Sunday, March 15, 2009

பீதியை கிளப்பீட்டு அப்புறம் என்ன யாவரும் நலம்?

ஏற்கனவே பாசிடிவ் ரிவ்யூஸ் படித்திருந்ததால் படம் பார்க்கும் ஆவலில் இருந்தேன். என் நண்பனை கூப்பிட்டேன். மாதவன் படமா? முடியாது என்றவனை தியேட்டருக்கு இழுத்து சென்றேன். அங்கு ஒட்டியிருந்த குடும்ப பின்னணியில் இருந்த போஸ்டரை பார்த்து, பிரியசகி, வாழ்த்துக்கள் பாணி படம் என்று, வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சினான். நானும் சொல்லவில்லை திகில் படம் என்று.

“நான் இந்த படத்தை பத்தி ஒரு விஷயம் சொன்னா பயந்திடுவே?”

“என்ன?”

“இந்த படத்தோட டைரக்டரோட முத படம் என்ன தெரியுமா?”

“என்ன?”

“அலை”

“அய்யயோ!”

----------

படத்தின் முதல் சீன்லேயே. ’நான் இருக்கேன்’ என்று தன் கேமரா மூலம் சொல்லிவிட்டார், பி.சி. ஸ்ரீராம். பொதுவா, கேமராவை எங்கே வைப்பார்கள்? இவர் அலமாரி, பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்கூல் பேக் என்று எல்லாவற்றுக்குள்ளும் வைத்து முதல் காட்சியிலேயே முத்திரையை நச் என்று பதித்துவிட்டார். அப்புறம் லிப்ட்டினுள்ளே இருந்ததும் கலக்கலாக இருந்தது. மாதவன் குழப்பத்தில் தடுமாறும்போதெல்லாம், கேமரா போடும் ஆட்டம் நம்மையும் ஆட்டம் காண வைக்கும். ஸ்ரீராம் ஸ்ரீராம்தான்.

இந்த படத்தின் மேக்கிங் பல ஆங்கில படங்களில் உருவப்பட்டது என்று சொன்னார்கள். எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. பல காட்சிகள் இங்கிலிஷ் படம் போலவே இருந்தது. ’இந்திய கலாசாரத்திற்கு’ ஏற்ப, தாய்குலம், சீரியல் என்று காட்சிகள் வைத்தது, நிகழ்வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்க உதவியது. சரண்யா பேசும் வசனங்களும், அந்த போலீஸ் பேசும் வசனங்களும் நல்ல கலகலப்பு. இயக்குனர் பாராட்டுக்குரியவர். மாதவன் அவருடைய வேலையை சிறப்பாக செய்திருந்தார். அவருக்கு பொருத்தமான வேடம்.

தக்காளி சீனிவாசன், யார் கண்ணன் போன்றவர்கள் எடுக்கும் முழுமையான பேய் படங்களில் யாரும் லாஜிக் பார்க்க மாட்டார்கள். பாசில் எடுத்த பேய் படங்களில் லாஜிக் பார்த்தாலும் ஒரளவுக்கு சரியாக இருக்கும். இது ஒருவித இரண்டுகெட்டான் நிலை படம். கண்றாவி வேஷம் போட்டெல்லாம் பயமுறுத்தாமல், கேமரா, இசை (சங்கர் மகாதேவன் அன் கோ), எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), நடிப்பு இவற்றை வைத்து மட்டும் பயமுறுத்தியிருப்பதால் நல்ல திகில் அனுபவம். நான் சீட் நுனிக்கெல்லாம் போகவில்லை. சாய்ந்துதான் கிடந்தேன். அப்படியே பக்கத்தில் இருப்பவர்களின் பயத்தை ரசித்துக்கொண்டு.

--------

வெளியே வந்த நண்பன் போஸ்டரை பார்த்து சொன்னதுதான் தலைப்பு.

நல்ல கூட்டம். யாவரும் நலம் - ரிலையன்ஸின் வியாபாரமும் நலம்.

--------

படம் விட்ட பிறகு நல்ல மழை. வண்டியை எடுத்து கொண்டு கிளம்பியாச்சு. ஒரு லாரியை முந்த நினைக்கும் போது தான் மழை வீரியம் தெரிந்தது. மழை அடிக்கும் அடியில் வண்டியை ஓட்ட முடியவில்லை. அப்படியே ஒதுக்கி ஒரு கடையின் கிட்டே நிறுத்தினேன்.

சரியான இருட்டு. பூட்டப்பட்ட ஒரு கிரில் கேட்டின்கிட்டே நின்று கொண்டிருந்தோம்.

“இன்னைக்குதானா இப்படி பெய்யணும்?” நண்பன் சொல்லிக்கொண்டிருந்தபோது,

கிரில் கேட்டின் உள்ளே, இருட்டில் ஒரு உருவம் எழுந்து உட்கார்ந்தது.

பகீரென்றது எங்கள் இருவருக்கும். அதுதான் படத்தின் எபெக்ட்.

9 comments:

archin said...

:))

Suresh said...

Arumiayana vimarsanam

especially nan onnu sonna payanthuduva, intha director oda first padam alai nu sonnathu la vilunthu vilunthu serichan officela ellarum oru mathiri than parthanga

nanum plan pannan weekend parkalam nu mudiyala ll see next weekend

nangalum blog poturukom pidicha padichitu vote a podunga

pudugaithendral said...

nanum pakkanumnu ninaichiruken.

inga eppa eppadi varutho theriyala

:(

சரவணகுமரன் said...

நன்றி ஆர்த்தி

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்... பார்த்து சிரிங்க... :-)

சரவணகுமரன் said...

புதுகைத் தென்றல், வந்த பின்பு பாருங்கள்...

சரவணகுமரன் said...

நன்றி தமிழ்பிரியன்

கிரி said...

//மாதவன் படமா? முடியாது என்றவனை தியேட்டருக்கு இழுத்து சென்றேன்//

அப்படி என்னங்க அவர் மேல கோபம் :-))

//இந்த படத்தோட டைரக்டரோட முத படம் என்ன தெரியுமா?”//

:-)))))))))))))))

இது தான் காரணமா! ஹா ஹா ஹா

//தக்காளி சீனிவாசன், யார் கண்ணன் போன்றவர்கள் எடுக்கும் முழுமையான பேய் படங்களில் யாரும் லாஜிக் பார்க்க மாட்டார்கள் //

பொதுவா பேய் படங்களில் லாஜிக் பார்த்தால் வேலைக்காகாது ...even enslish movies

நான் இன்னைக்கு தான் படம் பார்த்தேன் ..எனக்கு பிடித்து இருக்கு

சரவணகுமரன் said...

நீங்கள் சொல்வது சரிதான் கிரி. சில படங்களில் பேய் மாதிரி கொண்டு போய் லாஜிக்கலாக முடித்திருப்பார்கள். அதுவும் நன்றாக இருக்கும்.