Sunday, December 28, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 7

"இன்னைக்கி எங்க சார் போலாம்?”

“நீயே சொல்லு. நான் நல்லா திருப்பி திருப்பி ஓட்டணும்ன்னு நினைக்கிறேன்.”

“ஓகே. கிளம்புங்க”

“எங்க?”

“அந்த பக்கம் ஒரு லே-அவுட் இருக்கு. அங்க போலாம்.”

அது ஒரு புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் லே-அவுட். சின்ன சின்னதாக நிறைய சாலைகள். வீடுகள் குறைச்சல்.லெப்ட்-ரைட்ன்னு ஸ்டியரிங்க ஒடிச்சி ஒடிச்சி ஓட்டுனேன். முக்கியமா தெரிஞ்சிக்கிட்டது, ஒரு திருப்பத்தில் திரும்பிய உடன், வீலை உடனே சரி செய்திட வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஆபத்து நேரிடலாமாம். ரொம்ப வேண்டி கேட்டு கொண்டான்.

பின்னாடி ரிவர்ஸ் எடுக்கும்போது திரும்பி பின் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். சைட் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். ரிவர்ஸ் பண்ணதுக்கப்புறம் மறக்காம, கியரை மாத்திடுங்க. நான் சில நேரங்களில் மறந்திட்டேன்.

கார்ல உள்ள நவீன தொலைநுட்பங்கள் பத்தி பேசினோம். அவன் ஒரு மந்திரி கார் பத்தி சொன்னான். மந்திரியின் செலவுகள் பத்தி சொன்னான். பிறகு, அவன் பண்ணும் செலவுகள் பத்தி சொன்னான்.

“எங்க அப்பா நான் ஸ்கூல்ல படிக்கும்போது அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுப்பாரு. நான் நல்லா செலவு பண்ணுவேன். என்ன, நல்லா சாப்பிடுவேன். வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல.”

“ம்ம்ம்”

“எங்க அப்பா நல்லா படிக்கல. பசங்களாவது நல்லா படிக்கணும்ன்னு நினைச்சாரு. எங்க அண்ணன் பத்து வரைத்தான் படிச்சான். என்னை ரொம்ப நம்பினாரு. நானும் சரியா படிக்கலை. எனக்கு ஒண்ணும் இல்லை சார். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஏதாவது ஒரு வேல பார்க்கணும். சம்பளம் ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு பத்து பதினைஞ்சி போதும்.”

இப்பவே அவ்வளவு சம்பாதிப்பதாக சொல்லியிருந்தான். பார்த்தேன் அவனை.

“ஒரு நாளு எங்க அப்பாவை ஆபிஸ் கூப்பிட்டுட்டு போயி சாப்பாடு வாங்கி கொடுக்கணும். அது போதும் சார்.”

அவுங்க வீட்டுல வசதியாத்தான் இருக்காங்க. என்ன, குடும்பத்துல படிச்சி யாரும் பெருசா ஆகலைன்னு ஒரு வருத்தம். அவன் அண்ணன் பையனை ஸ்கூல்ல சேர்க்கும்போது பெற்றோர்கள் படிச்சி இருக்கணும்ன்னு சொல்லி இருக்காங்க. அப்ப இருந்து, அவனுக்கு அதுக்காகவாவது படிச்சிருக்கணும்ன்னு ஒரு எண்ணம்.

“ஒரு பொண்ணு பார்த்தாங்க சார், எனக்கு”

“ஓ! அப்படியா? என்ன ஆச்சு?”

“அது படிச்ச பொண்ணு. அதுக்கு பையன் பார்க்க எங்க அப்பாக்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்புறம் அவுங்களே உங்க பையன் இருக்கானே?. அவனுக்கே பண்ணிடுவோம்ன்னு சொல்லியிருக்காங்க. பொண்ணு பேங்க்ல வேலை பார்க்குது. என்னோட ரெண்டு வயது அதிகம்”

ஆச்சரியத்துடன், “வயசு பரவாயில்லையா?”

“எங்க அப்பாவுக்கு ஒகே. அந்த பொண்ணு வீட்டுல எக்கச்சக்கமா நிலம் இருக்கு. ஐம்பது லட்சம் தேறும். கல்யாணத்துக்கப்புறம் எனக்கு ஏதாச்சும் பிஸினஸ் செஞ்சு வைப்பாங்கன்னு எங்க அப்பா நினைக்குறாரு.

”அப்புறம்?”

“எங்க அம்மாவுக்கு பிடிக்கலை. அவ்ளோத்தான்.”

என் டிரைவிங்ல உள்ள குறைகள பத்தி கேட்டேன். சொன்னான்.

1) ஊருக்குள்ள போகும்போது, ஹாரன் அடிக்கவே மாட்டேங்கறேனாம்.
2) திரும்பும்போது, உடனே வீலை நேராக்க மாட்டேங்கறேனாம்.
3) பிரேக் போடும்போது பின்னாடி என்ன வருதுன்னு பார்க்க மாட்டேங்கறேனாம்.

முத பிரச்சினை, ஜுஜுபி. வேணும்ன்னுதான் அடிக்கலை. எதுக்கு ஓவரா இதெல்லாம்ன்னு விட்டுட்டேன். சரி பண்ணிடலாம். ரெண்டாவது, கூடிய சீக்கிரம் சரி பண்ணிடலாம். இன்னிக்கே, இந்த பிராப்ளம் ஓரளவுக்கு இல்ல. மூணாவதுதான், எனக்கு சரியா பிடிப்படல. சடன் பிரேக், முன்னாடி ஏதாச்சும் வேகமா வருறதாலத்தான் போடுறோம். அந்த நேரம் எப்படி பின்னாடி பார்க்குறது? ஏன், இதையே அடிக்கடி சொல்றான்?

அப்படி அத பத்தியே பேசினேன். அவன் ஒருமுறை எங்கோ குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, அவன் சடன் பிரேக் போடும்போது பின்னாடி வந்த லாரி இடிச்சிடுச்சாம். இடுச்சதுல, பின் கதவு ஜாம் ஆகிடுச்சாம். கிட்டத்தட்ட இருபதாயிரம் செலவாம்.

ஓ! அதனாலதானா?

(தொடரும்)

7 comments:

இராகவன் நைஜிரியா said...

// 1) ஊருக்குள்ள போகும்போது, ஹாரன் அடிக்கவே மாட்டேங்கறேனாம். //

பல நாடுகளில் ஹாரன் அடிப்பதே குற்றமாகும். எதாவது ப்ராப்ளம் என்றால்தான் ஹாரன் அடிக்க வேண்டும். நம்ம ஊரில் தான் இஷ்டத்திற்கு ஹாரன் அடிப்பதெல்லாம்.

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி இராகவன்.

நம்ம ஊருல டிசைன் டிசைனா இல்ல அடிக்கிறாங்க... :-)

முரளிகண்ணன் said...

முதல் தவறு? நானும் செய்வதுண்டு

சரவணகுமரன் said...

வாங்க முரளிகண்ணன்

DHANS said...

வாகனம் ஓட்டும்போது அடிக்கடி பின்னால் என்ன வாகனம் வருது எந்த வேகத்தில் வருது என்று பார்த்துக்கொண்டால் பிரேக் பிடிக்கும்போது கவனித்து பிடிக்க வசதியாய் இருக்கும்.

அப்படி பார்க்கும்போது திடீரென்று பிரேக் பிடித்தால் அவர்களுக்கு போதிய இடைவெளி இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளலாம்.

ஹார்ன் அடிப்பது முடிந்தவரையில் குறைக்கவும், ஆனால் நம்ம ஊரில் இது ரொம்ப கஷ்டம்.

திரும்பிய வுடன் வீளை சரி செய்வது எளிது, நீங்கள் திரும்பும்போது எந்த லைனில் திரும்புகிறீர்களோ அந்த லைனிலேயே செல்ல செல்ல வேண்டும் அப்படி நினைத்துக்கொண்டால் தானாகவே நீங்க வீலை திருப்பி விடுவீர்கள்

சரவணகுமரன் said...

DHANS, இதெல்லாம் பழக்கத்தில தான் வரும். இல்லையா?

DHANS said...

கண்டிப்பாக பழக்கத்தில் தான் வரும் அனால் துவக்கும்போதே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் பின்னால் கண்டிப்பாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கும் பழக்கம் வராது .

மற்றவருக்கு எந்த பதிப்பும் வராத வகையில் ஓடவேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினாலே எல்லாமும் பழக்கத்தில் வந்துவிடும்.

மேலும் ஒரு தகவல், ரவுண்டானாவில் செல்லும்போது வலதுபுறம் வரும் வாகனங்களுக்கு முதலில் வழிவிட்டு பின்னர் நான் செல்லவேண்டும் இதுதான் விதி, எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.