Monday, June 23, 2008

காதலில் ஒரு நாள்.

"ன்று எப்படியாவது நம்ம ஆள அசத்திடணும்" என்று நினைத்து கொண்டான் சுந்தர். சுந்தர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறி பிரிவில் பணிப்புரிகிறான். குறுகிய இலக்காக சென்னையில் ஏதாவது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலையையும், அடுத்தக் கட்ட இலக்காக அமெரிக்கா டாலர் சம்பளத்தையும் கொண்டுயிருப்பவன். இவை கடந்த ஒரு வருடமாக இலக்காக மட்டுமே இருக்க காரணம், கோவையில் உள்ள அவன் காதலி, தரணி.

சுந்தருக்கும் தரணிக்கும் ஒரே ஊர், தாராபுரம். பஸ் பயணத்தில் சிநேகிதமாகி, பின்பு காதலரானார்கள். தரணி தற்போது பீளமேட்டில் உள்ள மருத்துவமனையின் நூலகத்தில் வேலை பார்த்து வருகிறாள்.

'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று தன் அக்குளில் பாடி ஸ்பிரே அடித்து கொண்டான். சத்தமும், மணமும் மதிய தூக்கம் மூலம் தொப்பை வளர்த்து கொண்டிருக்கும் சுந்தரின் நண்பன் கதிரை எழுப்பியது.

"என்னடா கிளம்பிடியா? சண்டே சாந்தரம் ஆனா உனக்கு இது ஒரு பொழப்பு..."

"ம்ம்ம்ம்"

கதிர் எழுந்து உக்கார்ந்தான்.

"என்னமோ தெரியலடா, கதிர். ஒரு மாசமா நானும் தரணியும் சும்மா சும்மா சண்ட போட்டுக்கிறோம்." வருத்தத்துடன் ஆரம்பித்தவன் சிரித்து கொண்டு தொடர்ந்தான், "அதான் இன்னைக்கி சீக்கிரம் போய் சண்டை வராம பார்த்துக்கிட்டு பேசிட்டு வர போறேன்."

"நைட் நீ மட்டும் மெஸ் போயிட்டு வந்துரு.... நான் சாப்டுட்டு வந்துடுறேன்... பைடா..."

க்ஷ்மி காம்ப்ளெக்ஸ் முன்பு நின்று மணி பார்த்து கொண்டுயிருந்தான் சுந்தர். "வந்து பதினைந்து நிமிடங்கள் ஆச்சு... எங்க இவள காணும்?" என்று எரிச்சலுடன் திரும்பும் போது தூரத்தில் வரும் தரணியை கண்டான். முகத்தில் புன்னகையை கொண்டு வந்து கையை ஆட்டினான். அருகில் வந்த தரணி "எப்பப்பா வந்த?" என்று வினவினாள். "இப்பதான்" என்றான் சுந்தர்.

மனசாட்சி "கவனமா இரு சுந்தர்" என்று எச்சரிக்கைப்படுத்தியது.

"ரூம்ல ஒரே போர்... ஏதாச்சும் DVD வாங்கணும்" என்றாள்.

"ஹ்ம்ம்.... வாங்கலாமே. முதல்ல ஒரு காபி சாப்பிடுவோம்"

கௌரி சங்கரை நோக்கி நடந்தார்கள்.

"தசாவதாரம் பார்த்திடியா?" என்று ஆரம்பித்தாள்.

"ஒ... பார்த்தாச்சே... நீ?" (பார்த்திருக்க மாட்டாள். கூட்டிட்டு போக சொல்லுவாள்.)

"நேத்து பார்த்தேன்." (பார்த்திட்டியா!!!)

எங்கே? எப்ப? யாருடன்? என்று கேட்பதற்குள் ஹோட்டல் வந்தது.

காப்பியை ஊறிஞ்சுக்கொண்டேக் கேட்டாள்.

"பத்து கேரக்டர்ல எது உனக்கு பிடிச்சது?"

பலராம் என்று சொல்வதற்காக "ப..." என்பதற்குள், "பிளேட்சர் தானே?" என்றாள்.

"ஆமாம்" ட்விஸ்ட் அடித்து நாக்கு திரும்பியது.

"எனக்கும் தான்" என்று சிரித்தாள்.

சுந்தரும் கஷ்டப்பட்டு பதிலுக்கு சிரித்தான். தப்பிச்சடா மவனே என்றது அவன் மனம்.

ரு சிடி கடையில் சில புது பழைய படங்களின் பாடல் சிடிக்களை தரணி வாங்கினாள். வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது சுந்தர் கேட்டான்.
"என்ன படம் வாங்குன?"

சில ஹிந்தி படங்களின் பெயர்களை சொன்னாள்.

"அம்மணி, தமிழ் பாட்டு கேட்க மாட்டிங்களோ?"

"இல்ல... ஹிமேஷ் மியூசிக்... நல்லா இருக்கும்... அதான் வாங்கினேன்."

"ஹிந்தி கஜினி பாட்டு ரிலீஸ் ஆகிடிச்சா? ரஹ்மான் மியூசிக்"

"தெரியல்ல... எனக்கு ஹிமேஷ்தான் ரொம்ப பிடிக்கும். ஹிமேஷ் நேஷனல் லெவல் பேமஸ்"

"ரஹ்மான் இன்டர்நேஷனல் லெவல் பேமஸ்"

சிரித்தாள்.

"ஏ... எதுக்கு சிரிக்குற? நிஜமாத்தான்"

திரும்பவும் சிரித்தாள்.

"நான் என்ன பொய்யா சொல்றேன்? ஹாலிவுட் படத்துக்கெல்லாம் மியூசிக் பண்ணியிருக்கார்"

"அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற?"

"பின்ன நான் சொல்ல சொல்ல நீ சிரிக்குற? நான் என்ன லூசு மாதிரி தெரியுறனா?"

"ஆமாம்" என்று சொல்லி சத்தமாக சிரித்தாள் தரணி.

நடப்பதை நிறுத்தி சுற்றி பார்த்தான் சுந்தர். பக்கத்தில் நடந்தவர்கள் அவள் சிரிப்பதை பார்த்தவாறே சென்றார்கள்.

விட்டான் ஒரு அறை.

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

குத்துங்க எஜமா... இந்த பொம்பலைங்களே இப்படிதான்...

சின்னப் பையன் said...

அடப்பாவி...!!!!

சரவணகுமரன் said...

விக்னேஷ்வரன், ரொம்ப அனுபவப்பட்டு இருப்பீங்க போலிருக்கு... :-)

சரவணகுமரன் said...

சின்னப்பையா,

பீலிங்கு...?