Showing posts with label PIT. Show all posts
Showing posts with label PIT. Show all posts

Sunday, November 4, 2012

எந்த மரம் நல்ல மரம்?

PIT தளம், எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று. போட்டிகளில் கலந்துக்கொள்வது இல்லையென்றாலும், தொடர்ந்து நான் தொடரும் தளங்களில் ஒன்று. முன்பொரே ஒருமுறை கலந்துக்கொண்டு சிறப்பு செய்தது உண்டு. பிறகு, பிரமித்துப்போய் பெருமூச்சுவிடுவது மட்டுமே உண்டு.

தற்சமயம், கொஞ்சம் கேமரா கையுமாக சுற்றுவது என்றிருப்பதாலும், நம்மையும் ஒரு போட்டோகிராபர் என்று சில அப்பாவிகள் நம்புவதாலும், இம்மாத போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.

இம்மாத போட்டிக்கான தலைப்பு - மரங்கள்/மரம்.

சமீபகாலங்களில் இந்த தலைப்புக்கு பொருத்தமான புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறேன் என்பதால், புதிதாக எடுக்க தேவையில்லாமல், எடுத்ததில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் போதுமானதாக இருக்கிறது.

எதை அனுப்புவது என்பதில் தான் குழப்பம். (நீ புடுங்குனது பூரா...!!! நோ... நோ... நோ...)

பதிவுலக நண்பர்கள், ஐடியா மணிக்களாய் இருக்கும்போது என்ன குழப்பம்? ஒரு பதிவைப்போட்டா ஆச்சு!

கேள்வி - கீழ்க்கண்ட நான்கு புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்? (நல்லதாய் பார்த்து!!!)

ஒன்று:

இங்கு இருக்கும் அனைத்து புகைப்படங்களும், சமீபத்தில் இவ்வருட இலையுதிர் காலத்தின் போது எடுத்தது. இந்த புகைப்படம் இங்கே இருக்கும் சீஸ்மேன் பார்க் என்னும் பார்க் சென்றபோது, அருகே இருந்த தெரு இப்படி கலர்புல்லாய் அழகாய் இருக்க, உடனே எடுத்தது.


இரண்டு:

இது அந்த சீஸ்மேன் பார்க்கில் எடுத்தது. ஒரு மரம் மட்டும் தனியே வேறு கலரில் வித்தியாசமாய் இருக்க, க்ளிக்கியது.

 
மூன்று:
 
இந்த படம், ஒரு மாதத்திற்கு முன்பு ஆஸ்பென் என்ற ஊருக்கு ட்ரிப் சென்றபோது, அங்கு இருக்கும் மெரூன் பெல்ஸ் என்ற மலைப்பகுதியில் எடுத்த புகைப்படம். போஸ்ட் கார்ட், வால்பேப்பர் என்று மட்டுமே பார்த்த சில இடங்களை இங்கே தரிசிக்க முடிந்தது. இடங்களைப் பற்றிய பதிவுகள், விரைவில். இப்போதைக்கு, இது அங்கு எடுத்த படம் என்ற தகவல் மட்டும்.
 



நான்கு:

போன புகைப்படத்தில் பார்த்த அதே மரங்கள் தான். வேறு ஆங்கிளில்.


இனி உங்க டர்ன். எது நல்லா இருக்கு? சொல்லுங்க.

வேணும்னா, புகைப்படங்களைக் கிளிக்கி பெரிசா பார்த்து சொல்லுங்க. டவுன்லோட் செஞ்சு, உட்கார்ந்து, படுத்து பார்த்து பொறுமையா ஆராஞ்சு யோசிச்சும் சொல்லலாம். (மக்கா, டவுன்லோடி உங்க பேருல அனுப்பி ஆப்பு வச்சுறாதீங்கப்பு!!!)

எதுவுமே நல்லா இல்லையென்றாலும், கூச்சப்படாம சொல்லுங்க. நான் வெட்கப்படாம, பிங்கி பிங்கி பாங்கி போட்டு ஏதாச்சும் ஒண்ணை அனுப்பிடுவேன்!!!

ஒரு ரகசிய கேள்வி. இந்த PIT நடுவர்கள் எந்த மாதிரி படங்களை தேர்ந்தெடுப்பாங்க? யாருக்காச்சும் தெரியுமா?

(PIT  நடுவர்களே வந்து நேரடி பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ வந்து கருத்து சொல்லலாம். ஆட்சேபனை இல்லை. ரகசியம் காக்கப்படும்!!!)

பயப்புள்ள ஒருத்தரும் ஒண்ணும் சொல்லல? அப்பவும், முன்சொன்ன அதே விதிமுறை கடைப்பிடிக்கப்படும். பிங்கி பிங்கி பாங்கி.

.

Friday, August 8, 2008

PIT MEGA போட்டிக்கு புகைப்படங்கள்

இந்த மாச PIT போட்டி, மெகா போட்டியாம்ல. உண்மைதான். ஒரு வருசமா நடந்த போட்டிகளுக்கு முத்தாய்ப்பா ஒரு மெகா போட்டி. இந்த பதிவு மூலமாக PIT குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெகா போட்டிக்கு எந்த தலைப்பும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எந்த படத்தை போடலாம்னு தெரியலை. சரி, மெகா போட்டிக்கு பிரமாண்டம்ங்கற தீம்ல நாமலே சில படங்களைப் போட்டுரலாம்னு தோணிச்சி. பிரமாண்டம்னா கடலும் வானமும் தான் நினைவுக்கு வந்தது. அதனால அது பிரதானமா இருக்குற படங்களா சிலத போட்டுருக்கேன். வேறு சில படங்களையும் போட்டுருக்கேன். பார்த்துட்டு உங்க பொன்னான கருத்துகளைச் சொல்லுங்க.

கன்னியாகுமரியில் எடுத்த சில படங்கள்.

1) வானமும் கடலும் போல், நீயும் நானும்


2) சூரியன் முகம் பார்க்கும் கண்ணாடியா, கடல்?


3) கடல் முன்னாடி நான் மட்டும் இல்லை, எல்லாருமே சிறுசுத்தான்.

குருவி படம் பார்த்திட்டு தற்கொலை பண்ண வந்திருக்குமோ? :-)

4) கடல், விளக்கு - இரண்டின் எதிர்பார்ப்பும் இரவே!
அடுத்து வருபவை, ஹம்பியில் எடுத்த புகைப்படங்கள்

5) அழிவு - மனிதனின் படைப்புக்கு மட்டுமே

6) வண்ணமும் வடிவமும் இணைந்ததுதானே கலை?

7) விஜயநகர மிச்சங்கள்


8) போகும் வழி யார் அறிவார்?


9) பை பை சொல்லும் சூரியன் - பெங்களுர் சங்கி டாங்க் பூங்காவில் எடுத்தது.


10) கம்பம் அருகே எடுத்த புகைப்படம் - கீழே இருப்பது திராட்சை தோட்டத்தின் மேல்பகுதி


இதுல எது தேறுதுன்னு மறக்காம பின்னுட்டமிடவும்... :-)

Wednesday, July 9, 2008

ஜுலை PIT போட்டி - உதவி தேவை

நண்பர்களே,

முதல்முறையா இந்த புகைப்பட போட்டியில கலந்துக்க போறேன். இதுக்காக காமிரா தூக்கிட்டு போய் எங்கேயும் எதையும் புதுசா எடுக்கல. ஏற்கனவே எடுத்ததுல எது பொருத்தமா இருக்குனு எனக்கு தோணுனத இந்த பதிவுல கொடுத்துருக்கேன். பார்த்திட்டு எது இதுல கொஞ்சமாச்சும் நல்லா இருக்குறதா தோணுனத சொல்லுங்க. அதையே போட்டிக்கு அனுப்பிடுவோம். எதுவும் நல்லா இல்லனாலும் பரவாயில்லை. அடுத்த போட்டில கலந்துக்கிறேன். :-)

1. இது ஒரு மாலை வேளை பெங்களூர் விதான் சவுதா முன்பு எடுத்தது....




2. சுதந்திரமும் ஜனநாயகமும்


3. ஹம்பி பக்கமுள்ள துங்கபத்ரா அணை பூங்காவில் எடுத்தது.


4. இதுவும் ஹம்பி அருகே எடுத்தது.


5. இது ஒரு இரவு உணவகத்தில் எடுத்தது.



6. மதுரை நாயக்கர் மஹால் உள்ளே.


7. இதுவும் நாயக்கர் மகாலில் எடுத்தது.



8. நாயக்கர் மஹால் வெளிப்புறம்.


9. கேம்ப் போர்ட் சிவன் கோவில் - பிரம்மாண்ட சிவனும் சின்ன நிலவும்


மறக்காம பிடித்த புகைப்படத்தைப் பின்னுட்டத்தில் தெரிவிங்கோ!!!!