Tuesday, December 23, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 4

மணி ஆறறை. இன்னைக்கி குளிர் அதிகம். லேசா பனியும் இருக்கு. ஆனா இப்பவே, சில பொடிசுகள் கராத்தே கத்துக்க போயிட்டுயிருக்காங்க. கத்துக்கட்டும். கத்துக்கட்டும். நாம கார் ஓட்ட கத்துக்குவோம்.

ஸோ, இதுவரைக்கும் எல்லா பார்ட்ஸையும் பார்த்தாச்சு. அத எப்படி யூஸ் பண்ணுறதுன்னும் பார்த்தாச்சு. உங்களுக்கு இண்டிகேட்டர், ஹாரன், வைப்பர் பத்திலாம் சொன்னேனா? அத அவர் முத நாளே சொல்லிட்டாரு. நான் தான் மறந்திட்டேன்.

ஹாரன் - ஸ்ட்யரிங் மேலேயே இருக்கும்.இரண்டு கையாலையும் அடிக்க வசதியா ரெண்டு இருக்கும். எப்ப வேணா அடிச்சிகோங்க.

இண்டிகேட்டர் - வலதுபக்கம் ஸ்ட்யரிங் கீழே இருக்கும். மேலே தள்ளுனா, இடது பக்கம் லைட் எரியும். கீழே தள்ளுனா, வலது பக்கம் இண்டிகேட்டர் எரியும். லெப்ட் இண்டிகேட்டர் போட்டுட்டு, வலது பக்கம் கைய காமிச்சிட்டு, நேரா போயிட கூடாது.

ஹெட் லைட் - இண்டிகேட்டர் போடுறதுக்கு யூஸ் பண்ணுற குச்சியையே திருப்புங்க. பீமர் (மகாபாரதத்துல வர்றவரு இல்ல... லைட்ட மேல கீழே அடிக்க) யூஸ் பண்ண குச்சியை மேல தள்ளுங்க.

வைப்பர் - மழை பெயிறப்போ கண்ணாடில இருக்குற தண்ணிய துடைக்க கண்ணாடி மேலே ரெண்டு வைப்பர் இருக்கும். தூசியா இருக்கும் போதும், தண்ணி விட்டு கழுவிக்கலாம். அதுக்கு, ஒரு குச்சி ஸ்ட்யரிங் கீழே இடதுபக்கம் இருக்கும். அத வச்சியே, தண்ணியும் விட்டுக்கலாம்.

பேனெட் - முன்னாடி இருக்குற பேனெட்ட திறக்குறதுக்கு, டாஷ்போர்ட்ல வலது பக்கம் கதவு கிட்ட இழுக்குற மாதிரி ஒண்ணு இருக்குது. இன்ஜின்ல எதாச்சும் பார்க்கணும்னா, இத வச்சி பேனெட்ட திறந்து பார்க்கலாம்.

தவிர பேட்டரி, பெட்ரோல், ஹேன்ட் பிரேக் இதோட நிலவரங்களை காட்ட டாஷ்போர்டுல நிறைய ரெட் லைட் ஸாரி, சிவப்பு சிறு ஒளி அமைப்புகள் இருக்குது.

கிட்டத்தட்ட எல்லா ஐட்டங்களையும் பத்தி தெரிஞ்ச்சிக்கிட்டாதால பிராக்டிஸ் தான் தேவை.

இன்னைக்கு எங்கயும் ஆப் ஆகலை.

இன்னைக்கு ஓட்டிக்கிட்டே நிறைய பேசினோம். கத்துகொடுக்குற பையனுக்கு இருபத்தியொரு வயசுதான் ஆகுது. ஸ்கூல்ல பெயில் ஆகிட்டான். இப்ப, பாஸ் பண்ணி காலேஜ்ல கம்ப்யூட்டர் கத்துக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான். ஹார்ட்வேர் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கான். இங்கிலிஷ்ல பேச மட்டும் கொஞ்சம் தயக்கமா இருக்கு போல. அதுலாம் பெரிய விஷயம் இல்லன்னு சொன்னேன்.(ஆமா... இவரு பெரிய...).

ரெண்டு மூணு டைம் யூ டர்ன் அடிச்சி பிராக்டிஸ் பண்ணினேன்.

முடிச்சிட்டு கிளம்பும் போது, முன்னாடி பேனட்டை திறந்து எல்லாத்தையும் பத்தி சொன்னான், நம்மாளு. இன்ஜின், ஸ்பார்க் பிளக், ரேடியேட்டர், ஃபேன், கியர் பாக்ஸ்ன்னு எல்லாத்தையும் காட்டினான்.

”ஒரு நாளைக்கு எத்தனை பேரு கார் ட்ரேயினிங் வாராங்க?”

“இப்ப மூணு பேருதான் வாராங்க. முன்ன பதினைஞ்சு பேரு கூட வந்து இருக்காங்க.”

“ஓ”

“இப்ப தான் ரொம்ப சோம்பேறி ஆகிட்டேன். முன்ன, நாலு மணிக்கே எந்திரிச்சு வேலைய ஆரம்பிச்சுடுவேன். அப்ப, சம்பளம் கூட வாங்கினத்தில்லை. இப்ப ஆறு மணி தான்.”

ஆறு மணிக்கு எந்திரிக்குற இவனே சோம்பேறினா, என்னை எல்லாம் என்னன்னு சொல்லுறது?ன்னு நினைச்சிக்கிட்டேன்.

சாதனையாளர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, எல்லோருமே அதிகாலையில எந்திரிக்கறவுங்கன்னு படிச்சி இருக்கேன். நான் இன்னைக்கு காலையில பார்த்தவுங்க எல்லோருமே ரொம்ப கஷ்டபட்டுட்டுதான் இருந்தாங்க. இன்னும் எவ்ளோ நாளுல சாதனை பண்ண போறாங்களோ?

(தொடரும்)

2 comments:

DHANS said...

ஹாரன் - //.இரண்டு கையாலையும் அடிக்க வசதியா ரெண்டு இருக்கும். எப்ப வேணா அடிச்சிகோங்க//

எப்பவுமே அடிக்க கூடாது மிக மிக தேவையான பட்சத்தில் மட்டுமே அடிக்க வேண்டும், முன்னாள் இருப்பவர் உங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் அடிக்கலாம். சில நாடுகளில் தேவை இல்லாமல் ஹார்ன் அடித்தால் குற்றஞ், ஆனால் நமது நாட்டில் ஹார்ன் அடிக்கவில்லை என்றால் எவனும் நகர மாட்டான்.


நான் இன்னைக்கு காலையில பார்த்தவுங்க எல்லோருமே ரொம்ப கஷ்டபட்டுட்டுதான் இருந்தாங்க. இன்னும் எவ்ளோ நாளுல சாதனை பண்ண போறாங்களோ//

கண்டிப்பாக மிக விரைவில் அவரும் சாதனை பண்ணுவார், முடிந்தவரை அவருக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் தேவைப்படும்போது.

வண்டியை கிளம்பும்போது சென்ட்ரல் லாக் இருக்கும் வண்டியாயின் உடனே எல்லா கதவுகளையும் லாக் செய்து விடுங்கள், இதன்மூலம் கதவுகள் சரியாக சாத்தப்பட்டு இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ளலாம், சரியாக சாத்தப்பட வில்லை என்றால் லாக் ஆகாது. இந்திய கார்களில் இது எளிதாக ஒலி அமைப்பில் சமிங்கை செய்யும் வசதி உள்ளது.

நெடுந்தூரம் போகையில் வேகத்தை என்பது முதல் நூறு வரை கட்டுப்படுத்தினால் அதிக எரிபொருளை சேமிக்கலாம்

சரவணகுமரன் said...

//ஆனால் நமது நாட்டில் ஹார்ன் அடிக்கவில்லை என்றால் எவனும் நகர மாட்டான்.//

:-)

//முடிந்தவரை அவருக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் தேவைப்படும்போது//

கண்டிப்பா...

தொடர் டிப்ஸ்க்கு நன்றி, DHANS