Tuesday, September 2, 2008

இண்டர்வியூ

பிரவுசிங் செண்டருக்கு வந்திருந்த நோக்கத்தையே மறந்திருந்தான் சுந்தர். இண்டர்வியூ மெயில் வந்திருந்தால் பார்க்கலாம் என்று வந்தவன், வேறு எந்த கருமத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவாறு நினைவு வந்து பார்க்கும்போது மெயில் வந்திருந்தது.

சுந்தருக்கு இது இருபத்தியெட்டாவது இன்டர்வியூ. கஷ்டப்பட்டு ஆரம்பநிலை பரீட்சைகளில் தேர்வானால், நேர்முக தேர்வில் நொங்கெடுக்கிறார்கள். நேர்முக தேர்வுக்காக, இரவெல்லாம் கண் விழித்து மிட்நைட் மசாலா முடிந்த பின்னும் படித்துவிட்டு சென்றால், முதல் தேர்விலேயே “ரிசல்டை அப்பாலிக்காக சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். அது என்னமோ தெரியவில்லை. நன்றாக எழுதியவர்களுக்கு, உடனே திருத்தி ரிசல்ட் சொல்லிவிடுகிறார்கள்.

சுந்தர் இருப்பது திருநெல்வேலி. அவ்வப்போது இண்டர்வியூக்காக மட்டும் சென்னை, பெங்களுர் சென்று வருவான். வீட்டுப்பக்கம் இருந்த குட்டிசுவரை பிரிய மனமில்லை.

“என்னடா! அடுத்த வாரம் சென்னை போறியாமே?” கேட்டான் குட்டி சுவரின் பொது குழு உறுப்பினரான அமீர்.

“ஆமாம்டா… ஒரு கம்பெனியில இருந்து கூப்பிட்டு இருக்காங்க… கம்பெனி சின்னதுதான்… பார்ப்போம், கிடைக்குதான்னு”

“நல்லா பண்ணு” மொபைல் கம்பெனியில் வேலை பார்க்குற மமதை.

“சரிடா… எனக்கு உன் ஷு வேணும். என்னுது காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல வாங்கியது… ரொம்ப பழசா இருக்கு”

ஏண்டா… மும்பை டூர் போனதையும் புது ஷு வாங்குனதையும் இவங்கிட்ட சொன்னமோன்னு நினைச்சி இருப்பான்.

“ம்ம்ம்… தாரேன். இப்ப கம்பெனி வேலையா பைக்ல தனியா செங்கோட்டை வரை போறேன். நீயும் வா.”

வெயிலுல அவன் கூட பைக்குல போறத நினைச்சா கடுப்பாக வந்தது. ஒரு நாள் முழுக்க வேஸ்ட்டா போகும். வேறு வழியில்லாமல் சரியென்று வண்டியில் ஏறினான். வண்டி சீட் தோசைக்கல் போலிருந்தது.

----------------------------

ந்த ஷுவை கால்ல போட்டுட்டு போலாமா? இல்ல பேக்ல வச்சு கொண்டு போலாமா? என்று யோசிச்சிட்டு இருக்கும்போது, “எதுலடா ஊருக்கு போற?” என்று அம்மா கேட்டாள்.

“டிரெயின்ம்மா”

“டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டியா?”

“அம்மா, இப்பெல்லாம் ADMKல எலெக்சன் டிக்கெட் கூட கிடைக்கும். ஆனா டிரெயின்ல டிக்கெட் கிடைக்குறதில்ல. பொங்கலுக்கு போறதுக்கு தீபாவளிக்கே புக் பண்ணனும். தீபாவளிக்கு போறதுக்கு சுதந்திர தினப்ப புக் பண்ணனும்.”

“சரி சரி… உனக்கு பிடிச்ச கொத்தமல்லி துவையல் வச்சிருக்கேன். நைட் சாப்பிட இட்லி எடுத்துட்டு போறியா?”

பிடிச்சதுதான். ஆனா அதை எடுத்துட்டு போனா, இந்த ஷுவை பேக்குல வைக்க முடியாது. இட்லியா? ஷுவா?

போவது இண்டர்வியூக்கென்பதால் சான்றிதழுடன் ஷு உள்ளே போனது.

----------------------------

சே சே… இனி ரிசர்வ் பண்ணாம டிரெயின்ல போக கூடாதுப்பா… டாய்லட் போக கூட கால் கிட்ட உக்கார்ந்தவன் கிட்ட பர்மிஷன் வாங்க வேண்டியிருக்கு. டாய்லட் போறவனுங்க, வந்தோமா, போனோமா, போனோமான்னு இல்லாம்ம, அவனுங்க ஒவிய திறமைய இங்கத்தான் காட்டுவானுங்க. பன்னாடைக… லாலுக்கிட்ட சொல்லி இதுக்கு எதாச்சும் பண்ண சொல்லணும்.

கால்கிட்ட உக்கார்ந்தவன், கீழேயே படுத்திருந்தான். நல்லவன்டா நீ. என் எடத்துல நீயும் உக்காராம, வேற எவனையும் உக்கார விடாம பார்த்துக்கிட்டியேடா!

அது என்னது அவன் தலைக்கு கீழே? தலையணை மாதிரி. டேய்! எந்திரிடா… அது என் பேக்குடா…

“ஹலோ… எந்திரிங்க… என் பேக்”

“அப்படிங்களா? சும்மாதானே இருந்திச்சின்னு எடுத்தேன்”

“இல்லங்க… நான் கையிலேயே வச்சிருக்கேன்”

“அப்படி என்ன தம்பி வச்சிருக்கே?”

மும்பை ஷுன்னு சொல்றதா? என்ன நினைப்பான்?

“என் சர்டிபிகேட்ஸ்’ண்ணா”

“ஓ! அப்படியா? இந்தா”

அப்பாடி!!!

----------------------------

சும்மாவா சொன்னாரு தளபதி, சிங்கார சென்னையாக்குவேன்னு. எத்தனை பாலம்? எத்தாம் பெரிய பாலம்?ன்னு பச்சைக்கலர் பாலங்களைப் பார்த்துக்கொண்டே நடந்ததில், கீழே இருந்த பச்சைக்கலர் ஐட்டத்தை கவனிக்காமல், சதக்கென்று மிதித்தான்.

என்ன இது? இந்த இடத்துல ரோடு ரொம்ப மென்மையா இருக்குன்னு கீழே பார்த்தா… சாணி.

சென்னை இன்னும் சிங்காரமாகலைன்னு நினைச்சிக்கிட்டே, சோடா வாங்கி ஷுவை கழுவினான்.

----------------------------

ரு வழியா கம்பெனியை கண்டுப்பிடிச்சாச்சு. மாடிப்படியேறி, கதவை திறக்கும்போது, பக்கத்திலிருந்த செக்யூரிட்டி கையை அந்த பக்கம் காட்டினான்.

அலுவலக கதவருகே ஒரு பலகை மாட்டப்பட்டிருந்தது.

“காலணிகளை இங்கே கழட்டி விட்டு செல்லவும்”

16 comments:

இராம்/Raam said...

குமுதம் ஒரு பக்க கதை மாதிரி இருக்கு........ :))

சரவணகுமரன் said...

நன்றி இராம்...

அதை படித்து வந்ததால் அப்படி இருக்கலாம் :-)

யாத்ரீகன் said...

:-) nice

சரவணகுமரன் said...

நன்றி யாத்ரீகன்...

Anonymous said...

யம்மா...
உங்களுக்கு நகைச்சுவை நடை ப்ப்பிச்சுபிட்டு வருதுங்க.
ஒவ்வொரு பராலயும் ரசிச்சு ரசிச்சு சிரிச்சேன்.
கலக்குங்க

சரவணகுமரன் said...

நன்றி subash

முரளிகண்ணன் said...

final twist super. o henry padikkira maathiri irunthathu

Anonymous said...

கலக்கல் !!!!!!!

கார்க்கிபவா said...

:))))

சரவணகுமரன் said...

நன்றி செந்தழல் ரவி

சரவணகுமரன் said...

நன்றி கார்க்கி

Unknown said...

எல்லா கதையும் நல்லா இருக்கு

இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

சரவணகுமரன் said...

நன்றி தமிழ் குடும்பம்.

Anonymous said...

I can see the pain of an unemployed youth in this story :-(

Too sad..

சரவணகுமரன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனானி...

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமரன்

நச்சுன்னு முடிச்சிருக்கீங்க - சூப்பர் முடிவு

ஏதோ கருமத்தப் பாத்துக்கிட்டிருக்கும் போது நெனப்பு வந்து மெயில் பாக்கறது

குட்டிச் சுவரின் பொதுக்குழு உறுப்பினர்

வேல பாக்கற மமதை

பாம்பே ஷூ - ஏண்டா சொன்னோம்

தோசைக்கல் சீட்டு

இட்லியா ஷூவா

லாலு கிட்ட கம்ப்ளெயிண்ட்

அப்பப்பா - சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்கோ

நல்ல கதை - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா