Friday, January 9, 2009

அதிக ஹிட் கொடுத்த முன்னணி ஹீரோ யார்?

கடந்த நாலு வருடங்களில் அதிக ஹிட் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர் யார் தெரியுமா? சரி, ஒவ்வொருத்தவங்களா பார்ப்போம்.

ரஜினி. 2004 இருந்து நடித்து வெளிவந்த படங்கள், சந்திரமுகி, சிவாஜி, குசேலன். இதில், குசேலன் தவிர மற்ற இரண்டும் வெற்றி படங்கள். ஓகே, வரிசையில் வச்சிக்கலாம்.

கடந்த நாலு வருடங்களில் கமல் நடித்த படங்கள், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம். மும்பை எக்ஸ்பிரஸ் மட்டும் தான் பிளாப். ஸோ, அவரையும் ஆட்டத்துல சேர்த்துக்குவோம்.

அடுத்து, யாரை பார்க்கலாம். விஜயகாந்தா? விஜயா? சீனியாரிட்டிப்படி கேப்டன பார்ப்போம். கேப்டன் நடிச்ச படங்கள், கஜேந்திரா, நெறஞ்ச மனசு, பேரரசு, சுதேசி, தர்மபுரி, சபரி, அரசாங்கம். இதுல எது ஹிட்'ன்னு யாராச்சும் சொல்லுங்க?

விஜயின் நடித்த (என்னது! விஜய் நடிச்சாரான்னு கேட்க கூடாது :-)) படங்களின் எண்ணிக்கை, பதினொன்னு. இதுல நாலு படங்கள் ஹிட்டுன்னு சொல்லலாம். இப்போதைக்கு, இவர்தான் அதிக ஹிட் கொடுத்தது. அடுத்தவங்கள பார்ப்போம்.

பத்து படங்கள் பண்ணியிருக்காரு, அஜித். வரலாறு, பில்லா மட்டும் தான் அவர் கொடுத்த இரு வெற்றி படங்கள். நெக்ஸ்ட்.

நாலு வருஷத்துல நிறைய படங்கள் நடித்தது சத்யராஜ்தான். இருபது படங்கள். ஆனா பாருங்க, இதுல ஒண்ணு கூட பெரிய வெற்றி படம் இல்லை. பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு எல்லாம் வெற்றி படங்களா?

கார்த்திக்க பார்த்து ரொம்ப நாளாச்சி. இந்த டைம்ல விக்ரம் கொடுத்த ஒரே ஹிட், அந்நியன். சூர்யாவோடது, கஜினியும், வேலும்(???).

இளையதிலகம் பிரபு நடிச்சது ஒன்பது படங்கள். அதுல மூணு படங்களை தவிர மத்தது எல்லாம் ஹிட். எல்லாம் ஓரளவுக்கு ஹிட் ஆன படங்கள். வசூல் ராஜா, சந்திரமுகி, சம்திங் சம்திங், தாமிரபரணி, பில்லா, சிலம்பாட்டம். இந்த படங்கள்ல இவரு மெயின் ஹீரோ இல்லன்னாலும், இப்படங்களின் ஹீரோக்களின் முந்தைய படங்கள் அனைத்தும் பிளாப்கள். இவங்களுக்கெல்லாம் பிரேக் கொடுத்தது, இவர் கூட நடிச்ச படங்கள் தான். இப்பலாம், தமிழ் சினிமாவில் கனமான வேடங்களை ஏற்க இவர விட்ட ஆளு இல்லை.

அதனால, அதிக ஹிட் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர், பிரபுதான். :-))

20 comments:

கிரி said...

//கேப்டன் படிச்ச படங்கள்//

இது எழுத்து பிழையா இல்லை உள் குத்தா ;-)

நாதஸ் said...

// தமிழ் சினிமாவில் கனமான வேடங்களை ஏற்க இவர விட்ட ஆளு இல்லை.
//

ha ha ha
u r right :)

ers said...

விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே...
சோதனை திரட்டியில் உங்கள் இடுகையை பதிய...
http://india.nellaitamil.com/

kailash,hyderabad said...

enna kodumai sir ithu ?

RAMASUBRAMANIA SHARMA said...

GOOD STATISTICS...AVVLOTHANA...

RAMASUBRAMANIA SHARMA said...

.....!!!!

RAMASUBRAMANIA SHARMA said...

I HAVE POSTED A COMMENT YEATERDAY....NOT PUBLISHED...WHY...!!!!

சரவணகுமரன் said...

கிரி, எழுத்து பிழை தான். :-) சரி பண்ணிவிட்டேன்.

சரவணகுமரன் said...

நன்றி நாதாஸ்

சரவணகுமரன் said...

தமிழ் சினிமா, இணைஞ்சிடுவோம்.

சரவணகுமரன் said...

அவருக்கேவா, கைலாஷ்?

சரவணகுமரன் said...

ராமசுப்பிரமணிய ஷர்மா, வேற என்ன எதிர்பார்க்கிறீங்க?

வருகைக்கு நன்றி.

நான் இன்னைக்குதான் அதுக்கப்புறம் பிளாக் செக் பண்ணுறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Anonymous said...

(என்னது! விஜய் நடிச்சாரான்னு கேட்க கூடாது :-))
அற்புதம்.....

பினாத்தல் சுரேஷ் said...

வையாபுரி, சிங்கமுத்து, முத்துக்காளை, செல்முருகன் போன்றவர்களை உங்கள் ஆய்வில் சேர்க்காதது மாபெரும் வரலாற்றுப்பிழை!

சரவணகுமரன் said...

நன்றி கவின்

சரவணகுமரன் said...

பினாத்தல், இவிங்கள எல்லாம் கவனிக்கலங்க...

இவர்களுடன் இளையதிலகத்தை சேர்த்ததற்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்...

Venkatramanan said...

Your blog got featured in Vikatan today! - http://www.vikatan.com/av/2009/jan/21012009/av0206.asp ! Congrats!

Regards
Venkatramanan

நாமக்கல் சிபி said...

//கனமான வேடங்களை//


சரிதான்!

சரவணகுமரன் said...

Venkatramanan, தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி... சந்தோஷம் :-))

சரவணகுமரன் said...

நன்றி நாமக்கல் சிபி