அப்படி என்ன படம்னு கேக்குறீங்களா? அதாங்க நம்ம தமிழ் திரையுலக சுனாமி, முன்னாள் திமுக, அதிமுக பிரச்சார பீரங்கி, முன்னாள் தமிழக அரசு சிறுசேமிப்பு துறை தலைவர், லட்சிய திமுக பொது செயலாளர், விஜய டி. ராஜேந்தரின் இயக்கத்தில், நடிப்பில், இசையில் வெளியான "வீராச்சாமி".
உண்மையிலேயே இது ஒரு நல்ல முழுநீள காமெடி படம். ஆனா அவரு படத்த சீரியஸா எடுத்து இருப்பாரு. அதிலயும், கிளைமாக்ஸ்ல அவரு இறந்து போற காட்சில திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் சிரிப்பால் அரங்குகள் குலுங்கியது, 75 ஆண்டு கால தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. பாண்டி பஜார் சிடி வியாபாரிகள் இந்த படம் அளவுக்கு இதுவரை எந்த படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
ஸோ, குடும்பத்தோட என்ஜாய் பண்ண தயாராகுங்க. பார்த்துட்டு திங்கள்கிழமை வந்து உங்க அனுபவங்களை வலையில் பகிர்ந்து கொள்ளுங்க. ஒரு எச்சரிக்கை, ஹீரோ அறிமுகக்காட்சி பார்த்து வீட்டுல உள்ள குழந்தைகள் பயந்துட போகுது.