Friday, August 22, 2008

எங்க போனா என்ன சாப்பிடலாம்?

இன்று என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் "சென்னைக்கு 369 வயசு" என்று ஒரு செய்தியை சொன்னார்கள். (சென்னைக்கு வாழ்த்துக்கள் :-)) அதில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களை பற்றி கூறினார்கள்.

முதலில், பல வருடங்களாக உள்ள மேங்கோ ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் ஒரு கடையை காட்டினார்கள். கடையின் பெயரை கவனிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பின்பு, திருவல்லிக்கேணியில் உள்ள ரத்னா கபே பற்றியும் அங்கு கிடைக்கும் இட்லி சாம்பார் பற்றியும் கூறினார்கள். கடையில் ஒருவரை பேட்டி எடுக்க, அவர் மைக்கையோ, பேட்டி எடுப்பவரையோ பார்க்காமல், தட்டை பார்த்துக்கொண்டே "இந்த கடை அறுபது வருஷமா உள்ளது. நான் இங்க பதினைச்சி வருஷமா சாப்பிட்டுட்டு இருக்கேன். இங்க கிடைக்குற மாதிரி சாம்பார் வேற எங்கயும் கிடைக்காது" என்று சொல்லி கொண்டு போனார்.


அப்புறம், ராயர் மெஸ் என்று ஒரு கடையை காட்டி, அந்த கடையின் பேமஸான காப்பியை பற்றி சொன்னார்கள்.


நான் சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறவன். வெளிய சாப்பிட போறதுன்னா, சூப்பரா சாப்பிடனும்'ன்னு, வண்டிய எடுத்துட்டு எவ்ளோ தூரம்'னாலும் போகுபவர்களில் நானும் ஒருவன்.


தமிழர்கள், பொதுவா எந்த ஊர் போனாலும், இட்லியை எதிர்பார்ப்பார்கள். ஒரு நாள், ரெண்டு நாள் போனம்னா, அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்ட ட்ரை பன்றதுதான் நல்ல விஷயம். எந்தெந்த ஊர்ல, என்னன்ன ஸ்பெஷல்'ன்னு எப்படி தெரியுறது? அதுக்கு கீழே உள்ள படத்த பாருங்க. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சரி, இந்தியாவுல உள்ள மாநிலங்களில் எது விசேஷம்'ன்னு தெரியுது. இனி, micro & macro லெவல்'ல பார்ப்போம்.அதாவது, உள்ளுர்ல சந்து பொந்துல உள்ள சூப்பர் ஹோட்டல்கள். உதாரணத்துக்கு, பா. ராகவன், இட்லி வடை, லக்கிலுக் போன்றோர்கள் அறிமுகப்படுத்துற மாமி மெஸ்கள் போன்றவை. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய உணவகங்கள்.இதுப்போல், அனைத்து தகவல்களும் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பது போல் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்காக, உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கு ஏற்ப, இதை உருவாக்கியுள்ளேன். திண்டுக்கல்லில் உள்ள வேணு ஹோட்டலில் இருந்து பாஸ்டனில் உள்ள பொங்கல் ஹோட்டல் வரை இதில் இருந்தால் எவ்ளோ அருமையாக உபயோகமாக இருக்கும் என்பதை தமிழ் சமுதாயம் எண்ணி பார்க்க வேண்டும். :-)பெருங்கடலேனே திரண்டு வாருங்கள் !!!

ஆதரவு தாருங்கள் !!!

பயன் பெறுங்கள் !!!

13 comments:

Anonymous said...

well its nice to know that you have great hits here.

Anonymous said...

very nice! hahahahaha

கிரி said...

//நான் சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறவன். வெளிய சாப்பிட போறதுன்னா, சூப்பரா சாப்பிடனும்'ன்னு, வண்டிய எடுத்துட்டு எவ்ளோ தூரம்'னாலும் போகுபவர்களில் நானும் ஒருவன்.//

நானும் தான் :-))) பஸ் ல கூட போயிட்டு வந்துடுவேன்.

சிங்கை ல எல்லோரும் செம கட்டு கட்டுவாங்க அதுவும் விடுமுறை நாள்ல சொல்லவே வேண்டாம். இங்கே இருக்கிற விரைவு உணவகங்கள் ரொம்ப பிரபலம் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கும்.

ஏங்க ஊர் கோபியில உணவகங்கள் பிரபலம் கிடையாது..பிரபலம் என்றால் வீச்சு பரோட்டாவும் கொத்து பரோட்டாவும் தான் எனக்கு பிடித்தது ;-)

மற்றபடி எந்த வீட்டிற்கு சென்றாலும் சாப்பிட கூறி ஒரு வழி ஆக்கி விடுவார்கள் விருந்து என்றால் கேட்கவே வேண்டாம், அதிலயும் அசைவு விருந்து என்றால் அன்பு தொல்லை தாங்க முடியாது.

எனக்கு சென்னை என்றால் YMIA மெஸ் தான் எல்லாமே..கிட்டத்தட்ட 11 வருடங்கள் அங்கே தான் சாப்பிட்டேன்...கட்டுப்பாடற்ற உணவு என்பதால் பலரும் கட்டு கட்டுன்னு கட்டுவாங்க ..ஒரு சிலர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு பசி போய்டும். மயிலாப்பூர் ல் இருந்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த YMIA மெஸ் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

கடைசியாக சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Indian said...

//இதுப்போல், அனைத்து தகவல்களும் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பது போல் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை//

http://chennai.burrp.com/

http://www.mouthshut.com/Search/search.php?category=0&data=restaurant&stype=product

சரவணகுமரன் said...

// வீச்சு பரோட்டாவும் கொத்து பரோட்டாவும் தான் எனக்கு பிடித்தது ;-)
//

எனக்கு ரொம்ப பிடிச்சதும் அதுதான்...

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி indian

Unknown said...

சாப்பிட நல்ல ஹோட்டல் கிடைக்கவில்லையா ?வாருங்கள் இங்கே
WWW.TAMILKUDUMBAM.COM
வீட்டில் இருந்தபடியே சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்

பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

சரவணகுமரன் said...

நன்றி தமிழ் குடும்பம்.

Anonymous said...

காந்தி உணவகம் லிட்டில் இந்தியா பெருவிரைவு பேரூந்து நிலையம் அருகில், சிங்கப்பூர். மீன் குழம்பு சுப்பரா இருக்கும் !!!

Bhuvan said...

its kuniraman stores in royapuram which sells mango ice cream

Anonymous said...

I need to send a major update for your google spread sheet. the update is in Excel form.

Can you please send a test e-mail to yarooruvann@gmail.com so that i will reply to your id.

Regards

- யாரோ ஒருவன்

Anonymous said...

innikkuth thaan kumaran kudil paarthean. nallarukku. thamizh type seiyya theriyalai.

visil adichaan kunjukal pathina ungal karuthu 1000% nijam... ilaya samudhaayam thirunthumunnu nenachhaa...mhm... sari vidunga adhu oru tharkaliga vaelai vaaippu thaanae ..??
maatra mudiyathatha nenachu mandaya pottu udachi enna pandradhu??

Saappaattu vishayathukku varuvom...erode pathi therinjavanga kongu parotta pathi theriyaama irukka maattaanga...perunhurai roadla rasu maruthuvamanaikku ethirila irukku..saappittu paarunga..!!

THIRUMATHI MALAR SELVAM, MADHARASA PATTINATHIL IRUNDHU.
crowndsp@gmail.com

பிரதீபா said...

@கிரி: என்னன்னா, நம்மூர்ல உணவகம் இல்லைன்னு சொல்லீட்டீங்க? நீங்க எப்பவும் வீட்லயே தான் சாப்பிடறீங்க போல.. எங்கப்பாவும் நானும் வீட்ல எங்கம்மா சமைச்சு வெச்சத வேண்டாம்ன்னு சொல்லீட்டு நைசா சில மெஸ்க்கு போவோம்,
@சரவணகுமரன் :
கோபி ஆர்ச் பக்கத்துல பழைய RTO ஆபீஸ் பில்டிங்கல இருக்குங்க அம்மன் மெஸ். நான்வெஜ் அடிதூள் கெளப்பும். அப்புறம் சச்சிதானந்தினி மெஸ், மார்க்கெட் பக்கத்துல இருக்கு. எப்பப் பாரு கெழங்கு பொரியல் போடற ஹோடெல்க்கு நடுவுல, இந்த மெஸ் மத்யானம் சாப்பாடு தனித்துவம். ஹெல்த்தியான ரெண்டு பொரியல், தினம் ரெண்டு ரசவகைன்னு அசத்துறாங்க. சாப்ட்டுட்டு மனசார பாராட்டுவோம். வீட்டு சமையல் போல அருமையான தரம். நான் கேரண்டிங்க !!

இந்த ரெண்டு ஹோடெலையும் லிஸ்ட்ல சேத்துகோங்க ப்ளீஸ்..