Tuesday, May 26, 2009

மெதுவா மெதுவா அனுசரி...

ஒரு துறவி, தன் சிஷ்யகோடிகளிடம் கேட்கிறார் - “நமக்கு ஏன் கோபம் வந்தால் கத்துகிறோம்? மக்கள் ஏன் கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்கிறார்கள்?”

யோசித்த சிஷ்யர்களில் ஒருவர், “அப்போது நாம் அமைதியை இழப்பதால் கோபப்படுகிறோம்.” என்கிறார்.

அதற்கு துறவி, “அப்படியென்றால், பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் ஏன் கத்தி பேச வேண்டும்?” என்று கேட்கிறார். “மெதுவாக பேசினாலும் கேட்க தானே போகிறது? பிறகு ஏன் கத்த வேண்டும்?”

சிஷ்யர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். எந்த பதிலிலும் துறவி திருப்திப்படவில்லை.

முடிவில் அவரே விளக்கிறார். “இருவருக்கிடையே கோபம் இருக்கும் போது, அவர்களது இதயங்களின் இடைவெளி அதிகரிக்கிறது. அந்த தூரத்தை தாண்டி, தங்கள் பேச்சு மற்றவரை அடைய வேண்டும் என்று கத்துகிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு கோபமாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கத்துக்கிறார்கள். காரணம் இதயங்களின் இடைவெளி. அவ்வளவு தூரம்.”

திரும்ப கேட்கிறார், “மக்கள் ஒவ்வொருவருக்கிடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் போது, பாசத்தை பொழியும்போது, காதலிக்கும் போது, என்ன நடக்கிறது? அப்போது ஏன் அவர்கள் கத்துவதில்லை? ஏனென்றால், அப்போது அவர்கள் இதயம் நெருக்கமாக இருக்கிறது. இடைவெளி குறைவாக இருக்கிறது.”

துறவி தொடர்கிறார். “மேலும் மேலும் அன்பு அதிகரிக்கும்போது, ஒருவரை ஒருவர் அதிகம் காதலிக்கும் போது, என்னவாகிறது?”

”அவர்கள் பேசுவதில்லை. ரகசிய குரலில் முணுமுணுக்கிறார்கள். அவர்களது காதலில் இன்னமும் நெருக்கமடைகிறார்கள். ஒரு கட்டத்தில் ரகசிய குரலும் தேவை இல்லாமல் போகிறது. பார்வைகளின் பரிமாற்றமே போதுமானதாகிறது. இது ஆழமான காதலைக் கொண்டவர்களின் மொழி.”

---

மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் தமிழாக்கம் இது. எனக்கு பிடித்திருந்ததால் பதிவு செய்துள்ளேன்.

அதனால் வாக்குவாதம் பண்ணும்போது, இதயங்களின் இடைவெளியை அதிகரிக்க விடாதீர்கள். தூரத்தை பெரிதாக்கும் வார்த்தைகளை விடாதீர்கள். இல்லாவிட்டால், இடைவெளி அதிகரித்து அதிகரித்து, ஒருநாள் திரும்ப வர முடியாத அளவுக்கு இதயங்கள் இரு துருவங்களாகிவிடும்.

9 comments:

அக்னி பார்வை said...

சரி குருவே

இராகவன் நைஜிரியா said...

சரியாச் சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி..

கிரி said...

இது கண்டிப்பாக பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் (சரியாக புரிந்து கொண்டவர்களுக்கு)

கோபம் கொண்டு பேசுவதால் நாம் என்ன பேசுகிறோம் என்பதையே உணருவதில்லை..அதன் பின்னரே செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறோம்

நல்ல பதிவு சரவணகுமரன்

DHANS said...

unmaiyaana karutthu....

ana enna panna kovam varum alavukku ethavathu senchavangakitta ithayam kitta irunthu enna pesama thoorama poidalaam...

சரவணகுமரன் said...

வாங்க அக்னி பார்வை

சரவணகுமரன் said...

நன்றி இராகவன்

சரவணகுமரன் said...

நன்றி கிரி

சரவணகுமரன் said...

நன்றி DHANS

நரேஷ் said...

நல்லாயிருக்கு!!!