Tuesday, October 7, 2008

சமைக்கலாம்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

இந்த வாரம், வாரமலரில் வந்த ஒரு கேள்வி.

அன்புள்ள மேடம்,

நமஸ்காரம். எம்.சி.ஏ., படித்து விட்டு, நான் ஐ.டி.,யில் வேலை பார்க்கிறேன். திருமணமாகி, அவனும் என்னுடன் தான் வேலை பார்க்கிறான். காதல் திருமணம் தான். எனக்கு 28 வயதாகிறது; அவன் என்னை விட ஒரு வயது மூத்தவன். மேடம், நான் மிக, மிக செல்லமாக வளர்ந்தவள். கோவையில் என் பெற்றோருக்கு ஆடம்பரமான பங்களா, ஆள் படை எல்லாம் இருக்கிறது. இன்று வரையில் கோவை பங்களாவின் சமையலறை எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஒரு காபி வேண்டுமானாலும் அம்மா, நான் இருக்கும் இடம் தேடி காபியை வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்து அனுப்புவார்.

திருமணத்துக்குப் பிறகு, எங்களுடன் சிறிது காலம் என் மாமியார் வந்து தங்கியிருந்தார். அவர் இருந்த வரையில் சமையல் ஒரு பிரச்னையாக இல்லை. இருந்தாலும், "ஊரிலிருந்து சமையலுக்கு ஆள் வரவழைக்கிறேன்!' என்று சொன்னேன். "எதற்கு வீண் செலவு... இரண்டு பேருக்கு என்ன தொலையாத சமையல்?' என்று தடுத்து விட்டார் என் மாமியார். என் கணவன் சரியான அம்மா பிள்ளை. அப்படியே ஆமாம் போடுகிறான். இப் பொழுது ஊருக்குப் போய் விட்டார் மாமியார். "சமையல் ஆளுக்கு வேண்டுமானாலும் நாங்களே சம்பளம் கொடுத்து விடுகிறோம். நீ சிரமப்பட்டால் எனக்கு தாங்க முடியாது!' என்கிறார் அப்பா... "உப்போ, காரமோ, எதையோ போட்டு சமைத்துப் பழகு. நானும் உனக்கு உதவியாக இருப்பேன். வேண்டுமானால் வேலைக்காரி வைத்துக் கொள்... சமையலுக்கு யாரும் வேண்டாம்!' என்கிறான் இவன்.

இதனாலேயே எங்கள் இருவருக்கும் இடையே தினமும் சண்டை... இவனுக்கு தோசை, இட்லி எல்லாம் வேண்டும்; வெறும் ரொட்டி இறங்காது. இவன் அம்மா, நன்றாக நாக்கை வளர்த்து வைத்திருக்கிறார். சமையலறையில் காலையில் இரண்டு மணி நேரம், இரவு இரண்டு மணி நேரம் வீணாக்குவது கிரிமினல் வேஸ்ட் இல்லையா? மாலையில் வீடு திரும்பும் முன் ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டு வரலாம் என்றால், "என் உடம்புக்கு ஆகாது!' என்கிறான். தினமும் வீடு வந்து சேரவே இரவு 9.00 மணிக்கு மேலாகி விடுகிறது. வந்த பிறகும், "லாப் டாப்' பைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியிருக்கிறது. காலையில் சமைத்த சோறில் மோரை ஊற்றிச் சாப்பிட எனக்கே பிடிக்கவில்லை. அவனுக்கும் இறங்கவில்லைதான். வீம்புக்காகத் தின்கிறான். இவனை எதற்காக கல்யாணம் செய்து கொண்டேன் என்று வருந்துகிறேன்... இதை அவனிடமே வாய் விட்டுச் சொல்லியும் விட்டேன். அவனோ, "இதே கேள்வியைத்தான் நானும் எனக்குள் கேட்டுக் கொள்கிறேன். நமக்குள் கெமிஸ்ட்ரியே ஒத்துப் போகவில்லை!' என்கிறான்.
என்ன செய்வது? பிரிந்து விடவா? பதில் தேவை.

இப்படிக்கு,
அன்பு மகள்.


இதற்கான அனுராதா ரமணனின் பதிலை இங்கே காணலாம்.

ஸோ, பீ கேர்பூல்...

இவரது எண்ணம் இங்கே கேள்வியாக வெளிப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணங்கள், இன்னும் எங்கெல்லாம் செயல் வடிவம் பெற்றதோ?


இன்னும் சில ஆண்டுகளில், இந்த பகுதியிலேயே "அவன் சமைக்கிற சாப்பாட்டுல உப்பே இல்ல. டைவர்ஸ் பண்ணிடலாமா?"ன்னு கேள்வி வரலாம். அப்ப, பிளாகுல இந்த மாதிரி காப்பி பேஸ்ட் பண்ணி பதிவு போட, ஒரு ஆணாக, எனக்கு நேரமும், உரிமையும் இருக்குமான்னு தெரியல. :-)

நன்றி : தினமலர் - வாரமலர்.

6 comments:

ambi said...

ஹிஹி, நீங்க சொன்னமாதிரி ஒரு கேள்வி கண்டிப்பா வரும். :)

ஆமா, உங்களுக்கு சமைக்க தெரியுமா? :p

பாபு said...

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்ச்சா?
இல்லன்னா எதுக்கும் தயாராயிருங்க அதுக்குதான் சொல்றேன்

சரவணகுமரன் said...

ஆமாம் ambi.

அச்சச்சோ! எனக்கு வேற நல்லா சமைக்க தெரியாதே..

சரவணகுமரன் said...

இல்லை பாபு.

ஒரு கல்யாணத்த காப்பாத்த, என்னலாம் கத்துக்க வேண்டி இருக்கு.

RAGUNATHAN said...

கொஞ்ச நாள்ல ஆண்கள் எல்லாம் குடும்பத்தை காப்பத்த எல்லாத்தையும் பொறுத்து போக வேண்டி வரும் போல இருக்கு. ஆனா வழக்கத்துக்கு மாறான செய்திதான் பேப்பரில் பூதாகரமா வரும். இதெல்லாம் அங்கு ஒன்னும் இங்கு இன்னுமா நடக்கும். அதனாலே பயப்பட வேணாம். -;)

சரவணகுமரன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ரகுநாதன்