Thursday, October 9, 2008

நோகாமல் நொங்கு தின்ன ரிலையன்ஸ்

கேபிள் டிவி'யை ஓய்க்கும் வண்ணம், தினமொரு நிறுவனம் டிடிஹைச் சேவையை தொடங்கிவருகிறது. முதலில், டிஷ் டிவி இந்த சேவையை இந்தியாவில் தொடங்க, பின்பு டாட்டா ஸ்கை அதற்கு போட்டியிட்டு கொண்டு வந்தது. கலாநிதி மாறனும் சன் டிடிஹைச் ஆரம்பிக்க, ஒரு தொழிலையும் விட்டு வைக்காத ரிலையன்ஸ், பிக் டிவி டிடிஹைச் சேவையை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தது.

இந்த போட்டியால், 3000 ரூபாய் என்ற அளவில் இருந்த இந்த சேவையின் விலை, தற்போது, ஆயிரம் ரூபாய்க்கு இறங்கிவுள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக இன்னொரு நிறுவனமும் கோதாவில் இறங்குகிறது. அது, செல்போன் சேவையில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல்.

ஏர்டெல், கடந்த சில வாரங்களாக "வித்தியாசமாக பண்றோம்"ங்கற நினைப்புல டிவி'ல ஒரு விளம்பரம் ஒளிபரப்பிட்டு இருந்தாங்க. ஒரு சிவப்பு கலர் சோபாவை காட்டி, "வீட்டில் சந்திக்கிறோம்" என்ற அர்த்தத்தில் "See you at home." என்ற லைனை காட்டி கொண்டிருந்தார்கள். அதாவது, பாக்குறவுங்க எல்லாம், இது என்ன? இது என்ன?ன்னு எதிர்ப்பாக்கனும்மாம்.

இதுக்கு ஆப்பு வைக்கும் விதமா, கொஞ்சம் நஞ்சம் சேர்ந்திருந்த எதிர்ப்பார்ப்புகளையும் அள்ளிட்டு போற மாதிரி, ரிலையன்ஸ்காரனுங்க ஒரு விளம்பரம் போடுறாங்க. அதே சிவப்பு சோபாவை காட்டி, அதே லைனை (“See you at home.”) போட்டு, கடைசில ரிலையன்சின் சேவையை காட்டிட்டாங்க. டிவி'ல பார்த்து எதிர்ப்பார்த்தவங்களும், "ஒ! இது ரிலையன்சுக்கு விளம்பரமா?"ன்னு போயிட்டாங்க. அதாவது, ஒரு வாரமா, இந்த விளம்பரத்துக்கு ஏர்டெல் பண்ணிய செலவின், உழைப்பின் பலனை, ரிலையன்ஸ், ஒரு நைட்டுல பண்ணுன விளம்பரத்தால அள்ளிட்டு போயிட்டாங்க.

இதை, சட்டப்படி தப்புன்னும் சொல்ல முடியாது. ஏன்னா, ஏர்டெல் எந்த பிராண்ட், டிரேட்மார்க் சிம்பளையும் விளம்பரத்துல காட்டல. இப்ப, போனது போதும்டா, முழு விளம்பரத்தையும் போட ஆரம்பிச்சிடாங்க. ஒரே விளம்பரத்துல, கரீனா கபூர், ஸைப் அலி கான், ஏ. ஆர். ரஹ்மான், கவுதம் கம்பீர், ஜாகிர் கான், மாதவன், வித்யா பாலன் எல்லோரும் வாராங்க.

கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி இந்த மாதிரி தான், பெப்சியும், கோகோ கோலாவும் அடிச்சிக்கிட்டாங்க. நம்ம ஊரு, சன் மியூசிக், இசை அருவி விளம்பரங்களிலும் இந்த சண்ட இருக்கு. இனி, இந்த மாதிரி டீசர் விளம்பரம் போடும் போது, கொஞ்சம் கவனமா போடுவாங்க.

10 comments:

rapp said...

me the first?

Kalaiyarasan said...

விளம்பரம் செய்வதாக சொல்லி இப்படி வீணடிக்கிறார்கள். நிறைய பணத்தை விளம்பரத்திற்கு செலவிடுகிறார்கள். கடைசியில் செலவை நமது தலையில் கட்டிவிடுகிறார்கள்.

Anonymous said...

Do you remember there was a ad featuring dance of hrithik roshan and sachin.. the product never came..

சரவணகுமரன் said...

ஆமாம், rapp. நீங்கதான் பர்ஸ்ட்டு :-)

வருகைக்கு நன்றி.

சரவணகுமரன் said...

ஆமாம் கலையரசன். எல்லோரும், ஒரே பொருளை விற்பனை செய்தாலும், விளம்பரங்கள் தான் வேறு, வேறு.

ஆனா, நமக்கும் விளம்பரம் கம்மியா உள்ள பொருள வாங்க, அவ்ளோ சீக்கிரம் மனசு வராதே?

சரவணகுமரன் said...

தாமோதரன், அது ஐ.பி.எல். மும்பை இந்தியன்ஸ் டீமுக்கான விளம்பரம்'ன்னு நினைக்கிறேன்.

முரளிகண்ணன் said...

super post.

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

Unknown said...

அப்ப எதில விசய் படம் பாக்குறது? இல்லாட்டி நான் செத்திருவன்.

Anonymous said...

"நோகாம நோன்பு கும்பிடரத" கேள்விபட்டிருக்கேன். ஆனா " நோகாம நொங்கு தின்னரத" இப்போதான் கேள்விபடறேன்