Sunday, September 7, 2008

சாவுடன் ஒரு பந்தயம்

“அதுக தூங்கின பிறகு தான் நாம உள்ளே போக முடியும்”

“சும்மா போயித்தான் பார்ப்போமே?”

“தோழரே, பொறுத்தால்தான் பூமியை ஆள முடியும். கொஞ்சம் இருட்டடும். வெளியே போகலாம். இல்லாவிட்டால் நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்.”

இதை கேட்டதும் தான் கொஞ்சம் அடங்கினான். இடத்துக்கு புதுசுதானே. ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள். நாமத்தான் எல்லாம் சொல்லி கொடுக்கணும்.

“நம்ம வாழ்க்கைத்தரம் மோசமாயிட்டே போறத பார்த்தா, வருத்தமா இருக்கு.”

“ம்ம்ம்… என்ன பண்றது?”

“எல்லாம் இந்த தம்மாம்துண்டு வயித்துக்காக தான். இப்பலாம், நமக்கு கிடைக்குற நேரம் கொஞ்சம் தான். அதுக்குள்ள எத்தனை வேலைத்தான் செய்யிறது?”

“காரணம், விஞ்ஞான வளர்ச்சித்தான். இது அதுங்களுக்கு வேலை செய்யிற நேரத்த குறைக்கும்ன்னு பார்த்தா, நாம வாழுறதுக்கான நேரத்த குறைச்சிடுச்சி.”

கதவடைக்கும் சத்தம் கேட்குது. வந்துகொண்டிருந்த வெளிச்சத்தின் மிச்சமும், முழுவதுமாக போனது.

“சரி, வா… போகலாம்”

பைப்பை பிடித்து ஏறினோம்.

“ஆன்டேனாவை நல்லா டியூன் பண்ணிக்கோ. ஏதும் பிரச்சினைன்னா நம்ம உயிரைக் காப்பாத்த போறது அதுத்தான்”

“புரியுது”

நுழையும் இடத்திலேயே எதிர்ப்பார்த்து வந்தது இருந்தது.

“இது வேண்டாம். அந்த பக்கம் இன்னும் பிரெஷா கிடைக்கும்”

ரொம்ப காத்திருந்து ஏக்கத்துடன் வந்தவனிடம், இதை சொன்னதும், ஏற்கனவே சிறியதாக இருக்கும் அவன் முகம் ஏமாற்றத்தில் சிறுத்தது.

“எதுக்கு ரிஸ்க்?”

“பரவாயில்லை” என்று நான் சொல்லி முடிக்கவும், அறை முழுவதும் வெளிச்சம் பரவவும் சரியாக இருந்தது.

சுதாரித்து, “திரும்பி ஓடு” என்று நான் கத்த, இருவரும் ஓட ஆரம்பித்தோம்.

அதுகளில் உள்ள சிறுசு, எங்களை பார்த்து விட்டது.

“ம்மா” என்று பீதியில் பீறிட, எங்கள் முழு வேகத்தையும் கொடுத்து ஓட்டம் எடுத்தோம்.

இப்ப உயிர் பயம் வந்துடுச்சி. இன்றுதான் எங்களுக்கு கடைசி நாளா? நினனக்கும் போதே மனம் கலக்கமடைந்தது.

நாங்கள் ஏறி வந்த பைப்ப நெருங்கிட்டோம்.

“சீக்கிரம் எறங்கு”

இருவரும் சல்லென்று குதித்தோம்.

“தப்பிச்சிட்டோம்”

அமைதியாக இருந்தேன். ஆன்டேனாவை டியூன் செய்தேன். ஏதோ தப்பா நடக்க போகிறது என்றது உள் மனம்.

“இல்ல. நாம சாக போறோம்.”

“என்ன?”

“சுவாசத்தில விஷவாயு கலந்திட்டு இருக்குறது உனக்கு தெரியல?”

காற்றில் கலந்த விஷம், எங்கள் உயிரிலும் கலக்க, உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிகிறது.

“என்ன அது?” வாய் குழறியப்படி அவன் கேட்க,

“HIT மாதிரி இருக்கு” என்று சொல்லும் போதே, வாஷ்பேசின் குழாய்க்குள் எங்கள் வாழ்க்கைப்பயணம் முடிந்தது.

12 comments:

rapp said...

ஆண்டெனான்னு பார்த்தவுடன் எல்லாரும் கரப்பான்பூச்சின்னு கண்டுபிடிச்சிருவாங்கல்ல(அதுவும் போன சிறுகதைய படிச்சவங்க):):):)

rapp said...

ஏன் இந்த கொலைவெறி?:):):)

சரவணகுமரன் said...

//ஆண்டெனான்னு பார்த்தவுடன் எல்லாரும் கரப்பான்பூச்சின்னு கண்டுபிடிச்சிருவாங்கல்ல(அதுவும் போன சிறுகதைய படிச்சவங்க//

ஒ! அப்படியா?

கொஞ்சம் நாள் கழிச்சி போட்டுயிருக்கலாம்... :-(

சரவணகுமரன் said...

அடுத்த முறை இதெல்லாம் கரெக்ட் பண்ணிக்கிறேன், rapp...

சரவணகுமரன் said...

//தங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.//

சரி, நெல்லை தமிழ். இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி...

Anonymous said...

அதுக்குள்ள அடுத்ததா?
இந்தமாதிரி ஸ்டைல் உங்களுக்கு ப்ப்பிபிச்ச்சிசிட்டு வருது.
கலக்குங்க!!!

சரவணகுமரன் said...

நன்றி சுபாஷ்

முரளிகண்ணன் said...

நல்ல டுவிஸ்ட். (ஆன்டெனா இல்லாம இருந்தா)

சரவணகுமரன் said...

//நல்ல டுவிஸ்ட். (ஆன்டெனா இல்லாம இருந்தா)//

முரளிகண்ணன், அத தான் rappம் சொன்னாங்க...

நான் ஸ்கூல்'ல படிச்சதெல்லாம் மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்... :-)

Tech Shankar said...

சரியான வேகமான கதை. அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

நன்றி தமிழ்நெஞ்சம்

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமரன்

ஹிட் - சூப்பர்ஹிட் - கத எல்லாமே நல்லாருக்கு - வாஷ் பேசின் தான் கதி அதுங்களுக்கு

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா