வருஷ துவக்கத்தின் முதல் பதிவு. சம்பிராதயமான பதிவு.
அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
---
இதுவும் வழக்கம் போல் ஒரு நாள் என்றாலும், கடந்த ஒரு வருடம் எப்படி இருந்தது, என்ன சாதித்தோம் என்று நினைத்துப்பார்க்கவும், வரும் வருடம் என்ன செய்யப்போகிறோம், எப்படி செய்யப்போகிறோம் என்று திட்டமிடவும், இந்நாளை செலவு செய்யலாம்.
ஆனால் இந்த நாளில் பண செலவை இழுத்துவிட பலர் கிளம்பி வந்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு மூன்று நாட்களில், எனக்கு வந்த மெசேஜ்கள் அனைத்தும் 31ஆம் தேதி இரவு உண்ணவும், ஆடவும், தண்ணியடிக்கவும் அழைப்புவிடும்வண்ணமாக இருந்தது. இந்த ஹோட்டலில் 3500 ரூபாய், அந்த ஹோட்டலில் 5000 ரூபாய் என்று. 31ஆம் தேதி இரவு, காஸ்ட்லியான இரவாக மாறி வருகிறது.
---
ஏர்டெலில் இரண்டு நாட்கள் முன்பே சொல்லிவிட்டார்கள். 31ஆம் தேதியும், 1ஆம் தேதியும் மெசேஜ் கட்டணம் 1 ரூபாயாம். எவ்வளவு வெவரம்? எந்த எம்பிஏ மேலாண்மை நிபுணர், இப்படி மொள்ளமாறி ஐடியா கொடுக்கிறாரோ?
---
ஒரு கூட்டம் இரவு ஹோட்டல்களில் கூடுகிறது என்றால், இன்னொரு கூட்டம் காலை கோவில்களில் கூடுகிறது. நானும் இந்த வகைதான். ஒருமுறை நண்பர் ஒருவருடன், வருடப்பிறப்பிற்கு கோவிலுக்கு சென்று, அங்கிருந்த வரிசையை கண்டு மிரண்டு, தெய்வக்குற்றம் ஆகிவிடக்கூடாதென்று அந்த நீண்ட வரிசையில் நின்று, ஒரிரு மணி நேரத்திற்கு பிறகு சாமி கும்பிட்டுவிட்டு வந்தோம். இந்த முறை அப்படியெல்லாம் இல்லாமல், ஊரைவிட்டு தள்ளி இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சீக்கிரம் வந்துவிட்டேன்.
இந்த வருடம் எல்லாமே சீக்கிரம் நடந்துவிட்டால் நல்லது.
இதற்கு மேல் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருந்தால், இப்பதிவு இரண்டாம் தேதி தான் வருமென்பதால், இத்துடன் நிறுத்தி பப்ளிஷ் செய்கிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
.
4 comments:
Happy New year.
Ananth,
Chicago
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..!
http://tamizyan.blogspot.com/2011/01/blog-post_11.html
பயனுள்ளதாக பட்டால் ஆதரியுங்கள்
மன்மதன் அம்பு - நீல வான ஆச்சர்யம்..!
http://tamizyan.blogspot.com/2011/01/blog-post_11.html
பயனுள்ளதாக பட்டால் ஆதரியுங்கள்
Post a Comment