Tuesday, September 9, 2008

தியானக் கடல் - கன்னியாகுமரி (புகைப்பட பதிவு)

கன்னியாகுமரி, திருவாங்கூர் மகாராஜாவின் ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வந்த குமரி ஊர்.



விவேகானந்தர் நீந்தி சென்ற பாறைக்கு நாம் "பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின்" படகில் செல்லலாம். வேறு எங்கு "பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்" செயல்படுகிறது என்று தெரியவில்லை. சேது சமுத்திர திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வேண்டுமானால் கழகத்திற்கு நிறைய வேலைகளும், 'வருவாயும்' வரலாம்!



விவேகானந்தர் பாறையை காணும் ஆர்வம், பக்கத்தில் உள்ள தமிழர்களை விட, தூரத்தில் உள்ள வட இந்தியர்களுக்கு தான் அதிகம் உள்ளதாக தோன்றுகிறது.



சூரியனின் வெளிச்சத்தாலும் கல்லின் நிழலாலும் செயல்படும் இயற்கையான கால கடிகாரம் இது.



ரொம்ப தூரத்தில் சென்ற படகு. என் கேமராவின் அதிகப்பட்ச ஜூம் பயன்படுத்தி எடுத்த போட்டோ. அதனால் மங்கலாக தெரிவது போல் உள்ளது. இந்த புகைப்படத்தை இன்னும் ஜூம் செய்து பார்த்தால், கடலுக்கு அப்பால், ஆற்காடு வீராச்சாமி, ஸாரி, வீராஸ்வாமி மின்வெட்டுக்கு பழியை போட்ட காற்றாடிகள் தெரியும்.



ரொம்ப குஷியா இருக்கும் போது, நாம நம்மை மறந்து, சுற்றி இருக்குறதா மறந்து ஆட ஆரம்பிச்சிடுவோம்'ன்னு இப்ப கொஞ்ச நாள் முன்னாடி எதிலயோ படிச்சேன். இந்த பாப்பாவும் பயங்கர குஷியா இருக்கு போல! பின்ன, கடல்னாலே குஷிதான்... கடலுக்கு நடுவேன்னா கேட்கவா வேணும்? :-)



நான் போன டைம், நல்ல வெயில். பொறுமையா நடக்க முடியலை. இந்த வெள்ளை கலர் பெயிண்ட் அடிச்சி இருக்காங்களே… இதுதான் வெறுங்கால்ல நடக்க கொஞ்சம் உதவியா இருந்தது.



விவேகானந்தர் பாறையை திறந்து வைத்தது, அப்போது ஜனாதிபதியாக இருந்த வி.வி. கிரியும், முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும். திறந்து வைத்து இந்த வாரத்தோடு 38 வருடங்கள் ஆகிறது.



அதேப்போல் 1975 இல் திருவள்ளுவர் சிலையை குமரிமுனையில் அமைக்க முடிவெடுத்து அறிவித்தது, கலைஞர். பின்பு, 1979 இல், எம்.ஜி.ஆர் தலைமையில் மொரார்ஜி தேசாய் அடிக்கல் நாட்டினார். திரும்ப, இருமுறை கலைஞர் (1989 & 1996) பணிகளைத் தொடங்கி வைத்து, முடிவில் இந்த நூற்றாண்டின் முதல் நாளில், சிலையைத் திறந்து வைத்தார்.



திருவள்ளுவர் ‘கதை’யை சிலைக்கு கீழே விற்றுக் கொண்டு இருந்தார்கள். அதை இங்கு சென்று காணலாம். :-)

17 comments:

rapp said...

me the first?

rapp said...

அந்தக் குழந்தை டான்ஸ் ஆடுவதற்கு போட்டிருந்த வர்ணனை சூப்பர். எல்லாப் படங்களும் அருமை:):):)

சரவணகுமரன் said...

rapp,

you are the first... and the only one... :-)

சரவணகுமரன் said...

நன்றி... rapp

Anonymous said...

புகைப்படங்கள் மிக அருமை தொடரட்டும் தங்கள் பயணம் ...

Anonymous said...

புகைப்படங்கள் மிக அருமை, தொடரட்டும் தங்கள் பயணம் ...

சரவணகுமரன் said...

நன்றி அனானி

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் விளக்கங்களும் அருமை.

மூன்றாவது படத்தை வேறு கோணத்தில் எனது http://tamilamudam.blogspot.com/2008/09/pit.html பதிவிலும், எட்டாவதை அதே கோணத்தில் http://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html பதிவிலும் நேரம் இருக்கையில் பாருங்கள் குமரன். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

ஜோ/Joe said...

ஆகா ! நம்ம ஊருக்கு போயிருந்தீங்களா !மகிழ்ச்சி!

சரவணகுமரன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

உங்கள் கவிதையுடன் கூடிய படங்கள் அனைத்தும் அருமை. ஏற்கனவே இதை உங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன்.

சரவணகுமரன் said...

ஆமாங்க ஜோ. உங்க ஊரு சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

//சூரியனின் வெளிச்சத்தாலும் கல்லின் நிழலாலும் செயல்படும் இயற்கையான கால கடிகாரம்//

இதே போல Sun Rise Calendar ஒன்றும் இருந்தது தரையில் வரையப் பட்டு. இப்போதும் உள்ளதா தெரியவில்லை. உங்களிடம் காண்பிப்பதற்காகவே இன்று flickr-ல் ஏற்றினேன்:
http://www.flickr.com/photos/27182698@N05/2852177703/in/photostream/

சரவணகுமரன் said...

ராமலஷ்மி,

அது இன்னமும் உள்ளது. நானும் அதை பார்த்தேன். நான் எடுத்த படத்துடன் உங்கள் படத்தை ஒப்பிட்டு பார்த்தால், இப்பொழுது கொஞ்சம் வண்ண மாற்றம் உள்ளது.

உங்கள் படங்கள் அனைத்தும் அருமை. :-)

RATHNESH said...

//சேது சமுத்திர திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வேண்டுமானால் கழகத்திற்கு நிறைய வேலைகளும், 'வருவாயும்' வரலாம்!
//

இந்த வரிகள் உள்குத்து தானே?

புகைப்படங்கள் அருமை.

"நீங்களும் எடுத்திருந்தீங்களே" என்று என் வீட்டில் திட்டு வாங்கிக் கொடுத்ததில் சந்தோஷமா?

சரவணகுமரன் said...

rathnesh,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//இந்த வரிகள் உள்குத்து தானே?//

ஹி... ஹி... :-)

உங்கள் பதிவு, நான் தொடர்ந்து படித்து வருபவைகளில் ஒன்று. உங்கள் பின்னூட்டம், மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

ISR Selvakumar said...

வெவ்வேறு கோணங்கள்,
வெவ்வேறு தொலைவுகள்,
நன்றாக இருக்கிறது.

எவரையும் நேரில் ஒரு முறை பார்த்துவிடத் தூண்டும் படங்கள்.

சரவணகுமரன் said...

நன்றி selvakumar