Saturday, May 9, 2009

பசங்க - போச்சே!

பசங்க நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்ல, பசங்க நாங்க வண்டி கட்டிக்கிட்டு ஓசூர் கிளம்பினோம். பைக் தான். எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு தினந்தந்தி பார்த்துக்கிட்டோம். தினந்தந்தி இ-பேப்பர். சேலம் எடிசன். விஞ்ஞானம் எப்படி எல்லாம் உதவுது பாருங்க.

படம் அப்படி இருக்குன்னு சொல்றாங்களே! இப்படி இருக்குன்னு சொல்றாங்களே!ன்னு ரொம்ப ஆவலா போனோம். என்ன! நல்ல படம் பார்க்க போறோம்ன்னு ஒரு சந்தோஷம் தான்.

தியேட்டர் கிட்ட போயிட்டோம். என்ன இது? வேற ஏதோ போஸ்டர் தெரியுதே? என்ன படம் அது?

நரி.

ஊஊஊ... ன்னு வடக்குபட்டி ராமசாமிக்கு ஊதுவாங்களே... அப்படி இருந்தது.

ஏதோ மம்முட்டி நடிச்ச மலையாள பட டப்பிங். கடுப்புல தியேட்டர்காரன்க்கிட்ட போயி கேட்டோம். நேத்தோட படத்த தூக்கிடாங்களாம். ஏண்ணா, பெட்டி இருந்ததுன்னா ஒரு ஷோ போடுங்கண்ணான்னு சொல்ல நினைச்சோம். ஒவரா இருக்கும்ன்னு திரும்பிட்டோம்.

படம் பார்க்க வந்த மத்தவிங்களும் நரியை பார்த்து பயந்து ஓடிட்டு இருந்தாங்க. நிஜ நரியை பார்த்தா கூட இப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்க மாட்டாங்க.

படம் பார்க்கணும்ன்னா முதல் வாரமே பார்க்கணும் போல. இல்லாட்டி, படம் தப்பிச்சு ஓடிட்டு இருந்தா உண்டு. சில படங்கள் ஏன் ஓடுதுன்னே தெரியாம ஓடுது. சில படங்கள் இப்படி.

நிலைமை இப்படி இருந்ததுன்னா, டிவிடி எப்படி விக்காம இருக்கும்? பட தயாரிப்பாளர்களே சீக்கிரம் டிவிடி விட்டா நல்லா இருக்கும். அவுங்களுக்கும் லாபமா இருக்கும். நாமளும் நல்ல படத்தை தெளிவா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம பார்க்கலாம்.

23 comments:

KRICONS said...

///நரி.

ஊஊஊ... ன்னு வடக்குபட்டி ராமசாமிக்கு ஊதுவாங்களே... அப்படி இருந்தது.////

அருமையான காமடி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பட தயாரிப்பாளர்களே சீக்கிரம் டிவிடி விட்டா நல்லா இருக்கும். அவுங்களுக்கும் லாபமா இருக்கும். நாமளும் நல்ல படத்தை தெளிவா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம பார்க்கலாம்.//

ரி பீட்ட்டு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டும் போட்டாச்சு

சரவணகுமரன் said...

நன்றி KRICONS

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்... ஓட்டு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :-)

ஜெட்லி... said...

நல்ல தரமான படங்களை நம் மக்கள் விரும்புவது இல்லை......
என்னத்த சொல்றது போங்க......

வெட்டிப்பயல் said...

அப்படியே வண்டியை கிருஷ்ணகிரிக்கு விட வேண்டியது தானே. முன் வெச்ச காலைப் பின் வைக்கக் கூடாது பாஸ் ;)

பட்டாம்பூச்சி said...

:)

வினோத் கெளதம் said...

நல்ல படத்துகே இந்த நிலைமையா..

சரவணகுமரன் said...

ஆமாம் ஜெட்லி... என்ன பண்றது?

சரவணகுமரன் said...

வெட்டிப்பயல், அங்கயும் இல்லாட்டி சேலம் போக சொல்லுவீங்க போல!

பொழப்ப பாப்போம், பாஸ்... :-)

சரவணகுமரன் said...

நன்றி பட்டாம்பூச்சி

சரவணகுமரன் said...

ஆமாம் வினோத்... இதான் நிலைமை...

மகி said...

நம்ம மக்களுக்கு எல்லாம் " நியுட்டனின் மூன்றாம் விதி"
தான் லாயக்கு.. வேணும்னா "மரியாதை" பாக்க
முயற்சி பண்ணுங்களேன் சரவணா..
(அப்படியே வண்டியை கிருஷ்ணகிரிக்கு விட வேண்டியது தானே.
முன் வெச்ச காலைப் பின் வைக்கக் கூடாது பாஸ் ;))
ஆமா பாஸ்.. திரு. வெட்டிப்பயல் சொன்னது ரொம்ப கரீட்டு...
பேசாம இனிமேல, படம் பாக்க சேலம் வந்துடுங்க பாஸ்..!!!

Unknown said...

பசங்க படத்தை பாத்துயாராவது விமர்சனம் போடுவாங்கன்னு காத்திருந்தேன்.. காத்திருக்கேன்.

Anonymous said...

அட போன வெள்ளிகிழமை இதே தான் எங்களுக்கும்.. இருக்கிற வேலைய எல்லாம் கடாசிட்டு.. பெங்களூர் தூறல் வாரி இறைக்குற சேறேல்லாம் பொருட்படுத்தாம நானும் நன்ன்பனும் செல்வி மெஸ்க்கு போன் போட்டு சாப்பாடு பார்சல் ஆர்ட் குடுத்து நேரத்துக்கு அங்க பொய் அதையும் வாங்கி கிட்டு அங்கயே படம் தூக்கிட்டாங்கநு ஒரு சின்ன தம்பி குடுத்த அலற்ட்டையும் மீறி மஞ்சுநாதாவுக்கு வண்டிய விட்டா அங்க "நரி" ... என்ன டா சனி இதுனு திரும்ப அதே ஹோட்டலுக்கு வந்து நல்லா சாப்டுட்டு (எப்படி பார்சல் வாங்குன சாப்பாட அந்த கடையிலயே .. இது எனக்கு முதல் அனுபவம்) ராவோட ராவா பெங்களுர் வந்து சேந்தது தான் மிச்சம்.. (எனக்கு தெரிந்த வரை பசங்க ஓடிட்டு இருந்த நிறைய தியேட்டர்ல இபோ நரி தான் ஒடுதான்ன்...)

Unknown said...

pasanga rmathittanka

சரவணகுமரன் said...

ஆமாம் மகி...

மரியாதையா? வேற வினையே வேண்டாம்...

சேலத்துக்கா? இரண்டரை மணி நேரம் படம் பார்க்க அஞ்சு மணி நேரம் ட்ராவல் பண்ண சொல்றீங்க...

சரவணகுமரன் said...

புதுகைத்தென்றல், அதான் நிறைய இருக்கே!

சரவணகுமரன் said...

அனானி, உங்க கதையும் நம்ம கதைதானா? உங்க பேரு என்ன?

சரவணகுமரன் said...

ஆமாம் கோகுல்

tamilraja said...

http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post_5882.html///
///
//
/பல நகரங்களில் மறு வெளியீடு செய்து வெற்றியடைந்துள்ளது.
மறுபடி தமிழ்ரசிகர்களின் ரசனை சிறந்தது என்று நிருபிக்க பட்டுள்ளது.

சரவணகுமரன் said...

அப்படியா, தமிழ்ராஜா, முடிந்தால் பார்க்கணும்.