Friday, October 5, 2012

இதய கோவில்

மணிரத்னத்தின் படங்களை பட்டியலிட்டால், பலரால் விடுபடும் படம் இதய கோவிலாகத்தான் இருக்கும்.


1985இல் ஒரு சாதாரண இயக்குனராக மணிரத்னத்தின் இயக்கத்தில் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளிவந்த படம் - இதய கோவில். இதயம் ஒரு கோவில் என்ற டைட்டில் போடுவது - எம்ஜியாருக்கு.

இப்ப மாதிரி யாரை கூப்பிட்டாலும் வந்துவிடும் மவுசு, அன்று இல்லாததால், எண்பதுகளின் ரெகுலர் நடிகர்களை மணிரத்னம் வைத்து எடுத்த படம். ஆக்சுவல்லி, மணிரத்னத்தை வைத்து கோவைத்தம்பி எடுத்த படம் என்று சொல்ல வேண்டும்.

கதை ரொம்ப சாதாரணக்கதை. சுமாரான மேக்கிங். பாடல்கள் மட்டும் தாறுமாறு.

கல்லூரியில் படிக்கும் ராதா, ஒரு தேர்தல் போட்டிக்காக பாட்டு நிகழ்ச்சி நடத்த, பாடகரான மோகனை அழைக்க, அவர் வீட்டிற்கு செல்கிறார். மோகனோ, ஒரு மொடாக்குடிக்காரர். மோகனுடன் சண்டையில் ஆரம்பிக்கும் பழக்கம், அவருடைய ப்ளாஷ்பேக் பற்றி தெரிந்துக்கொள்ள உதவுகிறது. ப்ளாஷ்பேக்கில் கிராமத்து பாடகரான மோகனும், அம்பிகாவும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு சினிமா சான்ஸ் தேடி மோகன் வர, வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து அம்பிகா மோகனைத் தேடி வர, வரும் இடத்தில் ரவுடிகள் விரட்ட, அவர்களிடம் இருந்து கற்பைக் காப்பாற்ற, தூக்கில் தொங்குகிறார் அம்பிகா. இது மோகன் குடிக்காரரான சரித்திரம்.

ப்ளாஷ்பேக் கேட்டு ராதாவுக்கு மோகன் மேல் லவ் வர, ஏற்கனவே கல்லூரியில் கபில்தேவ் ராதாவை, ஒரு தலையாக காதலிக்க, யார் யாரை கைப்பிடிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்ல ஆசை தான். ஆனால், இனி நீங்கள் எங்கே வெள்ளித்திரையில் காண? நானே சொல்கிறேன்.

மோகன் ராதாவிடன் ஒரு சமரசம் பேசுகிறார். நீ கபில்தேவை கட்டிக்கோ. நான் சரக்கடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று. டீல் பெரிதாக பிடிக்காவிட்டாலும், ராதா சம்மதித்து, தாலி கட்டும் சமயம், விஷம் குடித்து, மோகனும் பல்ப் கொடுக்கிறார். கபில்தேவுக்கு பெரிய பல்ப். பிறகென்ன? அம்பிகா சமாதிக்கு பக்கத்தில் மோகன் தனக்கென்று வாங்கிப்போட்டிருந்த இடத்தில், ராதாவுக்கு சமாதி எழுப்பி் இளையராஜாவின் ஹிட் சாங்கை பாட, வணக்கம் போடுகிறார்கள். ஏ பிலிம் பை மணிரத்னம் என்பதெல்லாம் இல்லை.

மோகன், மைக் மோகன் என்றைழைக்கப்பட, இப்படம் ஒரு முக்கிய காரணம். பாடகர் என்பதால், மைக்கும் பிறகு பாட்டிலும் கையுமாக அலைகிறார்.

மணிரத்னத்திற்கு ‘சூர்யா’ என்ற பெயரில் என்ன ஈர்ப்போ? தளபதியில் ரஜினியின் பெயர், சூர்யா. சரவணன் என்ற சிவகுமாரின் புதல்வருக்கு, மணிரத்னம் வைத்த பெயர், சூர்யா. இந்த படத்தில் ராதாவின் பெயரும் சூர்யா.

இந்த கபில்தேவ் என்ற பெயரை டைட்டிலில் பார்த்ததும், இவர் அபிலாஷாவுடன் இணைந்து ஒரு மேட்டர் படத்தில் நடித்திருக்கிறார் என்று எந்த காலத்திலோ படித்த பத்திரிக்கை துணுக்கு, ஞாபக அடுக்கில் இருந்து விழுந்தது. என் வீணா போன ஞாபக சக்தியை மெச்சுவதா, மனித மூளைக்கு இருக்கும் ஆற்றலை எண்ணி வியப்பதா என்று தெரியாமல் படத்தை குழப்பத்துடனேயே பார்த்தேன். கபில்தேவ், தற்போதைய அஜ்மல் போலவே இருக்கிறார்.

விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் காம்பினேஷன் படங்களில் ஒரு பாடல், படம் முழுக்க பல இடங்களில் வருமே? அந்த படங்களுக்கு இது இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம்.

எத்தனை முறை வந்தாலும், பாடல்கள் சலிக்கவில்லை. இதயம் ஒரு கோவில், கூட்டத்திலே கோவில் புறா, யார் வீட்டில் ரோஜா, வானுயர்ந்த சோலையிலே, நான் பாடும் மௌன ராகம், பாட்டு தலைவன் பாடினால்... என்று இந்த படப்பாடல்கள் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. என் மனதிற்கு நெருக்கமான பாடல்கள். ஏனென்று தெரியவில்லை. பால்யத்தில், பலமுறை கேட்டதால் இருக்கலாம். போலவே, உதயகீதமும்.

பாடல்கள், இசை பற்றி நிறைய சொல்லலாம். அது மகேந்திரன் ஏரியா என்பதால், அதை விடுகிறேன்.

 
இயக்கம் - மணிரத்னம் என்று போடாவிட்டால், இது மணிரத்னம் படம் என்று சொல்ல முடியாது. தெரிந்து பார்த்தால், ஆங்காங்கே சொற்பமாக தெரியும். உதாரணத்திற்கு, காலேஜ் பாடலுடன் படம் ஆரம்பிப்பதை சொல்லலாம்.

கதை - செல்வராஜ். வசனமும் திரைக்கதையும் - வல்லபன். அதனால், மணிரத்னத்தின் ட்ரெட்மார்க்கான சுருக்-நறுக் வசனங்கள், இதில் இல்லை. விக்ரமன் டைப் ’லாலா லாலா’ காதல் தத்துபித்து வசனங்கள் தான். ஒளிப்பதிவிலும் ஸ்பெஷலாக சொல்ல எதுவும் இல்லை. லொக்கேஷன்களில் சின்னதாக இயக்குனர் தெரிகிறார். படத்திற்கு சம்பந்தமில்லாத, கவுண்டமணியின் 80களின் ரெகுலர் காமெடி ட்ராக்கிற்கு, வழக்கம்போல் வீரப்பன் வசனமெழுதியிருக்கிறார்.

டைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன்.

.

15 comments:

கிரி said...

//மணிரத்னத்தின் படங்களை பட்டியலிட்டால், பலரால் விடுபடும் படம் இதய கோவிலாகத்தான் இருக்கு//

மற்றவர்களுக்கு எப்படியோ! என் விசயத்தில் சரி :-)

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல்களுக்காக பலமுறை பார்த்ததுண்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட பாவிகளா நான் இது ஆர். சுந்தராஜன் படம்ன்னுதான நினைச்சேன்

Nat Sriram said...

நைஸ்..எந்த நம்பிக்கைல கோவைத்தம்பி இவ்வளவு பெரிய காஸ்ட்டோட ஒரு படத்தை மணிக்கு கொடுத்தார்?

சரவணகுமரன் said...

வாங்க கிரி. ஓ! நீங்களுமா?

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

சரவணகுமரன் said...

ரமேஷ், இது சூப்பருங்க!!!

சரவணகுமரன் said...

நடராஜ், இதற்கு முன் வந்த மணிரத்னத்தின் படங்களை பார்த்து வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

sakthipriya said...

enoda favourite songs intha padithil elame. adikadi naan kettkum song "idayam oru kovil" song than SPB and raja sir erandu perume paadiyuruppanga. super song. anytime my favourite song

நாடோடி இலக்கியன் said...

//டைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன்.//

இப்படி கமெண்ட் போடலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க.

சேக்காளி said...

//டைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன். R.சுந்தர்ராஜன் இயக்கிய "என் ஜீவன் பாடுது" படம் பாருங்கள்.இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் தெரியும்.

சேக்காளி said...

டைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன்.

சரவணகுமரன் said...

சக்திப்ரியா,

யாருக்கு தான் பிடிக்காது - இந்த படத்தின் பாடல்களை?

சரவணகுமரன் said...

வாங்க நாடோடி இலக்கியன்.

ஹி ஹி...

சரவணகுமரன் said...

ஓ! அதனால்தானோ, சேக்காளி...