Tuesday, December 30, 2008

ஹிந்தி கஜினி - தமிழுடன் ஒரு ஒப்பீடு

இந்த படத்தை ஹிந்தி கலைஞர்கள், தமிழ் கலைஞர்கள் என்று ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஹிந்தியிலும் முக்கியமான தொழிநுட்ப கலைஞர்கள் எல்லாம் தமிழர்கள் தான். முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், ரவி கே. சந்திரன், எடிட்டர் ஆண்டனி, பீட்டர் ஹெயின், ஸ்டன் சிவா என்று முக்கிய துறைகள் அனைத்தும் நம்மவர்கள். நடிகர்களிலும் அசின் இருக்கிறார். ரியாஸ்கான் இருக்கிறார். அதே பெங்களூர் ஐ.டி.பி.எல் இருக்குது.

இந்த படத்தின் பலமே, வேகமான திரைக்கதையும், அசினுடனான காதல் எபிசோடும். முடியும் சமயம் பெண்கள் ஆதரவு கருத்தும் சேர்ந்து வருவதால், நல்ல படம் பார்த்த எபெக்ட் இந்த மசாலா படத்திற்கும் வரும். இது எதற்கும் ஹிந்தியிலும் எந்த பாதிப்பும் இல்லை. ரிச்னெஸ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

அமீர், குறை ஒண்ணும் சொல்ல முடியாது. என்ன, சிக்ஸோ, எய்ட்டோ அத்தனை பேக் பண்ணி ஒல்லியா இருக்காரு. கண்ணாடியில தன் உடலை பார்த்து உறுமுற காட்சி - டெரர். அவரோட டபுள் மடங்கு இருக்குற குண்டர்கள தூக்கி போடுறது நம்பகதன்மையா இல்லை. இந்த மாதிரி குண்டர்கள, இந்த ஹிந்தி படத்தில தான் நான் பார்த்திருக்கிறேன்.

அசின் அறிமுகமாகுற பாட்டுல ஏனோ அந்தளவுக்கு இல்லை. அப்புறம், அவுங்க ஆவர்த்தனம் பண்ற காட்சில வழக்கம் போல கலக்கிடுறாங்க.

நயன்தாராவுக்கு பதிலா ஜியா கான். தமிழ்லையும் நயன்தாரா பெருசா ஏதும் பண்ணல. முக்கியமா மில்லுல ஓடுற சீன் இல்ல. இருந்தாலும், நயன்தாரா......

தமிழ்'ல விமர்சகர்கள் சொன்ன குறை, கிளைமாக்ஸ். அதனால், அதை முருகதாஸ் இதில் மாற்றி இருக்கிறார். ஹிட்டான படத்தில மாற்றங்கள் செய்ய கட்ஸ் வேணும். முருகதாஸ் துணிந்து செய்திருக்கிறார். சார்ட் டெர்ம் மெமரி லாஸ், மாறி மாறி வரும் பிளாஸ்பேக், பழி வாங்கல் இப்படி எக்ஸ்ப்ரெஸ் மாதிரியான படத்தில், கிளைமாக்சில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி இல்லாவிட்டால், ஏமாற்றமாக தான் இருக்கும். இந்த கிளைமாக்சும் எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு தமிழ் பெட்டர் என்று தோன்றியது. தியேட்டரில் சிலர் சிரித்து விட்டார்கள். இறுதி முடிவு, கொஞ்சம் 7 ஜி மாதிரி தான் இருந்தது.

இசை ஏ.ஆர். ரஹ்மான் என்றதும் ரொம்பவே எதிர்பார்த்தேன். தமிழ் ரசிகர்களுக்கு ஹிந்தி பாடல்கள், தமிழ் அளவுக்கு பிடித்திருக்காது. ஆனால், ஹிந்தியில் நல்ல ஹிட். பின்னணி இசையில் ஹாரிஸ், மொட்டை சூர்யா, அசின், வில்லன் என்று ஒவ்வொருவருக்கு ஒரு தீம் வைத்திருந்தார். எல்லாமே சூப்பரா இருக்கும். அதுவும் அந்த "ஸோ....... ஸோ.. ஸோ..", கலக்கலா இருக்கும். இதில் வில்லனுக்கு வைத்திருந்த தீமே என்னை ரொம்பவும் கவர்ந்தது. நம்ம தலைக்கு மேல இருந்து வருற மாதிரியான டிஜிட்டல் இசை, அபாரம். அப்பப்ப, மேல பார்த்திக்கிட்டேன். அப்புறம், காரை வித்து அசின் கொடுக்குற பணத்தை கையில வச்சிகிட்டு அமீர் லண்டன் போறப்ப, ஒரு பாட்டு வைச்சிருக்காங்க. ரங்கோலாவுக்கு பதில், இது ஒரு நல்ல மாற்றம்.

ஹிந்தி ரசிகர்கள் சொல்ற குறை, ஓவர் வன்முறை. இது, தமிழுலும் இருந்தது. ஆனா நாம, பருத்திவீரன், சுப்ரமணியபுரம்ன்னு கடந்து வருரதால பெருசா தெரியல. அதே சமயம், இதுல சும்மா சும்மா அந்த இரும்பு கம்பியை காட்டி பயமுறுத்துறாங்க. அடிக்குற அடில, என் தலையும் சும்மா கிண்னேனு வலிச்சிது.

போட்ட பட்ஜட்டோட முருகதாஸ் கம்மியா முடிச்சிட்டாராம். பூஜை போட்டவுடனே, படம் நல்லலலலல ரேட்டுக்கு வித்துடுச்சாம். அதனால முருகதாசுக்கு அங்க நல்ல பேராம். அதோட படத்தோட ஹைப்பும் அதிகம். இந்திய அளவுல ஒப்பனிங்கும் பெருசு. ஒரு தமிழ் டீமோட படம்ங்றதால பெருமைப்பட்டுக்கலாம்.

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 10

”சார். இன்னைக்கு கடைசி நாள். என்ன பண்ணலாம்?”

சந்தானம் ஸ்டைலில் மட்டன் பிரியாணி பண்ணலாமான்னு கேட்க நினைத்து, அப்புறம்,

“நீயே சொல்லு”ன்னுட்டேன்.

“கடைசி ஆசை. நீங்க சொல்லுங்க”

இதென்ன, தூக்கு தண்டனையா?

“சரி. டிராபிக்ல போயி ஓட்டுவோம். அப்புறம் மெயின் ரோட்டுலயே ரிவர்ஸ் எடுப்போம். ஒ.கேவா?”

ஒ.கே. ரைட்.

அப்படியே ஒரு பெரிய ரோட்டுல போயி செய்தோம்.

முடிக்கறதுக்கு முன்னாடி சில முக்கியமான விஷயங்கள்.

1) எப்பவும் காரை எடுக்கறதுக்கு முன்னாடி எல்லா லைட், இண்டிகேட்டரையும் போட்டு பார்த்திடுங்க. காரை சுத்தி ஒரு ரவுண்ட் போயிட்டு பெட்ரோல் லீக் ஆகுதா, டயருல காத்து இருக்கான்னு பார்த்திடுங்க.
2) ஏறுனவுடன் கண்ணாடியை சரி பண்ணிடுங்க. மறக்காம, சீட் பெல்ட் போடுங்க.
3) போகும்போது 10 நொடிக்கு ஒருமுறை எல்லா கண்ணாடியையும் பாருங்க. அதே மாதிரி, ஸ்டாப் பண்ணிட்டு கிளம்பும்போதும் எல்லா கண்ணாடியும் பாருங்க.
4) முன்னாடி நிக்குற வண்டி கிளம்புனதுக்கு அஞ்சு செகண்ட் கழிச்சு கிளம்புங்க.
5) தொலைதூர பயணத்தின் போது, நாலு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுப்பது அவசியம்.
6) திரும்பும்போது, ஒரு முப்பது மீட்டருக்கு முன்னாடியே இண்டிகேட்டரை போட்டுடுங்க. இடது பக்கம் திரும்பறதோட, வலது பக்கம் திரும்பும் போது ரொம்ப கவனமா இருக்கணும். ரோட்டுக்கு நடுவே இருக்குற கோட்ட தாண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
7) முடிஞ்சளவு சீக்கிரம் கிளம்புங்க. அதன் மூலம் மிதமிஞ்சிய வேகத்தை தவிர்க்கலாம். கட்டுபாடற்ற வேகத்தை தவிர்த்தாலே, எல்லோருக்கும் நல்லதுதான்.
8) எந்த அளவு வேகமா போறோமோ, அதுக்கு ஏத்தமாதிரி பிரேக் பிடிக்க வேண்டிய தூரம் மாறுபடும். அது கவனத்துல இருக்கணும்.
9) எப்பவும் ரோட்டுல போற மத்தவங்க, எந்நேரமும் எந்த தப்பும் செய்வாங்கங்கற நினைப்பு இருந்திச்சுன்னா, நாமா கொஞ்சம் சேஃபா இருக்கலாம்.
10) கார் ஓட்டும்போது தயவுசெய்து போன் பேசாதீங்க.


கார் டிரைவிங் டிரெயினிங் ஒவர். இன்னும் இருபது நாள் கழிச்சு போயி லைசன்ஸ் எடுத்திடலாம்.

“ஏதும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு. எனக்கு ஏதும் வேணும்ன்னாலும் நான் கால் பண்றேன். பார்க்கலாம், பை.”.

-------------

கார்கள் உடனான மனிதனின் மனநிலையை பார்ப்போம். படிக்காதவன் படத்தில் ரஜினி காருடன் ”ல‌க்ஷ்மி, ல‌க்ஷ்மி”ன்னு பேசுவார். நிஜமாவே அந்த மாதிரி பேசுறவங்க இருக்காங்க.

காருக்கு ஏதேனும் ஒண்ணுனா துடிதுடிச்சு போயிடுவாங்க. அப்படி இருக்கறது சரியா?

கண்டிப்பா இல்லை. சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் அந்த காலத்தில் அந்தஸ்த்தின் அடையாளமாக இம்பாலா கார் வைத்திருந்த போது, எம்.ஆர். ராதா அதில் வைக்கோல் ஏற்றி “கார் ஈஸ் ஜஸ்ட் எ கார்”ன்னு காட்டிட்டு இருந்தார்.

அது மாதிரி எல்லோராலையும் இருக்க முடியாதுங்கறதுதான் உண்மை. பல கார்கள் வாங்குற நிலையில இருக்கறவுங்க அப்படி பண்ணலாம். வாழ்நாள் கனவா ஒரு கார் வாங்குறவன்? ஒரு கோடு கூட விழாம பாத்துக்கத் தான் ஆசைப்படுவான். எல்லாம் ஒரு அளவோட இருந்தா நல்லதுதான். அவ்ளோ தீவிரமா இருக்குறவுங்க, சக மனுசன் மேலயும் அதே அளவு அன்போட இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல.

--------------

இந்த பதிவில் கார் ஓட்டுவதற்கான எல்லா பயிற்சியை பற்றியும் சொல்லியிருப்பேன் என்று கிடையாது. நான் கார் ஓட்டிய அனுபவமே இது. விட்டு போனவற்றை நண்பர்கள் சொன்னால், தெரிந்து கொள்ள நல்லா இருக்கும்.

பின்னூட்டங்களில் பல நல்ல தகவல்களை அளித்த DHANS மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

(முற்றும்)

பி.கு.: என் பதிவை பார்த்திட்டு நண்பன் ஒருவன், சுஜாதா கார் ஓட்டிய அனுபவத்தை “தமிழ்நாடு இரண்டாயிரம் மைல்” என்ற கட்டுரையில் எழுதியிருப்பதாக சொன்னான். நான் படித்ததில்லை.

பதிவர்கள் யாராவது வைத்திருந்தால், பகிர்ந்து கொள்ளவும். கிடைக்கும் இடம் தெரிந்தாலும் சொல்லவும்.

Monday, December 29, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 9

இன்னைக்கி அவன் நேத்து சொன்ன மாதிரி மெயின் ரோட்டுக்கே போயிடலாம்ன்னு மெயின் ரோட்டுல இறங்கிட்டோம். காலையிலே அவ்வளவா டிராபிக் இல்லை. திரும்ப வரும்போது வந்திடும்.

அவன் கடை இருக்குற தெருவுல உள்ள பண முதலைகள பத்தி சொன்னான். பார்க்கத்தான் தெரு சாதாரணமா இருக்கு. ஏகப்பட்ட கோடிஸ்வரர்கள் இருக்காங்களாம். பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம்ம சினிமாவுல எல்லாம் போட்டு தொலைக்குறவுங்க பலர் இருக்காங்களாம். நான் கூட பயந்து போற மாதிரியான முகத்தோட சில சினிமா பேனர்கள் பாத்திருக்கேன்.

அந்த மாதிரியான ஒரு குடும்பத்தோட கதையை சொன்னான். பழைய தமிழ் சினிமா மாதிரி இருந்திச்சி. ஒரு ஊர்ல ஒரு கோடிஸ்வரராம் (அந்த முட்டு சந்துலதான்). அவருக்கு ஒரு கேடி பையன்னாம். எப்பவும் போதையிலயே சுத்துவானாம். அந்த பக்கம் இருக்குற, ஒரு சாப்ட்வேர் கம்பெனி முன்னாடி நின்னு வர போற பொண்ணுகள எல்லாம் பார்ப்பானான். பிடிச்ச பொண்ண தள்ளிட்டு போயிடுவானாம். ஒரு பெரிய வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். அப்புறம் அதையும் ஏதோ பிரச்சினையில கொன்னுட்டாங்களாம். அந்த பையனும் எய்ட்ஸ் வந்து செத்துட்டானாம்.

சே. இவன் உண்மையை சொல்றானா? இல்ல, கதையை அடிச்சி விடுறானா? என் முகத்தை பார்த்தா என்னன்னு தெரியுது?

இவனுக்கு ரியல் எஸ்டேட் ஆளுங்க கூட சகவாசம் இருக்குறதால, பண பரிமாற்றம் நடக்குற இடங்களுக்கு எல்லாம் போயிருக்கானாம். மூட்டையில லட்சக்கணக்கான பணத்தோட, ரவுடிகளோட காருல போன கதையை சொன்னான். கதை நல்லா இருந்திச்சு!

மெயின் ரோட்டுல ஒரு இடத்துல யூ டர்ன் அடிச்சேன். அடிக்கும்போது வண்டி ஆப் ஆகிடுச்சி. கூட்டம் இல்லாததால அவசரமோ, பதட்டமோ இல்லை. ஆன் பண்ணி திருப்பிட்டு வந்துட்டேன்.

வரும்போது, நிறைய பஸ், கார்களெல்லாம் போயிட்டு இருந்துச்சி. அதுக்கு இடையில போனது கொஞ்சம் திரில்லாத்தான் இருந்துச்சி.

டிராபிக்ல போகும் போது, ஸ்டியரிங்க கொஞ்சம் திருப்புறதுக்கும் கவனம் தேவை. எந்த பக்கம் இருந்தும் எது வேண்டுமானாலும் வரலாம்.

வண்டி எங்கயாவது பிரேக் டவுன் ஆச்சுனா, ரோட்டின் இடதோரத்தில் முதல்ல நிறுத்துங்க. உங்களுக்கு கார பத்தி தெரிஞ்சுதுனா, சரி பண்ண முயற்சி பண்ணுங்க. தெரியாம, கார்ல கைய வச்சிங்கன்னா, உங்களுக்கும் பிரச்சினை. காருக்கும் பிரச்சினை. முடிஞ்சவரை சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க. இல்லாட்டி, கார் கம்பெனியோட சர்வீஸ் சென்டருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க. எல்லா கார் கம்பெனியும் இருபத்தி நாலு மணி நேர சேவை தராங்க. மாருதி, டாடா, ஹூண்டாய்ன்னா, சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுவதும் அதிகமா இருக்கு. இது தவிர, இன்னும் சில தனியார் சேவை மையங்கள் இருக்கின்றன. ஆண்டு சந்தா கட்டினோமானால், இடத்துக்கே வந்து சரி செய்து விட்டு செல்வார்கள். சிட்டி என்றால் வசதி அதிகம்.

“கார்ல திடீர்ன்னு பிரேக் பிடிக்காம போயிடுச்சின்னா என்ன பண்றது?”

“முதல்ல பயப்படாதீங்க. ஆக்ஸிலேட்டர்ல இருந்து கால எடுங்க. கியரை கொஞ்சம் கொஞ்சமா குறைங்க. ஸ்பிட் குறைஞ்சோன, ஹேண்ட் பிரேக் போட்டு வண்டிய ஓரம் கட்டுங்க”

அப்ப பழைய ரஜினி படங்களில் (துடிக்கும் கரங்கள்ன்னு நினைக்கிறேன்) காட்டுற மாதிரி ரோட்டோரத்தில் இருக்குற கல்லுல மோதி நிறுத்த வேண்டாமா?!!!

”டயர் வெடிச்சுதுன்னா, ஸ்டியரிங்க கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம். ரொம்ப சிக்கலான நிலைமை அது. வண்டி கன்னாபின்னான்னு போகும். ஸ்டியரிங்க டைட்ட பிடிச்சிக்கிட்டு, வண்டி நிறுத்துற வழியை பாருங்க.”

இதுக்கெல்லாம் பிராக்டிஸ் தர மாட்டாங்களோ?

இன்னைக்கு கார் ஓட்டிட்டு முடிச்சிட்டு போகும்போது அவன், “சார், நாளைக்கு கடைசி நாள்”ன்னான்.

“ம். எப்படிப்பா ஓட்டுறேன்?”

“ம்ம்ம்.... நல்லா ஓட்டுறீங்க சார்”

(தொடரும்)

Sunday, December 28, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 8

இன்னைக்கு ஃபுல்லா ரிவர்ஸ் பண்ணி பிராக்டிஸ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தேன். அவன் மெயின் ரோடு போகலாமான்னு கேட்டான். நான் ரிவர்ஸ் போறத பத்தி சொன்னேன். ஒகேன்னு கூட்டிட்டு போனான்.

பல விதமா ரிவர்ஸ் எடுத்தேன். லெப்ட் சைடு ரிவர்ஸ். ரைட் சைடு ரிவர்ஸ். எந்த பக்கம் ரிவர்ஸ் எடுத்து திருப்புறோமோ, அந்த பக்கம் ரோட்டுல வண்டி இருக்குற மாதிரி இருந்திச்சுனா நல்லதாம்.

பின்னாடி வண்டிய எடுக்கும்போது, நல்லா திரும்பி பின் கண்ணாடி வழியா வெளியே பார்க்கணும். நல்லா திரும்ப முடியாட்டி, ஸ்டியரிங்ல இருந்து ஒரு கைய எடுத்து கியர் மேலே வச்சா நல்லா திரும்ப முடியும். ஸ்ட்யரிங்க்கு ஒரு கை போதும்.

நான் வண்டி ஓட்டுற இடத்துல ஒரு ஜெயில் இருக்கு. வெள்ளை டிரெஸ் போட்டுட்டு சில பேரு குறுக்க வந்திட்டு இருந்தாங்க.

“யாரு இதெல்லாம்? வார்டனா?’

“கைதிங்க”

“என்னது? வெளியே சுத்திட்டு இருக்காங்க.”

“நல்ல கைதிங்க சார். உள்ள இருக்கும்போது பார்ப்பாங்க. நல்லபடியா இருந்தாங்கன்னா, வீட்டு வேலைக்கு கூட்டுட்டு போவாங்க. தப்பிச்சி எல்லாம் போயிட மாட்டாங்க”

உண்மைய சொல்றாரா? இல்ல?...

”சில சமயம், ஊரு சுத்தி பார்க்க கூட கூட்டிட்டு போவாங்களாம்”

சூப்பரு.

அப்பப்ப, மேட்டுல நிறுத்தி பிரேக் பிடிக்காம கிளட்ச்ச விட்டு ஸ்டார்ட் பண்றதையும் பிராக்டிஸ் பண்ணினேன்.

அப்புறம், பார்க்கிங் பத்தி சொன்னான். நம்ம நாட்டுல காரை பக்கவாட்டுல நிறுத்துற மாதிரியான பார்க்கிங்தான் பொதுவா இருக்கும். அதாவது ரோட்டோரத்தில் ஒரு கார் பின்னாடி இன்னொரு கார் இருக்குற மாதிரி. சில வெளிநாடுகளில் நாமெல்லாம் பைக் நிறுத்துவது மாதிரியான கார் பார்க்கிங் இருக்குமாம். அது சுலபமா தெரிஞ்சாலும், இட வசதி இல்லாவிட்டால் திருப்புவதற்கு கஷ்டமாம்.

நம் நாட்டில் உள்ள பார்க்கிங்கிற்கு முன்னால் சென்று, பின்பு பின்னால் வந்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் கார்களுக்கு இடையே நிறுத்தி விட வேண்டும். அப்படி நிறுத்தி பழகுவதற்கு, நமக்கென்று சில கால்குலேஷன் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு தூரம் முன்னால் செல்ல வேண்டும். எங்கிருந்து பின்னால் வர வேண்டும். எந்த இடத்தில திரும்ப வேண்டும். எப்போது நிறுத்த வேண்டும், போன்றவற்றை நமது காருக்கு ஏற்றவாறு தெரிந்து வைத்திருந்தால் சுலபமாக பார்க் பண்ணிவிட்டு வந்த வேலையை பார்க்கலாம். நேரே சென்று இரு கார்களுக்கு இடையே விடுவது சான்ஸே இல்லை.

பார்க் பண்ணியவுடன் ஹண்ட் பிரேக்கை போட்டு விட்டு செல்லவும். சிலர் ஃபர்ஸ்ட் கியரையும் போட்டு விட்டு செல்வார்கள். (திரும்பி வந்து எடுக்கும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால், கார் பார்க்கிங் மறக்க முடியாத நிகழ்வாகிவிடும்)

ரொம்ப முக்கியம், காரை லாக் செய்து கீயை எடுத்துட்டு போகவும். அதை போட்டுட்டு போயிடுடாதீங்க.

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 7

"இன்னைக்கி எங்க சார் போலாம்?”

“நீயே சொல்லு. நான் நல்லா திருப்பி திருப்பி ஓட்டணும்ன்னு நினைக்கிறேன்.”

“ஓகே. கிளம்புங்க”

“எங்க?”

“அந்த பக்கம் ஒரு லே-அவுட் இருக்கு. அங்க போலாம்.”

அது ஒரு புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் லே-அவுட். சின்ன சின்னதாக நிறைய சாலைகள். வீடுகள் குறைச்சல்.லெப்ட்-ரைட்ன்னு ஸ்டியரிங்க ஒடிச்சி ஒடிச்சி ஓட்டுனேன். முக்கியமா தெரிஞ்சிக்கிட்டது, ஒரு திருப்பத்தில் திரும்பிய உடன், வீலை உடனே சரி செய்திட வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஆபத்து நேரிடலாமாம். ரொம்ப வேண்டி கேட்டு கொண்டான்.

பின்னாடி ரிவர்ஸ் எடுக்கும்போது திரும்பி பின் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். சைட் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். ரிவர்ஸ் பண்ணதுக்கப்புறம் மறக்காம, கியரை மாத்திடுங்க. நான் சில நேரங்களில் மறந்திட்டேன்.

கார்ல உள்ள நவீன தொலைநுட்பங்கள் பத்தி பேசினோம். அவன் ஒரு மந்திரி கார் பத்தி சொன்னான். மந்திரியின் செலவுகள் பத்தி சொன்னான். பிறகு, அவன் பண்ணும் செலவுகள் பத்தி சொன்னான்.

“எங்க அப்பா நான் ஸ்கூல்ல படிக்கும்போது அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுப்பாரு. நான் நல்லா செலவு பண்ணுவேன். என்ன, நல்லா சாப்பிடுவேன். வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல.”

“ம்ம்ம்”

“எங்க அப்பா நல்லா படிக்கல. பசங்களாவது நல்லா படிக்கணும்ன்னு நினைச்சாரு. எங்க அண்ணன் பத்து வரைத்தான் படிச்சான். என்னை ரொம்ப நம்பினாரு. நானும் சரியா படிக்கலை. எனக்கு ஒண்ணும் இல்லை சார். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஏதாவது ஒரு வேல பார்க்கணும். சம்பளம் ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு பத்து பதினைஞ்சி போதும்.”

இப்பவே அவ்வளவு சம்பாதிப்பதாக சொல்லியிருந்தான். பார்த்தேன் அவனை.

“ஒரு நாளு எங்க அப்பாவை ஆபிஸ் கூப்பிட்டுட்டு போயி சாப்பாடு வாங்கி கொடுக்கணும். அது போதும் சார்.”

அவுங்க வீட்டுல வசதியாத்தான் இருக்காங்க. என்ன, குடும்பத்துல படிச்சி யாரும் பெருசா ஆகலைன்னு ஒரு வருத்தம். அவன் அண்ணன் பையனை ஸ்கூல்ல சேர்க்கும்போது பெற்றோர்கள் படிச்சி இருக்கணும்ன்னு சொல்லி இருக்காங்க. அப்ப இருந்து, அவனுக்கு அதுக்காகவாவது படிச்சிருக்கணும்ன்னு ஒரு எண்ணம்.

“ஒரு பொண்ணு பார்த்தாங்க சார், எனக்கு”

“ஓ! அப்படியா? என்ன ஆச்சு?”

“அது படிச்ச பொண்ணு. அதுக்கு பையன் பார்க்க எங்க அப்பாக்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்புறம் அவுங்களே உங்க பையன் இருக்கானே?. அவனுக்கே பண்ணிடுவோம்ன்னு சொல்லியிருக்காங்க. பொண்ணு பேங்க்ல வேலை பார்க்குது. என்னோட ரெண்டு வயது அதிகம்”

ஆச்சரியத்துடன், “வயசு பரவாயில்லையா?”

“எங்க அப்பாவுக்கு ஒகே. அந்த பொண்ணு வீட்டுல எக்கச்சக்கமா நிலம் இருக்கு. ஐம்பது லட்சம் தேறும். கல்யாணத்துக்கப்புறம் எனக்கு ஏதாச்சும் பிஸினஸ் செஞ்சு வைப்பாங்கன்னு எங்க அப்பா நினைக்குறாரு.

”அப்புறம்?”

“எங்க அம்மாவுக்கு பிடிக்கலை. அவ்ளோத்தான்.”

என் டிரைவிங்ல உள்ள குறைகள பத்தி கேட்டேன். சொன்னான்.

1) ஊருக்குள்ள போகும்போது, ஹாரன் அடிக்கவே மாட்டேங்கறேனாம்.
2) திரும்பும்போது, உடனே வீலை நேராக்க மாட்டேங்கறேனாம்.
3) பிரேக் போடும்போது பின்னாடி என்ன வருதுன்னு பார்க்க மாட்டேங்கறேனாம்.

முத பிரச்சினை, ஜுஜுபி. வேணும்ன்னுதான் அடிக்கலை. எதுக்கு ஓவரா இதெல்லாம்ன்னு விட்டுட்டேன். சரி பண்ணிடலாம். ரெண்டாவது, கூடிய சீக்கிரம் சரி பண்ணிடலாம். இன்னிக்கே, இந்த பிராப்ளம் ஓரளவுக்கு இல்ல. மூணாவதுதான், எனக்கு சரியா பிடிப்படல. சடன் பிரேக், முன்னாடி ஏதாச்சும் வேகமா வருறதாலத்தான் போடுறோம். அந்த நேரம் எப்படி பின்னாடி பார்க்குறது? ஏன், இதையே அடிக்கடி சொல்றான்?

அப்படி அத பத்தியே பேசினேன். அவன் ஒருமுறை எங்கோ குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, அவன் சடன் பிரேக் போடும்போது பின்னாடி வந்த லாரி இடிச்சிடுச்சாம். இடுச்சதுல, பின் கதவு ஜாம் ஆகிடுச்சாம். கிட்டத்தட்ட இருபதாயிரம் செலவாம்.

ஓ! அதனாலதானா?

(தொடரும்)

Friday, December 26, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 6

கத்து கொடுக்குற பையன் ரெண்டு நாளு வரல. முத நாளு கோவிலுக்கு போறேன்னு சொன்னான். ரெண்டாவது நாளு, இப்பதான் காலைல நாலு மணிக்கு திருவண்ணாமலைல இருந்து வந்தேன்’ன்னு சொன்னான்.

“திருவண்ணாமலை எப்படி இருந்திச்சி?”

“நல்லா இருந்திச்சி சார். காலெல்லாம் வலி.”

“கிரிவலமா?”

“ஆமாம் சார். அப்புறம் மலை மேலேயும் ஏறுனேன்.”

”ஓ! அப்படியா?”

கோவிலை அவன் கேமராவில் மலை மேலிருந்து படம் எடுத்திருந்தான். நல்லா இருந்திச்சி.

இன்னைக்கி யூ டர்ன், ரிவர்ஸ் அடிக்கிறது எல்லாம் பிராக்டிஸ் பண்ணலாம்ன்னு நினைச்சிருந்தேன். பண்ணலாமா?ன்னு கேட்டேன். சிட்டிக்குள்ள போலாமா?ன்னு அவன் கேட்டான்.

“ம்ம்... போலாமே”

“போயிட்டு காருக்கு பெட்ரோலும், கேஸும் அடிச்சிட்டு வந்திடலாம். ரெண்டு மணி நேரம் ஆகும். பரவாயில்லையா?”

கரும்பு தின்ன கூலியா? எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் காரு அதுவும் சிட்டிக்குள்ள ஓட்டுறதுன்னா கசக்கவா போகுது?

ரைட்... ரைட்...

போற வழியில ஏகப்பட்ட ஸ்பிட் பிரேக்கர்ஸ். கிளட்ச் பிடிச்சி ஸ்பிட் குறைச்சு, கியர் மாத்தி போறது இப்ப கொஞ்சம் சரளமாத்தான் வருது. உண்மையிலே கார் ஓட்ட பத்து நாளு தேவையில்லை.

மூணு-நாலு நாளு போதும். அதுக்கு மேலே, அவுங்க மேற்பார்வையிலே நாமளேதான் கார் ஓட்டுறோம்.

“தர்மஸ்தலா போயிருக்கீங்களா?”ன்னு கேட்டான்.

“இல்லையே”

“போயிட்டு வாங்க, சார். அருமையான கோயில்.”

“ஓ”

“எந்நேரமும் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு சூப்பரா இருக்கும். அந்த சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும். ஆனா, அந்த டேஸ்ட் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வராது. ரெண்டு நாளு மேலே அங்க இருக்க முடியாது”

”ஏன்?”

“அவுங்களே செலவு செய்து உங்கள ஊருக்கு அனுப்பிடுவாங்க. அந்த கோவிலுல இருக்குற எல்லோருமே ஹெல்ப் பண்ணுவாங்க. பஸ் டிக்கெட் கூட அந்த ஊருக்கு கம்மிதான்”

சின்ன வயசிலேயே பக்திமானா இருக்கானே? நிறைய கோவிலுக்கு போறான். சமீபத்தில் வேலூர் தங்க கோவிலுக்கும் போயிருக்கான். தர்மஸ்தலா போயிட்டு வந்ததுக்கப்புறம்தான் அவனுக்கு எல்லாமே பாசிட்டிவா நடக்குதான். எப்படியோ பாசிட்டிவ் உணர்வு வந்துச்சுன்னா போதும். நம்ம வேலைகளின் முடிவுகளை பாசிட்டிவ்வுக்கு கொண்டு வந்திடலாம்.

பெட்ரோல் பல்க்க்கு முன்னாடியே, அவன் நான் வண்டியை ஓட்டுறேன்னு சொன்னான்.

“நானே ஓட்டுறேனே?”

“இல்ல. உள்ளே ஏத்தி திருப்புறது கொஞ்சம் கஷ்டம்”

ஓகே. இதுவரைக்கும் கார்ல போறப்ப, சும்மா பாட்டு கேட்டுட்டு, வெளியே ’இயற்கை’யை ரசிச்சிட்டு வருவேன். இன்னைக்கு கொஞ்சம் தூரம் அவன் ஓட்டுன டிரைவிங்க பார்த்திட்டே வந்தேன்.

சே. நான் எவ்ளோ கேவலமா ஓட்டுறேன்!

நான் கார் ஓட்டும்போது, ஆக்ஸிலேட்டர ஏதோ அதுக்கு வலிச்சுட போகுதோங்குற மாதிரி மெதுவா மிதிப்பேன். இவன் தையல் மிஷின் மாதிரில்ல மிதிக்குறான் (பழைய வண்டி). நாமளும் மிதிச்சிட வேண்டியதுதான். நல்லா ஓட்டுறாயான்.

பெட்ரோல் போட்டத்துக்கப்புறம் நான் ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஒரு இடத்துல, ஒரு நாய் குறுக்க வந்தது. சல்லென்னு பிரேக்க பிடிச்சேன். நாய் தப்பிச்சிருச்சி.

“ஏன் சார் இப்படி பிரேக் பிடிக்கிறீங்க? இப்படியெல்லாம் பண்ணாதீங்க. அது எப்படியும் போயிடும். நீங்க ஸ்லோ பண்ணினா போதும். பின்னாடி வண்டி வந்திச்சின்னா என்ன பண்ணுவீங்க?”

ஒகே. அடுத்த முறை கொஞ்சம் கவனமா செய்யணும்.

திரும்பி வரும்போது, அவன் படிப்ப பத்தி சொன்னான். பிசிஐ படிக்கலாம்ன்னு ஐடியாவாம். சாப்ட்வேர் பத்தி கேட்டான். எனக்கு தெரிஞ்ச கதையை சொன்னேன். விளக்கமா கேட்டான். அவன் பேங்க் வெப்சைட் எல்லாம் யூஸ் பண்ணியிருக்கறதா ஏற்கனவே சொல்லியிருக்கான். அதனால அதை உதாரணமா வச்சி சொன்னேன். ரொம்ப ஆச்சரியமா,அவ்ளோ பண்ணலாமான்னு கேட்டான். இதுக்கே இப்படியான்னு, இன்னும் ஜனரஞ்சகமா ஆச்சரியத்தை கிளப்புவோம்ன்னு மல்டிமீடியா, அனிமேஷன் மென்பொருட்கள் பத்தி சொன்னேன். அங்க ஆரம்பிச்சது ரஜினியோட சுல்தான்கிட்ட வந்து நின்னது.

நான் சொல்லி அவனுக்கு தெரியாதது, அவனுக்கு ஆச்சரியம். அவன் சொல்லி எனக்கு தெரியாதது, என்னோட ஆச்சரியம்.

புதுசா கார் ஓட்டுறவுங்களுக்கு ஆச்சரியப்படுற மாதிரி நான் ஒரு அறிவுரை சொல்லுறேன். கேட்டுக்கோங்க.

எதையும் கத்துக்கும்போது, முட்டி மோதி கத்துக்கலாம். ஆனா, காரை அப்படி கத்துக்காதீங்க. :-)

(தொடரும்)

Wednesday, December 24, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 5

இத்தினி நாளு சின்ன சின்ன ரோட்டுல ஓட்டிட்டு இருந்தேன். இன்னைக்கு மெயின் ரோட்டுக்கு கூட்டுட்டு போனான், நம்ம டிரைவர். (நான் ’போனான்’ன்னு சொன்னாலும், டிரைவர்’ங்கற வார்த்தை மரியாதையா வந்திடுச்சே!) மெயின் ரோட்டுல ஓட்டும்போது அந்த அளவுக்கு ரொம்ப வேல இருந்த மாதிரி இல்ல. திரும்பும்போதுதான் கொஞ்சம் பார்த்து திரும்பணும்.

”இந்த ரோட்டுல திடீர்ன்னு நாயி குறுக்க வந்திருச்சினா என்ன பண்ணுறது?”

பாருங்க. எப்படி எல்லாம் கேள்வி கேட்கறேன்னு. அந்த ரோட்டுல மரணமடைந்து மறைந்த நாயிகள் ஏராளம். எல்லாம் தாரோடு தாராக சேர்ந்து மறைந்து விட்டது. கொஞ்சம் பார்த்து வரலாம். நாயிக்கு என்ன தெரியும்? நாயிக்கு சைடுதான் தெரியும். முன்ன இருக்குறது தெரியாதுன்னு சொல்லுவாங்க. நமக்கு எல்லா பக்கம் தெரிஞ்சுமே, பாட்டு கேட்டுக்கிட்டோ, போன்ல பேசிக்கிட்டோ இடிச்சிக்கிறோம்.

“ஏத்திருங்க”

“ஆங்?” வாயை பிளந்தேன்.

”நான் என்ன சொன்னாலும், உங்க காலு அந்த டைம் ஆட்டோமெடிக்கா பிரேக்குக்கு போயிடும். முன்ன பின்ன பார்த்து பிரேக் போடணும். எல்லாம் உயிருதான். சடன் பிரேக் போடும்போது, பின்னாடி ஏதாவது லாரி வந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க? அதுவும் கவனத்துல இருக்கணும்.”

மூணாவது கியர், நாலாவது கியர் என்று மாத்தி மாத்தி ஓட்டினேன். அப்பப்ப, நிறுத்தி நிறுத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.

இன்னைக்கு எதுவும் புதுசா கத்துக்கலை. அவ்ளோதானா?

“எனக்கு வளைச்சி திருப்புறது, வண்டிய பொஸிசன் பண்ணுறது எல்லாம் சொல்லி தாப்பா?”

“நாளைக்கு பார்த்துருவோம் சார்”

பேசிட்டே ஓட்டிட்டு இருக்கோம். ஒருவேளை பேசிட்டே ஓட்டுறது எப்படின்னு சொல்லி தாறானோ?

திரும்பும் போது ஸ்பீட் கொஞ்சம் அதிகமாவே இருக்கு.

டெய்லி ஒரு மணி நேரம் டிரைவிங் சொன்னதுக்கு என் பிரண்ட் எனக்கு தெரிஞ்ச இடத்துல ரெண்டு மணி நேரம்ன்னு சொன்னான். பர்ஸ்ட்டு, யாராவது கத்துக்கும் போது பின்னாடி உக்கார்ந்து ஒரு மணி நேரம். அப்புறம் நமக்கு ஓட்ட ஒரு மணி நேரம்ன்னு சொன்னேன்.

நானும் நம்மாளுக்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், அப்படியெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொன்னான். அப்புறம், கத்துக்க வருறவுங்க சிலர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னான். பிறகு, இன்னொரு காரணமும் இருக்குன்னான்.

“என்ன?”

“போன ரெண்டு உயிர்தானே போகும்?”

அடப்பாவி.

“நீ கத்துக்கொடுக்க போனப்ப, ஏதாச்சும் ஆக்ஸிடண்ட் ஆகிருக்கா?”

”இல்லங்க”

“ம்ம்ம்”

“ஆனா, எங்க மாஸ்டர் பண்ணிருக்காரு.”

“என்னாச்சி?”

“அவரு ஒரு கார ஓட்டும்போது, வீட்டுக்காரர் மேல ஏத்திட்டாரு.”

“அப்புறம்?”

“அவுரு அவுட்”

“என்னது?" எனக்கு தூக்கி வாரி போட்டது.


(தொடரும்)

Tuesday, December 23, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 4

மணி ஆறறை. இன்னைக்கி குளிர் அதிகம். லேசா பனியும் இருக்கு. ஆனா இப்பவே, சில பொடிசுகள் கராத்தே கத்துக்க போயிட்டுயிருக்காங்க. கத்துக்கட்டும். கத்துக்கட்டும். நாம கார் ஓட்ட கத்துக்குவோம்.

ஸோ, இதுவரைக்கும் எல்லா பார்ட்ஸையும் பார்த்தாச்சு. அத எப்படி யூஸ் பண்ணுறதுன்னும் பார்த்தாச்சு. உங்களுக்கு இண்டிகேட்டர், ஹாரன், வைப்பர் பத்திலாம் சொன்னேனா? அத அவர் முத நாளே சொல்லிட்டாரு. நான் தான் மறந்திட்டேன்.

ஹாரன் - ஸ்ட்யரிங் மேலேயே இருக்கும்.இரண்டு கையாலையும் அடிக்க வசதியா ரெண்டு இருக்கும். எப்ப வேணா அடிச்சிகோங்க.

இண்டிகேட்டர் - வலதுபக்கம் ஸ்ட்யரிங் கீழே இருக்கும். மேலே தள்ளுனா, இடது பக்கம் லைட் எரியும். கீழே தள்ளுனா, வலது பக்கம் இண்டிகேட்டர் எரியும். லெப்ட் இண்டிகேட்டர் போட்டுட்டு, வலது பக்கம் கைய காமிச்சிட்டு, நேரா போயிட கூடாது.

ஹெட் லைட் - இண்டிகேட்டர் போடுறதுக்கு யூஸ் பண்ணுற குச்சியையே திருப்புங்க. பீமர் (மகாபாரதத்துல வர்றவரு இல்ல... லைட்ட மேல கீழே அடிக்க) யூஸ் பண்ண குச்சியை மேல தள்ளுங்க.

வைப்பர் - மழை பெயிறப்போ கண்ணாடில இருக்குற தண்ணிய துடைக்க கண்ணாடி மேலே ரெண்டு வைப்பர் இருக்கும். தூசியா இருக்கும் போதும், தண்ணி விட்டு கழுவிக்கலாம். அதுக்கு, ஒரு குச்சி ஸ்ட்யரிங் கீழே இடதுபக்கம் இருக்கும். அத வச்சியே, தண்ணியும் விட்டுக்கலாம்.

பேனெட் - முன்னாடி இருக்குற பேனெட்ட திறக்குறதுக்கு, டாஷ்போர்ட்ல வலது பக்கம் கதவு கிட்ட இழுக்குற மாதிரி ஒண்ணு இருக்குது. இன்ஜின்ல எதாச்சும் பார்க்கணும்னா, இத வச்சி பேனெட்ட திறந்து பார்க்கலாம்.

தவிர பேட்டரி, பெட்ரோல், ஹேன்ட் பிரேக் இதோட நிலவரங்களை காட்ட டாஷ்போர்டுல நிறைய ரெட் லைட் ஸாரி, சிவப்பு சிறு ஒளி அமைப்புகள் இருக்குது.

கிட்டத்தட்ட எல்லா ஐட்டங்களையும் பத்தி தெரிஞ்ச்சிக்கிட்டாதால பிராக்டிஸ் தான் தேவை.

இன்னைக்கு எங்கயும் ஆப் ஆகலை.

இன்னைக்கு ஓட்டிக்கிட்டே நிறைய பேசினோம். கத்துகொடுக்குற பையனுக்கு இருபத்தியொரு வயசுதான் ஆகுது. ஸ்கூல்ல பெயில் ஆகிட்டான். இப்ப, பாஸ் பண்ணி காலேஜ்ல கம்ப்யூட்டர் கத்துக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான். ஹார்ட்வேர் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கான். இங்கிலிஷ்ல பேச மட்டும் கொஞ்சம் தயக்கமா இருக்கு போல. அதுலாம் பெரிய விஷயம் இல்லன்னு சொன்னேன்.(ஆமா... இவரு பெரிய...).

ரெண்டு மூணு டைம் யூ டர்ன் அடிச்சி பிராக்டிஸ் பண்ணினேன்.

முடிச்சிட்டு கிளம்பும் போது, முன்னாடி பேனட்டை திறந்து எல்லாத்தையும் பத்தி சொன்னான், நம்மாளு. இன்ஜின், ஸ்பார்க் பிளக், ரேடியேட்டர், ஃபேன், கியர் பாக்ஸ்ன்னு எல்லாத்தையும் காட்டினான்.

”ஒரு நாளைக்கு எத்தனை பேரு கார் ட்ரேயினிங் வாராங்க?”

“இப்ப மூணு பேருதான் வாராங்க. முன்ன பதினைஞ்சு பேரு கூட வந்து இருக்காங்க.”

“ஓ”

“இப்ப தான் ரொம்ப சோம்பேறி ஆகிட்டேன். முன்ன, நாலு மணிக்கே எந்திரிச்சு வேலைய ஆரம்பிச்சுடுவேன். அப்ப, சம்பளம் கூட வாங்கினத்தில்லை. இப்ப ஆறு மணி தான்.”

ஆறு மணிக்கு எந்திரிக்குற இவனே சோம்பேறினா, என்னை எல்லாம் என்னன்னு சொல்லுறது?ன்னு நினைச்சிக்கிட்டேன்.

சாதனையாளர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, எல்லோருமே அதிகாலையில எந்திரிக்கறவுங்கன்னு படிச்சி இருக்கேன். நான் இன்னைக்கு காலையில பார்த்தவுங்க எல்லோருமே ரொம்ப கஷ்டபட்டுட்டுதான் இருந்தாங்க. இன்னும் எவ்ளோ நாளுல சாதனை பண்ண போறாங்களோ?

(தொடரும்)

Saturday, December 20, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 3

"பாஸ்... நீங்க டெய்லி பைக் ஓட்டுறீங்களா?”

“ஆமாம்.”

“கொஞ்சம் வேகமா ஓட்டுவீங்களோ?”

ஹி...ஹி...

”கார அப்படியெல்லாம் ஒட்டக் கூடாது. பைக்க சந்து பொந்துல எல்லாம் ஓட்டுவீங்க. இத அப்படி ஓட்ட முடியாது. நீங்க அப்படி போறப்ப, கார்க்காரன் ஒங்கள திட்டியிருப்பான். நாளைக்கு நீங்க அந்த மாதிரி ஒரு பைக்காரன திட்டுவீங்க. ரோட்டுல ஒரு கல் கெடந்திச்சின்னா, பைக்குல வளைச்சிக்கிட்டு போவீங்க. இப்ப, ஒரு கல் இருந்தாலும், நீங்கதான் மெதுவா போகணும்.”

முத நாளு காத்துதான் வண்டிக்கு முக்கியம்ன்னு சொன்னாரு இல்ல. அது ஏன்னா, காத்து இல்லனா வண்டி ஓடாதான். ஓடும்போது காத்து போச்சினா, வண்டி தலைகீழா விழ கூட சான்ஸ் இருக்காம்.

அப்புறம் இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேன். முத நாளே போயி, லெனர் லைசன்ஸ் போட்டுடுங்க. அப்பதான், 30 நாளு கழிச்சி லைசன்ஸ் எடுக்க வசதியா இருக்கும்.

இன்னைக்கு, தலைவரு இரண்டு விஷயம் சொல்லி கொடுத்திட்டு அத பிராக்டிஸ் பண்ண சொன்னாரு.

மேடான பகுதில, வண்டிய ஆப் பண்ணிட்டு எப்படி ஸ்டார்ட் பண்ணனும்ன்னு. சமதளத்தில் ஓட்டும்போது, பிரேக்க பிடிக்க தேவையிருக்காது. ஸோ, கிளட்ச்ச மட்டும் விடுவீங்க. ஆனா, மேட்டு பகுதில, பிரேக்க பிடிச்சிட்டு இருப்பீங்க. அந்த சமயம், கிளட்ச்ச விட்டாலும் வண்டி போகாது. பிரேக்க விட்டா வண்டி பின்னாடி போகிடும். அப்ப என்ன பண்ணுறது?

கொஞ்சம் நேக்கா, கிளட்ச்ச விட்டுட்டு வண்டி லேசா உறுமுற சமயம், பிரேக்குல இருந்து கால எடுத்திட்டு, ஆக்ஸிலேட்டர லேசா மிதிங்க. ஸிங்க் வருற வரை இதுக்கு பிராக்டிஸ் தேவை.

அடுத்தது, வண்டிய எடுத்து பின்னாடி திருப்புறதுக்கு பிராக்டிஸ்.பின்னாடி திரும்பும்போது பின்கண்ணாடி வழியா பார்த்திட்டே திரும்பணும். ரிவர்ஸ் கியர்ல வண்டி கொஞ்சம் ஸ்பீடாவே போகும். அதனாலே கவனம் தேவை.

”நான் எப்ப நானே தனியா வண்டிய ஓட்டலாம்?”

“எட்டு நாளு கழிச்சு ஓட்டலாம். ம்ம்ம்ம்... நாளைல இருந்துகூட ஓட்டலாம்.”

எனக்கென்னமோ அப்படி தோணலை. திரும்பும்போது, கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.

இன்னைக்கு காருகள பத்தி சொன்னாரு. ஒவ்வொரு கார பத்தியும் சொன்னாரு. மாருதி 800 தான் ரொம்ப சேல்ஸ் ஆன வண்டின்னு சொன்னாரு. சாண்ட்ரோல எலக்ட்ரானிக் சமாச்சாரம் அதிகம்ங்கறதால, ரிப்பேர் பார்க்க கொஞ்சம் கஷ்டம்ன்னாரு.இப்ப வர்ற கார்ல, இன்ஜின் வெயிட் கம்மி. ஆனா, பவர் அதிகம்ன்னாரு. நான் வண்டி ஓட்டுறதுல கவனமா இருந்ததால, அவ்ளோவா அவரு பேச்ச கவனிக்க முடியல. சும்மா உம் கொட்டிட்டு இருந்தேன்.

கார் ஓட்டும்போது யாராவது கூட இருந்தா நல்லதாம். தனியா போறத விட, கூட யாராவது இருக்கும்போது கொஞ்சம் அதிகம் அலெர்ட்டா இருப்போமாம். நைட் ஓட்டும்போது, யாராவது கண்டிப்பா இருக்கணுமாம். நான் கூட எப்பவாவது ஊருக்கு கார்ல போகும்போது, டிரைவர் கூட பேசிட்டே வருவேன். அப்படியே, டிஜே மாதிரி பாட்டு செலக்ட் பண்ணுறதும் நாந்தான்.

நைட் ஓட்டும்போது டயர்டா இருந்திச்சுனா, வேற யார்ட்டயாவது கொடுத்துடுங்க. அப்படி யாராச்சும் இல்லனா, ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு, லைட்டா ஒரு தூக்கத்த போட்டுட்டு போங்க.

எல்லா காருலையும் வீல் இணைப்பு ரொம்ப காலத்துக்கு அப்படியே டைட்டா சிக்குன்னு இருக்காதாம். அடிக்கடி சர்வீஸ் அப்ப, அத கவனிக்கணும். இல்லாட்டி, உங்களுக்கு முன்னாடி அது ஒடிட்டு இருக்கும்னாரு. எனக்கு கரகாட்டகாரன் தான் ஞாபகம் வந்தது.

(தொடரும்)

Friday, December 19, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 2

ஆன்/ஆஃப் சொன்னேன், இல்லையா? அது ஒண்ணும் சாதாரணமானது இல்ல. கீயை வலது பக்கம் திருப்பினா, ஆன். இன்ஜின் ஸ்டார்ட் பண்ண, இன்னும் வலதுபக்கம் திருப்பிட்டு விட்டுடணும். கீ பழைய நிலைக்கு வந்துடும். இப்ப ஆஃப் பண்ணுறதுக்கு, இடது பக்கம் திருப்பணும். இன்ஜின் ஸ்டார்ட் பண்ணினத்துக்கு பிறகு, திரும்பவும் வலது பக்கம் திருப்பினா அது வண்டிக்கு நல்லது இல்ல. ஏகப்பட்ட காரணம் சொன்னாரு. சுருக்கமா, ஒடுற டயருக்குள்ள கால விடுற மாதிரின்னாரு. வண்டிக்கு செலவு வைச்சுடும்ன்னாரு. சரிதான்னு கேட்டுக்கிட்டேன்.

இன்னிக்கு சொல்லிக்கொடுக்க போறது, கிளட்ச், கியர், பிரேக் பத்தி. கால்ல மிதிக்க மூணு சமாசாரங்கள் இருக்குது. பர்ஸ்ட், கிளட்ச். செகண்ட், பிரேக். அப்புறம், ஆக்ஸிலேட்டர். இடது காலுக்கு, கிளட்ச்ச கொடுத்துடணும். வலதுகாலுக்கு, ஓட்டும்போது ஆக்ஸிலேட்டர். நிறுத்தும்போது, பிரேக்.

இடதுகைக்கு வேல கொடுக்கபோறது, கியர். கார்ல மொத்தம் அஞ்சு கியர்ஸ். ஒண்ணு ரிவர்ஸ் கியர். கீழே கொடுத்திருக்குற படத்த பாருங்க. இதுல, 1-2, 3-4, R இதையெல்லாம் இணைக்குற கோடு பூரா நியூட்ரல்தான். ஏதாவது கியர்ல இருந்து எடுத்து விட்டா, அதுவா மூணுக்கும் நாலுக்கும் இடையே இருக்கும் இடத்துக்கு வந்துடும்.



சரி. வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு நாமலே எப்படி போறது?

1) முன்னாடியே சொன்ன மாதிரி ஆன் பண்ணுங்க. இன்ஜின் ஸ்டார்ட் பண்ணுங்க.
2) கவுண்டமணி செந்தில பண்ணுவாரே, அந்த மாதிரி மிதிக்காம, மெதுவா கிளட்ச்ச மிதிங்க. விட்டுடாதீங்க.
3) பர்ஸ்ட் கியருக்கு இடது கைல இருக்குற குச்சியை தள்ளுங்க.
4) கிளட்ச்ச ,மெதுவா விடுங்க.
5) ஆக்ஸிலேட்டர விடவே தேவையில்லை. கிளட்ச்ச விட்டாவே வண்டி மூவ் ஆகும்.

ஆக்ஸிலேட்டர் கொடுக்காம கிளட்ச்ச விட்டே, என்ன நடக்குதுன்னு பார்க்க சொன்னாரு. வண்டி மூவ் ஆச்சு. பைக்ல இப்படி இருக்காது. ஆனா, பெரிய வண்டி எல்லாத்திலையும் இப்படித்தான்னு சொன்னாரு. அப்புறம், ஆக்ஸிலேட்டர் மிதிக்கவும் வண்டி கொஞ்சம் வேகம் எடுத்தது.

கொஞ்சம் தூரம் போனதும், ஆக்ஸிலேட்டார்ல இருந்து கால்ல எடுத்திட்டு, கிளட்ச்ச மிதிச்சு ரெண்டாவது கியர் போடணும். முதல் கியர்ல இருந்து ரெண்டாவது கியருக்கு அப்படியே போய்டலாம்.

போடும்போது, நடு கோட்ட தொட்டு போறதால, நியூட்ரலுக்கு போயிட்டுதான் போகுதாம்.

அப்புறம் இப்ப வர்ற சில கார்ல கிளட்ச் கிடையாதாமே? அப்படியா? தவிர, கியர் வடிவமைப்பும் நேரா இருக்குமாம். உதாரணத்துக்கு, ஹூண்டாய் ஐ10? தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

”எவ்ளோ தூரம் இப்படி ரெண்டாவது கியர்ல போகணும்?”

“சீக்கிரம் மூணாவது, நாலாவதுக்கு போனா நல்லதுதான். பெட்ரோலும் ரொம்ப குடிக்காது. வண்டிக்கும் நல்லதுதான்.”

“போகட்டுமா?”

“வேண்டாம். வேண்டாம். இப்பதானே கத்துக்கிறீங்க. அப்படியே மெதுவா ஓட்டுங்க. வேகமா போனா எதுவும் கத்துக்க முடியாது. மெதுவா போகும்போதுதான் நுணுக்கங்களை துல்லியமா கவனிக்கலாம். கத்துக்கலாம்”

ஒகே. பாஸ்.

பிறகு, நாலைஞ்சு இடத்துல வண்டிய நிறுத்தி ஆப் பண்ணி, திரும்ப கிளப்புறதுக்கு பிராக்டீஸ் கொடுத்தாரு. அப்படியே, போயிட்டு இருக்கப்போ, அவரு சொல்லாமலே கொஞ்சம் வேகம் கொடுத்தேன். வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லி வேகத்தை குறைக்க சொன்னாரு. நானும் குறைச்சேன். ஸ்கூல்க்கு போற ரெண்டு பிள்ளைங்க சைக்கிளில என்னை முந்திக்கிட்டு போனாங்க.

(தொடரும்)

Thursday, December 18, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 1

பதிவு படிச்சு கார் ஓட்டுறதான்னு நினைக்காதீங்க. நீச்சல் கத்துக்கறதுக்கே புக் இருக்கு. அது மட்டும் இல்ல. இப்ப நம்மாளுங்க எதுக்கெடுத்தாலும் கூகிளத்தான் கேட்கிறாங்க. அப்படி, பின்னாடி வருற சந்ததியினருக்கு உபயோகமா இருக்குமேன்னுதான். ஓட்டுறீங்களோ இல்லையோ, நான் ஓட்டுன கதைய கேளுங்க.

கத்துக்கொடுக்குற கார்ல ரெண்டு கிளட்ச், ரெண்டு பிரேக் இருக்குது. ஒண்ணு நமக்கு.இன்னொண்ணு மாஸ்டருக்கு. முத நாள், அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க தொட வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு. ஸோ, ஆக்ஸிலேட்டரை மட்டும் மிதிச்சிக்கிட்டு, ஸ்ட்யரிங்க மட்டும் பிடிச்சிக்கிட்டு ஓட்டுனேன். அம்யூஸ்மெண்ட் பார்க்குல ஓட்டுற கார் மாதிரி இருந்திச்சு.

ஒரு இடத்துல வண்டிய நிறுத்த சொல்லிட்டு, கேள்வி கேட்க போறேன்னு சொன்னாரு. ஆஹா! இது வேறயான்னு நினைச்சிக்கிட்டு கேளுங்கன்னு சொன்னேன். சிக்னல் காட்ட சொன்னாரு. காட்டுனேன். அப்புறம் ஒரு சிம்பிளான கேள்வி கேட்டாரு. நாந்தான்ன்ன்...

“இந்த கார் எதுல ஓடுது?”

“ரோட்டுல”

“இல்ல... எதுல ஓடுது?”

யோசித்துவிட்டு, “இன்ஜின்... டார்க்...”

“ம்ஹும். நான் சொல்லுறது புரியுதா?”

“ம்ம்ம்... புரியுது”

“எனக்கு தமிழ் கொஞ்சம் சுமாராத்தான் வரும்”

“இல்ல.. நல்லாத்தான் பேசுறீங்க... நீங்க பேசுறது ரஜினி மாதிரி இருக்கு”ன்னு ஒரு பிட்ட போட்டேன்.

நான் அவரு பேசுனது புரியல்லன்னு சொன்னத புரியுதுன்னு சொன்னதா தப்பா புரிஞ்சிக்கிட்டாரு.

மனுசன் சந்தோஷமாயிட்டாரு. “நானும் கிருஷ்ணகிரி பக்கம்தான். சரி, கார் எப்படி போகுது?”

“ஆக்ஸிலேட்டர மிதிச்...”

“இல்ல”

நான் முழிக்குற முழிய பார்த்திட்டு, “காத்து”ன்னாரு.

“ஆஅன்” - இது நான்.

“டயருல இருக்குற காத்து”

இவரு வேற... காலங்காத்தால் கடுப்புகள கிளப்பிக்கிட்டுன்னு நினைச்சிக்கிட்டு, “ஓகே”ன்னேன்.

”நீங்க ஒரு ஊருக்கு போயிட்டு இருக்கீங்க... அப்ப ஒரு பாலத்துக்கு கீழே போக வேண்டி இருக்கு... பாலத்துக்கு கீழே போனீங்கன்னா, மேலே தட்டும். எப்படி போவீங்க?”

???

“கண்டிப்பா போகலாம். எப்படி போவீங்க?. போயிட்டு திரும்ப ஊருக்கு போகணும்.”

”காத்த கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போவேன்.”

“கரெக்ட்”

“காத்த இறக்குனா திரும்பி எப்படி ஊருக்கு போறது?” என் சந்தேகத்த கேட்டேன்.

“அதெல்லாம் போயிடலாம்”

!!!

அப்புறம் சில கேள்விகள கேட்டேன். அதுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாரு.

1) டிரைவர் சீட்ல உட்கார்ந்து ரோட்டு ஓரத்த, வைப்பர் கண்ணாடிய டச் பண்ணுற பாயிண்டோட ஓப்பிட்டு, வலது டயர் போற இடத்த கணிச்சிக்கலாம்.
2) ஸ்பிட் பிரேக்கர்ல ஆக்ஸிலேட்டர விட்டுடுங்க.
3) டர்னிங் திரும்பினத்துக்கு பிறகு, திருப்பின ஸ்ட்யரிங்க முழுமையா திருப்பிடுங்க.
4) ஏதும் பிரச்சினை ஆச்சுனா, ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போன் பண்ணனும். அப்புறம், போலீஸ்.

கியர், கிளட்ச், பிரேக் எல்லா கண்ட்ரோலும் அவர் கை, கால்ல இருந்ததால, எனக்கு பெருசா ஏதும் வேல இல்ல. சும்மா பேசிட்டு ஓட்டிட்டு (கார) இருந்தேன்.

”நீங்க ஃபுல் டைம் கார் டிரைவிங் ட்ரேயினிங்தானா?”

“ஆமாம் சார். முன்னாடி கார் டிரைவராகவும் வேல பார்த்தேன். இப்ப, இது மட்டும்தான்”

“ஏன்?”

“ஆக்ஸிடெண்ட், ரத்தம்... தொடர்ந்து இதையே பார்த்து பார்த்து சலிச்சு, பயந்து டிரேயினிங் மட்டும் கொடுக்கலாம்ன்னு வந்துட்டேன்”

”அதுக்கு என்னங்க பண்ணுறது?”

”ஒண்ணும் பண்ண முடியாது, சார். இப்ப முன்னாடி போறாரே... அவரு சட்டுன்னு கீ்ழே விழுந்துட்டாருன்னா... இப்ப நம்மளாள கண்ட்ரோல் பண்ணி நிறுத்த முடியுமா?”

நான் எங்கே கண்ட்ரோல் பண்ணுறது? என் கையில ஸ்ட்யரிங். கால்ல ஆக்ஸிலேட்டர். அவ்ளோதான்.

“நாமெல்லாம் கொசு மாதிரி சார்... ஒண்ணும் பண்ண முடியாது”

“ம்ம்ம்...”

”முதல்ல உங்கள காப்பாத்திக்கோங்க... அப்பத்தான் மத்தவங்கள பாத்துக்க முடியும்”

அசால்ட்டா தத்துவம் சொல்லுறாரே.

“பைக்குல போயி யாரையாச்சும் இடிச்சிங்கன்னா, அதிகபட்சம் அடிதான் படும். உயிருக்கு ஆபத்து இல்ல. காரு அப்படி இல்ல. அதே மாதிரி, கார்ல போயி ஏதும் தப்பு நடத்துச்சுன்னா, தப்பு உங்க மேலே இல்லனாலும் உங்களுக்கு தான் அடி படும். ஏன்னா, சைக்கிள்-பைக் இடுச்சிக்கிட்டுன்னா சைக்கிள்காரன் நல்லவன். பைக்-கார் இடுச்சிக்கிட்டுன்னா பைக்காரன் நல்லவன். இதுதான் நம்ம ஊரு நியாயம்.”

அப்படியே, சமூக கருத்தும் சொல்லுறாரே.

“அதுவும் இந்த ஊருக்காரங்க இருக்காங்களே. மோசமானவங்க.” கடந்த சென்ற கிராமத்தை பற்றி சொன்னார்.

முதல் நாள் கத்துக்கொண்டவை.

1) ஆக்ஸிலேட்டர் எப்படி, எங்க மிதிக்கணும்.
2) ஸ்ட்யரிங் எங்க, எப்படி திருப்பணும்.
3) ஹாரன் அடிக்குறது.
4) இண்டிக்கேட்டர் போடுறது.
5) வைப்பர் எப்படி யூஸ் பண்ணுறது.

அப்புறம் முக்கியமானது ஒண்ணு,

ஆன்/ஆஃப்

(தொடரும்)

Wednesday, December 17, 2008

எந்திரனை கைப்பற்றும் கலாநிதி மாறன்

எந்திரன் படத்தின் தயாரிப்பை ஐங்கரன் நிறுவனத்திடம் இருந்து கலாநிதி மாறன் வாங்கிவுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளது. இதுவரை, சிறு பட்ஜெட் படங்களை மட்டும் வாங்கி விநியோகம் செய்து கொண்டிருந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் முதல் முறையாக ரஜினியின் பிரமாண்டமான படத்தை தயாரிக்க உள்ளார்கள்.

எல்லா பிரமாண்டங்களும் ஒன்று சேர்ந்துள்ளது.

படத்தை ஐங்கரன் நிறுவனம் கைவிடுவதற்கு காரணம், சமீப காலமாக துறையில் அவர்கள் சந்தித்து வரும் நட்டங்களாக இருக்கலாம். இது சம்பந்தமாக ஏற்கனவே, சில செய்திகள் வெளிவந்திருந்தன.

சாதா படங்களையே ஸ்பெஷல் ஆக மாற்றிய சன் நிறுவனத்திடம், எந்திரன் சிக்கி இருப்பதால், படத்தின் வெளியிடு உச்சக்கட்ட கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சந்திரமுகியை சன் டிவியில் தீபாவளிக்கு போடும் போது, ரஜினியின் கடைசி சூப்பர் ஹிட் படம் என்று சன் டிவி குறிப்பிட்டதாக ஒரு பேச்சு இருந்தது. சிவாஜி, குசேலன் கிடைக்காத கடுப்பில், ரஜினியை வாரி கொண்டிருந்த சன் டிவி, இனி வரும் நாட்களில் தூக்கி பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.

முன்பு, சாட்டிலைட் சானல்கள் அறிமுகமான போது, திரைத்துறையினர் அதை எதிர்த்து பேரணி எல்லாம் சென்றார்கள். இன்று, அந்த திரைத்துறையினரின் படங்களே தள்ளாடும்போது, அதை தூக்கி விடும் நிலையில் உள்ளது, அன்று எதிர்க்கப்பட்ட டிவி நிறுவனம்.

காலம். எல்லாம் இதற்குள் அடங்கும்.

புஷ் செருப்படியை ஆதரித்தவர் பெங்களூரில் கைது

நேற்று முன்தினம் புஷ் மீது எறியப்பட்ட செருப்பை பார்க்க, உலகமெங்கும் மக்கள் செருப்பு என்று கூகிளில் தேடி கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த மனுஷனுக்கு இது தேவைதான் என்று சொல்ல, சிலர் எவ்ளோ நேக்கா எஸ்கேப் ஆனாருன்னு புகழ்ந்திட்டு இருக்காங்க.

அவ்ளோ ஸ்பீடா வந்த செருப்புக்காக புஷ் குனிந்த வேகம், அபாரம். எப்பவும் இந்த மாதிரி ஏதாச்சும் எதிர்பார்த்திட்டே இருப்பாரு போல.

--------

பெங்களூர் மைக்கோ கம்பெனியில் நாற்பது வயதான ஜமீல் என்பவர் வேலை பார்த்து கொண்டு வருகிறார். நேத்து ஆபீஸில் இது பற்றி ஜமீலுடன், அவருடன் வேலை பார்ப்பவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள். ஜமீல் செருப்படியை ஆதரித்து, செருப்பை எறிந்த முந்ததர் அல்-செய்தியை புகழ்ந்து கொண்டிருந்தார். என்னடா ரொம்பத்தான் புகழுகிறாரேன்னு கூட இருந்தவுங்க போலீசுக்கு போன் போட்டுட்டாங்க.

வந்த போலீஸும் அவர ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அவர் இடத்தை சோதனை போட்டு பார்த்தப்ப, தீவிரவாத தாக்குதல் சம்பந்தமாக ஏகப்பட்ட நியூஸ் கட்டிங்க்ஸ் இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம, பாராளுமன்ற தாக்குதல் வழக்குல கைது செய்யபட்டிருந்த அப்சல் குருவை விடுதலை செய்ய கோரி, ஜனாதிபதிக்கு ஜமீல் அனுப்பியிருந்த லெட்டரும் இருந்திருக்கு.

இப்ப, ஜமீலுக்கு ஏதேனும் தீவிரவாத கும்பலுடன் சம்பந்தம் இருக்குதான்னு தீவிரமா விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.

---------

இனி, கருத்து சொல்லும் போது, ஜாக்கிரதையா கருத்து சொல்லுங்க...

நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா

Monday, December 15, 2008

மென்பொருள் நிறுவனத்தில் அரசியல்வாதிகள்

'அரசியல்வாதிகள் மென்பொருள் நிபுணரானால்' அப்படின்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ச்சின்னப்பையன் கூட காப்பிரைட் பிரச்சனை வரும்னு தவிர்த்திட்டேன். இருக்குற மென்பொருள் ஆளுங்களுக்கே எப்ப ஆப்புன்னு தெரியாம இருக்கும் போது, அவுங்க எப்படி வருவாங்கன்னு லாஜிக் பேச கூடாது. அரசியலும் ஒரு வேலைன்னு இருக்குறவுங்களுக்கு, எந்த வேலையா இருந்தா என்ன?


மேனேஜ்மெண்ட்

கம்பெனியின் மொத்த நிர்வாகத்தையும் தமிழின தலைவர் கிட்ட கொடுத்திடணும். அப்பத்தான், கம்பெனி நல்லா வளரும். பல இடங்களில் பிராஞ்ச் ஆரம்பிக்குறதுல எக்ஸ்பெர்ட். இவர்கிட்ட, யாராச்சும் சிபாரிசில் வேலை கேட்டு சென்றால், "என் இதயத்தில் ஏராளமாக இடம் கொடுத்திருக்கும் உனக்கு எதற்கெடா கண்மணி இந்த மூணுக்கு நாலு அடி இடத்தின் மீது ஆசை?" அப்படின்னு கேட்டு எஸ்கேப் ஆகிடுவாரு. அடுத்த எம்.பி. யாருன்னு போர்டு மீட்டிங்ல தான் முடிவு பண்ணுவோம்னு சொன்னாலும், அது யாருன்னு ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும்.

மனிதவள மேலாளர் (ஹுமன் ரிசோர்ஸ்)

மேனேஜ்மெண்ட்க்கு ஒரு நல்ல அனுபவஸ்தர் இருக்காரு. இந்த இடத்துக்கு பொருத்தமான ஆளு, தலைவிதான். ஊழியர்கள சேர்க்கும் போது, ரொம்ப கனிவா பேசுவாங்க. சேர்ந்ததுக்கு அப்புறம் இவுங்கள பார்க்கவே முடியாது. எப்பவாச்சும் ஏதாச்சும் அவுங்களுக்கு தேவைன்னா வருவாங்க. அப்புறம், ஒவ்வொரு அப்ரைசல் மீட்டிங் அப்ப மட்டும் வருவாங்க. மத்த நேரம் எல்லாம், ரெஸ்ட் எடுக்க எங்காச்சும் போய்டுவாங்க. அதுக்காக எப்பவும் அப்படின்னு சொல்ல முடியாது. திடீர்ன்னு மேனேஜ்மெண்ட் கிட்ட போயி, கேண்டீன்'ல தண்ணி வரலைன்னு கம்ப்ளைன் பண்ணுவாங்க. துறையில் தேக்கநிலை ஏற்படும்போது, இவுங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்'ஆ இருப்பாங்க. ஒரே நாள்லே எத்தினி பேர வேணா கம்பெனியில இருந்து தூக்கிடுவாங்க.

டெவலப்பர்

இதுக்கு கொஞ்சம் நல்லா திங்க் பண்ணனும். சுப்பிரமணிய சுவாமின்னு ஒருத்தர் இருக்காரு. நல்லா யோசிப்பாரு. பட், ரிசல்ட் ஒழுங்கா வராது. கல்குலேசன் லாஜிக் ரொம்ப இருந்திச்சின்னா, சிதம்பரம்ன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட கொடுத்திடலாம். என்ன பிரச்சனைனா, எங்க ஊர்லதான் இந்த சாப்ட்வேர முதல்ல இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லுவாரு. உண்மையிலே இந்த வேலையில இருக்குறவுங்க நேரம் காலம் தெரியாம வேல பார்க்கணும். இதுக்கு அரசியல்வாதிகள் எல்லாம் லாயக்கில்லை. தொண்டர்கள் தான் சரி. எலக்சன், பொதுக்கூட்டம் போது பிரியாணி கொடுக்குற மாதிரி, ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப, பீட்சா வாங்கி கொடுத்தா, வீடு உறவெல்லாம் மறந்து வேல பார்ப்பாங்க.

டெஸ்ட்டர்

டெவலப்பர் பண்றதுல எல்லாம் குத்தம் கண்டு பிடிக்குற மாதிரி ஆள் தேவை. அதே சமயம், குத்தம் இல்லாத மாதிரி பண்றதுக்கான திறமையும் தேவை இல்லை. இந்த வேலைக்கு அப்படி ஒரு ஆள் தேவை. கேப்டன்னு சொல்லிட்டு ஒரு ஆள் இருக்காரு. அவருதான் இதுக்கு சரி. அப்படி என்ன வேல பாப்பாரோ தெரியல, எப்பவும் கண்ணு ரெண்டும் செவப்பா இருக்கும். சில சமயம், சாப்ட்வேர் ஒழுங்க ஓடும்போது, இதுக்கு ஐடியா நான்தான் கொடுத்தேன் சொல்லுவாரு பாருங்க, அதுல்லாம் கொஞ்சம் ஓவர் தான். தவிர, பத்திரிகையாளர்கள் சிலர் இருக்காங்க. சோ, ஞாநிங்கற பேரு வச்சிட்டு விமர்சனம் பண்ணுறேன்னு அதிகமா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க. அவுங்களையும் யூஸ் பண்ணிக்கலாம்.

மார்க்கெட்டிங் / சேல்ஸ்

மாறன் பிரதர்ஸ்னு அண்ணன் தம்பி ரெண்டு பேரு இருக்காங்க. இந்த துறைக்கு அவுங்களைவிட பொருத்தமா யாரும் கிடைக்கமாட்டாங்க. தம்பிக்காரரு நல்லா ப்ராஜெக்ட் பிடிச்சிட்டு வருவாரு. பில் கேட்ஸ் வரை தொடர்பு இருக்கு. மார்க்கெட்டிங் துறைக்கே மிகவும் அவசியமான விளம்பரத்தின் மீது ரொம்ப ஆர்வம் இவருக்கு. எந்த கிளையண்ட மீட் பண்ணினாலும் சிரிச்ச முகத்தோட ஒரு போட்டோ எடுத்துக்குவாரு. ப்ராஜெக்ட் பிடிக்குறதுல இவர் கில்லாடின்னா, பண்ணுன பிராடக்ட விக்குறதுல இவரு அண்ணன் ஜெகதால கில்லாடி. எவ்ளோ மோசமான பிராடக்டா இருந்தாலும், பஞ்சர் பாத்து, டிங்கரிங் செஞ்சு எப்படியோ விளம்பரம் பண்ணி வித்துட்டு வந்திடுவாரு.

பெஞ்ச் ரிசோர்ஸ்

இவுங்களால கம்பெனிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனா, ஏதோ கம்பெனியே இவுங்கலாலதான் ஓடிட்டு இருக்குற மாதிரி அங்கயும் இங்கயும் போயிட்டு இருப்பாங்க. ஓவரா பேசிட்டு வேற இருப்பாங்க. எப்பவாவது புது ப்ராஜெக்ட்'க்குகோ, இல்ல ஓடிட்டு இருக்குற பழைய ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப தேவைப்படுவாங்க. இவுங்கக்கிட்ட ஒரு நல்ல பழக்கம் என்னன்னா, எந்த டீம்'ல போட்டாலும் வேல பார்ப்பாங்க. ஏதோ தாங்கள் தான் தங்களுக்கான டீம செலக்ட் பண்ற மாதிரி காட்டிகிட்டாலும், உண்மை அது இல்லைன்னு அவுங்களுக்கே தெரியும். யாருன்னு தெரியும்'ல, தோழரே?

ஜனநாயகம்'ங்கற பேர்ல கம்பெனி நடத்திட்டு இருக்குற இவுங்களுக்குத்தான், கம்பெனியோட பெருமளவு லாபம் போயி சேருரத, நாம எப்படி அநியாயம்னு சொல்ல முடியும்?

Sunday, December 14, 2008

பூயூம்ம்ம்ம்ம்.... மகாபாரதம்...

டாக்டர் ஷாலினி ஒரு பேட்டியில் இன்றைய குழந்தைகளின் மனநிலை மாற்றங்களுக்கு ஒரு காரணம் சொன்னார். முன்பு இருந்தது போல் இல்லாமல், இப்போது குழந்தைகளுக்கு கதை கேட்கும் வாய்ப்பு குறைகிறது. கதைகள் பொழுதுபோக்குகளுக்கு மட்டுமில்லாமல், அவர்களின் நினைவாற்றலையை, கற்பனைத்திறனை அதிகரிக்கும். அதைவிட முக்கியம், நல்ல விஷயங்களை, நல்ல பண்புகளை, ஒழுக்கத்தை கதைகள் மூலம் போரடிக்காமல் சொல்லலாம். இந்த வாழைப்பழத்துக்குள் மாத்திரை வச்சு கொடுப்பாங்களே, அதைப்போல் அறிவுரைகளை கதைகள் மூலம் மறைமுகமாக சொல்லலாம். எந்த குழந்தையும் கதை கேட்க மாட்டேன் என்று சொல்லாது. ஒரே கதையை கொண்ட விக்ரமன் படங்களை தமிழக மக்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பது போல், குழந்தைகளும் சலிப்பில்லாமல் ஒரே கதையை கூட பல முறை ஆர்வமுடன் கேட்பார்கள். கதைகளில் ஆரம்பித்துத்தான் வாசிக்கும் பழக்கத்தை தொடங்க முடியும்.

இன்றைய பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்குகள், சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க், பொகோ மற்றும் இதர பல சானல்கள். இன்னும் சில வீடுகளில், அவர்களும் மெகாசீரியல் பார்க்கிற கொடுமைகள் நடக்கிறது. இதன் மூலம் பல தவறான விஷயங்களையே பிள்ளைகள் கற்கிறார்கள். இதிலிருந்து அவர்களை கதைகள் சொல்லிதான் மீட்க முடியும். நல்ல கதைகளுக்கா, நம்மூரில் பஞ்சம்? ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் அவசியமே இதுதான் என்பது என் கருத்து. இப்ப எங்க போயி, இதிகாசம் படிக்குறது? அதுவும், நமக்கு போரடிக்காமல், நமக்கு புரிகிற மாதிரி, குழந்தைகளுக்கு புரிகிற மாதிரி. ஐயா சந்திரசேகரனின் “இது உங்கள் குழந்தைகளுக்கான மகாபாரதம்” புத்தகம் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

ஐயா சந்திரசேகரன் என்பவர் ஓவிய கலை தெரிந்த ஒரு பெண் எழுத்தாளர். அவர் தன்னை ஐயா பாட்டி என்றே அறிமுகப்படுத்துகிறார். நவீன பாட்டி. சில்ட்ரன் லிட்டரேச்சர் எனப்படும் குழந்தைகள் இலக்கியம் கற்று தேர்ந்தவர் என்பதால் மகாபாரதத்தை குழந்தைகளுக்கு புரிகிறபடி, விரும்பும்படி சொல்லியிருக்கிறார். இன்றைய குழந்தைகளுக்கு ஏற்றப்படி சுத்த செந்தமிழில் சொல்லாமல், எளிமையாக தேவையான இடங்களில் ஆங்கிலம் கலந்தே சொல்லிருக்கிறார். இது ஒரு வகையில் குறை என்று தோன்றினாலும், நடைமுறையில் செந்தமிழ் சிறு குழந்தைகளுக்கு புரிவதில்லை. குறிப்பாக, தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு.

உதாரணத்துக்கு, மகாபாரதத்தைப் பற்றியே என்ன, எப்படி சொல்லுறாங்கன்னு பாருங்க.

“மகாபாரதக் கதையே குழந்தைகளெல்லாம் எப்படி நடந்துகிட்டா நல்லதுன்னு சொல்ற கதைதான். உங்களை மாதிரி குட்டீஸெல்லாம் சின்ன வயசிலே என்னெல்லாம் செய்யக் கூடாதுன்னு கூட மகாபாரதம் சொல்லுது.

எல்லாக் காலத்துலேயும் நல்லவங்களும் இருப்பாங்க. கெட்டவர்களும் இருப்பாஙக. அவங்களுக்குள்ளே சண்டை வந்தால் நல்லவங்களுக்குத் தான் சாமி ப்ரைஸ் கொடுக்கிறதுன்னு பார்த்தோம் இல்லையா?”


ஸோ. கதை சொல்ற வேலையை ஐயா பாட்டி ரொம்ப சுலபமா ஆக்கிட்டாங்க. அது மட்டும் இல்ல. சின்ன சின்னதா ஒவ்வொரு பக்கங்களிலும் படங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதைக் காட்டி கொண்டே கதை சொல்லலாம்.

எனக்கு மகாபாரதம் பற்றி தெரிந்தது ரொம்ப கம்மி. கிருஷ்ணர், அர்ஜூனன், பாண்டர்கள், துரியோதனன்,திரௌபதி கதைகள் பற்றி தான் தெரியும். பதிவுகளில் ஆங்காங்கே சில இடங்களில் படித்திருக்கிறேன். உபயம் - சில பகுத்தறிவு பதிவர்களின் பக்கங்கள். :-). இந்த புத்தகத்திலேயே மகாபாரதத்தை சுருக்கிதான் தந்திருக்கிறார்கள் என்றாலும் ஏகப்பட்ட கதைகள் உள்ளன.

அம்மா சொல்லுறத கேட்கணும், குருவுக்கு மரியாதை கொடுக்கணும், பொறுமையின் அவசியம், பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்ற நல்ல விஷயங்களை, அறிவுரைகளை ஒவ்வொரு கதைகளின் மூலமாக சொல்கிறார்கள்.

“வாண்டுக்குட்டிகளா! பகவத் கீதையிலே கிருஷ்ணர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? எல்லோரும் தங்களோட கடமைகளை ஒழுங்கா செய்யணும். செய்த கடமைக்கு, பதிலா யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.

இது எல்லோரும் பின்பற்றவேண்டிய புத்திமதி இல்லையா பட்டூஸ்?”


ஆசிரியருக்கு கதை சொல்லும் போது, குழந்தைகளுக்கு என்ன தோணும் என்று தெரியும் போல? அவரே சமயங்களில் கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார். இது போல,

“பாண்டவர்கள் தர்மமா நாட்டை ஆண்டார்கள். அதனால காட்டிலே இருக்கிற மிருகங்கள், பறவைகள் கூடப் பேச முடிஞ்சது. ‘ஹை... பாட்டீ! எங்ககிட்டயே டூப் விடறியே! மிருகம், பறவைகளால எப்படிப் பேசமுடியும் அப்படீன்னுதானே கேட்கறீங்க வாண்டுகளா?’ நான் ரீல் விடலே குட்டீஸ்!

புராணக் கதைகள்லே மிருகங்கள், பட்சிகள் எல்லாம் மனுஷா மாதிரியே பேசும்! இந்தக் கதையைப் படிங்க. பாட்டி சொல்றது உண்மைன்னு உங்களுக்கே புரியும்.”


ஒரு கதை போல் இதை படிக்கும்போது, இதில் உள்ள திருப்பங்கள், சில காரணங்களால் கோர்க்கப்படும் சம்பவங்கள் கமர்ஷியல் சினிமாவிற்கே உரியது. உதாரணத்திற்கு, கச்சனின் குரு சுக்ராச்சாரியார். சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி கச்சனை விரும்புகிறாள். ஒரு சூழ்நிலையில் கச்சன் குருவின் வயிற்றுக்குள் சென்று விடுகிறார். ஒரு மேஜிக் செய்து குருவின் வயிற்றை கிழித்து வெளியே வந்துவிடுகிறார். அதன் பின், தேவயானியை திருமணம் செய்து கொள்ள கச்சன் மறுக்கிறார். ஏனென்றால் சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்து வருவதால், அவருக்கு மகன் போல் ஆகிவிடுகிறாராம். அதனால் தேவயானிக்கு சகோதரன் முறையாகிவிடுகிறதாம்.

பாக்யராஜ் தனது ஹிட் திரைக்கதை சூட்சமத்தை ஒருமுறை இப்படி சொன்னார். அதாவது, நடக்கவே நடக்காது என்று தோணுகிற மாதிரியான ஒரு முடிவை நோக்கி ரசிகனை நம்பும்படியாக கொண்டு செல்வதுதான் வெற்றிகரமான திரைக்கதையின் ரகசியம் என்றார். மகாபாரதம் முழுக்க அப்படி நிறையவே இருக்கிறது. யாராவது ஒரு காம்ப்ளேக்ஸான வரம் அல்லது சாபம் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு அது எப்படி நடக்கும் என்று தோன்றும். கதையில் ஆர்வம் உண்டாகும். எப்படியோ அது நடந்துவிடும்போது அதை ரசிப்பார்கள்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளை இன்னும் கொஞ்சம் எடிட் செய்து, தணிக்கை பண்ணி சொல்லியிருக்கலாம். அசல்ட்டா ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணங்களை செய்யுறது, பீஸ் பீஸா வெட்டி நாய்க்கு போடுறது, எரித்த சாம்பலை போட்டு ஒயின் குடிக்குறது போன்றவைகளை தவிர்த்திருக்கலாம். குழந்தைகளுக்கு சொல்லப்படுகிற மகாபாரதம் என்பதால் எதையையும் முழுமையாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாதே? நல்ல கருத்துக்கள் தானே போய் சேர வேண்டும்.

குழந்தைகளூடன் பேசுவது என்பது எதற்கும் நிகரில்லா ஒரு தனி அனுபவம். அதுவும் கதை சொல்லும் வாய்ப்பு, வாழ்நாளில் சில காலங்களில் தான் அமையும். அமையும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். அப்படி தங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல விரும்பும் பெற்றோர்களுக்கு இந்த புத்தகம் உதவும். படித்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாசித்தாலே போதும். ஒரு பாட்டி பேரன் - பேத்திகளுக்கு கதை சொல்லும் தொனியிலேயே எழுத்து நடை உள்ளது. வாசிக்கும் ஆர்வம் இல்லாத பெற்றோர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு வாங்கி கொடுத்தால், சேர வேண்டிய இடத்தில் கதைகள் சென்று சேர்ந்து விடும். சிறு குழந்தைகளின் பிறந்தநாளுக்கு ஒரு பெர்ஃபக்ட் கிஃப்ட் இது.

திரைப்பட படைப்பாளிகளும் இதை படித்து பார்க்கலாம். மணிரத்னம் போல் உங்களுக்கும் படத்திற்கான கதைகள் கிடைக்கலாம். :-)

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

Saturday, December 13, 2008

பொம்மலாட்டம் - சொன்னதை செய்த பாரதிராஜா

பொம்மலாட்டத்தின் கிளைமாக்ஸை யாராலும் கணிக்க முடியாது என்று பாரதிராஜா கூறியிருந்தார். உண்மைதான். யாராலும் கணிக்க முடியாது. கதை கரு ஸ்ட்ராங். எடுத்த விதம் தான் ரொம்பவும் திருப்தியாக இல்லை.

---------------

தியேட்டரில் படம் பார்க்க ஒரு இளைஞர் பட்டாளம் வந்திருந்தது. டிக்கெட் எடுக்க போகும்போது, போஸ்டரில் பாரதிராஜாவின் படத்தை பார்த்தவர்கள் அப்படியே திரும்பி போய் விட்டார்கள். பாரதிராஜா மேல் அவ்வளவு பயமா?

Thursday, December 11, 2008

தமிழக முதல்வர் - ரஜினிகாந்த்

ரஜினி அவரது பூஜையறையில் இருந்து பத்மாசனம் செய்து கொண்டிருக்கிறார். கண்களை மூடியபடி தியானம். போன் அடிக்க ஆரம்பிக்கிறது. விடாமல் அடித்து கொண்டே இருக்கிறது. தியானத்தை விட்டு விட்டு போனை எடுக்கிறார்.

“ஹலோ”

“வணக்கம். நான் நரசிம்மராவ் பேசுகிறேன்”

தமிழ்லயா கேட்டாருன்னு தயவுசெய்து கேட்காதிங்க. காங்கிரஸ் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறார். காங்கிரஸில் இணைந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்மாறு சொல்லுகிறார். போட்டியிடும்பட்சத்தில் தமிழக முதலமைச்சராக்க உறுதிமொழி கொடுக்கிறார்.

தியானம் பண்ணிட்டு இருக்கும் ஒருவரை கூப்பிட்டு முதல்வர் பதவி கொடுத்தா என்ன தோணும்?

அமைதியாக “யோசித்து சொல்கிறேன்” என்கிறார்.

“விரைவில் சந்திப்போம்” என்று கூறி போனை வைக்கிறார் அன்றைய பாரத பிரதமர்.

திரும்பிய ரஜினியின் முன்பு, பிரமாண்ட ராகவேந்திரர் படம். ரஜினியை பார்த்து சிரிப்பது போல் தோன்றுகிறது.

--------

சில நாட்களுக்கு பிறகு நரசிம்மராவை சத்யமுர்த்தி பவனில் சந்திக்கிறார் ரஜினி.

“உங்களை சந்திச்சதில ரொம்ப சந்தோஷம். ஒரு சின்ன வேண்டுகோள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திச்சின்னா, மூப்பனார் முதல்வரா வருறதுலதான் எனக்கு சந்தோஷம்.என்னை பொறுத்தவரை அவரு தான் அந்த பதவிக்கு பொறுத்தமான ஆளு. எளிமையான மனுசன். ஒருவேளை கூட்டணி அமைக்குற பட்சத்தில் மக்களுக்கு நல்லது பண்றவங்க கூட சேரணும். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேரணும்ன்னு நினைக்கிறேன். இது திமுகவுக்கு வாய்ப்பு கொடுக்கிற நேரம்ன்னு தோணுது”

இது மக்களை நினைத்து சிந்தித்து எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் இதை சிலர் பயம் என்று சொல்லுவார்கள். ஆர்வமின்மை என்று சொல்லுவார்கள்.

எதுவானாலும் இருந்துவிட்டு போகட்டும்.

வேறு யாராவதாக இருந்தால் எப்படி செயல்பட்டு இருப்பார்கள்? ரஜினி கண்டிப்பாக அரசியலை தனது ஆதாயத்துக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

அரசியலில் கவுன்சிலர் ஆக கூட வாய்ப்பில்லாத சிலர், ரஜினியின் அரசியல் நிலையை குறித்து எள்ளி நகையாடுவது உண்மையிலேயே வேடிக்கைதான்.

சூப்பர்ஸ்டாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

-காயத்ரியின் “தி நேம் இஸ் ரஜினிகாந்த்” புத்தகத்திலிருந்து

Tuesday, December 9, 2008

ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் : விளம்பர யுத்தம்

இதுவரை விளம்பரங்களில் போட்டி நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல், நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது பொருளையோ காட்ட வேண்டும் என்றாலும் அந்த பொருளின் வண்ணம் அல்லது வடிவத்தை காட்டி மறைமுகமாக குறை சொல்லி வந்தார்கள். இவ்வகை விளம்பர யுத்தங்களில் நேரடி தாக்குதலை கொண்டு வந்திருக்கிறது ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் விளம்பரங்கள்.

முன்பு காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் குறிக்கும் வகையில் 'H' என்று எழுதப்பட்ட ஒரு கப்பை காட்டி, அதில் உள்ள பானத்தை விட காம்ப்ளான் சிறந்தது என்று காட்டிவந்தார்கள். இது சம்பந்தமாக ஹார்லிக்ஸ் காம்ப்ளானை கோர்ட்டுக்கு இழுத்தது.

தற்போது சில நாட்களுக்கு முன்பு, தனது விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் காம்ப்ளான் மீதான நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளது. இந்த விளம்பரத்தில், இரு தாய்மார்கள் தங்கள் மகன்களுடன் கடையை விட்டு வெளியே வருகிறார்கள். ஒருவர் ஹார்லிக்ஸ் வைத்திருக்கிறார். மற்றொருவர், காம்ப்ளான். காம்ப்ளான் பாய் (!), எனது பானத்தில் 23 வகையான சத்துகள் இருப்பதாக கூறவும், அதற்கு ஹார்லிக்ஸ் பையன் தனது பானத்தில் அதற்கு மேல் இருப்பதாக கூறுகிறான். காம்ப்ளான் பையன், இது தன்னை உயரமாக்க உதவும் என்று கூறுவதற்கு, இவன் ஹார்லிக்ஸ் தன்னை உயரமாக்க, வலிமையாக்க, கூர்மையாக்க உதவுவதாக பதிலடி கொடுக்கிறான். கடைசியாக காம்ப்ளான் பையன், காம்ப்ளான் 170 ரூபாய் என்பதற்கு, ஹார்லிக்ஸ் 131 ரூபாய் என்று கூற, காம்ப்ளான் பையன் "அப்ப என்னுதுதான் அதிகம்" என்று பெருமைப்பட, அவனின் அம்மா கேவலப்படுவதாக முடித்திருப்பார்கள். இதில் எந்த ஒளிவு மறைவும் இன்றி, காம்ப்ளானை "அப்படியே சாப்பிடுவேன்" என்று சொல்லுவது போல் அப்படியே காட்டியிருந்தார்கள்.

இந்த விளம்பரத்தை எதிர்த்து காம்ப்ளான் மும்பை கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள். கோர்ட்டில் அவர்களுக்கு சாதகமான முடிவு வராததால், அவர்களும் போட்டி விளம்பரத்தில் இறங்கி விட்டார்கள்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸை மலிவு விலை பானமாக குறிப்பிட்டு, காம்ப்ளானே விரைவாக வளர உதவும் என்கிறார்கள். ஒவ்வொரு சத்தும் எவ்வளவு இருப்பதாக ஹார்லிக்ஸுடன் ஒப்பிட்டு பேப்பரில் விளம்பரம் செய்துள்ளார்கள்.

குழந்தைகளுக்கான சத்துபான விளம்பர போட்டியில், இரு நிறுவனங்களும் குழந்தைத்தனமாக போட்டியிட்டு கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நன்மைதான். தாங்கள் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை, போட்டி நிறுவனம் தங்களுக்காக இலவசமாக செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரடி தாக்குதல் மற்ற நிறுவனங்களாலும் மற்ற பொருட்களுக்கு செய்யப்பட்டால், விளம்பரங்களும் இதர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல் சுவாரஸ்யமாகிவிடும். பொருட்களின் குறைபாடு தெரிந்துவிடும். ஆனால், ஆரம்பிக்கும் நிறுவனத்திற்கு தங்கள் பொருள் மேல் ரொம்பவும் தன்னம்பிக்கை தேவை.

முடிவா எனக்கு ஒரு சந்தேகம். இதெல்லாம் குடிச்சா தான் வளர முடியுமா?

Sunday, December 7, 2008

நல்ல நகைச்சுவை - விஜய் அரசியல்

நேற்று சன் டிவி கலக்கல் ஸாரி... அசத்தல் போவது யாரு? (சரிதானே!) நிகழ்ச்சியில் டைரக்டர் முருகதாஸ் கலந்து கொண்டு பேசினார். பேசும்போது கண்ணதாசன் சொன்னதாக ஒன்று சொன்னார். அதாவது நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும் என்றால் கேட்கும் போது சிரிக்க வைக்க வேண்டும். பின்பு, யோசித்து பார்த்தால் அழ வைக்க வேண்டுமாம். உதாரணத்திற்கு, சாப்ளின் காமெடியை சொல்லலாம்.

----------

சமீபத்தில் விஜய் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அவரது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு காரணமே, நடிகர் சங்க மேடையில் நிதியாக நயந்தாராவைவிட குறைவாக 1 லட்சம் மட்டும் கொடுத்ததற்கு பிராயச்சித்தம் என்கிறார்கள். ஏதோ இருக்கட்டும்.

மேடையில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும்போது, சேலத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்ணாவிரதத்திற்கு நல்ல ஆதரவு என்றும், முன்பு ஏற்பாடு செய்திருந்த உணவு பொட்டலங்கள் போதவில்லை என்றும், மேலும் ஏற்பாடு செய்திருப்பதாக உளறிவிட்டார். விஜய் உள்பட, மேடையில் இருந்தவர்களும் சரி, கீழே இருந்தவர்களும் சரி, நன்றாக வாய் விட்டு சிரித்தார்களாம். பின்ன, உண்ணாவிரத மேடையில் உணவு பொட்டலம் என்றால் காமெடிதானே!

சார், நீங்க இன்னும் நல்லா பிராக்டிஸ் பண்ணனும்.

Saturday, December 6, 2008

ஒண்டிக்கட்டை உலகம்

எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனிப்பட்ட கல்வி சார்ந்த ஒரு வேலை இருந்தது (அஸைன்மெண்ட் எழுத வேண்டி இருந்தது). அலுவலக வேலையால் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதை ஆரம்பிக்கவே முடியவில்லை. என்னென்னே புரியல்லை. அதை முடிக்க ஒரு வாரம்தான் இருந்தது. ஊருக்கும் போக வேண்டி இருந்தது. ஊரிலும் பல வேலைகள் இருந்தது. சரி, பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு லாப்டாப்பை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினேன். இரவு ரயிலை பிடிக்கும் முன்பு, ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன். அந்த ஹோட்டலில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை பில் கட்டும் இடத்திற்கு அருகே வைத்திருந்தார்கள். சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று சிபி கே. சாலமனின் ”துள்ளிக் குதி”.



மறுநாள் காலை ஊர் சேரும் முன்பு படித்து முடித்திருந்தேன். ஆரம்பிக்கும் போது சாதாரணமாக இருந்தாலும், ஏற்கனவே படித்த சங்கதிகள் இருந்தாலும், ரொம்பவே பூஸ்ட்-டப் கொடுத்தது. ஊரில் இருந்து கிளம்புவதற்கு முன்பு, நினைத்திருந்த வேலைகளும் முடிந்தது. ஊரில் இருந்த வேலைகளும் முடிந்திருந்தது. எனக்கு அப்போதிருந்த மனச்சோர்வை ஓழித்ததில் கண்டிப்பாக அந்த புத்தகத்திற்கு பெரும் பங்கு இருந்தது. அதன் பின், அந்த புத்தகத்தை டல்லாக இருந்த எனது இரு நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருந்தேன். இருவருமே மாற்றம் கண்டு புத்தகத்தை புகழ்ந்தார்கள்.

அந்த அனுபவமே இந்த புத்தகத்தை தேர்வு செய்ததற்கு காரணம். நான் பேச்சிலர்தான். ஆனால் குடும்பத்தோடு இருக்கிறேன். இந்த புத்தகம் ஊரைவிட்டு, உறவை விட்டு, மேன்ஷனிலோ, தனி அறைகளிலோ வாழும் ஜீவனுக்களுக்கானது மட்டும் இல்லை. ஒவ்வொரு மனிதனும், கல்யாணமானவரோ, கல்யாணமாகாதவரோ, வாழ்வின் சில சமயங்களில் தனிமையை சந்திப்பார்கள். அவர்களுக்குமானது.

உலகமயமாக்க கொள்கையின் விளைவு, பெருத்துபோன நகரங்கள். நாடேங்கும் உள்ள மக்கள், இருக்கும் சில பெரிய நகரங்களில் வாழ்க்கை போராட்டதிற்க்காக தஞ்சமடைகிறார்கள். முன்பின் பார்த்திராதவர்களுடன் சேர்ந்து அறையெடுத்து தங்குவது கட்டாயமாகிறது. அதன்பின், உறவுரீதியாக, உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, வாழ்வியல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். அவை அனைத்திற்கும் தீர்வு சொல்கிறது, இந்த புத்தகம்.

சிபி சாலமன், தீர்வு சொல்கிறேன் அறிவுரை சொல்கிறேன் என்று எந்த இடத்திலும் பொறுமையை சோதிக்கவில்லை. தோழமையுடன், நிகழ்கால கதையுடன், நகைச்சுவையுடன் வாசிக்கும் ஆர்வத்தை கூட்டிக்கொண்டே தீர்வை சொல்கிறார். ஆவுடையப்பன் என்ற கதாபாத்திரம் மூலம் சூழ்நிலைகளை விளக்கி புத்தகததை ஆரம்பிக்கிறார். திரும்ப, ஆவுடையப்பனை வைத்தே ஆங்காங்கே பிரச்சினையை விளக்கி என்ன செய்யலாம், என்ன செய்திருக்கலாம் என்கிறார்.

இந்த புத்தகத்தில், அவர் சமர்ப்பிக்கும் முதல் பக்கத்திலேயே நம்மை ஈர்க்கிறார்.

லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கும்
ஹாஸ்டல்வாழ் அன்பர்களுக்கும்
படிப்பாளிகளுக்கும்
மேன்ஷன் புகழ் மகாராஜாக்களுக்கும்
திருமணமானாலும் பணி நிமித்தம் நகரத்தில்
தனியாக வாழும் திருவாளர்களுக்கும்
இந்தப் புத்தகம்
தண்ணீர் தெளித்து விடப்படுகிறது.


அத்தியாயத்தின் தலைப்பில் கூட சிரிக்க வைக்கிறார். ஒரு அத்தியாயத்தின் தலைப்பு - என் டான்டெக்ஸ்தான், எனக்கு மட்டும்தான்!

ரூம் தேடுவதில் ஆரம்பிக்கும் பேச்சிலரின் சோக கதை, உணவு, பணக்கடன், ஜட்டிக்கடன், ரூம்மேட், சுற்றத்தாருடனான உறவு என்று நீண்டுக்கொண்டே செல்லும். எதையும் விடாமல் எல்லாவற்றையும் தொட்டு செல்கிறார், சிபி சாலமன். ஒவ்வொரு இடத்திலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மறக்காமல் சொல்கிறார். அது மட்டும் இல்லாமல், நமக்கு தெரியாத உபயோகமான தகவல்களும் இருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்று,

முகவரி சான்றிதழ் வாங்க இன்னொரு வழியும் இருக்கிறது. அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியைப் பார்த்து, முகவரி சான்றிதழுக்கு மனு செய்யலாம். அந்த அதிகாரி நம் வீட்டுப் பகுதிக்கு நேரே வந்து விசாரித்து, நம்மைப் பற்றிய விவரங்களை அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்து பின்னர் முகவரிச் சான்றிதழைக் கொடுப்பார். இந்த சான்றிதழ் சட்டபூர்வமானது. மிகவும் உதவிகரமானது.

ஆசிரியர் சமைத்து சாப்பிடுவதற்கு பரிந்துரை மட்டும் செய்யாமல், அதற்கான முழுமையான திட்டத்தையும் கொடுக்கிறார். சமையல் குறிப்பு உள்பட. ரகளை ரசம், சகலகலா சாம்பார், பர்ஃபெக்ட் பொங்கல் என ஜாலியாக பேச்சிலருக்கு சமைக்க சொல்லி கொடுக்கிறார். ரசத்துக்கான குறிப்பில் இதுவும் இருக்கிறது.

மேற்சொன்ன ரசத்தில் எந்தக் கட்டத்திலும் உப்பு சேர்க்கவே சொல்லவில்லை. மறந்துவிட்டது. இப்படித்தான் அடிக்கடி நிகழும். மறக்காமல் சேர்த்து கொள்ளவும்.இறுதியாக ஒரு நீதி : ரசம் வைப்பதென்பது காதல் கவிதை எழுதுவதைவிட சுலபமான விஷயம்.

மீன் குழம்பு, கருவாட்டு குழும்பு, முட்டை குழம்பு, சைவ காரக்குழம்பு என்று நான்கு வரியில் நாலு ஐட்டத்துக்கு ஐடியா கொடுக்கிறார். :-)

மனித உறவுகளை, தொடர்புகளை பற்றி உளவியல் ரீதியாக ஆசிரியர் கூறியது, இந்த புத்தகத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது. கருத்து வேறுபாடு வருவதற்கு காரணமாக இருக்கும் வாக்குவாதத்தை பற்றி இப்படி அலசுகிறார்.

சொல்லப்போனால் எல்லோரிடமும் நமக்கு அக்கறை வருவதில்லை. யாரை நம் மனத்துக்குப் பிடிக்கிறதோ அவர்கள் மேல்தான் அக்கறை வைக்கிறோம். அந்த நபர் செய்யும் செயல்களில் ஏதேனும் தவறாக நம் மனத்துக்குப் பட்டால், உரிமை எடுத்து நம் கருத்தை முன்வைக்கின்றோம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறோம். அந்த எதிர்பார்ப்பு பொய்க்கும்போது நம் மனம் வருத்தப்படுகிறது. வருத்தம் கோபமாகிறது. கோபம் எதிர்க்கோபத்தைச் சந்திக்கையில் பகை பற்றிக்கொள்கிறது.

ஒரு குழந்தை அதனைப் பெற்றவர்களுக்கு எப்போதுமே அழகு. மற்றவர்களுக்கு அழகாகத் தோன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாக் குழந்தைகளும் அதனைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அழகு. சில குழந்தைகளைத் தவிர. கருத்துகளும் குழந்தைகளைப் போலத்தான்.

என் நண்பர்கள் இருவர் ஒரு வருடத்திற்கு முன்பு அடித்துக்கொண்டார்கள். இப்புத்தகம் அப்போதே கிடைத்திருந்தால் அந்த சண்டையை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அடித்துக்கொள்ள இருப்பவர்கள், ஒருமுறை இப்புத்தகத்தை வாசிக்கவும்.

இந்த புத்தகம் ஆண், பெண் - இருபாலருக்கும் ஏற்புடையதாக, உபயோகமாக இருக்குமென்றாலும் புத்தகம் முழுவதும் ஆண்களை மையப்படுத்தியே இருக்கிறது. கொடுத்திருந்த உதாரணக்கதைகள் அனைத்திலும் ஆண்களே. இது படிக்கும் பெண்களை, ஆண்கள் அளவுக்கு, சுலபமாக சென்றடையுமா என்பது என் சந்தேகம்.என்னை பொறுத்தவரை, ஆண்களை விட பெண்களிடையேதான் இம்மாதிரி பிரச்சினை அதிகம் இருப்பதாக கருதுகிறேன்.

அறைகளில் நண்பர்களுடன் தங்கி இருக்கும் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகத்தை நான் இப்பதிவின் மூலம் பரிந்துரைக்கிறேன். கண்டிப்பாக அவர்களின் ஏதோவொரு பிரச்சினையை இப்புத்தகம் தீர்க்கும். பிரச்சினை இல்லாவிட்டாலும், உங்கள் வாழ்வை திறம்பட வாழ, நெறிப்படுத்த உதவும். குடும்பத்தோடு இருப்பவர்களும் இந்த புத்தகத்தை வைத்திருக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் உங்களை வீட்டுக்கு காவல் வைத்து விட்டு வெளியூர் சென்றால், நீங்களும் பேச்சிலர்தான். தனிகாட்டு ராஜாதான்.

வீட்டுக்காரர் பொண்ண லவ் பண்ணலாமா?

நண்பர்களுக்கு எப்போது கடன் கொடுக்கலாம்?

பீர் அடிக்கலாமா?

போரடிக்குதுன்னு மால் போலாமா?

உயிர் தோழனுக்கு கல்யாணமானா, என்ன செய்ய வேண்டும்?

அறை, உணவு செலவுகளுக்கு தனியாக சிக்கிக் கொள்ளாமல் மற்றவர்களையும் கோர்த்துவிடுவது எப்படி?

நண்பர்கள் இருக்கும்போது, நைட் பூரா உங்க ஆளுடன் கடலை போடலாமா?

எல்லா கேள்விகளுக்கும் இதில் பதில் இருக்கிறது.

புத்தகம் வாங்குவதற்கு இங்கே செல்லவும்.

Friday, December 5, 2008

2008 - ஹிட் திரைப்படங்களும் கவர்ந்த காட்சிகளும்

இந்த ஆறு படங்களும் 2008 இன் வெற்றி பெற்ற படங்கள். இதில் மூன்று ஜனரஞ்சகமான சராசரி தமிழ் படங்கள் என்றாலும், மற்ற மூன்றும் வித்தியாசமான கதையமைப்பில் வந்தவை. எந்த வகையென்றாலும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தால் ஆதரிக்கப்பட வேண்டியதுதான். தனிப்பட்ட முறையில் இப்படங்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை.

யாரடி நீ மோகினி

தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் வெற்றியை தொடர்ந்து கன்சிஸ்டன்சியை தொடர வைக்க உதவிய படம். தமிழ் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத நடிகரான ரகுவரனின் கடைசி படம். முதல் பாதி, சாப்ட்வேர் கம்பெனி பின்னணியிலும், இரண்டாம் பாதி, திருநெல்வேலி ஆச்சாரமான குடும்ப பின்னணியிலும் எடுக்க பட்டிருந்தது. மரண படுக்கையில் இருக்கும் பாட்டியுடன் தனுஷ் பேசும் காட்சியில் உள்ள அவரின் நடிப்பு, இந்த தலைமுறை நடிகர்களில் சிறப்பாக நடிப்பவர் என்பதை காட்டுவதாக இருந்தது.

சரோஜா

இளைய தலைமுறையின் நாடி துடிப்பு வெங்கட் பிரபு துல்லியமாக கேட்கிறது போலும். விஜயகாந்த் ஒரு பேட்டியில் தான் கடைசியாக பார்த்த படம் இதுவென்றும், தனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையென்றும், ஆனால் தனது மகன்கள் விழுந்து விழுந்து சிரித்ததாகவும் கூறினார். நீங்கள் எந்த தலைமுறையை சார்ந்தவர் என்பதை இப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த திரில்லர் வகை கதையை படம் முழுக்க நகைச்சுவை தோரணம் கட்டி எடுத்திருக்கிறார்கள். அங்க போயா காமெடியை வைச்சாங்கன்னு கேட்கிற அளவுக்கு சில இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் காமெடி. அதிலும் கிளைமாக்சில் சரண், மனைவி புகைப்படத்தை பார்த்து சோகமாக பேசி கொண்டிருக்கும் போது, பிரேம்ஜி கேட்கும் "யாரு சார் அந்த பிகரு?" என்ற கேள்வி நான் சற்றும் எதிர்பாராதது.

தசாவதாரம்

ஒரு மெயின் கதையுடன் ஒவ்வொரு அவதாரத்துடனான கிளை கதையையும் இணைத்து கட்டிய படம். பத்து வேடத்தில் கமல் என்ற ஓபனிங்கில் ஆரம்பித்த படம், படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் உழைப்பில் பிரமிக்க வைத்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் போது, புதியதாக ஏதோவொன்றை படத்தில் பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய விஷயங்கள் இருந்தது. எந்த சீனை எப்படி எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், படத்தை விட்டுவிடுவோம். குறிப்பா மருத்துவமனை காட்சி.

அஞ்சாதே

மிஷ்கின் ஆர்ட் பிலிமில்ல எடுத்து இருப்பார்ன்னு நினைச்சின்னு போனா, அது ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் படமா இருந்தது. இரு நண்பர்கள் கதையை பெண் பிள்ளைகளை கடத்தும் தளத்தில் க்ரைமாக எடுத்திருந்தார். பெரியதாக புகழப்பட்ட படம். கரும்பு தோட்டம், முகம் காட்டாத மொட்டை வில்லன், கட்டிபோடப்பட்ட இரு பெண் பள்ளி மாணவிகள் என்று ஆடியன்ஸ் அனைவரையும் கண் கொட்டாமல் திரையை பார்க்க வைத்த கிளைமாக்ஸ். அதுவும், அந்த மொட்டை நடுரோட்டுக்கும் வரவும், அவனை ஒரு லாரி இடிக்கும்வாறு முடித்த விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது.

சுப்பிரமணியபுரம்

இந்த படம் வருவதற்கு முன்பு ரொம்ப ஸ்டைல்'ஆக ஒரு பாடல் வெளியிட்டு இருந்தார்கள். அதை கேட்டு விட்டு சென்றிருந்தால் ஷாக்கிங்கா இருந்திருக்கும். காதலையும், நட்பையும் ரொம்ப புனிதமாக காட்டி கொண்டிருந்த சினிமாவில் அதில் உள்ள துரோகத்தை காட்டமாக காட்டிய படம். படம் பார்த்துக்கொண்டிருந்த போது, பக்கத்திலிருந்த ஒருவர் அடித்த கமெண்ட், “ஏய் என்னப்பா! ஒரு கொலைகார கும்பலுக்குள்ள உட்கார்ந்த மாதிரி இருக்கு!”. எதார்த்தமா எடுக்கப்பட்டிருந்த, எண்பதுகளில் வீட்டிற்குள்ளும் வெளியேயும் மதுரை மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை, குடும்ப ஆடியன்ஸ் பார்க்க வருவதை, படத்தில் வரும் வன்முறை காட்சிகள் தடுக்குமோ? என்று நினைத்தேன். என் எண்ணத்தை, அன்று இரவு டிவி மெகாசீரியலில் வந்த கொலைக்காட்சி மாற்றியமைத்தது. கவர்ந்த காட்சி - சவுண்ட் செட் பார்ட்டிக்காக பேசுவோம் என்று நண்பர்களை சமுத்திரகனியிடம் அழைத்து சென்று அங்கு ஜெய் சைட் அடிப்பதும், அதன் பின் காட்சியும்.

சந்தோஷ் சுப்பிரமணியம்

இது ஒரு பீம்சிங் டைப் படமாக இருந்தாலும், ரீமேக் படமாக இருந்தாலும் மற்ற எல்லா படங்களையும் விட இளைஞர்களையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்ந்த படம். மற்ற படங்களில் இருந்த வன்முறை இதில் இல்லை. குடும்ப செண்டிமெண்ட், காதல், காமெடி என்று ஜனரஞ்சகமான வெற்றி படத்தில் இருக்க வேண்டிய எல்லாமும் இருந்த படம். இறுதி காட்சியில் சித்தார்த்தை விட ரவி சிறப்பாக நடித்திருந்தார் என்று கூட சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் ஒடிய ஒரு வெற்றி படம். ஹரிணி, ரவி வீட்டில் இருக்கும்போது இயல்பான நகைச்சுவையோடு நடக்கும் சம்பவங்களை, ஒரு வீட்டில் இருக்கும் அனைவரையும் ரசிக்க வைக்கும்படி எடுத்திருந்தது பாராட்டுக்குரியது.


இன்னமும் ஹிட் என்று சொல்லிக்கொண்ட சில படங்கள் இருக்கிறது. எனக்கு தெரிந்து இவைதான் இந்த ஆண்டின் உண்மையாக ஹிட் படங்கள், எடுத்தவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும். இதில் இரண்டு ரீமேக் படங்களாக இருந்தாலும், அதன் மூலமும் தமிழர்களால் உருவாக்கப்பட்டவைதான். தசாவதாரத்தை தவிர, மற்ற அனைத்தும் இளம் கலைஞர்களின் படைப்புகள். இது காட்டுவது, ரசிகர்கள் ஏதோவொரு விதத்தில் எதிர்பார்க்கும் புதுமை.

Thursday, December 4, 2008

மகிழ்ச்சியான தருணம்!!!

நான் பதிவு எழுதுவதற்கு முன்பு என்னை கவர்ந்த பதிவுகளை என் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியதுண்டு.

அதேப்போல், லக்கிலுக், வெட்டிப்பயல், வினவு போன்றவர்கள் எழுதிய பதிவுகளை மின்னஞ்சலில் நான் பெற்றதுண்டு.

இன்று, நான் எழுதிய ஒரு பதிவை நண்பர் மூலம் மின்னஞ்சலில் நானே பெற்றது, மகிழ்ச்சியான தருணம் தான் எனக்கு.

இதை ஒரு அங்கீகாரமாகவும், ஊக்கமாகவும் கருதுகிறேன்.

பதிவை மின்னஞ்சல் தொடர் ஓட்டம் ஓட தொடங்கி வைத்த நண்பருக்கும், மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்த நண்பர் கோவிந்துக்கும் நன்றி.

Tuesday, December 2, 2008

நாசமா போறது நிச்சயம்!

குண்டு வெடிச்சி ரெண்டு நாள் கழிச்சி மும்பைல பாலசாகேப்ன்னு ஒருத்தர், பாதுகாப்பு எப்படி இருக்குதுன்னு பார்க்க நினைச்சிருக்காரு. அவரோட துப்பாக்கியை எடுத்துக்கிட்டு குண்டு வெடிச்ச ஸ்டேஷனுக்கு போயிருக்காரு. டிரேயின்ல போயிருக்காரு. பல இடங்களில் மெட்டல் டிடெக்டர் வச்சிருக்காங்க. இவரும் இங்கயும் அங்கயும் போயிட்டு வந்துட்டு இருந்திருக்காரு. யாரும் கண்டுக்கலை. எந்த மெட்டல் டிடெக்டரும் எதையும் டிடெக்ட் பண்ணலை. பார்த்திருக்காரு. நேரே போய் போலீஸ்கிட்ட கம்ப்ளேயின் பண்ணிருக்காரு!. (எதுக்கெல்லாம் கம்ப்ளேயின் பண்ண வேண்டியிருக்கு) அதுக்கு அவுங்க சொன்னத கேட்டு ஷாக்காயிட்டாரு. அப்படி என்ன சொன்னாங்க?

“அது சத்தம் கொடுத்திருக்கு. ஆனா அந்த பீப் சத்தம்தான் எங்களுக்கு கேட்கலை”

-----------

மஹாராஷ்ட்ரா துணை முதல்வர்க்கிட்ட போயி பத்திரிக்கையாளர்கள், மும்பை தீவிரவாதம் பற்றி கேட்டுருக்காங்க. அவர் சொன்னது, “இது எப்பவும் சாதாரணமா நடக்குறதுதானே?”. அதேப்போல், கேரளாவில் பிறந்த கமாண்டர் உன்னிகிருஷ்ணனின் உடல் அடக்கம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பல பேர்கள் சொல்லிய பிறகு, கேரளா முதலமையச்சர் அச்சுதானந்தன் பெங்களூர்ல போயி, அவங்க அப்பா அம்மாவை பார்த்திருக்காரு. கோபத்தில் வீட்டிற்குள் விட உன்னிக்கிருஷ்ணனின் அப்பா மறுத்திருக்காரு. ஆசையாக வளர்த்த ஒரே மகனை இழந்த தந்தைக்கு அரசியல்வாதிகளின் பொய் ஆறுதல் கண்டிப்பாக கோபத்தை வரவழைக்கும். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு ஆறுதல் கூற வேண்டிய பக்குவம் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இருந்திருக்க வேண்டும். ஆனா, இவருக்கு இல்லையே. பதிலுக்கு இவர் கூறியது, “ஒரு கமாண்டர் இறந்ததால நான் வந்தேன். இல்லாட்டி இங்கே ஒரு நாய் கூட வராது”.

நம்ம அரசியல்வாதிகளின் பொறுப்புணர்ச்சி... கேவலமா இருக்கு...

------------

பிளாஸ்டிக் பொருட்களின் மக்காத தன்மையால் ஏற்படும் அபாயம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தயாரிக்க செலவு கம்மியாக இருந்தாலும், மக்குவதற்கும் ஆண்டுகள் பல ஆகும், செலவும் ரொம்ப பிடிக்கும். அதனால பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக துணி பை, காகித பை உபயோகப்படுத்த சொல்லுறாங்க.

இன்னொரு பக்கம், அலுவலகங்களில் காகிதங்களுக்கு பதிலாக முடிந்தவரை ஆன்லைனிலேயே எல்லாவற்றையும் பண்ண சொல்கிறார்கள். பிரிண்ட் அவுட் எடுப்பதை தவிர்க்கவும். பேங்க் அக்கவுண்ட், கிரேடிட் கார்ட் ஸ்டேட்மெண்டை ஈ-மெயிலில் பெறவும்’ன்னு ஏகப்பட்ட அறிவுரைகள். நல்லதுதான். ஏத்துக்க வேண்டியதுதான்.

இப்ப, ஈ-வேஸ்ட்’ன்னு இன்னொரு சிக்கல் இருக்கு. பழைய கம்ப்யூட்டர், மானிட்டர், பிரிண்டர், சிடி, டிவிடி இதையெல்லாம் சுத்திகரிக்க, ஒரு சில வழிமுறைகள் உள்ளது. சும்மா குப்பையிலே போட்டுட முடியாது. இந்த கழிவுகளை நிர்வகிப்பது மற்ற எல்லா கழிவுகளையும் நிர்வகிப்பதை விட கடினம்.

பிளாஸ்டிக் பதிலாக, காகிதம் உபயோகப்படுத்த வேண்டுமாம். காகிதத்துக்கு பதிலா, கம்ப்யூட்டர் யூஸ் பண்ணனுமாம். கணினி கழிவுயையும் சுத்திகரிப்பதோ, மக்க செய்வதோ கடினத்திலும் கடினம். சரியா மாட்டிக்கிட்டோம்னு மட்டும் நல்லா தெரியுது.

நாசமா போறது நிச்சயம்!

Saturday, November 29, 2008

எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்

இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.

தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?

தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.

தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.

தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.

தீவிரவாதி 2: என்ன?

தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.

தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?

தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே? சரியா?

தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா, அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா? சென்னை எப்படி?

தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.

தீவிரவாதி 1: ஒ!

தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும், சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.

தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?

தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம்?


தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.

தீவிரவாதி 2: ஏன்?

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.

Thursday, November 27, 2008

டைட்டில் போட்டாங்கடோய்!!!

ஒரு படத்தின் டைட்டில்தான் அதற்கு முகவரியிலிருந்து ரேஷன் கார்டு வரை. ஒரு படத்தில் எது இல்லாவிட்டாலும் இது இருக்கும். சார்ட் பேப்பரில் எழுதி காட்டிக் கொண்டிருந்த டைட்டில், இன்று லட்சங்கள் செலவழித்து கிராபிக்ஸில் காட்டும் அளவுக்கு மாற்றங்கள் அடைந்துள்ளது.

ஒரு இயக்குனர் தனது புத்திசாலித்தனத்தையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்துவதற்க்கான முதல் சுற்று இடம் இது. ஒரு படத்தில் நடித்தவர்களின் பெயரையும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரையும் காட்டுவதற்கு மட்டும் உதவுவதல்ல டைட்டில். ஒரு படத்தின் தன்மையை பார்வையாளர்களுக்கு உணர்த்தி அவர்களை கதையின் களத்திற்கு தயார்படுத்தவும் உதவுவது டைட்டில்.

வித்தியாசமான டைட்டில்கள் சுவாரஸ்யம் கொடுப்பவை. பாக்யராஜ் படங்களில் இடையில் போடப்படும் டைரக்ஷன் டைட்டில் கார்டு, தியேட்டரில் கலகலப்பையும் சலசலப்பையும் உண்டு பண்ணுபவை. இது கதையின் திருப்பங்களிலும் சுவாரஸ்யங்களிலும் இயக்குனரின் பங்கை பார்ப்பவர்களுக்கு உணர வைக்கும் யுக்தி. ரஜினி ஆரம்பித்து வைத்த சூப்பர் ஸ்டார் வகை டைட்டில்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களிடையே கரகோஷத்தை வர வைப்பவை. (சூப்பர் ஸ்டார் டைட்டிலில் இப்ப பல வகை வந்து விட்டாலும், பட்டையை கிளப்பியது தேவாவின் இசையில் வந்ததுதான்).

எண்பதுகளின் இறுதியில் வந்த காமெடி படங்களில் போடப்படும் கார்ட்டூன் டைட்டில்கள், எனக்கு சிறு வயதில் படத்தால் ஏற்படுத்த முடியாத ஆர்வத்தை கொடுத்தது. கலடைஸ்கோப் டைட்டில்கள், பிலிம் நெகடிவ் டைட்டில்கள் அந்நேரத்தில் பிரபலமானவை. படத்தின் தீமுடன் வந்த ஸ்பைடர்மேன், ஹல்க், பிளப்பர் போன்ற ஆங்கில படங்களின் டைட்டில்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழிலும் இது போன்று முருகதாஸ் கஜினியில் முயன்றிப்பார்.

டைட்டில் உருவாக்கத்தில் யாருடைய குறுக்கீடும் அதிகம் இல்லாமல் இயக்குனரின் முழுமையான பங்கு இருக்கும் சூழ்நிலையில் ஹீரோவின் பெயருக்கு அடுத்தப்படியாக இயக்குனரின் பெயரை ஸ்பெஷலாக காட்ட வாய்ப்புகள் உண்டு. சில இயக்குனர்கள் சிறப்பான முக்கியமான காட்சிகளின் பின்னணியில் தங்களது பெயரை போடுவார்கள். உதாரணத்திற்கு, முத்து, படையப்பாவில் ரஜினி ஜெயிக்கும்போது போடப்படும் கே.எஸ்.ரவிக்குமார் பெயரையும், தில், கில்லியில் விக்ரம், விஜய் வெற்றியின் போது போடப்படும் தரணியின் பெயரையும் குறிப்பிடலாம். பேரரசு கொடுக்கும் அலப்பரையை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்தி முதல்வன் ‘நாயக்’கில் டைட்டிலின் போது டிவி ஷூட்டிங் ஸ்பாட்டை காட்டுவார்கள். முடிவில் டைரக்டர் சீட்டைக் காட்டி ஒரு கவுண்டவுன் போட்டு, ஒன்று என்று வரும்போது ஷங்கர் பெயரை போடுவார்கள். நம்பர் ஒன் டைரக்டராம். படம் வெற்றி பெற்றிந்தால் ஆளை கையில் பிடித்திருக்க முடியாது. டூயட் எடுக்க போகிறேன் என்று சந்திராயனில் நிலவுக்கு சென்றிருப்பார். முதல்வன் படத்தில் வரும் சேனல்கள் பலவற்றை காட்டும் டைட்டில், சத்தத்துடன் வரும் எழுத்தை காட்டும் அந்நியன் டைட்டில், பழைய ஸ்டைலில் இருந்து புதிய ஸ்டைலுக்கு மாறும் சிவாஜி டைட்டில் என்று இவர் படத்து டைட்டில்கள் கவனம் பெறுபவை. எல்லாவற்றிலும் மெனகேடுபவர், இதையா விடுவார்?

சிம்பிளாக கவனத்தை பெறுவதற்க்கான வழி, இயக்குனரின் பெயரை மட்டும் கருப்பு பின்னணியில் எவ்விதமான ஒலியும் இல்லாமல் போடுவது. பெருவாரியான சீரியல்களில் கடைப்பிடிக்க படுவது இந்த முறைதான்.

படங்களில் காட்டப்படும் நடிகர்களின் பெயர் வரிசை முறை, எத்தனை வருடம் ஆனாலும் ஒரே மாதிரியானதுதான். முதலில் கதாநாயகன், பின்பு கதாநாயகி, நகைச்சுவை நடிகர்கள், வில்லன், குணச்சித்திர நடிகர்கள், கடைசியில் துணை நடிகர்கள் என்று ஏதோ கல்யாண பந்தியில் போடும் உணவு வகை போல் மாற்றாமல் இருக்கிறார்கள். அது ஏன்தான் தெரியல, கதாநாயகி கேரக்டர் எவ்ளோ மொக்கையா இருந்தாலும், வில்லன்/வில்லி அல்லது ஏதோ குணசித்திர கதாபாத்திரம் ஸ்ட்ராங்'ஆ இருந்தாலும் கதாநாயகி பேருக்கு அப்புறம் தான் மத்தது எல்லாம்.

கடந்த சில வருடங்களாக ஒரு படத்தின் தயாரிப்பில் உழைக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் நிலையில், முக்கியமானவர்கள் தவிர மற்ற அனைவரின் பெயர்களையும் படத்தின் கடைசியில் சின்னதாக போடுவார்கள். இதை தியேட்டரில் யாரும் பார்ப்பதில்லை. ஆப்பரேட்டரும் போடுவதில்லை. அது கூட பரவாயில்லை. தமிழ் சேனல்களிலும் போடுவதில்லை. தக்குனுண்டு காட்டும் அந்த நொடிக்கு காத்திருப்பது எத்தனை உள்ளங்களோ? சரோஜாவில் ஆப்பரேட்டர் ப்ரொஜக்டரை அணைக்கும்வரை இழுத்து வைத்திருந்தார், வெங்கட் பிரபு.

சமநிலையில் உள்ள இரு ஹீரோக்கள் படம் என்றால், யார் பேரை முதலில் போடுவது என்ற குழப்பம் வரும். ஆரம்பத்திலேயே இப்படி என்றால், மூணு மணி நேரம் முடிவதற்குள் அவ்வளவுதான். இதனால்தான், தமிழில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இல்லையோ? பிதாமகனில், விக்ரம் பெயர் தான் முதலில் வரும். சீனியாரிட்டி இல்லையா? சிவாஜி கடைசியாக நடித்த படங்களில் அவர் பெயர்தான் முதலில் வரும். படையப்பாவில்? ரஜினி பெயர்தான்.

ஒரு நல்ல சினிமா ரசிகன் டைட்டிலை தவற விட விரும்ப மாட்டான். புதியதாக சினிமாவில் நுழைபவர்கள் தங்கள் பெயர் டைட்டிலில் வருவதற்காக காத்திருந்து, ஆர்வமுடன் எதிர்பார்த்து, அப்படி அது வந்து, முதல் முறை தங்கள் பெயரையே திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு எழும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அதுவே சாதிக்க துடிக்கும், புகழடைய விரும்பும் கலைஞன், தன் பெயர் போடும்போது தியேட்டரில் கைத்தட்டல் எழுவதற்காக ஏங்குவான். இது ஒரு மனிதன் சினிமாவுடன் கொண்டிருக்கிற பலவகை தொடர்பை காட்டுகிறது. ஒரு காலத்தில் நடிகர்களுக்கு மட்டும் கை தட்டி கொண்டிருந்த ரசிகர்கள், இன்று டைரக்டர், இசையமைப்பாளர் ஆகியோருக்கும் தனது ஆதரவை, ரசனையை கைதட்டி வெளிகாட்டி கொண்டிருக்கிறார்கள். கைத்தட்டல் வாங்கும் துறைகள் அதிகமாகுவது, சினிமாவின் வளர்ச்சியை காட்டும்.

நீங்களும் சுவையான டைட்டில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

பா. ராகவனின் "என் பெயர் எஸ்கோபர்"

புத்தகம் விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புத்தகம் பற்றிய கருத்தை சொல்கிறேன். அவ்வளவுதான். (ஒ! அதுதான் விமர்சனமா?)

புத்தகத்தை விமர்சனம் பண்ணும் முன்பு, என்னுடைய வாசிப்பு பழக்கத்தை பற்றி சொல்லி விடுகிறேன். பக்கத்து வீட்டில் சிறுவர் மலர் வாங்கி படித்த பழக்கம், பின்பு வாடகை காமிக்ஸ், அம்புலி மாமா என்று வளர்ந்து, அரசு நூலகத்தில் உறுப்பினராக்கி, இன்று கிழக்கு பதிப்பகம் ஓசியாக கொடுத்த "என் பெயர் ஈஸ்கோபர்" புத்தகத்தை ப்லாக்'கில் விமர்சனம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. சாப்பாட்டுக்கு கூட்டோ, பொரியலோ இல்லாட்டியும் பரவாயில்லை, ரெண்டு பக்கம் பேப்பர் (சாப்பிட இல்லை, வாசிக்க) கிடைத்தால் போதும் எனும் அளவுக்கு வாசிப்பு ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில், கதை, சினிமா புத்தகங்கள் மேல் இருந்த விருப்பம், பின்பு தன்னம்பிக்கை, தனிமனித பொருளாதாரம், வரலாறு என்று சென்று இப்போது அரசியலில் வந்து நிற்கிறது. நாளை எப்படியோ?


பத்ரியும் பா.ராகவனும் அவரவர் பதிவுகளில் இதை பற்றி கூறி இருந்த போது, நான் இந்த புத்தகத்தை தேர்தெடுத்ததற்கு ஒரே காரணம், எழுதியது பா.ராகவன் என்பதுதான். அவர் எனக்கு எழுத்தில் அறிமுகமாகியது "நிலமெல்லாம் ரத்தம்" தொடர் மூலம். அப்போது என் அண்ணனின் நண்பர் அவரை புகழ்ந்து தள்ளினார். அதன் பின்பு, எங்கெல்லாம் அவர் எழுதிய கட்டுரை, தொடர் கண்ணில் பட்டதோ, வாசிக்க தொடங்கினேன். சமீபத்தில், பெங்களூர் புத்தக கண்காட்சியில் கூட இவருடைய டாலர் தேசம் புத்தகத்தை வாங்கலாமா? என்று நினைத்தேன். சைஸை பார்த்து எண்ணத்தை விட்டுவிட்டேன். (படிக்க கஷ்டம் இல்லை. அப்ப, பர்ஸ் ரொம்ப பாவமா இருந்தது :-)) மற்றபடி, புத்தகத்தை திறக்கும் வரை, எஸ்கோபர் யார் என்று தெரியாது.

எஸ்கோபர் ஒரு இன்டர்நேஷனல் கடத்தல் மன்னன். "மை நேம் இஸ் பில்லா" என்கிற மாதிரி "என் பெயர் எஸ்கோபர்" என்று டைட்டில் வைத்திருப்பார்கள் போல. நான் பொதுவா இந்த மாதிரி கடத்தல்காரங்க, கொள்ளைகாரங்க புத்தகங்கள் எல்லாம் வாங்குவது இல்லை. எண்ணங்களே வாழ்வை வழிநடத்தும் என்பதை நம்புபவன் நான் (கிழிஞ்சுது!). சில இடங்களில், வீரப்பன், அம்பானி (! :-)) போன்றோர்கள் புத்தகங்களை வாங்க நினைத்தும் வாங்காதது இதனால்தான். நல்ல மனிதர்களை பற்றி, நல்ல விஷயங்களை பற்றி படிக்க எவ்வளவோ இருக்கிறது. அதை முடித்துவிட்டு இதற்கு வரலாம் என்று விட்டு விடுவேன். (இதுலாம் கொஞ்சம் ஓவர்ன்னு சொல்றது கேக்குது)

சுயக்கதை போதும். மேட்டர்'க்கு வாரேன்.

வீரப்பன் இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசியலுக்கு வந்திருக்கலாம். பிடிக்காத அரசியல்வாதிகளை போட்டு தள்ளியிருக்கலாம். மக்கள் ஆதரவோடு ரவுண்ட் அடிச்சிருக்கலாம். இது எல்லாத்தையுமே எஸ்கோபர் பண்ணியிருக்கிறார். அது மட்டும் இல்லை. அவரின் கடத்தல் "பிசினஸ் மாடல்" எவரையும் ஆச்சர்யப்படுத்தும். அவரின் போதை பொருள் கம்பெனியின் சட்டதிட்டங்கள், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சற்றும் குறைவானதில்லை. கடத்தல் பிளான், அரசியல் செல்வாக்கு, அமெரிக்கா'வுக்கான ஆப்பு, போட்டி கடத்தல் கூட்டம், அரசாங்கத்துடனான யுத்தம், விமான வெடிக்குண்டு, மக்கள் அரண், சரண், கண்டிஷன் கைது, கனவு சிறை என்று அத்தியாயத்துக்கு அத்தியாயம் பரபரப்பு. விறுவிறுப்பு தான். ஒரு கட்டத்தில் இது ஒருவருடைய வாழ்க்கை என்பதை மறந்து கதை போல் படித்து கொண்டிருக்கும் அளவுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் உள்ளது.

இந்த புத்தகம் எஸ்கோபர் என்னும் தனிமனிதனை பற்றியது மட்டும் இல்லை. கொலம்பியா, அதனுடனான அமெரிக்கா தொடர்பு, சர்வதேச போதை கூட்டமைப்பு என்று பலதரப்பட்ட விஷயங்களை விளக்குகிறது. பா. ராகவனின் எழுத்து, சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்றால் மிகை இல்லை. சாதா சினிமா இல்லை. நக்கல் வசனங்கள் கூடிய ஆக்ஷன் சினிமா. பல இடங்களில் ரசித்து சிரித்தேன். உதாரணத்துக்கு சில,

கடத்தல் பணபரிமாற்றத்தை பற்றி இப்படி சொல்கிறார்,

"சினிமாக்கள் காட்டுவதுபோல் கடற்கரையோரம் சரக்கை எண்ணிப் பார்த்து பெட்டி மாறும் நாடகமெல்லாம் சாத்தியமே இல்லை. கையில் காசு. வாயில் கொகெயின்."

சிறை சூழ்நிலையை இப்படி சொல்கிறார்.

"கொசுக்கடி. தவிரவும் மூத்திர நெடி. கைதிகள் கொஞ்சம்கூட சுகாதாரம் தெரியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். திருடுபவர்கள், கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்களானாலும் அடிப்படை சுகாதாரம் பழகவேண்டாமா?"

ஹோட்டல்'லில் பொய் பெயர் கொடுத்து எஸ்கோபரும் அவரது கூட்டாளிகளும் தங்குவதை பற்றி சொல்லும்போது,

"எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீதகிருஷ்ண கண்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எஃப்.எம். ரேடியோக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்திருந்தார்கள்."

இதெல்லாம் தமிழகத்தின் புகழ்பெற்ற பெயர்கள் ஆயிற்றே? :-)

சீரியஸ்யாக சொல்லும் இடங்களிலும் கலக்குகிறார். சொல்றேன் கேளுங்க...

"வீழ்த்துவது ஒன்றுதான் நோக்கம் என்றானபின் மண்ணில் வீழ்த்தினால் என்ன? மேலே அனுப்பினால் என்ன?"

"அது கல்லுக்குள் ஈரமல்ல. புல்லுக்குள் பீரங்கி."

இது போன்ற எழுத்துக்கள், அவரின் வசனத்தில் வெளிவர இருக்கும் "கனகவேல் காக்க"வுக்காக காக்க வைக்கிறது.

கடினமான விஷயங்களையும் எளிமையாக விளக்கிறார். போதை நெட்வொர்க்'யை டோராவின் பயணங்களுடன் ஒப்பிட்டு விவரிக்கிறார். அதுவே, சில இடங்களில், பேமானி, புரோட்டா, சனீஸ்வரன் போன்ற வார்த்தைகள், ஹாலிவுட் டப்பிங் படம் பார்த்த எபெக்டை கொடுக்கிறது.

அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை வகைகளை சொல்லுவது போல் போதை செடி வகைகளை சொல்லிவிட்டு போவதாகட்டும், சமையல் குறிப்பு போல் போதை பொருள் தயாரிக்கப்படுவதை சொல்லுவதாகட்டும் எழுத்தில் எளிமை. சுவாரஸ்யம். வரலாற்று உண்மை சம்பவங்களை இவ்வளவு சுவாரஸ்யமான எழுதுவதில் இவர் கிங். வரிக்கு வரி கலகலப்பூட்டுகிறார். வரலாறு பாடப்புத்தகத்தை உருவாக்க இவரை விட்டால், அப்புறம் தமிழ்நாட்டில் வரலாறு பாடம் பிடிக்கலை என்று எந்த பிள்ளையும் சொல்லாது.

கலக்கலான இந்த புத்தகத்தில் உள்ள ஒரு சின்ன குறைபாடு, சிறு சிறு எழுத்து பிழைகள். ஒரு பக்கத்தில் 'ள'க்கள், 'மி'க்களாக அச்சிடப்பட்டது, ஒரு கணம் என்னை ஏதோ ஹை டெக் தமிழ் என்று எண்ணவைத்து விட்டது.

படித்து முடித்த பின் ஒரு நிமிடம் யோசித்தேன். விடாமல் படிக்க வைக்கும் இந்த புத்தகத்திற்கு பின் உள்ள எழுத்தாளரின் உழைப்பு அசாதாரணமானது. குடுங்க சார், கைய? கை வலிக்கும் அளவுக்கு குலுக்கலாம்.

இந்த புத்தகம் படிப்பதால் என்ன பயன்? நல்ல வாசிப்பனுபவம். இவ்ளோ நடந்திருக்கு. இது தெரியாமலா இருந்தோம் என்று நினைக்க தூண்டும் சம்பவங்கள். அதிகபட்ச பலனாக, எஸ்கோபரை முன்னுதாரணமாக கொண்டு போதை தொழிலில் இறங்கலாம். ஆட்டம் ஆடி அடங்கலாம். சாத்தியமில்லை. ஒன்றும் வேண்டாம். சரித்திரத்தை சுவையாக சொல்லும் பா. ராகவனின் மற்றுமொரு புத்தகம். படிப்பவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.

ஓசியில் கொடுத்தால் பினாயிலையும் குடித்து விட்டு, ஆட்சியையும் கொடுக்கும் தமிழர்களில் ஒருவன் என்பதால் என்னவோ, எனக்கு இந்த புத்தகம் ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்தது :-).

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்...

Wednesday, November 26, 2008

கோடிலிங்கேஷ்வரர் (புகைப்பட பதிவு)

பெங்களூர்'ல இருந்து ரெண்டு மணி நேரத்துல போற தூரத்தில இருக்கிறது கோடிலிங்கேஷ்வரர் கோவில். என்ன விசேஷம்? ஒண்ணு இல்ல. கிட்டத்தட்ட கோடி லிங்கங்கள் ஒரே கோவிலில்.



கோலார் தங்க சுரங்கத்தின் பக்கமுள்ள கம்மசந்தரா என்கிற சிறு கிராமத்தில் உள்ளது இந்த கோவில். போற வழியில் மன்மத ராசா ஷூட்டிங் லொகேஷன் பார்த்து கொண்டே செல்லலாம்.



இந்த கோவிலில் மட்டும் இல்லை. போகிற வழியிலும் நிறைய லிங்கங்களை பார்க்கலாம்.



கோவிலின் ஸ்தல புராணம் தெரியவில்லை. லிங்கங்களின் எண்ணிக்கை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும்.



சின்ன சின்னதாக கோடி லிங்கங்கள் மட்டும் இல்லாமல், ஒரு பெரிய லிங்கமும் நந்தியும் இருக்கிறது.



பெரிய லிங்கத்தின் உயரம் நூத்தியெட்டு அடிகள்.



சின்ன லிங்கங்கள் 1974 இல் இருந்தே வைத்து வருகிறார்களாம்.



கோவில் இடம் பெரியதென்பதால் எந்த இடத்திலும் கூட்டம் இருப்பதாக தெரியவில்லை. அதேப்போல், சத்தமில்லாமல் அமைதியாக இருப்பதும் நன்றாக இருக்கிறது.

Wednesday, November 19, 2008

போடுங்கம்மா ஓட்டு!

ரெண்டு நாட்கள் முன்பு, பெங்களூரில் புதியதாக ஜனதா கட்சியின் தலைவரானா குமாரசாமி தன்னுடைய வெயிட்டை காட்ட ஒரு பேரணி நடத்தினார். சும்மாவே டிராபிக் ஜாம் ஆகும் பெங்களூர், இந்த முறை ஸ்டப்ட் பிரட் போல் எட்டு மணி நேரம் வரை அசையாமல் நின்றது.



ஏர்போர்ட் சென்றவர்கள் விமானத்தை விட்டார்கள். மூன்று-நான்கு மணிக்கு பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள், களைப்புடனும் பசியுடனும் வீட்டுக்கு பத்து பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆபீஸில் இருந்து பஸ்சிலும் கேப்களிலும் சென்றவர்கள், நடந்தாவது செல்வோம் என்று நடந்தார்கள். டிராபிக்'இல் மாட்டிய ஒரு முன்னாள் ஜனதா கட்சி அமைச்சர், கட்சி தொண்டர்களிடமும் மாட்டி அடி வாங்கினார்.



இதனால் இந்த பேரணிக்கும் ஜனதா கட்சிக்கும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று சொல்லி இருந்த குமாரசாமி, என்ன நினைத்தாரோ இப்ப எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் மறதி மேல் நம்பிக்கை வைத்தாரோ, அல்லது எப்படியும் பெங்களூர் மக்கள் நமக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைத்தாரோ, எதிர்ப்பு சொல்லும் பெங்களூர் நகர மக்களை ஒரு பிடி பிடிக்க தொடங்கி விட்டார்.

"அவனவன் கிராமத்துல ஸ்கூல்'லுக்கு போக ஆறு கிலோமீட்டர் ஏழு கிலோமீட்டர் நடந்து போறான். இங்க ஒரு நாள் லேட்'ஆ வீட்டுக்கு போனத்துக்கு இந்த கூப்பாடு போடுறீங்களே, எப்பவும் சுகவாசியா இருக்குற நீங்க அந்த கிராமத்து மக்கள் நிலைமையை நினைச்சி பார்த்தீங்களா?"

"இவ்ளோ பேசுற நீங்க, ஜனநாயக கடமையான ஓட்ட ஒழுங்கா போடுறீங்களா? அதே சமயம், இதே போல் இசை நிகழ்ச்சிகள் நடக்குறப்போ ஆகுற டிராபிக் ஜாம் பத்தி ஒண்ணும் சொல்லுறது இல்லை"

இவர் அவர் தப்ப மறைக்க இப்படி எதிர் வாதம் வைத்தாலும், அதிலையும் ஒரு உண்மை இருக்கு. சேவல் படத்துல 'வழக்கம் போல்', வடிவேலுவ அடிக்க ஒரு கூட்டம் கூடும். அப்ப, வடிவேலு சொல்லுறது, "ஏன்யா, ஓட்டு போடுறப்போ கூட ஐம்பது சதவிகிதம் மக்கள் தான் வரீங்க. ஆனா, என்னைய அடிக்கும்போது மட்டும் இப்படி மொத்தமா வாரீங்களே?" தமாஷா தெரிஞ்சாலும் இதுதான் உண்மை.

இன்னைக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து இருக்கும் பல பேருகிட்ட வாக்காளர் அடையாள அட்டை இருக்காது. இருந்தாலும், இவுங்க வேற ஊருல இருப்பாங்க. தேர்தல் சமயம் மட்டும் இதோட ஞாபகம் வரும். மத்த சமயமும், அரசு அலுவலகத்துக்கோ, அடையாள அட்டை வழங்கும் பள்ளிகளுக்கோ போக நேரமும் இருக்காது, மனசும் இருக்காது.

இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர ஆரம்பிக்கபட்டது தான் "ஜாகோ ரே" (Jaago re) என்னும் அமைப்பு. இதற்கு அர்த்தம் "விழித்தெழுவோம்'ன்னு நினைக்கிறேன். (இந்த பேரை எல்லோருக்கும் புரியுறாப்புல பொதுவா ஆங்கிலேத்துலே வச்சிருக்கலாம். பரவாயில்லை, விடுங்க!). இதன் நோக்கம் இணையம், செல்பேசி தொழில்நுட்பம் மூலம் மக்களிடையே ஓட்டுரிமை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவருவதும், ஓட்டு போடுவதற்கான உதவிகளை செய்வதும் ஆகும்.

ஜனாகிரகா மற்றும் டாடா டீ நிறுவனங்களின் கூட்டு முயற்சியான இதன் திட்டம், நூறு கோடி மக்களை ஓட்டு போட வைப்பதாகும். முதல் கட்டமாக, அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற உதவி செய்கிறார்கள். நமது விண்ணப்பத்தின் பல்வேறு நிலையை செல்பேசி மூலம் தெரிந்தும் கொள்ளலாம். பின்பு, தேர்தலின் போது, தேர்தல் பற்றிய தகவல்களை தருகிறார்கள். மேலும் விவரங்கள், இங்கே.

மாற்றத்தை எதிர்பார்த்தோமானால், அதை நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

புகைப்படங்கள் நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா

Monday, November 17, 2008

அப்பா-பையன் கதை : இவர்கள் இயக்கினால்...

யாரும் இதுவரை அப்பா கதை சொன்னதில்லை என்று சேரன் 'தவமாய் தவமிருந்து' எடுத்தது போல், இப்ப கௌதம் மேனன் அவர் பாணியில் 'வாரணம் ஆயிரம்' எடுத்து தள்ளியிருக்கிறார்.

இதைப்போல் இன்னும் சில தமிழ் இயக்குனர்களுக்கு அப்பா பாசக்கதை எடுக்க ஆசை வந்தால்,

மணிரத்னம்

இவருகிட்ட பல ஐடியாக்கள் இருக்கும். வாசுதேவர்-கிருஷ்ணா, தசரதன்-ராமன் இப்படி ஏதாச்சும் புராணம் கதைய உல்டா பண்ணி எடுக்கலாம். இல்லாட்டி, ராஜிவ் காந்தி-ராகுல் காந்தி, ஷேக் - பருக் அப்துல்லா கதைகள இது அவுங்க கதை இல்லன்னு சொல்லி எடுக்கலாம். அப்படியும் இல்லாட்டி, நாசாவுல வேல பாக்குற ஒரு பையன், அவுங்க அப்பாவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போறச்சே ஏற்படுற பிரச்சனைகளை பாலஸ்தின பிரச்சனையின் பின்னணியிலோ, ஈராக்-ஆப்கான் பிரச்சனையின் பின்னணியிலோ, காட்டிடலாம். இந்திய அளவுல ஒரு பரபரப்ப உண்டு பண்ணி, டமால் பண்ற மாதிரி போக்கு காட்டி, கடைசில புஸ் ஆக்கிடலாம்.

ஷங்கர்

ஊர்ல உள்ள சில பணக்காரர்கள், நடுத்தர வர்க்க குடும்ப தலைவர்கள் திடீரென கொலை செய்யப்படுகிறார்கள். அரசாங்கமும் குழம்பி, நாமும் குழம்பி, சி.பி.ஐ. எல்லாம் விசாரிச்சிட்டு இருக்கப்ப, பேங்குல அக்கௌன்டன்ட்'ஆ வேலை பார்த்திட்டு பாசுரம் சொல்லிட்டு இருக்குற மாதவ சேஷாத்திரி என்கிற ஹீரோ தான் இதற்கெல்லாம் காரணம்'ன்னு தெரியுது. ஏன் இதெல்லாம் பண்றாருன்னு பிளாஸ்பேக் வச்சி சொல்லுறாங்க. பிளாஸ்பேக்குல அவுங்க அப்பாவோட வயதான நண்பரை அவன் பையன் முதியோர் இல்லத்துல சேர்க்க முயற்சி பண்றதையும், அதை ஹீரோ அப்பா தடுக்க முயலுவதையும், அதனால் அடிப்பட்டு சாகுறதையும் உருக்கமா காட்டுறாங்க. அதனால் வெகுண்டு எழுந்த ஹீரோ, ஊர்ல யாருலாம் தங்களோட அப்பாவை முதியோர் இல்லத்தில சேர்க்குறாங்களோ, அவுங்களையெல்லாம் கம்ப்யூட்டர்'ல லிஸ்ட் போட்டு தூக்குறாரு. இந்த கதையை இருநூறு கோடில பாரின் டூயட், கிராபிக்ஸ் எல்லாம் வச்சி அமர்க்களமா எடுத்திடுவாரு நம்மாளு. படத்தோட பேரு "அப்பன்" அல்லது "தகப்பன்". ஏன்னா, "ன்"ங்கற எழுத்துல படப் பேரு முடிஞ்சாதான் அவருக்கு லக்கு.

விக்ரமன்

ஒரு அப்பாவுக்கு மூணு பசங்க. அந்த மூணு பசங்களும் பெரிய நிலைக்கு போக அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு. தன் சொத்தெல்லாம் இழந்து ஆளாக்குற அப்பாவை, மூத்த ரெண்டு பசங்களும் கண்டுக்கல. தறுதலையா இருக்குற மூணாவது பையன் மட்டும் அப்பா மேல பாசத்த கொட்டுறாரு. "நிலத்த வாழ வைக்குறது, வானத்தில இருந்து பெய்யுற மழை தண்ணீர். எங்கள வாழ வைக்குறது, உங்க கண்ணுல இருந்து வழியிற ரத்த கண்ணீரு"ன்னு லா லா முசிக்கோட வசனம் வுட்டு, அப்பாவோட சேர்ந்து ஊறுக்காய் கம்பெனி வச்சி, பெரிய தொழிலதிபர்கள் ஆகிறதுதான் கதை. தொழிலதிபர்கள் ஆனவுடன் மொத்த குடும்பமும் ஒண்ணா சேர்ந்து லா லா பாடுறாங்க.

செல்வராகவன்

இந்த கதை கொஞ்சம் வித்தியாசமா அதே சமயம் வில்லங்கமாவும், விவகாரமாகவும் இருக்கும். படத்தோட ஹீரோ ரோட்டுல போஸ்டர் ஒட்டுறவரு. எல்லா மனுஷனுக்கும் ஒரு அப்பாதான் இருப்பாங்க. ஆனா, இவருக்கு மட்டும் ரெண்டு அப்பாக்கள். எப்படிங்கறத, பிளாஸ்பேக்'ல அடி வயிறு கலங்குற மாதிரி சொல்லுறாரு. இந்த ரெண்டு அப்பாக்களுக்கும் ஹீரோ'வுக்கும் நடக்குற உணர்வுபூர்வமான பாச போராட்டம் தான் இந்த கதை. நடுவே, ரெண்டு அப்பாக்களும் ஹீரோவும் சேர்ந்து ஆட, பின்னணியில் டாக்டர், போலிஸ், பால்காரன், பேப்பர்காரன் எல்லாரும் ஆடுற குத்து பாட்டும் கண்டிப்பா இருக்கும்.

பேரரசு

ஹீரோவோட அப்பா பெரிய அரசியல்வாதி. ஊருக்கு நல்லது பண்ணுறவரு. அவரு தன்னோட பொண்ண, அதாவது ஹீரோ'வோட அக்காவ இன்னொரு அரசியல்வாதிக்கு கல்யாணம் பண்ணி வைக்குறாரு. அக்காவோட புருஷன், மாமனாரோட சொத்தையும் புகழையும் ஒரே கல்லுல ஆட்டைய போடுறதுக்காக, அவர கடத்தி ரகசிய அறையில் சிறை வைக்குறாரு. நக்சலைட் கடத்திட்டு போனதா சொல்லி, அனுதாப அலையில ஜெயிச்சி எம்.எல்.ஏ. ஆகிடுராரு. இடைவேளை வரை ஜாலியா சுத்திட்டு இருக்குற ஹீரோ, அவரு ஊரு போஸ்ட்மேன் கிட்ட விவரம் கேள்விப்பட்டு, வில்லன ரவுண்டு கட்டி அடிக்குறாரு. "ஏஞ்சலா ஏஞ்சலா, என்னை வெள்ளையாக்குன உஜாலா! ஊஞ்சலா ஊஞ்சலா, நமக்கு இடையில் யாரும் கிடையாது இடைஞ்சலா!" அப்படின்னு மட்டும் பாட்டு பாடமா, "அன்ப கொடுக்குறது அம்மா, பாசத்த கொடுக்குறது அக்கா, நட்ப கொடுக்குறது நண்பன். ஆனா, இதுக்கெல்லாம் தேவையான உயிரை கொடுக்குறது அப்பா"ன்னு டயலாக் வேற பேசுறாரு.

யப்பா... யப்பப்பா... :-)

Sunday, November 16, 2008

பெங்களூரில் புத்தக கண்காட்சி

பெங்களூர் பேலஸ் மைதானத்தில் கடந்த வெள்ளி (14-11-08) முதல் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி அடுத்த ஞாயிறு (23-11-08) வரை இருக்கும்.

தமிழ், கன்னடம், ஆங்கிலம் என்று அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கிறது. தமிழ் புத்தக பதிப்பகங்களான விகடன், வானதி, திருமகள், காலச்சுவடு போன்றவை அரங்குகள் அமைத்துள்ளன. இதை தவிர இன்னும் சில கடைகளிலும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது.

விலை உயர்ந்த சில ஆங்கில புத்தகங்கள் ஐம்பது, நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்மிக போதனையாளர்களின் புத்தக அரங்குகளிலும் தமிழ் புத்தககங்கள் கிடைக்கிறது.

இந்த வாரம் தவறவிட்டவர்கள், அடுத்த வாரத்தில் ஒரு விசிட் அடித்து கொள்ளுங்கள்.

Friday, November 14, 2008

சிலம்பாட்டம் - சிம்பு ஆட்டம்

மச்சான் மச்சான்
சிம்புக்கு இளையராஜா பாடியிருக்கும் மெலடி டூயட். யுவன் இசையில் இளையராஜா பாடியிருக்கும் முதல் டூயட் என்று நினைக்கிறேன். இப்பட பாடல்களில் உள்ள ஒரே மெலடி. இளையராஜா குரல் வித்தியாசமா வேற யாரோ மாதிரி இருக்கு. இளையராஜா பாடியது ஒண்ணுதான் இதன் சிறப்பு. பாட்ட எழுதி ரொம்ப நாள் ஆச்சோ?

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாத்தி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே


வேர் இஸ் த பார்ட்டி

செம ஜாலியான பாட்டு இது. மப்புலே எழுதி, இசையமைச்சி, மப்புலேயே பாடுன மாதிரி இருக்கு. பாட்ட எழுதியது சிம்பு. கேட்டா, இதுல எழுத என்ன இருக்குன்னு கேட்பீங்க. ஒரே தமாஷ் தான், போங்க!. பார்ட்டி செல்லும் இளைஞ-இளைஞிகள் அனைவரும் தவறாமல் கேட்க வேண்டிய பாடல் இது. :-)

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணும்'ன்னா
நாங்க காலேஜ்'க்கும் பஸ் ஸ்டாண்ட்’க்கும் போணும்முங்க
இப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணும்முன்னா
இந்த கிளப்'க்கும் பப்’க்கும் வரணுமொங்கோ


வச்சிக்கவா உன்ன மட்டும்

நல்லவனுக்கு நல்லவன் ரஜினி பாடலின் ரீமிக்ஸ். அப்படி ஒண்ணும் பெருசா மிக்ஸ் பண்ணல. அப்படியே தான் இருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான். சிம்பு 'வச்சிக்கவா வச்சிக்கவா'ன்னு இஷ்டத்துக்கு பாடி வெறுப்பேத்தி இருக்கார்.

நலந்தானா நலந்தானா

ஒரு பாட்டோட நிறுத்தாம பல இடங்களில் இருந்து உருவிய பாட்டு. தேவா போட்ட கானா மாதிரி இருக்கு. இத பாடியதும் சிம்பு தான்.

அடி ஊட்டலக்கடி ஜின்னு
நீ உருட்டி எடுத்த பன்’ன்னு
அடி எதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒண்ணு


தமிழ் என்ற நான்

இது ஹீரோ புகழ் பாடும் ஒரு டிபிக்கல் சிம்புதனமான சில்லரைத்தனமான பாட்டு. தயவுசெய்து கேட்காமல் தவிர்க்கவும்.

பாட்ட கேட்கும் போதே, படம் முழுக்க சிம்புவோட தலையீடு இருக்கும்னுதான் தோணுது. சிம்பு, சிலம்பரசன்னு பாடல் வரி எங்கும் இருக்கு. இதையெல்லாம், தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில், படத்தோட டைரக்டரும், இசையமைப்பாளரும் சிம்புவுக்கு 'ஆமாஞ்சாமி' போட்ட மாதிரி தான் இருக்கு.