Thursday, October 28, 2010

3டி

3டி என்பது எனக்கு எப்பொழுதுமே கவர்ந்திழுக்கும் வார்த்தை. நாம் நமது கண்களால் சாதாரணமாக பார்க்கும் எவையும் முப்பரிமாண காட்சி தான் என்றாலும், பேப்பரில் இருப்பதை முப்பரிமாணத்தில் காண்பது விசேஷமாகிவிடுகிறது. திரையில் காண்பது இன்னமும்.

விகடனில் முன்பு சில பக்கங்களில் சில புகைப்படங்களை 3டியில் கொடுத்திருப்பார்கள். கூடவே, ஒரு கண்ணாடியும் கொடுப்பார்கள். ஒருபக்கம் சிகப்பு கண்ணாடி தாளும், இன்னொரு பக்கம் நீல கண்ணாடி தாளும் கொண்டு பேப்பரில் செய்யப்பட்ட கண்ணாடி. ஒரு டினோசர் படம் நினைவில் இருக்கிறது. பார்க்கும்போது, டினோசர் தாளில் இருந்து கொஞ்சம் முன்பக்கம் வந்தது போல் தெரியும்.’மை டியர் குட்டிசாத்தான்’ முதல் முறை (1984) ரிலீஸ் ஆன சமயம், எனக்கு (3டி படம் பார்க்கும் அளவுக்கு) நினைவு தெரிந்த வயதில்லை. பிறகு, அப்படியொரு 3டி வந்தது தெரிந்த போது, அதை காண்பதற்கு ரொம்பவும் ஆர்வமாக இருந்தது. டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால், அதை 3டியில் திரையில் காண வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. இருந்தும், என் ஆசையை நிறைவேற்றும் விதமாக, 1997இல் மறு திரையிடல் செய்யப்பட்டது. 2 முறை பார்த்தேன். 3டித்தனமாக நிறைய காட்சிகள் அப்படத்தில் இருக்கும். அதாவது, குச்சியை கண்ணுக்கு முன்னால் நீட்டுவது, ஐஸ்கிரிம் கொடுப்பது, பாம்பு வருவது என.

இந்த படம் கொடுத்த 3டி'த்தன மகிழ்ச்சியை ஏனோ ஹாலிவுட் பிரமாண்ட ’அவதார்’ கொடுக்கவில்லை. அவதாரை 3டியில், நல்ல மல்டிப்ளெக்ஸில் பார்க்க வேண்டும் என்பதற்காக, அலுவலகத்தில் இருப்பவர்களை உசுப்பேற்றி விட்டு, கம்பெனி ஸ்பான்சர்ஷிப்புடன் பார்த்தேன். ‘மை டியர் குட்டிசாத்தானின்’ கண்ணுக்கிட்ட வரும் எபெக்ட் ஏதும் இல்லாமல், விகடனின் டைனோசர் எபெக்ட் மட்டுமே இருந்தது. அவதாரின் 3டி எபெக்ட்டை புகழ்ந்தவர்கள், மை டியர் குட்டிச்சாத்தானை பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.இப்ப நிறைய 3டி படங்கள் வருகிறது. ஆங்கிலத்தில் வருபவை எல்லாமே 3டியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இவையெல்லாம் சாதா படங்களை 3டியில் மாற்றியது போல் தான் இருக்கிறது. 3டி என்பதற்காக விசேஷமாக எந்த காட்சிகளும் இருப்பதில்லை. அல்லது, குறைவாக இருக்கிறது. பிரன்ஹா பார்த்தப்போது, ரெசிடெண்ட் ஈவில் படத்தின் ட்ரெய்லரையே 3டியில் போட்டார்கள். ஒரு சில காட்சிகள், 3டியில் நன்றாக இருந்தது. படம் சரியில்லை என்றார்கள். விரைவில், மற்ற விளம்பரங்களும் 3டியில் வரலாம்.

சமீபக்காலமாக, எல்லா இடங்களிலும் 3டி 3டி என்பது தான் பேச்சாக இருக்கிறது. பெப்ஸோடண்ட் டூப்பேஸ்ட் வாங்கினால், ஒரு 3டி கதைப்புத்தகமும், 3டி கண்ணாடியும் கொடுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூர் ஏர்போர்ட்டில் சோனியின் 3டி டிவியை வைத்து அறிமுகம் கொடுத்து, மக்கள் கருத்து கேட்டு கொண்டிருந்தார்கள். அப்போது விலை எவ்வளவு என்று சொல்லவில்லை. தற்போது, பேப்பரை திறந்தால், 3டி டிவிக்களின் விளம்பரமாகத்தான் இருக்கிறது. விலை எல்லாமே லட்ச ரூபாய்க்கு மேல்தான். இதனுடன் படத்தை 3டிக்கு மாற்றும் ப்ளேயரும், கண்ணாடியும் கொடுக்கிறார்கள்.

தொடர்ந்து 3டி படங்களாகவே வருவதால், தியேட்டரில் 3டி கண்ணாடி கொடுக்கும் வைபவம், விழாக்கால விசேஷம் இல்லாமல் மாமூல் நிகழ்வாகிவிட்டது. சில தியேட்டர்களில் நமக்கே நமக்கென்று சொந்தமாக வைத்துக்கொள்ள 3டி கண்ணாடியை விற்கிறார்கள். மை டியர் குட்டிச்சாத்தானின் போது, இந்த கண்ணாடியை பற்றி தனி டாக்குமெண்டரியே போட்டார்கள்.

பல காலம் முன்பு ஒரு செய்தி படித்தேன். மர்ம தேசம் இயக்குனர் டிவியில் 3டியில் பார்க்கும்வாறு ஒரு சீரியல் எடுக்கப்போகிறார் என்று. எடுத்தாரா, வந்ததா என்று தெரியாது. ஆனால், ஏதோ ஒரு சேனலில் (ஜெயா டிவி???) ஏதோ ஒன்றை 3டியில் ஒளிப்பரப்பினார்கள் என்று நினைவு. அதற்கான கண்ணாடியைக்கூட கடைகள் மூலமாக விற்றார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது மொபைலில் கூட 3டி மொபைல்கள் வந்துவிட்டன. ஸ்பைஸ் ஏதோ ஒரு மாடல், 3டி என்று வெளியிட்டு இருக்கிறது. ஏதாவது காமெடி செய்து வைத்திருப்பார்கள். தவிர, 4டி என்று வேறு புதுசாக ஏதோ ஒன்று சொல்கிறார்கள்.

இப்படி 3டியில் பல முன்னேற்றங்கள் சமீபகாலமாக நடந்துவருகிறது. எந்திரனைக்கூட 3டியில் எடுக்கப்போவதாக முன்பு செய்திகள் வந்தது. தற்போது கூட, சில காட்சிகளை 3டியில் மாற்றப்போவதாக வாசித்தேன். என்ன இருந்தாலும், செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்று தெரிகிறது. அதனால் தான், சென்ற வாரம் அந்த செய்தியை வாசித்தப்போது ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு கன்னடப்படத்தை பற்றிய செய்தி.

கன்னடப்படங்கள் குறைந்தப்பட்ஜெட்டில் எடுக்கப்படுபவை. உபேந்திரா இயக்கிக்கொண்டிருக்கும் ‘சூப்பர்’ என்ற படத்தை 3டியில் அவர் புரமோட் செய்கிறார் என்பது செய்தி. ஆர்வத்துடன் வாசித்தேன். என்ன சொல்கிறார்கள் என்றால், போஸ்டரில் இரு படங்கள் இருக்குமாம். அதை நாம் ஒரு தினுசாக பார்க்க வேண்டுமாம். அதாவது, குமரிமுத்து போல் கண் விழிகளை நடுவே கொண்டுவந்து, இரண்டை மூன்று படங்களாக தோன்ற வைத்து, அதில் நடுப்படத்தைப் பார்த்தால், அது 3டியில் தெரியுமாம். சாம்பிளுக்கு உபேந்திராவும் நயன்தாராவும் இருக்கும் ஒரு படத்தை பேப்பரில் கொடுத்திருந்தார்கள். ட்ரை செய்ததில் கண்களால் சில நேரம் தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை!

போங்கடா!... நீங்களும் உங்க 3டியும்!

.

11 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3D TV சென்னைல கேட்டேன். Blue Ray disk -கோட Rs.1,80,000/- விலையாம் . என்ன ரொம்ப நாளா காணோம்

Sampathkumar said...

அது சரி.. நீங்க எங்கே போனீங்க இத்தனை நாளா ஒரு பதிவும் இல்லை.
இப்படியே போச்சுணா உங்க ப்ளோக் கடைசி இடத்துக்கு போயுருமில்ல...

மாணவன் said...

3D பற்றி ஒரு விரிவான அலசல்
அருமை...

உங்களின் தளத்தின் நீண்ட கால வாசகன் உங்களின் எழுத்துகளுக்கு நான் தீவிர ரசிகன்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

அப்புறம் மகேந்திரனின் இசைப்பக்கங்கள் அப்டேட் ஆகவே இல்லை
வேளைப்பளுவா.....

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
http://urssimbu.blogspot.com/

சேலம் தேவா said...

"ட்ரை செய்ததில் கண்களால் சில நேரம் தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை! போங்கடா!... நீங்களும் உங்க 3டியும்!"

3D ய பாத்து குரு'டி'(டா) ஆயிரக்கூடாதுங்க..!! பாத்துக்குங்க..!! ஹா.ஹா..ஹா...

சிவராம்குமார் said...

3D பற்றி நல்ல விரிவான பதிவு! நான் ’மை டியர் குட்டிசாத்தான்’ படம் சின்ன வயசில பார்த்தேன் ஆனா இப்போ எதுவும் நினைவில்லை!

ரைட்டர் நட்சத்திரா said...

.
by mtvenkateshwar.blogspot.com

சரவணகுமரன் said...

அப்படியா ரமேஷ்? வாங்குனீங்களா?

சரவணகுமரன் said...

ஆரம்பத்தில் சில நாட்கள், மற்ற வேலைகள் காரணமாக எழுதவில்லை. பிறகு, எழுதாமல் இருப்பதும் ஒரு போதை போலாகிவிட்டது. :-)

சரவணகுமரன் said...

எங்கேயும் போகவில்லை, சம்பத். :-)

முதல் இடம், கடைசி இடம் என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா, என்ன?

சரவணகுமரன் said...

நன்றி மாணவன்.

ஆமாம். மகேந்திரன் பிஸியாக இருக்கிறார்.

சரவணகுமரன் said...

வாங்க சேலம் தேவா