Wednesday, August 27, 2008

கூகிள் இனி என்ன செய்யும்?

இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம். இனி?

--------------------------

"டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?"

"நீ எங்க வச்சியோ?"

மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க,
- உன் சட்டை பை (உன்னோடது)
- உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது)
- ஊரில் உள்ள உன் பெட்டியில்
என்று இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும்.


--------------------------

உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது.

கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீங்க. உடனே, கூகிள் மேப்ஸ் பக்கத்தில உலக வரைப்படத்துக்கு மேல புள்ளி புள்ளியா காட்டுது. எல்லாம், அதே பேருல உள்ள மக்கள்ஸ்.

நீங்க, ஒரு புள்ளிய கிளிக் பண்ணுணீங்கன்னா, அவரு இருக்குற எடத்து மேல போய் நிக்கும். நீங்க சந்தா செலுத்தி உறுப்பினர் ஆயிருந்தா, சேட்டிலைட் கூட கனெக்ட் பண்ணி, இடத்த ஆன்லைன்'ல காட்டும்.

உங்க ஃபிரண்ட் அவரோட அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்'ல "Share me" செலக்ட் பண்ணி இருந்தாருன்னா, அவரு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு அப்படியே பார்க்கலாம். மனச திட படுத்திட்டு பாருங்க. அவரு எந்த நிலையில வேணும்னாலும் இருப்பாரு.

--------------------------

உங்க ஃபிரண்ட கண்டு பிடிச்சிடிங்க. அடுத்தது அவன்/அவள் எப்படி இருக்காங்கன்னு தெரியனும். "Advance People Search" போங்க. பேர கொடுங்க. நம்ம மெயில், ப்லாக், நாம காப்பி பண்ணுன code, நம்ம நண்பர்கள், நம்ம புகைப்படங்கள்'ன்னு நம்ம பத்தின எக்கச்சக்கமான விவரங்கள் கூகிள் சர்வர்'ல இருக்கும். அத அப்படியே புரட்டி போட்டு, ஒரு அனலிசிஸ் பண்ணி,

- இவர் நேத்து இந்த படத்த இந்த தியேட்டர்ல பார்த்தார்.
- இவர் இங்கே சரக்கடித்தார்.
- இப்படி இருந்த இவர் ஆகிட்டார் (புகைப்பட சான்றுகளுடன்).
- இவர் இன்று காலை காப்பி பண்ணுன code, இரண்டு வருடம் இவர் எழுதியதுதான்.
- கொடுத்த கடனை திருப்பி கேட்டு நண்பர் அனுப்பிய மெயிலை, அப்படியே டெலிட் செய்து விட்டு, மெயிலில் வந்த "அந்த" மருந்து விளம்பரத்தை கண்டு, அதை ஆர்டர் செய்தார்.
- இவர் இந்த இந்த கம்பெனி'யில் இருந்து இந்திந்த தேதிகளில் துரத்தியடிக்கப்பட்டார்.

இப்படி அஞ்சாறு பக்கத்துக்கு தகவல் கொடுக்கும். இந்திய கண்ட மக்களுக்காக, ஜாதகமும் ஜெனரேட் செய்து கொடுக்கப்படும்.

வீட்டில் ரேசன் கடை கியுவில் நிற்க மாட்டேன் என்று சண்டை போட்டு விட்டு, யாருக்கு தெரியாமல் பலான பட தியேட்டர் கியுவில் நின்றதை, யூடூபில் கண்டு களிக்கலாம்.

--------------------------

திரைப்பட பிரியர்களுக்காக, Search Movies ஆப்சனில் ஒரு கதையையோ, வசனத்தையோ கொடுத்தால், அது சம்பந்தப்பட்ட படங்கள் வரும். படங்களையும் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு, கடைசியா வந்த ஒரு ரஜினி படத்து கதைய கொஞ்சம் கொடுத்தா, அவர் நடிச்ச இருபது முப்பது படங்களும், நாலஞ்சு மலையாள படங்களும், இரண்டு மூணு கன்னட படங்களும் வரும்.

ஏதாவது ஒரு கமல் பட கதைய கொடுத்தா, அதோட ஒரிஜினல் ஆங்கில, ஜெர்மனிய படங்களோட தொகுப்புகள் வரும்.

அப்புறம், டவுசர்'ன்னு கொடுத்தா ராமராஜன் படங்களும், பாகிஸ்தான் தீவிரவாதின்னு கொடுத்தா விஜயகாந்த் படங்களும், தமிழ் வார்த்தைகளை தப்பு தப்பா இழுத்து கொடுத்தா அஜித் படங்களும், ரன்னுன்னு கொடுத்தா மாதவன் படமும், நாட் ரன்னுன்னு கொடுத்தா பிரசாந்த், ஷாம், ஸ்ரீகாந்த் படங்களும், காமெடி ஆக்க்ஷன் படம்னு கொடுத்தா ஜே.கே.ரீத்திஸ் படங்களும் வரும்.

39 comments:

சதுக்க பூதம் said...

Google's next plan-Free broadband to all
http://www.google.com/tisp/

சரவணகுமரன் said...

ஹா... ஹா... ஹா...

சதுக்க பூதம், அது ஒரு நல்ல காமெடி... நானும் பார்த்தேன்....

கிரி said...

இவையெல்லாம் நடைபெற வாய்ப்பு இருக்கு :-))))

சரவணகுமரன் said...

ஆமாம் கிரி... பண்ணினாலும் பண்ணுவார்கள்...

கூடுதுறை said...

இதுவும் நல்லத்தான் இருக்கு...

சரவணகுமரன் said...

நன்றி கூடுதுறை...

Tech Shankar said...Semma Comedy Boss.... Enjoyed very much..

Eppadi Ippadiyellam Yosiccheenga? Gr8


சரவணகுமரன் said...

நன்றி தமிழ்நெஞ்சம்...

மங்களூர் சிவா said...

:))

என்னைய யாரும் அப்படி தேடீறாதீங்கய்யா கண்ணு அவிஞ்சி போயிரும்

:)))))))))))))))

Thamira said...

நீங்க கொடுத்த லிஸ்ட் எல்லாமே சத்தியமாகும் போலத்தான் தெரிகிறது.

சரவணகுமரன் said...

//என்னைய யாரும் அப்படி தேடீறாதீங்கய்யா கண்ணு அவிஞ்சி போயிரும்
//

ஹா ஹா ஹா

சரவணகுமரன் said...

ஆமாம் தாமிரா... வருகைக்கு நன்றி...

கோவி.கண்ணன் said...

//திரைப்பட பிரியர்களுக்காக, Search Movies ஆப்சனில் ஒரு கதையையோ, வசனத்தையோ கொடுத்தால், அது சம்பந்தப்பட்ட படங்கள் வரும். படங்களையும் பார்க்கலாம்.......//
:)

நல்ல கற்பனை !

சரவணகுமரன் said...

நன்றி கோவி.கண்ணன்... :-)

Thamira said...

//நீங்க கொடுத்த லிஸ்ட் எல்லாமே சத்தியமாகும் போலத்தான் தெரிகிறது.//

சை.! அது 'சத்தியமாகும்' இல்லைங்க, "சாத்தியமாகும்"!

Anonymous said...

:) Nalla karpanai

-Arthi

சரவணகுமரன் said...

ஓ! நானும் கவனிக்கலை... ஆனா, புரிஞ்சிது...

Anonymous said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ...!! :)

Anonymous said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ ??!! :)

செல்வ கருப்பையா said...

ஹா ஹா ஹா... ரொம்ப நல்லாருக்கு...

சரவணகுமரன் said...

Thanks arthi... :-)

சரவணகுமரன் said...

அனானி, அவுங்க அவ்ளோ பெரிய கம்பெனி ஆரம்பிச்சு எப்படியெல்லாமோ யோசிக்கும் போது, நாம இவ்ளோவாவது யோசிக்க வேணாம்? :-)

சரவணகுமரன் said...

நன்றி செல்வ கருப்பையா...

முரளிகண்ணன் said...

\\வீட்டில் ரேசன் கடை கியுவில் நிற்க மாட்டேன் என்று சண்டை போட்டு விட்டு, யாருக்கு தெரியாமல் பலான பட தியேட்டர் கியுவில் நின்றதை, யூடூபில் கண்டு களிக்கலாம்\

\\உதாரணத்துக்கு, கடைசியா வந்த ஒரு ரஜினி படத்து கதைய கொஞ்சம் கொடுத்தா, அவர் நடிச்ச இருபது முப்பது படங்களும், நாலஞ்சு மலையாள படங்களும், இரண்டு மூணு கன்னட படங்களும் வரும்.

ஏதாவது ஒரு கமல் பட கதைய கொடுத்தா, அதோட ஒரிஜினல் ஆங்கில, ஜெர்மனிய படங்களோட தொகுப்புகள் வரும்.
\

தாளிச்சுட்டீங்க போங்க

மே. இசக்கிமுத்து said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது!! தனியா உட்கார்ந்து யோசிப்பீங்களோ?? :))

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்...

சரவணகுமரன் said...

நான் என்ன வைரமுத்துவா? தேனி தோட்டத்துல உக்கார்ந்து தனியா பாட்டு எழுதுற மாதிரி... :-)

ISR Selvakumar said...

"கூகிள் இனி என்ன செய்யும்?"
என்று கேட்டால்
"கூகிள் இனி என்ன செய்யும்?"

சரவணகுமரன் said...

!!!???##%%@@!!!???

நட்புடன் ஜமால் said...

\\சதுக்க பூதம் சொன்னது…

Google's next plan-Free broadband to all
http://www.google.com/tisp/
\\

போய் பார்க்காமளே இது ஒரு காமெடின்னு தெரியுது.

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி அதிரை ஜமால்

ஆட்காட்டி said...

என்னுடைய நண்பர் ஒருவர் தனது நண்பரைத் தேடி இருக்கார். கூகிளில வந்தது அவர் கடத்தப் பட்டுக் கொலை என்று....

சரவணகுமரன் said...

!%!!&?

Bee'morgan said...

மன்னிக்கவும் சரவணகுமார்.. இது உங்களின் பதிவென்று எனக்குத் தெரியாது.. அந்த போலிப்பதிவின் வழியாகத்தான் இங்கு வந்தேன்..
இருந்தாலும் உங்களின் உண்மையான பதிவிற்காக நான் அங்கு இட்ட பின்னூட்டம் இங்கே..
- - - - -
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே..! :-) பயங்கரமான sci-fi நையாண்டி.. கடைசி திரைப்படத் தேடல் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது.. :-)
- - - - -
இது போன்ற பதிவுக் காப்பிகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.. ஆனாலும் ஒன்னு.. சந்தோசப் படுங்க சரவணக்குமார்.. உங்கள் பதிவைப் போட்டால் எல்லாரும் வந்து படிப்பாங்கனு காப்பியடித்தவரே உங்கள் எழுத்துக்கு செர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.. :-)

சரவணகுமரன் said...

//மன்னிக்கவும் சரவணகுமார்//

பரவாயில்லை Bee'morgan. நீங்க என்ன பண்ணுவீங்க?

//ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே.//

நன்றி நண்பரே...

//உங்கள் பதிவைப் போட்டால் எல்லாரும் வந்து படிப்பாங்கனு காப்பியடித்தவரே உங்கள் எழுத்துக்கு செர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்//

அப்படி நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்

RAMASUBRAMANIA SHARMA said...

Nalla Comedy...Who Knows, it may come into reality in the due course of time because of the advance technologies of internet services...we need to be more careful...But still, I have enjoyed reading this article...

சரவணகுமரன் said...

நன்றி RAMASUBRAMANIA SHARMA

திவ்யா செந்தமிழ் செல்வன் said...

romba arumai...

சரவணகுமரன் said...

நன்றி திவ்யா