Thursday, June 26, 2008

சிரிக்க வைத்தவை : 26-06-2008

இன்னைக்கி காலையில எந்திரிச்சி பேப்பர (டைம்ஸ் ஆப் இந்தியா) பார்த்தா (படிக்கிறது எல்லாம் இல்லங்க...) ஒரே தமாசு... மூணு மேட்டேரு...

---------------------------------------------------------------------------------

மொத மேட்டேரு என்னன்னா... எங்கேயோ ஜெய்பூர்'ல இருந்து மும்பை போற பிளைட்டுல பைலட்டுங்க தூங்கிடானுங்கலாம். அதனால பிளைட் போற எடத்த தாண்டி போயிடுச்சாம். ஏர்போர்ட்'ல என்னடா இன்னும் பிளைட் வரலைன்னு சிக்னல் கொடுத்த பார்த்தா, யாரும் ரெஸ்பான்ஸ் பண்ணலையாம். அதான் நம்ம ஆளுங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இல்ல இருங்காங்க?. அப்புறம் ஏதோ, emergency சிக்னல் இருக்காம். அத கொடுத்த அப்புறம் நம்ம ஆளுங்க சத்தம் கேட்டு எழுந்திருக்காங்க. எந்திரிச்சு வண்டிய திருப்பி கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க. வேல அதிகமாம். தூங்க டைம் இல்லையாம். அதான் வண்டிய கிளப்புனோன தூங்கிடாங்கலாம். நல்ல இருக்குயா உங்க லட்சணம்!!!
---------------------------------------------------------------------------------

ஒரிசா'ல ஒருத்தரு காட்டுல இருந்து ஒரு குட்டி கரடிய (சிம்புலாம் இல்ல!) எடுத்துட்டு வந்து வீட்ல வச்சு வளர்த்துயிருக்காரு. இது காட்டிலாகா அதிகாரிகளுக்கு தெரிஞ்சு, அவரு பிடிச்சி ஜெயில்'ல போட்டு, கரடியா ஜூ'ல விட்ருகாங்க. கரடி சோகத்துல எதுவும் சாப்பிட மாட்டேன்குதான். அவரு வீட்டுலயும் அவரு இல்லாம கஷ்டபடுராங்கலாம். ஒரு உணர்வு பூர்வமான சம்பவம். பட், அந்த போட்டோ'வ பார்த்தா சிரிப்பாதாங்க இருக்கு.


---------------------------------------------------------------------------------

இந்த நியூஸ்'ய பத்தி நான் எதுவும் சொல்ல தேவை இல்ல... பாத்து நீங்களே சிரிச்சுகொங்க... :-)


மழை வரவைக்க யாகமாம்...

10 comments:

siva said...

Hi Kumaran

"மழை வரவைக்க யாகமாம்..."

the second right one is Doondu Ragavan?? he look like him


puduvai siva.

Anonymous said...

kalakkal. kalakkal.. kalakkal...

மங்களூர் சிவா said...

/
மும்பை போற பிளைட்டுல பைலட்டுங்க தூங்கிடானுங்கலாம். அதனால பிளைட் போற எடத்த தாண்டி போயிடுச்சாம்.
/

இவனுங்களை எல்லாம் நம்பி ப்ளைட்ல போறாங்களே அவங்களை சொல்லணும்!!

இவனுங்க இங்க பயிற்சி எடுத்த பைலட்டா இருப்பானுக போல!!

மங்களூர் சிவா said...

/
மும்பை போற பிளைட்டுல பைலட்டுங்க தூங்கிடானுங்கலாம். அதனால பிளைட் போற எடத்த தாண்டி போயிடுச்சாம்.
/

இவனுங்களை எல்லாம் நம்பி ப்ளைட்ல போறாங்களே அவங்களை சொல்லணும்!!

இவனுங்க இங்க பயிற்சி எடுத்த பைலட்டா இருப்பானுக போல!!

மங்களூர் சிவா said...

/
கரடியா ஜூ'ல விட்ருகாங்க. கரடி சோகத்துல எதுவும் சாப்பிட மாட்டேன்குதான்.
/

:))))))))))))
என்ன ஒரு பாசம்!!

சரவணகுமரன் said...

//the second right one is Doondu Ragavan?? he look like him

புதுவை சிவா, அவர் அப்படியா இருக்காரு?

சரவணகுமரன் said...

மங்களூர் சிவா,

உங்க பேராதரவுக்கு மிக்க நன்றி.... :-)

கிரி said...

//ஏர்போர்ட்'ல என்னடா இன்னும் பிளைட் வரலைன்னு சிக்னல் கொடுத்த பார்த்தா, யாரும் ரெஸ்பான்ஸ் பண்ணலையாம். அதான் நம்ம ஆளுங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இல்ல இருங்காங்க?. //

இது உண்மையா இருக்குமா.. இல்ல நம்ம ஊடகங்கள் சும்மா கிளப்பி விட்டு இருப்பாங்களா :-))

//ஒரிசா'ல ஒருத்தரு காட்டுல இருந்து ஒரு குட்டி கரடிய (சிம்புலாம் இல்ல//

:-)))))

//மழை வரவைக்க யாகமாம்...//

அடங்கொக்க மக்க இவனுக அலும்புக்கு அளவே இல்லாம போச்சு

முரளிகண்ணன் said...

\\ஒரிசா'ல ஒருத்தரு காட்டுல இருந்து ஒரு குட்டி கரடிய (சிம்புலாம் இல்ல!) \\

இதுதாங்க ரொம்ப சிரிக்க வச்சது

சரவணகுமரன் said...

நன்றி, கிரி & முரளிகண்ணன்.