Saturday, October 31, 2009

கண்டேன் காதலை

எனக்கும் பரத்துக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. இருந்தாலும், அவரை பார்க்க கடுப்பாக இருக்கிறது. அதிலும், சின்ன தளபதி எனும் டைட்டிலை பார்க்கும் போது...

ஹிந்தி படத்தை மொழிமாற்றம் செய்வதால், நேட்டிவிட்டி முக்கியம் என்று கதைக்களத்தை பார்த்து அமைத்திருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் தேர்வில் குறை தெரிகிறது. பரத் பிஸினஸ்மேனாம். தமன்னா தேனி பொண்ணாம். இவ்வளவு இருந்தும், ஒருவரை வைத்து நேட்டிவிட்டி சரி செய்திருக்கிறார்கள். அழகம் பெருமாள்.

ஜெயம் ரவி நடித்திருக்கலாமோ? என்ன, லூசு போல் பேசிக்கொண்டு இருக்கும் தமன்னாவுடன் பார்த்திருந்தால், சந்தோஷ் சுப்ரமணியம் நினைவுக்கு வந்திருக்கும். தமன்னா, ஆனந்த தாண்டவம், அயனை தொடர்ந்து இதிலும் லூசு போல் நடித்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்!



நான் சந்தானத்தை நம்பித்தான் இந்த படத்துக்கு சென்றேன். நிறைய காட்சிகள் வைத்திருப்பதாக, இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும், அவர் தான் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்குகிறார். முதல்பாதியில் கொஞ்சமும். கடைசியில் கொஞ்சமும்.

இயக்குனர் கண்ணன், ஜெயம்கொண்டானில் பாடல்களை கலர்புல்லாக எடுத்திருந்தார். இதில், அப்படி எதுவும் இல்லை. வித்யாசாகரும் கைக்கொடுக்கவில்லை. இயக்குனருக்கே பிடிக்கவில்லையோ, என்னமோ... எந்த பாடலுமே முழுமையாக முடிந்தது போல் இல்லை.

ஒரு காட்சியில் தமன்னா, ரெண்டு ரூபாய்’ன்னா சும்மாவா? அதுல சாக்லேட் வாங்கலாம். தினகரன் வாங்கலாம் என்று சொல்லும் வசனத்தில் சக்சேனா தெரிந்தார்.

பண்ணியது ரீ-மேக். இதுல, டைட்டிலில் படத்தின் உரிமை அனைத்தும் சன் நிறுவனத்திற்காம். சன் டிவி விளம்பர மயக்கம் இப்பொழுது மக்களிடம் எடுபடுவதில்லை போலும். போட்டு வச்ச சம்சா அப்படியே இருந்தது.

வெற்றிப்படங்களில் ஒரு விஷயம் கவனிக்கலாம். இடைவெளிக்கு முன்னால் வரும் காட்சியோ, வசனமோ, வேறு ஒரு மாதிரி இடைவேளைக்கு பிறகு ரசிக்கும்படி வரும். இந்த படத்திலும் வருகிறது. கூடவே, கொட்டாவியும் சேர்ந்து வருகிறது.

பிகு: படம் பார்க்கும் போது, ஒரு காட்சியை ரசித்து பார்த்தேன். எழுதும் போது, அது என்னவென்று யோசித்து பார்க்கிறேன். நினைவுக்கே வரமாட்டேன்கிறது. அந்த அளவிற்கு இருக்கிறது படம்.

.