Friday, May 30, 2008

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... சண்டே காணத்தவறாதீர்கள்!

இந்த வாரம் ஞாயிறு உங்கள் சன் டிவியில் ஒரு சூப்பர் படம் போடப்போறாங்க. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்களுக்கும், DVD கிடைக்காதவர்களும் பார்க்க நல்ல சந்தர்ப்பம். இப்பவே வார இறுதி வேலைகளை பிளான் பண்ணிகோங்க.அப்படி என்ன படம்னு கேக்குறீங்களா? அதாங்க நம்ம தமிழ் திரையுலக சுனாமி, முன்னாள் திமுக, அதிமுக பிரச்சார பீரங்கி, முன்னாள் தமிழக அரசு சிறுசேமிப்பு துறை தலைவர், லட்சிய திமுக பொது செயலாளர், விஜய டி. ராஜேந்தரின் இயக்கத்தில், நடிப்பில், இசையில் வெளியான "வீராச்சாமி".
உண்மையிலேயே இது ஒரு நல்ல முழுநீள காமெடி படம். ஆனா அவரு படத்த சீரியஸா எடுத்து இருப்பாரு. அதிலயும், கிளைமாக்ஸ்ல அவரு இறந்து போற காட்சில திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் சிரிப்பால் அரங்குகள் குலுங்கியது, 75 ஆண்டு கால தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. பாண்டி பஜார் சிடி வியாபாரிகள் இந்த படம் அளவுக்கு இதுவரை எந்த படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

ஸோ, குடும்பத்தோட என்ஜாய் பண்ண தயாராகுங்க. பார்த்துட்டு திங்கள்கிழமை வந்து உங்க அனுபவங்களை வலையில் பகிர்ந்து கொள்ளுங்க. ஒரு எச்சரிக்கை, ஹீரோ அறிமுகக்காட்சி பார்த்து வீட்டுல உள்ள குழந்தைகள் பயந்துட போகுது.

17 comments:

மாயவரத்தான் said...

ஹலோ... எங்க ஊர்க்காரரை பார்த்தா உங்களுக்கு நக்கலா இருக்கா?


உடனடியா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கலைன்னா அண்ணனோட குறுஞ்சேமிப்பு திட்ட(ற) தலைவர் பதவியை ராஜினாமா செஞ்சிட சொல்லுவேன் ஜாக்கிரதை!

ஹேய்...டண்டணக்கா... டணக்கு டக்கா...

சென்ஷி said...

//ஹீரோ அறிமுகக்காட்சி பார்த்து வீட்டுல உள்ள குழந்தைகள் பயந்துட போகுது.//

நல்லவேள நான் இப்ப இந்ந்தியாவுல இல்ல :))

Sathiya said...

//அவரு இறந்து போற காட்சில திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் சிரிப்பால் அரங்குகள் குலுங்கியது//
Super:)))

சரவணகுமரன் said...

மாயவரத்தான் அவர்களே,

நக்கல் எல்லாம் இல்லங்க... படத்துக்கு பதிவுல ஒரு விளம்பரம் கொடுத்தேன்.

அவரு தான் ஏற்கனவே ராஜினாமா பண்ணிட்டாரே...

சரவணகுமரன் said...

// நல்லவேள நான் இப்ப இந்ந்தியாவுல இல்ல :)) //

நீங்க கொடுத்து வச்சது அவ்ளோ தான். :-)

இத்துப்போன ரீல் said...

நீண்ட நாட்களுக்குப்பின் சன் டிவியில் நீண்ட காமெடிப் படத்தைப் போடப் போகிறார்கள்.
தயவு செய்து டிவி வால்யூமைக் குறைத்துக்கொண்டு டிவியின் ஸ்பீக்கர்களையும்,உங்கள் காதுகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...:(

சரவணகுமரன் said...

நன்றி சத்யா

மங்களூர் சிவா said...

/
Sathiya said...

//அவரு இறந்து போற காட்சில திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் சிரிப்பால் அரங்குகள் குலுங்கியது//
Super:)))
/

ரிப்பீட்டேஏஏஏஏஏஏய்

சரவணகுமரன் said...

இத்துப்போன ரீல், சிரிச்சு சிரிச்சு வயிறும் புண்ணாகிடும். அதுக்கும் எதாச்சும் ஏற்பாடு பண்ணனும்.

Anonymous said...

இந்தப் படத்தை நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் பார்த்து விட்டேன்.
ஆமா இது கிங்கொங் படத்தோட தமிழ் டப்பிங்தானே ?

இத்துப்போன ரீல் said...

//இந்தப் படத்தை நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் பார்த்து விட்டேன்.
ஆமா இது கிங்கொங் படத்தோட தமிழ் டப்பிங்தானே ?//
அய்யோ.... உங்க அளப்பரைக்கு அளவே இல்லியா?...விசய T ராஜேந்தர் எதுனாச்ச்சும் பண்ணிக்க போறாருங்கப்பா!.......

சரவணகுமரன் said...

//அய்யோ.... உங்க அளப்பரைக்கு அளவே இல்லியா?...விசய T ராஜேந்தர் எதுனாச்ச்சும் பண்ணிக்க போறாருங்கப்பா!//

Wikipedia ல டி. ராஜேந்தரோட பக்கத்த பாருங்க. யாரோ காமெடி பண்ணியிருக்காங்க.

இத்துப்போன ரீல் said...

இதையா சொல்றீங்கண்ணா!...சூப்பர்
//Some of T.Rajender's movies are:

Karadipaiyan
Hairy Potte
Mythili Ennai Kathali
Karadisha En Karadilisa
Monisha En Monalisa
Dandanakka Dadunkanakka
Enga Veettu Thangachi oru Parachi
Sonnal Thaan Kathala
Kadhal Azhivathillai
Tharuthalai Raagam
King Kong of Tamil Nadu
Veerasamy //

சரவணகுமரன் said...

//இதையா சொல்றீங்கண்ணா!...சூப்பர் //

ஆமாம்.

இது மட்டுமா? அந்த பக்கம் முழுக்க இப்படித்தான் இருக்கு. பின்னாடி வர்ற சந்ததியினர் இத பார்த்த என்ன நினைப்பாங்க?

இத்துப்போன ரீல் said...

//பின்னாடி வர்ற சந்ததியினர் இத பார்த்த என்ன நினைப்பாங்க?//

டார்வின் கொள்கை சரின்னு நினைப்பாங்க!.. :)

Anonymous said...

Thank God, we can see IPL final in sunday night without any request to change for sun tv from the family

கானா பிரபா said...

//பாண்டி பஜார் சிடி வியாபாரிகள் இந்த படம் அளவுக்கு இதுவரை எந்த படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறியிருக்கிறார்கள்//

தவறான தகவல், நான் அறிந்தவரை இந்தப் படத்தை இலவசமாக வீராச்சாமியே கொடுத்தாலும் சீடி ஆக்கமாட்டோம்னு சத்தியம் பண்ணினாங்களாம் சீடி வியாபாரிங்க ;-)