Wednesday, March 10, 2010

கண்டதை எடுத்தது - 1

எனது மொபைலில் கேமரா கிடையாது. அதனால் தேவைப்படும்போது கையில் தனியாக கேமரா எடுத்து செல்ல வேண்டும். இப்படி கையில் கேமரா இருக்கும்போது, கண்ணில் கண்டதை எல்லாம் எடுத்து தள்ளுவேன்.

வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது. ஆறாயிரம் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அதில் எத்தனை உருப்படி என்பது வேறு விஷயம். நுரை தள்ளி எப்போது உயிரை விடுவேன் என்ற நிலையில் இருக்கிறது. தற்போது எடுக்கும் புகைப்படங்களில் வெளிச்சம் முன்பை விட குறைவாக இருக்கிறது. எக்ஸ்ட்ரா போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது.

சொற்ப நேரங்கள் கையில் இருக்கும் இந்த கேமராவிலேயே கண்டதையும் எடுத்து தள்ளியிருக்கிறேன். மொபைலில் கேமரா இருந்திருந்தால், என்னவாயிருக்குமோ?

அப்படி எடுத்த சில படங்கள்.

---

திருப்பதி மலைமேல் படி மூலம் ஏறினால், இப்படி ஆங்காங்கே எத்தனையாவது படி என்று குறித்திருப்பார்கள். செஞ்சுரி போட்ட சச்சின் போல், நாங்களும் கைகளைத் தட்டிக்கொண்டு எங்களின் சாதனைகளை அவ்வப்போது கொண்டாடிக்கொண்டோம்.



சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு சாலையோர ஹோட்டலில் பசியாற காத்திருந்த போது எடுத்த படம். இந்த படத்தில் என்னோட ரெண்டு பேவரைட்டுகள் இருக்கிறது.



ஒரு வீட்டு விசேஷத்தின் போது எடுத்தது.



தெரிந்த நண்பரின் திருமணம் கடலூர் பக்கமிருக்கும் ஒரு கோவிலில் அதிகாலை நடந்தது. அந்த கோவில் பக்கமிருந்த ஆற்றை அந்நேரம் எடுத்தது. இப்ப, வேறொரு லுக் கிடைக்கிறது.



இது திருப்பத்தூர் பக்கமுள்ள ஒரு கோவிலில் இருந்த அய்யனார் சிலை. இதுவும் கல்யாணத்திற்காக சென்ற போது எடுத்த படம்.



வட கர்னாடக பக்கம் சென்ற போது, ஒரு பூங்காவில் சிறிது நேரம் இளைப்பாறினோம். அப்பவும் கை சும்மா இருந்தாதானே?



திருச்சி மலைக்கோட்டை. கோவிலும் எதிரில் இருந்த தேவாலயமும்.



---

இப்படி கண்டதையும் எடுத்து, அதை பிறகு பார்க்கும் போது, எடுக்கும் போது இருந்த மனநிலையும் சூழ்நிலையும் ஒரளவுக்கு மீண்டும் உணர முடிகிறது. இந்த பதிவில் இருக்கும் படங்கள் அவ்வளவு கேனத்தனமாக இல்லை. இன்னும் சில படங்கள் இருக்கிறது. கேனத்தனமாக.

இப்படி கேனத்தனமாக இருக்கிறது என்று கூறினாலும், அனுபவங்களை மீள் உணர வைக்கும் இம்மாதிரி படங்களை தொடர்ந்து எடுக்கத்தான் தோன்றுகிறது.

.

10 comments:

DHANS said...

super photos

naan kooda ipaditthaan kandathai eduppen....adikkadi salem krishnakiri road la poveengalo

neenga edutha athe kadaila orunaal naangalum sapittom...:)

after seeing your this post, i am also planning to put some of my photos in a post... thanks for the inspiration

T.V.ராதாகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை

சசிகுமார் said...

நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Karthick said...

Rajini and Masal Dosai ... right.

வடுவூர் குமார் said...

கோகுல் பவுடர் இன்னும் மார்க்கெட்டில் இருக்கா? சிறு வயதில் உபயோகித்தது.

சரவணகுமரன் said...

DHANS,

அடிக்கடி இல்லை. எப்பவாவது தான்.

உங்களுக்கு இன்னும் அந்த கடை ஞாபகம் இருக்கா?

போடுங்க... போடுங்க...

சரவணகுமரன் said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்...

சரவணகுமரன் said...

நன்றி சசிகுமார்

சரவணகுமரன் said...

கார்த்திக்,

பாதி கரெட்டு...

மீதி - கொத்து ப்ரோட்டா

சரவணகுமரன் said...

வடுவூர் குமார்,

கோகுல் பவுடர், இன்னும் இருக்குங்க...