Wednesday, May 28, 2008

புகைப்பிடிக்கும் ஆண் என்றால் லிப்ட்...

மின்னஞ்சலில் வந்த ஒரு வீடியோ விளம்பரம் இது.

ஆள் நடமாட்டமோ, வாகன ஓட்டங்களோ இல்லாத ஹைவே.

ஒரு ஆண் சாலை ஓரம் அமர்ந்திருக்கிறான். ஏதாவது வண்டி வருமா? லிப்ட் கிடைக்குமா? என்றவாறு சாலையே பார்த்து கொண்டிருக்கிறான். தூரத்தில் ஒரு கார் வருகிறது.

எழுந்து காரை நோக்கி கையை காட்டுகிறான். காரில் வருவது ஒரு பெண். அவள் காரில் இருந்துகொண்டே இவனை பார்க்கிறாள். பின் காரை நிறுத்தாமல் இவனை கடந்து செல்கிறாள்.

கார் நிற்காமல் சென்றது கண்ட நம்ம ஆள், பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பிக்கிறான். இதை, கடந்து சென்ற பெண் காரில் இருந்தவாறே கார் கண்ணாடி வழியே பார்க்கிறாள். அவன் புகைப்பதை கண்ட அவள், காரை நிறுத்துகிறாள்.

பின், காரை பின்னோக்கி அவனருகே கொண்டு வருகிறாள். நிறுத்திய காரினுள் அவனை ஏற சொல்கிறாள். அவனும் ஏறுகிறான். கார் செல்கிறது.

இதற்கு பிறகு திரையில் ஆங்கிலத்தில் ஒரு லைன்.
"புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு லிப்ட் கொடுக்க பெண்கள் பயப்படுவதில்லை."

அதன் கீழே இன்னொரு லைன்.
"புகை பிடித்தல் ஆண்மை குறைவை ஏற்படுத்தும்"

அவ்வளவு தான் விளம்பரம். சும்மா அட்டகாசமா இல்லை?

இதை வெளியிட்டது ஒரு இந்திய அரசு நிறுவனம். மிகவும் தரமாக தயாரிக்க பட்டுள்ள இந்த விளம்பரம், சொல்ல வந்த விஷயத்தை பளிச்சென்று சொல்கிறது.

அன்புமணி திரை பிரபலங்களுக்கு வேண்டுகோள் வைப்பதை விட, இளைஞர்களை நேரடியாக அடையும் இம்மாதிரியான விளம்பரங்களை ஊடகங்கள் எங்கும் ஒளிபரப்ப செய்யலாம்.

9 comments:

puduvaisiva said...

Yes My friend it is good logic

to make like this add. it is useful

our youth.

and thank you for your sharing

puduvai siva.

சரவணகுமரன் said...

நன்றி புதுவை சிவா...

சின்னப் பையன் said...

Perfect. நான் இந்த விளம்பரத்தைப் பார்த்ததில்லை. யூட்யூபில் இருக்கா?

Anonymous said...

சிகரெட் புகைப்பவர்களைவிட அவர்களைச் சார்ந்திருக்கும் பெண்களும், குழந்தைகளும்தான் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்.

இது குறித்த வாசகம் ஒன்று, எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை.

Kissing a smoker is like licking an Ashtray

கொஞ்சம் ஹார்ஸாத்தான் இருக்கு, ஆனா யோசிச்சுப் பார்த்தா சரியாவும் இருக்கு.

எனக்குப் பிடிக்குதுன்னு அடுத்தவுங்களை படுத்தக்கூடாது, அதிலும் நாம நேசிக்றவங்களை கண்டிப்பா படுத்தக்கூடாது.

என்னுடைய பதிவில் ஒரு 'புகை'ப்படம் போட்டுள்ளேன் பாருங்களேன்.

http://vadakaraivelan.blogspot.com/2008/05/blog-post_28.html

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன். நான் இதை யூட்யூபில் பார்க்கவில்லை.

பதிவர்கள் யாராவது யூட்யூபில் பார்த்தால் இணைப்பு சுட்டியை பின்னுட்டமிடலாம்.

சரவணகுமரன் said...

ராஜேந்திரன் வேலுச்சாமி, 'புகை'படம் நன்றாக இருந்தது.

இது போல், நான் ஒரு புகைப்படம் பார்த்திருக்கிறேன். அதில், இருவர் ஒரு அறையில் புகைபிடித்து கொண்டு இருப்பார்கள். மேலே, அறையின் ceiliing இல் முழுவதுமாக ஒரு படம் ஒட்டி இருக்கும். அந்த படத்தில், ஒரு பாதிரியாரும் இன்னும் சில பேரும் கல்லறைக்குள் பூ தூவிக்கொண்டு இருப்பது போல் இருக்கும். அதாவது, புகைப்பிடித்து கொண்டு இருக்கும் இருவரும் கல்லறைக்குள் இருப்பது போல் இருக்கும்.

சரவணகுமரன் said...

இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியிருந்தது இப்பொழுது ஞாபகம் வருகிறது.

அவர் ஏதோ ஒரு நாட்டின் ஏர்போட்டில் உள்ள புகைப்பிடிப்பவர்களுக்கான அறைக்குள் சென்று இருந்தாராம். அந்த அறை மிகவும் சிறியதாக, சுற்றிலும் கண்ணாடியை கொண்டதாக இருந்ததாம். புகை பிடிக்க ஆரம்பித்த உடன் புகை, நம்மை சுற்றிலும் இருப்பதை கண்ணாடியில் தெரியுமாம். அவ்வாறு நம்மை கண்ட பின், புகை பிடிக்கும் ஆசையே போய் விடும் என்று கூறியிருந்தார்.

சி தயாளன் said...

முள்ளை முள்ளால் எடுக்கும் விதம் அருமை

சரவணகுமரன் said...

நன்றி தயாளன்.