Thursday, August 30, 2012

மெழுகாவோம் வாங்க!

சென்ற பதிவின் தொடர்ச்சி.

சில பிரபலங்களின் சிலைகளை பார்த்துவிட்டு, மெழுகு சிலைகள் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.

ஹாலிவுட் எஸ்.ஜே.சூர்யா - ஜிம் கேர்ரி. (இப்படி சொன்னா, எஸ்.ஜே.சூர்யாவுக்கு சந்தோஷமா இருக்கும்’ல?)

 
கேமரொன் டயஸ். சிலர் மடியில் உட்கார ட்ரை செய்துக்கொண்டிருந்தனர்.
 


 
மைக்கெல் ஜாக்சன். தாத்தா பாட்டிங்க கூட இதே மாதிரி ஸ்டெப்ஸ் போட்டு, பக்கத்துல நின்று போஸ் கொடுத்துக்கிட்டாங்க.

 
டைகர் வுட்ஸ்.

 
ஸ்பைடர்மேன்
 

 
இப்படி ஊர்ல இருக்கிறவங்கெல்லாம் சிலை வச்சவங்களுக்கு ஒரு சிலை வேண்டாமா? மேடம் துசாட்ஸ், இல்ல மேடம் ருஸ்சோ என்று சொல்ல வேண்டுமாம். (போன பதிவின் பின்னூட்டத்தில் யோகன் சொல்லியிருக்கிறார். நன்றி யோகன்.) மேடத்தின் சிலை இது.
இது தவிர, மெழுகு சிலைகளின் தகவல்களையும் இங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு தலையை செய்ய, 10 பவுண்ட் மெழுகும், இரு கைகளுக்கு 4 பவுண்ட் மெழுகும் தேவைப்படுமாம். (சாம்பாருக்கு எவ்வளவு பருப்பு போடணும்’ன்னு சொல்ற மாதிரி இருக்கா?) ஒரு ஜோடி கண்களை உருவாக்க மட்டும், 15 மணி நேரங்கள் ஆகுமாம். இங்கே இருக்கும் ஒரு சிலையின் கண்கள் போல் இன்னொரு சிலையின் கண்கள் இருக்காதாம்.

ஒரு நாளுக்கு 8 மணி நேரங்கள் என்று எடுத்துக்கொண்டால், ஒரு சிலையை செய்து முடிக்க மூன்று மாதங்களுக்கு மேல் ஆகுமாம்.

முதலில் இப்படி ஒரு இரும்பு எலும்பு கூடை செய்கிறார்கள்.  இதற்கு மேல் மோல்டிங். பிறகு, முடி. அப்புறம், கண்கள், பற்கள், மேலே வண்ணம். முடிவில் ட்ரஸ்.சிலைகள் அனைத்தும் எந்த ஒரு வெளிப்புற சப்போர்ட்டும் இல்லாமல் நிற்கிறது.


சிலைகளை வடிப்பதற்கு முன், பிரபலங்களை சந்தித்து 2-3 மணி நேரத்தில் அளவெடுக்கிறார்கள். 200 வித அளவுகள். அளவெடுக்க இரு சிற்பிகள், படமெடுக்க ஒரு போட்டோகிராபர், பேச கொள்ள ஒரு பிஆர் என்று ஒரு டீமாக போய் வருகிறார்கள்.

 
அப்படி எடுத்த சில பிரபலங்களின் அளவுகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
 
எல்லாம் முடிந்தது. வெளியே வரும் வழியில், நமது கைகளை மெழுகில் வடித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு, கொஞ்சம் ஆர்வத்தை கிளப்ப, போய் விசாரித்தேன்.
 
முதலில் பாப்பாவின் கைகளின் மாதிரி எடுத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டேன், விவரம் தெரியாமல். ”முடியாது. ஐஸ் தண்ணீரில் 30 நொடிகள் கையை வைத்திருக்க வேண்டும்” என்றார். இதென்ன பெரிய விஷயமா? என்று நினைத்துக்கொண்டேன்.
 
இது ஈஸியாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. அமெரிக்கர்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை. பெரிதாக நோக விரும்ப மாட்டார்கள். சரி, நம் கையை மெழுகில் மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என்று கையை நீட்டினேன்.
 
ஒரு அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட சொல்லி கிலியை கிளப்பிவிட்டு, பிறகு வேலையை ஆரம்பித்தார்.
 


 ஐஸ் தண்ணீரில் முப்பதே விநாடிகள் தான் வைக்க சொன்னார். கஷ்டம்’தாங்க.பிறகு, கையை எடுத்து சூடாக இருந்த மெழுகில் முக்கினார். ஹைய்யா, வலிக்கவே இல்லையே?ஒழுகிய மெழுகை சரி செய்கிறார்.திரும்ப குளிர்ந்த நீரில் கையை முக்...என்ன கலர் என்று கேட்டார். சிகப்பு என்று சொல்ல, அதில் ஒரு முக்... 
இப்படி ஆங்கையும் இங்கையும் முக்கி, முக்கி, பிறகு கைகளில் இருந்து அதை உருவினார். கையில் இருந்த முடிகள் மெழுகில் ஒட்டி இருக்க, இழுத்ததில் வலிக்க, சப்பா...!!!


ஒருவழியாக கை ரெடியாகியது.அருள் சொல்லும் வகையில் வந்திருந்தது.தற்சமயம் வீட்டு ஷோகேஷில் இருந்து, வீட்டிற்கு வருபவர்களுக்கு அருள் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

.

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடா! நீங்கள் மெழுகு சிலை செய்வதை அனுபவித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
தங்கள் படங்கள் மிகத் தெளிவாகவுள்ளது. தலை முடியை ஒவ்வொன்றாகப் பொருத்துவார்களாம்.
நம் நாட்டு மக்களின் தோல் நிறத்தை இன்னும் இவர்களால் சரியாக கலக்கமுடியவில்லை எனவும் அறிந்தேன். பல இந்திய பிரபலங்களின் சிலையில் அதைக் காணக்கூடியதாக இருந்தது.

ARIVU KADAL said...

சுவாரசியமான தகவல் நண்பரே அருமை.

கிரி said...

//கேமரொன் டயஸ். சிலர் மடியில் உட்கார ட்ரை செய்துக்கொண்டிருந்தனர்//

நல்லவேளை உட்கார்ந்ததோட நிறுத்தினாங்களே! :-)

மேடம் ருஸ்சோ இப்படி மெழுகு சிலை செய்து மெழுகா இளைசுட்டாங்களே!

//சாம்பாருக்கு எவ்வளவு பருப்பு போடணும்’ன்னு சொல்ற மாதிரி இருக்கா?//

இல்லை.. சரவணகுமரன் நிறைய சமையல் செய்கிறார்னு தெரியுது ;-)

சரவணகுமரன் said...

நன்றி யோகன். இந்தியர்களின் தோல் நிறம், சரிதான்.

சரவணகுமரன் said...

நன்றி அறிவு கடல்

சரவணகுமரன் said...

வாங்க கிரி.

கமெண்ட்ஸ் கண்டு சிரித்தேன்.

//இல்லை.. சரவணகுமரன் நிறைய சமையல் செய்கிறார்னு தெரியுது ;-)//

இல்லை... இல்லை... இப்ப இல்லை... :-)