Sunday, December 30, 2007

பெங்களுர் அருகே ஒரு மலையேற்றம்


அலுவலக நண்பர்கள் எங்காவது trekking போகலாம்னு சொல்லும்போது களவாரஹள்ளி (kalavaarahalli) என்ற இடம் தெரியவந்தது. இது அவ்வளவாக யாரும் அறிந்த இடம் கிடையாது.





பெங்களூரில் இருந்து 2 மணி நேரம் தாம் ஆகும். காலை நாலு மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு சேருவது இயற்கையை அனுபவிக்க சரியான நேரம்.





பெங்களூருக்கு வடக்கே ஹெப்பல் பாலத்தை கடந்து சென்றால் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் சிக்பெல்லாபூர் (Chikkabellapur) என்ற ஊர் வரும். அங்கிருந்து இடது பக்கம் திரும்பி பாபங்கினி மடம் (Papagni mutt) என்ற இடத்தை அடைய வேண்டும். இந்த இடத்திற்கு கேட்டு கேட்டு தான் செல்ல வேண்டும்.





அந்த ஊரில் ஒரு சிவன் கோவில் உள்ளது. அங்கு வண்டியை விட்டு விட்டு அதற்கு பிறகு மலையேறவேண்டியது தான்.





இங்க என்ன விசேஷம் என்றால் மலை உச்சியை அடைந்த பிறகு நாம் மேகங்களுக்கு மேல் இருப்போம். அங்கிருந்து சுற்றிலும் பார்ப்பது, நிஜமாகவே கண் கொள்ளாக் காட்சி தான்.





இங்க பனி மூட்டமா தெரியிதே... இந்த போட்டோ எல்லாம் எடுத்த டைம் காலை 10 மணி....



ஆர்வ கோளாறுல மட மட என்று யார் கிட்டயும் கேட்காம ஏற ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் தான் தெரிந்தது, நாங்க ஏறினது தப்பான வழின்னு.



அதுக்கு அப்புறம் உக்கார்ந்து, உருண்டு, செங்குத்தா எல்லாம் ஏறி ஒரு வழியா உச்சியை அடைந்தோம். :-)



மலை ஏறுனதுல வேர்த்தாலும் இயற்கையோட AC காத்துல ஒண்ணும் தெரியல.



எது வேணுமென்றாலும் நாம தான் கொண்டு போகணும். அங்க தண்ணீர் உட்பட எதுவும் கிடைக்காது.



பெங்களுர் பசங்க picnic மாதிரி போயிட்டு வர நல்ல இடம். உடம்புக்கு கொஞ்சம் வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும்.

1 comment:

கருப்பன் (A) Sundar said...

நாங்கள் கூட 3 வருடங்களுக்கு முன்பு நந்தி ஹில்ஸ் பக்கத்தில் உள்ள ஒரு மலை மீது ஏறினோம். அதுவும் ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. நாங்கள் உள்ளூரில் இருந்து சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டோம் அதனால் இந்த பதை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இல்லை.