Thursday, June 17, 2010

ஹெட்லைட் மர்மம்

ஏதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, வீட்டின் முன்னால் இருந்த காரின் ஹெட்லைட்கள் எரிந்துக்கொண்டிருந்தது. இன்று காரை வெளியே எடுக்கவே இல்லையே! கார் கவர் போட்டபடி நின்று கொண்டிருந்தது.

கவரை எடுத்து காரை தட்டி பார்த்தேன். லைட் அப்படியே எரிந்துக்கொண்டிருந்தது. வேறு எந்த சத்தமும் இல்லை. வேறு எந்த விளக்கும் எரியவில்லை. ஹெட் லைட் மட்டும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருந்தது.



கார் கதவை திறந்து உள்ளே சென்றேன். ஹெட்லைட்டுக்கான திருகும் வகை பட்டன், சரியாகவே இருந்தது. ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹெட்லைட் எரிந்துக்கொண்டிருந்தது.

இன்ஜின் ஆன் செய்தேன். லைட் எரிந்துக்கொண்டிருந்தது. ஸ்டியரிங் கீழே இருக்கும் கோலை திருகி, ஹெட்லைட் பட்டனை ஆன் பொஸிசனில் வைத்தேன். அப்பவும் எரிந்தது. ஆஃப் செய்தேன். அப்பவும் எரிந்தது.

மாருதியாய நமஹ!

இன்ஜின் ஆஃப் செய்து, சாவியை எடுத்து விட்டு வெளியே வந்தாலும், லைட் என்னை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வெளிச்சத்தை முன்னால் பாய்ச்சிக்கொண்டிருந்தது.

லைட் மேல் கையை வைக்க, சூடாக இருந்தது.

இன்ஜின் ஆஃப்பாக இருக்கும் போது, இப்படி லைட் எரிந்துக்கொண்டே இருந்தால், பேட்டரி காலி ஆகும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

என்ன பண்றது? ஒரே குழப்பமா இருக்கே! கூகிள்ல தேடலாமா? இல்ல, ஒரு பதிவு போட்டு, யாருக்கிட்டவாவது கேட்போமா?!!! ச்சீய்... கஸ்டமர் கேர் கால் பண்ணுவோம்.

போன் போட்டு, விளக்கி சொல்லி, என்னன்னு கேட்டா, அவன் ஒரு நாலைஞ்சு நம்பர் சொல்லி கால் பண்ண சொன்னான். எங்க ஏரியா பக்கமிருக்கும் இன்ஜினியராம்.

ஒரு அரை மணி நேரத்தில் வந்தான். செக் செய்தான். காரணத்தை சொன்னான்.

மர்மம் விளங்கி, சிரிப்பாகவும் வந்தது. கடுப்பாகவும் இருந்தது.

சரி செய்துவிட்டு சென்றான்.

இப்ப, நீங்க சொல்லுங்க? என்னவா இருக்கும்?

.

8 comments:

சின்னப் பையன் said...

எதிரே இருந்த இன்னொரு வண்டியின் ஒளி உங்க வண்டியின் விளக்குமேல் பிரதிபலிச்சுதா? ஹிஹி.. எப்புடி....

சசிகுமார் said...

இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னோட மூளையை உபயோகபடுத்த விரும்பவில்லை. நீங்களே சொல்லிடுங்க ஹி ஹி ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ச்சின்னப் பையன் said...

எதிரே இருந்த இன்னொரு வண்டியின் ஒளி உங்க வண்டியின் விளக்குமேல் பிரதிபலிச்சுதா? ஹிஹி.. எப்புடி....
//

எப்படி சார்..என்னோட மனசை படிச்சீங்க..ஹி...ஹி

( பட்டாபட்டி..அப்படியே சமாளி....)

Mythili said...

Hello, yarange?...Moonlight marmam (harish) kandupiditha Mugilanuku Phone pannunga.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எதிரே இருந்த இன்னொரு வண்டியின் ஒளி உங்க வண்டியின் விளக்குமேல் பிரதிபலிச்சுதா? ஹிஹி.. எப்புடி....//
வழிமொழிகிறேன்

Anonymous said...

athaan soodaa irunthathunnu sollirukkareppa

கதிரவன் said...

?? நடந்தது என்னங்க குமரன் ??

சரவணகுமரன் said...

ஒகே... நானே சொல்லிருறேன்.

விடை சொன்ன பிறகு, சஸ்பென்ஸ் போயி சப்புன்னு இருக்கும். எனக்கும் அப்படி தான் இருந்தது.

ஏதோ ஒரு ஜந்து, காருக்கு கீழே வழியா ஏறி, முன்பக்கம் பேனட் கிட்ட இருக்கும் பேட்டரி ஒயர்களில் சிலதை கறிம்பியதில், ஒயர் ஷார்ட் ஆகி, லைட் தானாக எறிய தொடங்கிவிட்டது.

எலியா இருக்கும்’ன்னு சரி பண்ணியவர் சொன்னார். நான் எலியை இந்த பக்கம் பார்த்ததில்லை. குருவிகள் சிலதுகள் தான் சுற்றி வரும். சம்பவத்தின் போது கூட, ஒரு குருவி ஒண்ணும் தெரியாத அப்பாவியா பக்கத்தில் நின்னுக்கிட்டு இருந்தது. ஆனா, குருவியால் ஒயரை கடிக்க முடியுமா? என்று தெரியவில்லை.