Tuesday, April 8, 2008

யாரடி நீ மோகினி...

ஏற்கனவே வெங்கடேஷ், திரிஷா நடிப்பில் செல்வராகவன் தெலுங்கில் இயக்கி இருந்த ‘ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே’ (பெண்களின் வார்த்தைகளுக்கு அர்த்தம் வேறு) படத்தை தமிழில் செல்வராகவனின் நண்பரும், அவரிடம் உதவியாளராக இருந்த ஜவஹர் இயக்கியிருக்கிறார். (ரீமேக் பண்ணியிருக்கார்).

படம் முழுக்க செல்வராகவனின் டச்'க்கள் இருந்தாலும் அவர் மத்த படங்களில் ஏற்படுத்துகிற பாதிப்பு இதில் இல்லை. ஒருவேளை தெலுங்கு ஆடியன்சுகளுக்காக எடுத்ததினால் இருக்குமோ?

ரகுவரனின் பையன் தனுஷ். ஆரம்பத்துல வேல தேடி அலையுறாரு. அப்பா திட்டுறாரு. ரெண்டு பெரும் ஜாலியா சண்டை போடுறாங்க. இது தெலுங்குல வெங்கடேஷ் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட்'ங்கற தால ரொம்ப காலம் வேல தேடுற மாதிரி வரும். அது கொஞ்சம் வித்தியாசமா தெரியும். இங்க தமிழுல தனுஷ் எல்லா படத்துலயும் (திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன்) இத தான் செய்யுறாரு.

அப்புறம் இவருக்கு நயன்தாரா (படத்துல வெயிட் இவுங்கதான்) தயவுல ஒரு சாப்ட்வர் கம்பெனியில வேல கெடைக்குது. அங்க நயன்தாரா ப்ராஜக்ட் மேனஜராம். அங்க இவருக்கு மேடம் மேல லவ்ஸ் வருது. சண்டை வருது. அப்பாவை இழக்குராரு. நயன்தாரா தனுஷோட பிரண்ட (அலைபாயுதே கார்த்திக்) லவ் பண்றது தெரிய வருது. கொஞ்சம் ரீல் ஹீரோ பீலிங்கோட அலையுறாரு. அப்புறம் மூணு பேரும் (தனுஷ், நயன்தாரா, கார்த்திக்) சேர்ந்து சொந்த ஊர் போறாங்க. அங்க உள்ள சூழ்நிலையால் இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை கலகலப்பாய் சொல்லி ஒரு மாதிரி சொதப்பி முடிக்கிறார்கள்.

படத்துல ரகுவரன் இறந்து போற மாதிரி ஒரு சீன் வருது. நிஜமாகவே நமக்கு கண்ணுல கண்ணீர் வருது. அவரும், தனுஷும் போடும் சண்டைகள் படத்தின் முன்பாதியை கலகலப்பா வைக்குது. நயன்தாராவின் தங்கை தனுஷை காதலிக்கும் காட்சிகள் பின் பாதியை சோர்வில்லாமல் ஓட்டுகிறது. ஒரு பாடலில் தனுஷும் நயனும் நடனமாடும் போதும் இறுதியில் ஒரு காட்சியிலும் "மின்சார கனவு" பிரபுதேவாவும் காஜோலும் நினைவுக்கு வருகிறார்கள். பெருசா யாரோட பெர்பாமன்சும் இல்ல.

தொப்புள் இல்லாத பொண்ண பார்த்துருக்கீங்களா? இதுல ஒரு பாட்டுல ரகசியான்னு நினைக்கிறேன், அந்த பொண்ணு பாட்டு கடைசில ஒரு நிமிஷம் இடுப்ப ஆட்டுது. அப்ப அந்த பொண்ணோட தொப்புள கிராபிக்ஸ்ல அழிச்சு காட்டுறாங்க. தொப்புள் காட்டுறது ஆபாசமா இருக்கும்னோ? எப்படியெல்லாம் யோசிக்குறாங்க? எதுக்கெல்லாம் கிராபிக்ஸ் யூஸ் பண்ணுறாங்க?

படத்தோட பெரிய மைனஸ் கிளைமாக்ஸ். என்ன சொல்லவாரங்கன்னே புரியல்ல. செகண்ட் ஷோ போனதுனால எனக்குத்தான் புரியலயோ என்னமோ?

பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. செல்வராகவன்- யுவன் காம்பினேஷனின் கடைசி பட பாடல்கள். ஏதோ சண்டையாமுல? சீக்கிரம் சேர்ந்தா சரி. வழக்கம் போல ஒரு ரீமிக்ஸ் இருக்கு. அதுக்கு இசை இமான்னு நினைக்கிறேன். டைட்டில நன்றி சொல்றாங்க.

மொத்தத்தில படம் பார்க்கலாம். (அட்லீஸ் நயனோட தங்கையா வர்ற அந்த சின்ன பொண்ணோட நடிப்புக்காக...). ஆனா சீக்கிரம் கிளம்பி வந்துரனும்.

No comments: