Thursday, May 27, 2010

பார்பேக்யு நேஷன்

'பார்பேக்யு நேஷன்' (Barbeque Nation) என்றொரு ரெஸ்டாரெண்ட், இந்தியா முழுக்க கடை விரித்திருக்கிறார்கள். பெங்களூரில் மட்டும் மூன்று இடங்களில் இருக்கிறது. இவர்களுடைய ஸ்பெஷல் - க்ரில்டு உணவு என்றழைக்கப்படும் ‘கம்பியில் சொருகி அனலில் காட்டிய’ உணவு வகைகள். சைவ, அசைவ வகைகள் இரண்டையுமே இந்த வகையில் பரிமாறுகிறார்கள். பப்ஃபே சிஸ்டம்.இது நிறைய ரெஸ்டாரெண்டுகளில் இருப்பது தான். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு டேபிளிலும் ஒரு அடுப்பை வைத்திருக்கிறார்கள். நாம் டேபிளில் உட்கார்ந்தவுடன், ஒரு கனல் சட்டியை வைத்து அடுப்பை உருவாக்கிவிடுகிறார்கள். பிறகு, ஒவ்வொரு ஐட்டமாக அதில் வைக்கிறார்கள். எல்லாம் ஏற்கனவே சமைக்கப்பட்டது தான். இருந்தாலும், ஒரு ஷோவுக்காக இப்படி.பக்கத்திலேயே சின்ன சின்ன கிண்ணங்களில், பல்வேறு சாறுகள் வைத்திருக்கிறார்கள். கூடவே, பெயிண்ட் அடிக்கும் சின்ன ப்ரெஷ்கள். ப்ரெஷ் மூலம் கம்பியில் சொருகி இருக்கும் ஐட்டங்களுக்கு பெயிண்ட் அடித்து, பெயிண்ட் அடித்து சாப்பிடலாம்.

அன்லிமிடட் என்பதால், கம்பிகள் வந்துக்கொண்டே இருக்கிறது. பேபி கார்ன், மஷ்ரூன், காலி ப்ளவர், வெள்ளரி, பன்னீர் போன்றவை சைவப்பிரியர்களுக்கும், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை அசைவப்பிரியர்களுக்கும் கம்பியில் பரிமாறப்படுகிறது. நண்டு கேட்டால், இப்படி இல்லாமல் தட்டில் கொடுக்கிறார்கள். கூடவே ஒரு கொறடும். (அதான் ஸ்க்ரூ கழட்ட உதவுமே?)இதிலேயே பாதிப்பேருக்கு வயிறு நிறைந்துவிடும். ஆனால், இதற்கு மேல் தான் மெயின் கோர்ஸ். பிறகு டெசர்ட்ஸ். அதுகளும் இதற்கு சளைத்தல்ல. இருப்பினும் ஸ்பெஷல் - கம்பியில் கோர்த்து வைத்த ஐட்டங்கள் தான்.

வாரயிறுதிகளில் ஹவுஸ்புல்லாகவே இருக்கிறது. புக் செய்யாமல் போக முடியாது. மற்ற நாட்களில் எப்படி என்று தெரியவில்லை.

பில்லை பார்த்தால், அனலில் காட்டிய உணவை விட, பர்ஸ் தீய்ந்து போய் இருக்கும். இருந்தாலும், கொடுக்கிற சாப்பாட்டுக்கு பரவாயில்லை என்கிறார்கள் சிலர்.

ஆனாலும், இப்படி சாப்பிடுவது என்னைப் பொறுத்தவரை அராஜகம் தான். ஆபிஸில் டீம் அவுட்டிங் கூப்பிடுகிறார்கள் என்றால் ஓகே. ஆனால் அப்படி சென்ற பிறகு, உங்கள் வீட்டினரையும் கூட்டி செல்ல தோன்றும்.

மேலும் தகவல்கள் இங்கே.

பின்குறிப்பு - ரொம்ப பிசியாக இருந்ததால் புகைப்படங்கள் அதிகம் எடுக்கவில்லை!

.

9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப காரமான பதிவு

ஷர்புதீன் said...

i went onetime ( chennai bramch)
delecious (even i eat veg during that time)

துளசி கோபால் said...

சென்னை தி நகரில் ஒன்னு இருக்கு மாடி ஏறணும். போனோம்.

குடிக்க ஒரு ஜூஸ் கூட ஆன் த ஹௌஸ் கொடுக்கறாங்க.

சாப்பிடும் தெம்பு இருந்தால் கொடுக்கும் காசை நியாயப்படுத்தலாம்.

என்னைப்போன்ற ஆளுக்கு.....

போயிட்டுப்போகுது. இதுவும் ஒரு அனுபவம்!

டிஸ்ஸர்ட்டு பரவாயில்லை.

Arun said...

Arun,

Anne, Barbeque nation sappadu nalla irukkadhunne ...

Indha maadiri kadaikellam padhivu podarathu " Pattikattan Muttai kadaiya " partha maathiri thonudhu....

Let us talk about some real cuisine ....

Regards
Arun R

Arun said...

Anne,

Barbeque nation wastunnu vevaram therinjavannukku theriyum ... their buffet is not worth.

Indha maadhiri kadaikellam pathivu podarathu pattikaattan muttai kadaiya partha madhiri mildaa thonudhunne ...

Let us talk about some real cuisine and culinary experience.

Regards
Arun R

சரவணகுமரன் said...

வாங்க ரமேஷ்

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி ஷர்புதீன்

சரவணகுமரன் said...

துளசி அம்மா,

ஆமாம். பட்டினி கிடந்து, காய்ஞ்சு போயி போனா அடிச்சு நவுட்டலாம். :-)

சரவணகுமரன் said...

அருண்,

என்ன பாஸு, இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க? :-)

ஆனா, நான் உண்மையிலேயே இதுக்கு முன்னாடி டேபிளில் அடுப்பு வைத்து பார்த்தது கிடையாது. நீங்க பார்த்திருக்கலாம்.