Tuesday, August 10, 2010

டெல்லி - இந்தியா கேட்

இந்தியா கேட். என்னுடன் வந்திருந்த நண்பர் பார்க்க ரொம்பவும் ஆசைப்பட்ட இடம். இந்தியா கேட்டுக்கு முன்னாடியே, டெல்லி போலீஸ் போட்டிருந்த ஒரு இரும்பு கேட் முன்னாடி ஆட்டோ விட்டு செல்ல, அங்கிருந்து நடந்தோம்.இதன் பக்கமிருக்கும் பூங்காவில், காதலர்கள் அமைத்திருந்த கூட்டணிகள் எக்கச்சக்கம்.பின்னால் தூரத்தில், சாயங்கால நேரத்தில் மங்கலான வெளிச்சத்தில் ராஷ்ட்ரபதி பவன் செல்லும் சாலையும், ராஷ்ட்ரபதி பவனும் தெரிந்தது.“மௌன ராகம் காலத்தில் இருந்து, இது இப்படிதாம்பா இருக்குது!”

---இது இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவு சின்னம். இதை வடிவமைத்தது - எட்வின் என்ற ஆங்கிலேயர். இது முதலாம் உலகப்போரில் உயிரிழந்த ‘பிரிட்டிஷ் இந்திய’ ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதமாக வடிவமைக்கப்பட்டது.அந்த ராணுவ வீரர்களின் பெயர்கள், இதில் இருக்கும் கற்களில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. நான் நிறைய சிங் பெயர்களைப் பார்த்தேன்.

---

அதற்கு பிறகு நண்பர் எங்காவது ஷாப்பிங் செல்லலாம் என்று சொல்லி, ‘பாலிகா பஜார்’ என்ற இடத்தை சொன்னார். அண்டர்கிரவுண்டில் வட்டவடிவில், சிறு சிறு கடைகளாக அமைந்திருக்கும் இடம் தான் - பாலிகா பஜார். ட்ரஸ், எலக்ட்ரானிக் ஐட்டங்கள், விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கடையில் ஒருவர் அவராக எங்களை உள்ளே கூப்பிட்டு, ’சும்மா’ பார்த்துவிட்டு செல்லுமாறு சொன்னார். நாங்களும் பார்த்தோம். மூன்று சட்டைகளை எடுத்து, எங்கள் கைகளில் கொடுத்து, அவர் ஒரு கால்குலேட்டரை எடுத்து 300, 400, 500 என்று கணக்கு போட்டார். முடிவில் 1200 என்று சொல்லி, அதற்கு அவராகவே ஒரு டிஸ்கவுண்ட் போட்டு, 1000 என்று பெரிய மனதுடன் சொன்னார். நாங்கள் சிம்பிளாக ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

1000 பிறகு 800 ஆனது. நாங்கள் நடக்க, நடக்க, அவர் குரல் சத்தம் குறைய, கூடவே விலையும் குறைந்தது. கடைசியாக 300 என்று கேட்டது!

---

நான் ஆட்டோவில் செல்லும்போதே, வழியில் மெட்ரோ ரயிலை பார்த்தேன். தூரத்தில் சென்றதை புகைப்படம் எடுக்க, எங்கோ பார்த்துக்கொண்டிருந்த நண்பர் கேட்டார்.“ஏங்க! உங்க ஊர்ல மேம்பாலம் கூடவா கிடையாது?”

பிறகு அவரிடம் மெட்ரோவை காட்ட, அவரும் அதை பார்த்துவிட்டு, அதில் ஒரு ரவுண்ட் போகலாம் என்றார்.

இப்போது பஜாரில் ’ஒன்றுமே வாங்காத எங்கள் ஷாப்பிங்கை’ முடித்துவிட்டு, பக்கமிருந்த மெட்ரோ ஸ்டேசனில் இருந்து நொய்டா திரும்பலாம் என்று முடிவு செய்தோம். ஸ்டேசன் பூமிக்கு கீழே இருந்தது. அங்கு ஒரு போட்டோ எடுக்க முயல, ஒருவர் இங்கு புகைப்படங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்தார். ஓகே என்று மூடி உள்ளே வைத்தோம்.மெட்ரோ அனுபவம் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அடுத்த நாள் அதில் தான் சுற்றினேன். அடுத்த பதிவில் அது.

(தொடரும்)

.

6 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன தல ரொம்ப நாளா காணோம்

ஸ்ரீ.... said...

பாலிகா பஜார் விவகாரமும், படங்களும், தகவல்களும் அழகு. டெல்லியில் மொகலாய மன்னர்களின் கல்லறைகளும், மசூதிகளும் காணவேண்டியவை.

ஸ்ரீ....

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice Post

சரவணகுமரன் said...

ஆமாம் ரமேஷ்... பிசியோ பிசி...

சரவணகுமரன் said...

நன்றி ஸ்ரீ

சரவணகுமரன் said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்