Wednesday, February 10, 2010

அந்நியன்



சென்ற வார பயணத்தின் போது, ஒரு சேலம் பஸ்ஸில் ஏறினேன். முன்பக்க கதவை திறந்து ஏறியதால், சீட் தேடிய கண்களுக்கு, நேர் எதிரே இருந்த மூணு பேர் அமரும் சீட் வரிசை முதலில் தெரிந்தது. அதில் கறுப்பாக வெளிநாட்டை சேர்ந்த இரு பெண்கள் அமர்ந்திருந்தார். ஒரு இருக்கை காலியாக இருந்தது. அதற்கு முந்தைய சீட்டில், இரு கறுப்பின ஆண்களும் நம்மூர்காரர் ஒருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

சரி, பின்னால் ஏதாவது சீட் இருக்கிறதா? என்று பார்க்க, ஏதும் இல்லாததால், அந்த பெண்கள் பக்கம் காலியாக இருந்த இருக்கையிலேயே உட்கார திரும்ப, அதற்குள் கண்டக்டர் முன்னால் இருந்த அவர்கள் நாட்டவர் ஒருவரை அந்த பெண்களுடன் உட்கார வைத்துவிட்டு, என்னை முன்னால் இருந்த சீட்டில் உட்கார செய்தார். கண்டக்டரின் இந்த செய்கைக்கு, அவ்விரு பெண்களும் ஆச்சரியத்துடன் சிரித்தார்கள்.

இப்ப, என் அருகில் இருந்த வெளிநாட்டை சேர்ந்தவனிடம், அவனை பற்றி கேட்டேன். அவன் கூறியது,

“என் பெயர் டோடோ (லைட்டா மாற்றியிருக்கிறேன்!). என் பெரிய பெயரை சொன்னால் புரியாது. அதான் முதல் எழுத்தை கடைசி எழுத்தையும் சேர்த்து இப்படி சுருக்கியுள்ளேன். இந்தியாவில் படிப்பதற்காக, நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கிறோம்.”

சேலத்தில் இருக்கும் ஒரு கலைக்கல்லூரியை சொன்னான். பிசிஏ படிக்கிறானான். அடுத்தது, எம்சிஏ படித்துவிட்டு, பிறகு வேலைக்கு தென்னாப்பிரிக்காவிற்கு சென்று விடுவானாம்.

“இந்தியா எப்படி இருக்கிறது?”

“நல்லா இருக்குது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது.”

“படிக்க ஏன் இந்தியா?”

“இங்கு கல்வித்தரம் நன்றாக இருக்கிறது.”

கிழிஞ்சுது. நாம் நமது கல்வி முறையை விமர்சித்துக்கொண்டு இருக்க, தென்னாப்பிரிக்காவினருக்கு அது தரமாக தெரிகிறது. இதற்கும், அவன் சொன்ன கல்லூரியை நான் இதற்கு முன்னால் கேட்டதுக்கூட இல்லை. படிக்க, கிட்டத்தட்ட மூணு லட்ச ரூபாய் ஆகிறதாக சொன்னான்.

அரை மணி நேர பயணத்தில், நிறைய பேசினோம். பொதுவாக, பஸ்ஸில் போகும்போது யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டேன். ஏனோ, இவனிடம் நிறைய பேசினேன்.

அவனுடைய தாய்-தந்தை இருவரும் இறந்துவிட்டார்களாம். அவனுடைய அக்காதான் இவனை படிக்க வைக்கிறாராம். தற்போது, அவனுடைய அக்கா தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகிறாராம்.

என் டப்பா இங்கிலிஷை கேட்டுவிட்டு, தமிழ்நாட்டில் இவ்வளவு நன்றாக இங்கிலிஷ் பேசி, நான் கேட்டது நீங்கள் ஒருவர்தான் என்றான். அவன் கல்லூரியில் யாருமே ஆங்கிலத்தில் பேச மாட்டார்களாம். (தெரிஞ்ச விஷயம் தானே!) ஆனால் அதற்குள், இவனை கொஞ்சம் தமிழில் பேச வைத்துவிட்டார்கள்.

அடுத்தது, கல்லூரியில் உடன் படிக்கும் தமிழ் பெண்கள் யாரும் தங்களுடன் பேசுவதே இல்லை என்று வருத்தப்பட்டான். அதுவும் தெரிஞ்ச விஷயம் தான். பாதிப்பேரு, தமிழ் பசங்க கூடவே பேச மாட்டாங்க!

அவர்கள் நாட்டில், கல்யாணம் 34 வயதில் தான் பண்ணுவார்களாம். இங்கே 25 வயதிலேயே பண்ணிவிடுகிறார்கள் என்று அவன் கூறியதில் வியப்பு இருந்ததா, வருத்தம் இருந்ததா என்று தெரியவில்லை. இப்ப, இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது.

சில நாட்கள் முன்பு, அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு தீம் தேர்வு செய்வது பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். சமூக பிரச்சினைகள் பலவற்றை சொல்லி நமது தீம் அதற்கு எதிராக இருக்க வேண்டும் என்றார்கள். ஒரு பெண், “பால்ய விவாஹம்” என்றார். “ஏங்க, அது எங்க இப்ப நடக்குது? அப்படியே நடந்தாலும், அவுங்களாவது சந்தோஷமா இருக்கட்டுமே?” என்று நான் விளையாட்டுக்கு சொன்னதற்கு, சுற்றி இருந்த பல பேச்சிலர்கள் சிரித்துக்கொண்டு ஆமோதித்ததில் இருந்து எனக்கு தெரிந்தது - 25 என்ற வயது வரம்பிற்கே இந்தியர்கள் பலர் உள்ளுக்குள் பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான்.

பிறகு அவன் இந்தியா பற்றி உயர்வாக பல விஷயங்கள் கூறினான். இந்திய சாலைகளின் அகலம் அவர்கள் நாட்டில் இருப்பதை விட மிக பெரிது என்றான். செல்போன்களின் விலை அதிகமாக இருந்தாலும், கால் ரேட் கம்மியாக இருப்பதாக சொன்னான். தென்னாப்பிரிக்காவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான எம்டிஎன்னை ஏர்டெல் வாங்குவதை பற்றி சொன்னான்.

இந்தியாவை பற்றி நாம் தாழ்வாக பேசினாலும், உயர்வாக பேச உலகத்தில் பல நாடுகள் இருப்பது அவனுடன் பேசும்போது தெரிந்தது.

ஆனால், கடைசியில் அவன் இந்தியாவை பற்றி சொன்ன ஒரு நிதர்சன உண்மை, கண்டிப்பாக இந்தியர்கள் வெட்கப்பட வேண்டியது.

“நான் எப்படி எங்கள் நாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு அந்நியனாக தெரிகிறேனோ, அதுப்போல் தான், ஒரே நாட்டிற்குள் வேறு மாநிலத்தில் பணிபுரியும் இந்தியர்களும் அம்மாநிலத்தவருக்கு அந்நியராக தெரிகிறீர்கள்.”

.

13 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

நச்....

VISA said...

கட்டுரை நன்றாக இருந்தது. குறிப்பாக எழுத்து நடை மிக நேர்த்தி.

MSK said...

//ஒரே நாட்டிற்குள் வேறு மாநிலத்தில் பணிபுரியும் இந்தியர்களும் அம்மாநிலத்தவருக்கு அந்நியராக தெரிகிறீர்கள்.//
பல்வேறு கலாச்சரங்களை கொண்ட பல்வேறு இன மக்கள் வாழும் நாடு தானே இந்தியா. அதனால் அந்த வெளிநாட்டவர் சொல்வதில் வியப்பேதும் இல்லையே !!!

Anonymous said...

mika arumai sir
nenga avarkita pesnum thoninathe evlo visayam avarkita nenga ketathala thane therinjuruku ethula erunthu enna theiruthu nama pesa matum than avomnu

டக்கால்டி said...

Kadaisi varigalil ullathu nitharsanamaana unmai.

Nalla idugai saga

Unknown said...

நச் எண்ட்... உண்மை கசக்கவே செய்யும்

சரவணகுமரன் said...

நன்றி ராம்

சரவணகுமரன் said...

நன்றி விசா

சரவணகுமரன் said...

MSK,

சிறு தொலைவிலேயே இந்த அந்நியத்தன்மை நிலவுவது அவருக்கு வியப்பை அளித்திருக்கும்.

சரவணகுமரன் said...

நன்றி இங்கிலீஷ்காரன்

சரவணகுமரன் said...

நன்றி பேநா மூடி

செழியன் said...

ra

செழியன் said...

ஏங்க, அது எங்க இப்ப நடக்குது? அப்படியே நடந்தாலும், அவுங்களாவது சந்தோஷமா இருக்கட்டுமே?” என்று நான் விளையாட்டுக்கு சொன்னதற்கு, சுற்றி இருந்த பல பேச்சிலர்கள் சிரித்துக்கொண்டு ஆமோதித்ததில் இருந்து எனக்கு தெரிந்தது - 25 என்ற வயது வரம்பிற்கே இந்தியர்கள் பலர் உள்ளுக்குள் பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான்.


unmai than anna