழுத்து கொடுத்தா அஜித் படங்களும், ரன்னுன்னு கொடுத்தா மாதவன் படமும், நாட் ரன்னுன்னு கொடுத்தா பிரசாந்த், ஷாம், ஸ்ரீகாந்த் படங்களும், காமெடி ஆக்க்ஷன் படம்னு கொடுத்தா ஜே.கே.ரீத்திஸ் படங்களும் வரும்.

Friday, August 22, 2008

ரித்தீஷின் நாயகன் - விமர்சனம்

'புதிய' நாயகன் படத்தின் விமர்சனம் சுட... சுட...

* ரித்தீஷ் இன்ஸ்பெக்டர் குருவாக நடித்துள்ளார். இதுவரை, போலிஸ் வேடம் போட்டதிலேயே இது தான் பெஸ்ட் என்று இந்த வாரம் சுஹாசினி சொல்ல போகிறார். அப்படிதான், நேற்று விஷாலை சொன்னார்.

* ஹாலிவுட் திரைப்படமான 'Cellular' யை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே, வேகம் என்ற தமிழ்படம் இதுபோல் வந்துள்ளது. (கொஞ்சம் நாள் முன்னாடி தான் சன் டிவி'யில் போட்டார்கள்.) ஆனால், இந்த படத்தின் திரைக்கதை, தியேட்டர் சீட்டுடன் நம்மை கட்டி போடுகிறது.(கமல், மணிரத்னம் தான் இங்கிலீஷ் படம் பார்த்து எடுப்பாங்களா? நாங்களும் எடுப்போம்'ல என்கிறார் ரித்தீஷ்)

* ஹீரோ'வின் அறிமுக காட்சி ஒரு சூப்பர் ஸ்டாரின் அறிமுகத்திற்க்கே உரித்தானது.

* படத்தில் ரித்தீஷ் நடிப்பை (அவரு நல்லா நடிப்பாருன்னு தெரியும்!!!) தவிர, ரமணா, சங்கீதா போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

* தற்போது வெளிவந்துள்ள குசேலன், சத்யம் படங்களை விட பல மடங்கு நன்றாக உள்ளது.

* ஏற்கனவே, நகரெங்கும் உள்ள ரித்தீஷ் சுவரொட்டிகளை கண்டு கலக்கமடைத்திருக்கும் முன்னணி நடிகர்கள், படத்தின் ரிசல்ட் கேட்டு பீதியடைந்து இருக்கிறார்கள்.

மேலும் விமர்சனம் இங்கே... டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் என்னால் செல்ல முடியவில்லை. :-)

நன்றி : rediff


28-08-2008 அன்று பதியப்பட்டது : வீரத்தளபதியின் நாயகன் பட டிவி விளம்பரத்தில் புரட்சி தமிழன் "இந்த படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகணும்"ன்னு நம்பிக்கை தெரிவிக்கிறார். ராதாரவி சிரித்துக்கொண்டே, " நல்ல புது வரவு" என்கிறார். கலைப்புலி தாணு, படம் திருப்திக்கரமாக இருப்பதாக கருத்து சொல்கிறார். தமிழகத்தின் இரு முக்கியஸ்தர்கள் இன்னமும் இப்படத்தை பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது.

எங்க போனா என்ன சாப்பிடலாம்?

இன்று என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் "சென்னைக்கு 369 வயசு" என்று ஒரு செய்தியை சொன்னார்கள். (சென்னைக்கு வாழ்த்துக்கள் :-)) அதில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களை பற்றி கூறினார்கள்.

முதலில், பல வருடங்களாக உள்ள மேங்கோ ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் ஒரு கடையை காட்டினார்கள். கடையின் பெயரை கவனிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பின்பு, திருவல்லிக்கேணியில் உள்ள ரத்னா கபே பற்றியும் அங்கு கிடைக்கும் இட்லி சாம்பார் பற்றியும் கூறினார்கள். கடையில் ஒருவரை பேட்டி எடுக்க, அவர் மைக்கையோ, பேட்டி எடுப்பவரையோ பார்க்காமல், தட்டை பார்த்துக்கொண்டே "இந்த கடை அறுபது வருஷமா உள்ளது. நான் இங்க பதினைச்சி வருஷமா சாப்பிட்டுட்டு இருக்கேன். இங்க கிடைக்குற மாதிரி சாம்பார் வேற எங்கயும் கிடைக்காது" என்று சொல்லி கொண்டு போனார்.


அப்புறம், ராயர் மெஸ் என்று ஒரு கடையை காட்டி, அந்த கடையின் பேமஸான காப்பியை பற்றி சொன்னார்கள்.


நான் சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறவன். வெளிய சாப்பிட போறதுன்னா, சூப்பரா சாப்பிடனும்'ன்னு, வண்டிய எடுத்துட்டு எவ்ளோ தூரம்'னாலும் போகுபவர்களில் நானும் ஒருவன்.


தமிழர்கள், பொதுவா எந்த ஊர் போனாலும், இட்லியை எதிர்பார்ப்பார்கள். ஒரு நாள், ரெண்டு நாள் போனம்னா, அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்ட ட்ரை பன்றதுதான் நல்ல விஷயம். எந்தெந்த ஊர்ல, என்னன்ன ஸ்பெஷல்'ன்னு எப்படி தெரியுறது? அதுக்கு கீழே உள்ள படத்த பாருங்க. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சரி, இந்தியாவுல உள்ள மாநிலங்களில் எது விசேஷம்'ன்னு தெரியுது. இனி, micro & macro லெவல்'ல பார்ப்போம்.அதாவது, உள்ளுர்ல சந்து பொந்துல உள்ள சூப்பர் ஹோட்டல்கள். உதாரணத்துக்கு, பா. ராகவன், இட்லி வடை, லக்கிலுக் போன்றோர்கள் அறிமுகப்படுத்துற மாமி மெஸ்கள் போன்றவை. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய உணவகங்கள்.இதுப்போல், அனைத்து தகவல்களும் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பது போல் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்காக, உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கு ஏற்ப, இதை உருவாக்கியுள்ளேன். திண்டுக்கல்லில் உள்ள வேணு ஹோட்டலில் இருந்து பாஸ்டனில் உள்ள பொங்கல் ஹோட்டல் வரை இதில் இருந்தால் எவ்ளோ அருமையாக உபயோகமாக இருக்கும் என்பதை தமிழ் சமுதாயம் எண்ணி பார்க்க வேண்டும். :-)பெருங்கடலேனே திரண்டு வாருங்கள் !!!

ஆதரவு தாருங்கள் !!!

பயன் பெறுங்கள் !!!

Thursday, August 21, 2008

அழிந்த நகரம் - ஹம்பி (புகைப்படப் பதிவு)

ஹம்பி, விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த விஜயநகரமாக இருந்தது. இப்போது கிராமம் என்று கூட சொல்ல முடியாது.இங்கு இரு வகையான சுற்றுலா பயணிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒன்று, வெளிநாட்டு பயணிகள். இன்னொரு பிரிவு, சின்னஞ்சிறு பள்ளிக்கூட மாணவர்கள். அவர்களை காணும்போது, எனக்கு புளியோதரை கட்டிக்கொண்டு தஞ்சை பெரிய கோவிலை காணச் சென்ற என் இளம் வயது இன்ப (!) சுற்றுலாத்தான் ஞாபகம் வந்தது.நாம் பயன்படுத்திய 5, 10, 25 காசுகள், இன்னும் சில தினங்களில், இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமாக மாறிவிடும்."கல்லிலே கலை வண்ணம் கண்டாய்"ன்னு சொல்லுவது போல், ஹம்பியை சுற்றிலும் கோவில்கள், மண்டபங்கள், சிற்பங்கள். இதே வேலையா இருந்தாங்க போல? ஆனால், அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு இருப்பது வருத்தம் தான்.
மொகலிய மன்னர்களின் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டதாக கைடு கூறினார்.இந்த சிற்பத்தில் உள்ளவர்களின் முக அமைப்பை பாருங்கள். சீன, மங்கோலிய சாயல் இல்லை? இதுல இருந்து, என்ன தெரியுது? அந்த காலத்திலேயே, அங்க இருந்தெல்லாம் இங்க வந்துருக்காங்க'ன்னு நான் சொல்லல. கைடு சொன்னாரு... :-)


கல்லில் வடிச்ச ஓவியத்த ஒருத்தர் தாளில் வரைஞ்சிட்டு இருக்காரு. இந்த கல் தேர், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்த மாதிரி, இந்தியாவுல, மூணு இடத்தில (மஹாபலிபுரம், ஹம்பி, புவனேஷ்வர்) தான் இருக்காம்.இது ஒரு இயற்கையான ஏசி ரூமாம். என்ன பண்ணியிருக்காங்கன்னா, எல்லா தூண் இடையிலும் இடைவெளி வருரா போல் கட்டியிருக்காங்க. அப்புறம் பக்கத்திலேயே, ஒரு கிணறு இருக்கு. கிணத்தில இருந்து, ஒருத்தரு தண்ணிய இறைக்க, அத ஒருத்தரு மேல கொண்டு போக, இன்னொருத்தரு மேல இருந்து ஊத்துவாராம். இப்படி தொடர்ந்து ஊத்திக்கிட்டே இருக்க, உள்ள சிலு சிலுன்னு இருக்குமாம். ராஜாவும் ராணியும் வெயில் காலத்தில வந்து ஜில்லுன்னு ஜாலியா இருப்பாங்களாம்.
நல்லவேளை, ஏசிய கண்டுபிடிச்சாங்க... :-)

இது யானைகளைக் கட்டி போடுற இடம். இத எவ்ளோ ரசனையோட கட்டியிருக்காங்க பாருங்க. இத பார்த்தீங்கன்னா, ரெண்டு மூணு கட்டிட கலைகள் தெரியுமாம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, .... ஓகே, ஓகே. புரிஞ்சிகிட்டீங்க... :-)அது யானைக்குனா, இது பக்கத்திலேயே யானை பாகர்களுக்கு.இது பூமிக்கு அடியில போன ஒரு சிவன் கோவில். உள்ள, தண்ணி கெட்டி கெடக்குது...இதுல்லாம், கலை நிகழ்ச்சி நடத்த கட்டின மண்டபங்கள். மேல்புறம் இருந்த மர வேலைப்பாடுகள் எல்லாம் எரிந்து, இப்ப கல் அஸ்திவாரங்கள் மட்டும் இருக்குது.


இத மௌனம் பேசியதே, ஸ்டார், என் சுவாச காற்றே'ன்னு பல தமிழ் படங்களில் பாத்து இருப்பீங்களே? இது ஒரு அழகான கிணறு. கிணத்துக்கு அழகா?'ன்னு கேக்கப்பிடாது.

இந்திய படங்கள் மட்டுமில்ல, ஜாக்கிசான், மல்லிகா ஷெராவத் நடிச்ச 'மித்' படமும் ஹம்பில படம் பிடிச்சிருக்காங்க.

Wednesday, August 20, 2008

பறக்குது டாக்டர் பட்டம்

இன்றைக்கு வெளியான செய்தி..

மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிறைவு விழா கொண்டாடப்படப்போகிறது.

இந்த ஆண்டு விழாவிற்காகவும், பல்வேறு கட்டமைப்பு வேலைகளுக்காகவும், ஏற்கனவே மத்திய அரசு அதிக நிதியை (லஞ்சம்!) வழங்கியுள்ளது. நிறைவு விழாவில், நம் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமரின் பிரதமர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படப்போகிறது.


டாக்டர் பட்டம் விஜய்க்கு கொடுக்கப்பட்ட பின் அதன் மதிப்பு அனைவருக்கும் தெரியும். பல்கலைக்கழகத்தால், அதன் சிறப்பு விருந்தினருக்கு என்ன கொடுக்க முடியுமோ, அதை கொடுக்க போகிறார்கள். அதனால், அந்த அரசியல் பேசுவது வீண். நமது கடமையான மொக்கையை மட்டுமே போடுவோம். :-)


இன்றைய செய்தி, நாளைய வரலாறு.


நாளைய வரலாறு, இன்றைய கும்மி... :-)


2012 - ஆண்டிபட்டி மருத்துவ கல்லூரியின் ஏதோவொரு (!) ஆண்டு விழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் அத்வானி, துணை பிரதமர் மோடி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள்.


2017 - ஆண்டாள் அழகர் பல்கலைகழகத்தின் சார்பில் பிரேமலதா மருத்துவ கல்லூரியின் துவக்க விழாவில் முதல்வர் விஜயகாந்த், பிரதமர் மாயாவதி, தே.மு.தி.க கட்சியின் பொது செயலாளர் சுதீஷ் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி பட்டம் சிறப்பிக்கப்படுகிறது.


2022 - முரசொலி மாறன் அறக்கட்டளையின் இருபதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் ராகுல் காந்தி, முதல்வர் தயாநிதி மாறன், தி.இ.பொ.மு.க. (திராவிட இளைஞர் பொருளாதார முன்னேற்ற கழகம்) கட்சியின் நிறுவனர், சமூக புரட்சி தந்தை கலாநிதி மாறன் ஆகியோருக்கு சன் மருத்துவக்கல்லூரி சார்பில் டாக்டர் பட்டம் வாங்க... ஸாரி... வழங்கப்படுகிறது.


இந்த செய்திகளை எல்லாம் இப்ப கேட்க கஷ்டமாத்தான் இருக்கும். போக போக சரியாகிடும். இப்ப ஆகலையா நமக்கு? அந்த மாதிரி.

Monday, August 11, 2008

தி மம்மி 4 - (கற்பனை) திரை விமர்சனம்

என்னடா! மம்மி 3 தானே வந்திருக்கு... தலைப்பு தப்புன்னு நினைக்காதீங்க... இது 2011ல வரப்போற மம்மி 4 படத்துக்கான விமர்சனம்.

ஸ்டிபன் சொம்மர்ஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள "மம்மி 4 - சுடலைமாட சாமியும் உடுக்கையும்" படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை. ஹாலிவுட் தரத்தில் நம்மவர்கள் படத்தை உருவாக்கி கொண்டிருக்க, ஹாலிவுட்டையே தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து உலக சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார், நமது சூப்பர் ஸ்டார்.


பிரண்டன் ஃபிரெசர் மதுரை அமெரிக்கன் காலேஜில் நுழைவதில் ஆரம்பிக்கிறது படம். 1971 ஆம் ஆண்டு தமிழக கோவில்களில் உள்ள தங்க சிலைகளை லவட்டி கொண்டு போக வரும் ஃபிரெசர், அவர் காதலி ரச்சேல் மற்றும் அவரது அண்ணன் ஜோனாதன், கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு உள்ள நூல்களில் இருந்தும், பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் பேசியதிலிருந்தும், மதுரையை சுற்றியுள்ள கோவில்களை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.


அதன் பின்பு, கிராம கோவில்கள், அம்மன் சிலை, சுடலை மாடன், வெட்டருவா மீசை பூசாரி, உடுக்கை, குதிரை, தங்க கோபுரம் என்று பயணிக்கிறது கதை. தங்க பொக்கிஷத்தை திருட நெருங்கும் இவர்களை, சுடலை மாடன் வேடத்தில் வரும் ரஜினி எப்படி விரட்டி அடிக்கிறார் என்பதை கிராபிக்ஸ் கலக்கலுடன் செல்லுலாயிடில் செதுக்கியுள்ளார்கள். சுடலை மாடன் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்.

ஜோனாதன் விளையாட்டுத்தனமாக கோவிலில் உள்ள உடுக்கையை அடிக்க ஆரம்பிக்க, சிலையாக உள்ள சுடலைமாட சாமி அசைய ஆரம்பிக்கும் போது எழும் ரசிகர்களின் விசில் சத்தம், படம் முடியும் வரை தொடர்கிறது. பிளாஸ்பேக்கில் சுடலைமாடனின் வரலாறைக் கற்பனை கலந்து சொல்லியவிதம், திரையுலக வரலாற்றில் பலவருடங்கள் பேசப்படும்.

ஒரு காட்சியில் அம்மன் சிலையை ரச்சேல் தொட முயலும் போது, சிலை உயிர் பெற்று ரம்யா கிருஷ்ணன் அம்மனாக வருவது, தியேட்டரை அலற வைக்கிறது. இயக்குனர் ஸ்டிபன் சொம்மர்ஸ், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததிலையே பாதி வெற்றியை பெற்று விடுகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா-ரஹ்மான் கூட்டணியில் அமைந்திருக்கும் இசை. இளையராஜாவின் இசை கதைக்குள் நம்மை ஒன்ற வைக்கிறதென்றல், ரஹ்மானின் இசை படத்தை நுட்பமாக அணுக வைக்கிறது.

முந்தைய மம்மி படங்களின் சாயல் இருந்தாலும், கிளைமாக்சில் பல்லாயிரக்கணக்கான குதிரைகளில் வேட்டையர்கள் வருவது கிராபிக்ஸ் அதிரடியின் உச்சம். ஆங்கிலேய படை தளபதியாக வரும் நாசர், கோயில் பூசாரியாக வரும் வினுசக்ரவர்த்தி, லைப்ரரியன் வேடத்தில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் சில காட்சியில் வந்தாலும் தங்கள் குணச்சித்திர நடிப்பால் ஜொலிக்கிறார்கள்.

மொத்தத்தில் மம்மி 4 - இவ்வகை படங்களின் மம்மி.

Friday, August 8, 2008

PIT MEGA போட்டிக்கு புகைப்படங்கள்

இந்த மாச PIT போட்டி, மெகா போட்டியாம்ல. உண்மைதான். ஒரு வருசமா நடந்த போட்டிகளுக்கு முத்தாய்ப்பா ஒரு மெகா போட்டி. இந்த பதிவு மூலமாக PIT குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெகா போட்டிக்கு எந்த தலைப்பும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எந்த படத்தை போடலாம்னு தெரியலை. சரி, மெகா போட்டிக்கு பிரமாண்டம்ங்கற தீம்ல நாமலே சில படங்களைப் போட்டுரலாம்னு தோணிச்சி. பிரமாண்டம்னா கடலும் வானமும் தான் நினைவுக்கு வந்தது. அதனால அது பிரதானமா இருக்குற படங்களா சிலத போட்டுருக்கேன். வேறு சில படங்களையும் போட்டுருக்கேன். பார்த்துட்டு உங்க பொன்னான கருத்துகளைச் சொல்லுங்க.

கன்னியாகுமரியில் எடுத்த சில படங்கள்.

1) வானமும் கடலும் போல், நீயும் நானும்


2) சூரியன் முகம் பார்க்கும் கண்ணாடியா, கடல்?


3) கடல் முன்னாடி நான் மட்டும் இல்லை, எல்லாருமே சிறுசுத்தான்.

குருவி படம் பார்த்திட்டு தற்கொலை பண்ண வந்திருக்குமோ? :-)

4) கடல், விளக்கு - இரண்டின் எதிர்பார்ப்பும் இரவே!
அடுத்து வருபவை, ஹம்பியில் எடுத்த புகைப்படங்கள்

5) அழிவு - மனிதனின் படைப்புக்கு மட்டுமே

6) வண்ணமும் வடிவமும் இணைந்ததுதானே கலை?

7) விஜயநகர மிச்சங்கள்


8) போகும் வழி யார் அறிவார்?


9) பை பை சொல்லும் சூரியன் - பெங்களுர் சங்கி டாங்க் பூங்காவில் எடுத்தது.


10) கம்பம் அருகே எடுத்த புகைப்படம் - கீழே இருப்பது திராட்சை தோட்டத்தின் மேல்பகுதி


இதுல எது தேறுதுன்னு மறக்காம பின்னுட்டமிடவும்... :-)

Thursday, August 7, 2008

குசேலன் - பி. வாசுவை கேவலப்படுத்திய சுஹாசினி

அறிவுஜீவி சினிமா விமர்சகரான திருமதி. சுஹாசினி, ஜெயா டிவியில் வழங்கி வரும் "ஹாசினி பேசும் படம்" நிகழ்ச்சியில் குசேலனை விமர்சனம் செய்தார். அதுலதான் இயக்குனர் பி. வாசுவை மேடம் கேவலப்படுத்திடாங்க. அப்படி என்ன பண்ணுனாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி படத்தைப் பத்தி என்ன சொன்னாங்கன்னு பார்ப்போம்.


படத்தை ரொம்ப மாத்தாம எடுத்ததால நல்லா இருந்ததாம். படத்தோட ஒளிப்பதிவு, கலர்ஸ் எல்லாம் நல்லா இருந்ததாம்.

படத்தோட ப்ளஸ் பாயிண்ட்ஸ் என்னன்னா, கதை, நடிகர்கள் தேர்வு மற்றும் ரஜினியின் பங்காம்.


மீனா, நயன்தாராயோட நடிப்பு (அத காமிக்கவே இல்லன்னு சொல்றீங்களா?), பசுபதியோட ஸ்கோப்ப கூட்டியிருக்கலாம்ங்கறதேல்லாம் மைனஸ் பாயிண்ஸ்சாம்.

மொத்ததுல ரேட்டிங் பாலன்ஸ் ஆகி நியூட்ரல் மார்க்காம்.

நயன்தாரா கேரக்டர் வேஸ்ட்டாம். அத தூக்குனாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். அவுங்க தன்னோட பிகரை காட்டுறதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்களாம். ஆனா அவங்களுக்கு பயங்கர தன்னம்பிக்கையாம். ராதிகா, நதியாவுக்கு அப்புறம், ஸ்கிரின்ல ரஜினி கூட ரொம்ப கான்ஃபிடன்ஸா இருக்குறது நயன்தாராதானாம்.

சரி. மேட்டருக்கு வாரேன். அப்படி என்ன பி. வாசுவைப் பத்தி நம்ம பதிவர்கள் சொல்லாத அளவுக்கு சொன்னாங்க தெரியுமா?

"பி. வாசு எடுத்ததுலயே பெஸ்ட் படம் இதுதான்" :-)