Monday, March 23, 2009

நாட்டு சரக்கு - ஐடி & ஐபில் டயலாக்ஸ்

"உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2010 மத்தியில் சரி வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மிகவும் மோசமான நிலையை எடுத்து கொண்டால், 2014 வரை போகலாம்” என்று இன்போசிஸ் முதன்மை அதிகாரி கூறியுள்ளார் - என்ற செய்தியை படித்த ஐடி நண்பன் கேட்டான்.

“அப்ப அதுவரை என் வாழ்க்கையில எதுவும் நடக்காதா?”

----

"உனக்கு ஏதாச்சும் ஆன்-சைட் சான்ஸ் இருக்கா?”

“அட போப்பா! ஆன்-ப்ராஜக்ட்டே பெரிய விஷயமா இருக்கு. இதுல, ஆன்-சைட்டாம்?”

----

டிசிஎஸ், தங்கள் கம்பெனியில் இருந்து நீக்கிய ஊழியர்களுக்கு தங்களது துணை நிறுவனங்களிலும், மற்ற இடங்களிலும் வேலை கிடைக்க உதவ போகிறார்களாம்.

”டாடா ’கன்சல்டன்சி’ சர்வீஸஸ்ன்னு பேரு வச்சிட்டு அது ஒண்ணுதான் பண்ணாம இருந்தாங்க”

----

அடுத்த மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்ப உள்ளார்கள். அவர்களின் பங்களிப்பு மூலம் நமது நாட்டுக்கு சில நன்மைகள் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

சில கவலை குரல்கள்.

“அப்புறம் ஏன் அமெரிக்கா கவுந்திச்சு?”

“குசேலன், குருவி மாதிரியான உலக திரைப்படங்களை பதினைஞ்சு, இருபது டாலர் கொடுத்து பார்க்க ஆளிருக்காதே?”

"ஏம்பா, அதனால சரக்கு விலை கூடாதே?”

”இனி நைட் பதிவு போட்டா சுத்தமா ஹிட் வராது”

----

ஐபில் கிரிக்கெட் தொடர், இந்த வருடம் வெளிநாட்டில் நடக்க போகிறது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நல்ல வேளை, இப்படியெல்லாம் சொல்லவில்லையே?

“ஐபில் வைக்கும் போதுதான் எலக்சன் நடத்தணுமா? வேற நேரமா இல்ல? இரண்டு மாசம் தள்ளி வச்சா என்ன?”

“ஓட்டு போடுற மக்களை விட கிரிக்கெட் பார்க்குற மக்கள்தான் அதிகம். நாங்க கிரிக்கெட்ட இங்க நடத்துறோம். எலக்சன வேணா ஏதாச்சும் வெளிநாட்டுல நடத்திக்கோங்களேன்?”

“தேர்தலை கிரிக்கெட் ஸ்டேடியத்துலேயே வைச்சிக்கலாமே? கிரிக்கெட் பார்க்க வந்தவுங்க, ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கும். பாதுகாப்பு ஒரே இடத்துல இருந்த மாதிரியும் இருக்கும்.”

“உள்நாட்டில் பாதுகாப்பு தரமுடியாததற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்கி, வெளிநாட்டில் நடத்துவதற்கான செலவை ஏற்க வேண்டும்.”

----

பாகிஸ்தான் பாதுகாப்பில்லாத நாடு என்பதை அந்நாட்டு தீவிரவாதிகள் காட்டியது போல், நம் நாட்டை பற்றி தங்கள் எண்ணத்தை கூறியிருக்கிறார்கள், பிசிசிஐ என்னும் பண தீவிரவாதிகள். இவனுங்க இங்கிலாந்து போயி வரும்போது, ‘பாதுகாப்பு இல்லாத நாட்டுக்கு ஏண்டா வரீங்க’ன்னு அப்படியே திருப்பி அனுப்பிரணும். யாரு எக்கேடு கெட்டு போனா என்ன? நம்ம பாக்கெட் நிறைஞ்சா போதுங்கிறது எவ்ளோ கேவலமான விஷயம். அதை எவ்ளோ தைரியமா சொல்லிட்டு செஞ்சிட்டு இருக்காங்க?

----

“அண்ணே, ஸ்கோர் என்னண்ணே?”

“டேய்! வீட்டுல சோறு இருக்கா? அப்புறம் என்ன ஸ்கோரு?”

!

7 comments:

வினோத் கெளதம் said...

ஒவ்வொரு விஷயமும் ச்சும்மா நச்சு நச்சுனு இருக்கு..

எட்வின் said...

//இவனுங்க இங்கிலாந்து போயி வரும்போது, ‘பாதுகாப்பு இல்லாத நாட்டுக்கு ஏண்டா வரீங்க’ன்னு அப்படியே திருப்பி அனுப்பிரணும்//

அதான... அப்பிடியே இவனுகள ஓட விட்டா தான் சரி வரும்

எட்வின் said...

//“தேர்தலை கிரிக்கெட் ஸ்டேடியத்துலேயே வைச்சிக்கலாமே? கிரிக்கெட் பார்க்க வந்தவுங்க, ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கும். பாதுகாப்பு ஒரே இடத்துல இருந்த மாதிரியும் இருக்கும்.”//

அப்பிடி போடுங்க ... (இந்த டயலாக் ஓட்டுக்கும் ஆச்சு பேட்டுக்கும் ஆச்சு)

கும்மாச்சி said...

நல்ல பதிவு, நடத்துங்கள்.

சரவணகுமரன் said...

நன்றி வினோத் கௌதம்

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி, எட்வின்

சரவணகுமரன் said...

நன்றி கும்மாச்சி