Monday, May 11, 2009

பாடல்களின் வெற்றியும் படங்களின் வெற்றியும்

நான் எப்பவும் படம் வர்றதுக்கு முன்னாடியே, ஆடியோ ரீலிஸ் ஆனவுடனேயே பாட்டு கேட்க ஆரம்பிச்சுடுவேன். முக்கியமான இசையமைப்பாளர்கள் படம், அப்புறம் நல்லா இருக்குன்னு சொல்ற படங்களோட பாட்டுகள. படம் வர்றதுக்கு முன்னாடி பாட்டு கேட்கறதால, நாமளே நமக்குள்ள நம்ம கற்பனைக்கு ஏத்தபடி பாட்டுக்கு விஷுவல்ஸ் போட்டு வச்சிருப்போம்.

படம் வந்ததுக்கப்புறம், கேட்டுக்கிட்டு இருக்குற பாடல்கள மாறுதல்கள் வரும். நல்லா கேட்டுட்டு இருந்த பாட்ட, படம் பார்த்ததுக்கு அப்புறம் கேட்காம விட்டுடுவேன். அதேப்போல், கேட்க விரும்பாத பாடலை கேட்க ஆரம்பிச்சுடுவேன்.

அயன் படத்துல வர்ற ’ஓயாயி’ பாட்டு, எனக்கு முதல்ல வாரணம் ஆயிரம் ‘அடியே கொல்லுதே’ மாதிரி இருந்ததால, நான் அவ்வளவா விரும்பி கேட்கலை. அப்புறம் படம் பார்த்ததுக்கப்புறம், அந்த பாட்டுக்கான எடிட்டிங் வேலைகள், டான்ஸ், சவுண்ட் மிக்ஸ் எல்லாம் பிடிச்சு அப்புறம் கேட்க ஆரம்பிச்சேன்.

அதேப்போல், லேசா லேசா, சக்கரக்கட்டி பாட்டு எல்லாம் படம் வர்றதுக்கு முன்னாடி ரசிச்சு கேட்டுட்டு இருந்தேன். படம் வந்ததுக்கப்புறம், நோ.

---

எனக்கு சில படங்களோட பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கும். நல்லா இருக்கும். ஆனா, படம் ஹிட் ஆகலைன்னாவோ, இல்ல டிவில போடாம இருக்கறதாலோ அவ்வளவா யாருக்கும் தெரிஞ்சிருக்காது. ஹிட்டும் ஆயிருக்காது. நான் மட்டும் கேட்டுட்டு இருந்த மாதிரி இருக்கும்.

இப்ப, சமீபத்துல அப்படி பிடிச்ச பாட்டு, ஆனந்த தாண்டவம் படத்துல வர்ற ‘கல்லில் ஆடும்’ பாட்டு. நல்ல மெலடி. இசை: ஜிவி பிரகாஷ். படம் பார்த்ததுக்கு அப்புறம், பாட்டு அந்த படத்தோட தீமோட பிடிச்சிருந்தது. ஆனா, டிவில எங்கயும் பார்த்த மாதிரி இல்ல.

சில வெளிவராத, வெளிவந்ததான்னு தெரியாத படங்களோட பாட்டையும் ரசிச்சுக் கேட்டுட்டு இருப்பேன். உதாரணம்: ஒரு பொண்ணு ஒரு பையன்’ன்னு ஒரு படம். அதுல ‘மலர்களே மலர்களே’ன்னு ஒரு பாட்டு. பெய்லா ஷிந்தா பாடினது, கார்த்திக் ராஜா இசையில். நடுவே, கார்த்திக் ராஜா பாடினதும், கிட்டார் இசையும் இதமா இருக்கும். கேட்டு பாருங்க.

அப்புறம், ‘நாளைய பொழுது உன்னோடு’ன்னு ஒரு படம். பாண்டியராஜன் பையன் ப்ரித்விராஜ் நடிச்சது. பயப்படாதீங்க. பாட்டுதான். ’பேச பேராசை’ன்னு கார்த்திக், பவதாரிணி பாடின பாட்டு. மியூசிக் - ஸ்ரீகாந்த் தேவா என்றாலும், இந்த பாட்டு இளையராஜாவோடது மாதிரி இருக்கும். தேவா பேமிலிங்கறதால, யார் மாதிரின்னாலும் போடுவாங்க.

இந்த ரெண்டு படங்களுமே, சமீபத்தில் டிவில போட்டாங்க. கலைஞர் டிவியோ, ஜெயா டிவியோ ஞாபகம் இல்ல. ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியலை.

----

பாட்டால படம் ஹிட்டாகுமா? படத்தால பாட்டு ஹிட் ஆகுமா? முக்கியமா, கதையும் எடுக்கப்பட்டிருக்கும் விதமும்தான் படத்தோட வெற்றியை தீர்மானிப்பது என்றாலும், பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வெற்றி படத்தை சூப்பர் ஹிட் படமாக்குவது பாடல்கள் தான். கரகாட்டகாரன், உள்ளத்தை அள்ளித் தா படங்களோட வெற்றிக்கு நகைச்சுவைதான் முக்கிய பங்காற்றியது என்றாலும் பாடல்களின் பங்களிப்பை விட்டு விட முடியாது.

அதே போல், எல்லா பாடல்களும் ஹிட்டாகி, படம் சுமாரா இருந்தாலே, வெற்றி படமாகிவிடும். காதலன், மின்னலே, ஜோடி போன்ற படங்களில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்களால் காப்பாற்றப்பட்டார்கள்.

அது மட்டுமில்லை, நிறைய படங்களுக்கு ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வருவது பாடல்கள். அப்படி இழுத்து வந்திருந்த ரசிகர்களை மிச்ச படம் விரட்டி அனுப்பிடும். உதாரணம்: உயிரே, இந்து, சங்கமம், ரிதம், தாம் தூம், வல்லவன்.

சில படங்களை ஒரு பாடல் தூக்கி பிடிக்கும். அந்த பாடல் முடிஞ்சதும், கிளம்பி போற கூட்டம் உண்டு. அப்படி சில பாடல்கள்,

* மலை மலை மருதமலை
* வாளமீனுக்கும்
* சரோஜா சாமான் நிக்காலோ
* லஜ்ஜாவதியே
* டாக்ஸி டாக்ஸி
* ஓ போடு
* நாக்க முக்க
* மன்மத ராசா

ஒரு படத்தின் பாடல்கள் எல்லா தரப்பையும் கவர வேண்டியது அவசியம். குறைந்த பட்சம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். சிவா மனசுல சக்தி பட பாடல்கள் இப்படி எல்லோருக்கும் பிடிச்சிருந்தா, படம் பெரிய வெற்றியை அடைஞ்சிருக்கும்.

---

படத்துக்கு பாட்டு எதுக்கு? படத்தோட ஓட்டத்தை குறைக்குதே? இங்கிலிஷ் படங்களில் பாடல்கள் இல்லையே?ன்னு என்று பாடல்களை நோக்கி கேள்வி எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். அடேய், இங்கிலிஷ் படத்துலேயே தமிழ் பாட்ட போட ஆரம்பிச்சுடாங்க.

எது எப்படியோ, பாடல்கள் நம்ம வாழ்க்கைக்கு முக்கியம். பாடல்கள்தான் நம்மை ஆறுதல்படுத்துகிறது. குஷிப்படுத்துகிறது. தூங்க வைக்கிறது. அழ வைக்கிறது. ஆனந்தப்பட வைக்கிறது. ஆட்டம் போட வைக்கிறது. நினைவலையை உயரே எழுப்பி, ஆழ் மன கடலில் அடங்கி கிடக்கும் நினைவு பொக்கிஷங்களை மேலே கொண்டு வர வைக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும், மனநிலையையும் அந்த காலக்கட்டத்தில் கேட்கும் பாடல்களுடன் பதிவு செய்கிறான். வேறொரு சமயத்தில் கேட்கும் போது, பழைய நிகழ்வை கண் முன்னால் காட்டும். பழைய சூழ்நிலையை உணர வைக்கும். பழைய மணத்தை சுவாசத்தில் கலக்கும். ஒரு விதத்தில், பாடல்கள் நம் வாழ்வில் கடந்து வந்த உணர்வுகளை சுமக்கும் டைரி.

19 comments:

வினோத் கெளதம் said...

தல,

மின்னலே படம் திரைக்கதை நல்லா இருக்கும்..ரசித்து பார்க்கலாம்..
பாட்டு கூடுதல் பிளஸ் ஆயுடுச்சு அந்த படத்துக்கு..

ரிதம் படம் எனக்கு மிகவும் பிடித்த படம் அருமையான கதை..
ஆனால் படம் ஓடவில்லை..

கிரி said...

//நான் எப்பவும் படம் வர்றதுக்கு முன்னாடியே, ஆடியோ ரீலிஸ் ஆனவுடனேயே பாட்டு கேட்க ஆரம்பிச்சுடுவேன்//

:-))) அது தான் எங்களுக்கு தெரியுமே!

//, அந்த பாட்டுக்கான எடிட்டிங் வேலைகள், டான்ஸ், சவுண்ட் மிக்ஸ் எல்லாம் பிடிச்சு அப்புறம் கேட்க ஆரம்பிச்சேன்//

எனக்கு கூட அயன் முன்பு பிடிக்கல இப்ப அனைத்தும் பாடலும் பிடித்து இருக்கு

ers said...

அயன் படத்துல வர்ற ’ஓயாயி’ பாட்டு, எனக்கு முதல்ல வாரணம் ஆயிரம் ‘அடியே கொல்லுதே’ மாதிரி இருந்ததால, நான் அவ்வளவா விரும்பி கேட்கலை.////

அதானே பார்த்தேன்.
இந்தப்பாடலை...
எப்பவோ
கேட்டமாதிரி
இருந்திச்சு.////

Anonymous said...

ya exalent.but everyday i need some news from u.

Anonymous said...

சரவணா,
உங்க லிஸ்ட்ல எப்படி ரிதம் வந்தது?
அது நிஜமாவே ஒரு நல்ல படம்..பாடல்களும் ரசிக்கும்படியானவை..
அர்ஜுன் நடித்த ஒரே நல்ல படம் என்ற அதிகப்படியான தகுதி வேறு..
வசந்தின் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட வண்ணம் உண்டு..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும், மனநிலையையும் அந்த காலக்கட்டத்தில் கேட்கும் பாடல்களுடன் பதிவு செய்கிறான்//

பெரும்பாலான பாடல்களின் வெற்றிக்கு இதுவே காரணமாக அமைகிறது.

DHANS said...

naanum appaditthaan..

ama car ellam nalla ootareengala?

Anonymous said...

manamatha rasava sollama vittutingale thala

saravanan said...

manamatha rasava sollama vittutingale thala

சரவணகுமரன் said...

வினோத்,

நீங்க சொல்றது சரிதான்... படம் நல்லாதான் இருக்கும்... ஆனா, அந்த மாதிரி பாட்டு இல்லாட்டி ரொம்ப சாதாரண படமா ஆகிருக்கும்...

கருத்துக்கு நன்றி வினோத்...

சரவணகுமரன் said...

வாங்க கிரி... உங்களுக்கு தெரிஞ்ச விஷயம்தான்...

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி நெல்லை தமிழ்

சரவணகுமரன் said...

//ya exalent.but everyday i need some news from u.
//

ஹலோ, யாருங்க நீங்க?

சரவணகுமரன் said...

மகேந்திரன்,

ரிதம் நல்ல படம் இல்லன்னு சொல்ல வரலை... படம் வருவதற்கு முன்பு பாடல்கள் கொடுத்த திருப்தியை, படம் கொடுக்கவில்லை என்றே சொல்ல வந்தேன்...

உயிரேவும் சூப்பர் படம்ன்னு சொல்றாங்க சிலர். எனக்குதான் புரியலை... :-)

சரவணகுமரன் said...

நன்றி SUREஷ்

சரவணகுமரன் said...

DHANS, நீங்களும் நம்மள மாதிரி தானா?

லைசன்ஸ் வாங்குனதுக்கு அப்புறம், கார் ஓட்ட ரொம்ப வாய்ப்புகள் கிடைக்கலை. ஏதோ சுமாரா ஓட்டுறேன். நீங்க சொன்ன பாயிண்ட்ஸ் உதவிகரமா இருக்குது. ஞாபகம் வச்சு கேட்டதுக்கு நன்றி... :-)

சரவணகுமரன் said...

//manamatha rasava sollama vittutingale thala//

அட ஆமா... அதையும் சேர்த்திருதேன்... சுட்டி காட்டியதற்கு நன்றி சரவணன்...

DHANS said...

//லைசன்ஸ் வாங்குனதுக்கு அப்புறம், கார் ஓட்ட ரொம்ப வாய்ப்புகள் கிடைக்கலை. ஏதோ சுமாரா ஓட்டுறேன்//

வைப்பு கிடைக்கும் போது அடிக்கடி ஓட்டிப்பாருங்க,

நானும் அப்படித்தான் பாடல்கள பலவற்றை கேட்டு ரசிப்பேன் படம் வந்தவுடன் பார்க்கவே சகிக்காது,

சக்கரை நிலவே பாடல் பலமுறை கேட்டுள்ளேன் படம் வந்தவுடன் அதை கேட்ப்பதே இல்ல.

சரவணகுமரன் said...

கண்டிப்பா DHANS