Sunday, November 7, 2010

தீபாவளி 2010

முன்பு தீபாவளி கொண்டாட்டம், ஒரு வாரத்திற்கு முன்புதான் தொடங்கும். இப்போது தீபாவளி திண்டாட்டம் மூன்று மாதத்திற்கு முன்பே தொடங்குகிறது. ட்ரெயின் டிக்கெட் எடுப்பதை சொல்கிறேன். இந்த முறை போவதற்கான டிக்கெட்டை மட்டுமே நினைவில் வைத்திருந்து முன்பதிவு செய்ய முடிந்தது.



டிக்கெட் கன்பர்ம் ஆனது, எக்ஸ்ட்ரா கோச்சில். நானும் என் நண்பனும் உட்கார்ந்திருந்த இடத்தை சுற்றி யாரும் இல்லை. நான் கூட போகும் வழியில் ஏறுவார்கள் என்று நினைத்திருத்தேன். கடைசி வரை யாரும் வரவில்லை. எல்லோரும் கிளம்புவதற்கு ஒருநாள் முன்பு சென்றதால், இப்படி இருந்திருக்கும்.

---

தீபாவளி அன்று காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வார்கள். நான் குளிக்காமல் ரயில்வே ஸ்டேஷன் சென்றேன். மணி ஆறரை இருக்கும். அங்கு ஒரு பெரும் கும்பலே இருந்தது. ஊரில் கைவசம் இணையம் இல்லாததால், தட்கலுக்காக ஸ்டேஷன் சென்றேன். இப்போதெல்லாம் பத்தே நிமிடங்களில் டிக்கெட் முடிந்துவிடும். இருந்தும், எப்படி இப்படி நீண்ட க்யூக்களில் நிற்கிறார்கள்? இப்படி க்யூக்களில் நிற்பவர்களின் சாபத்தினால் தான், ஐஆர்சிடிசியின் தளம் காலை எட்டில் இருந்து ஒன்பது வரை நடுங்குகிறது போலும்.

இதெல்லாம் ஆவுறத்துக்கில்லை என்று வீடு திரும்பிவிட்டேன். மொபைல் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்ய முயன்றேன். ஒன்பது மணிக்கு மேல் தான், மொபைல் மூலம் ரிசர்வ் செய்ய முடியுமாம். க்யூவில் நிற்பவர்கள் வாழ்க!

பிறகு, ஒரு நாளுக்கு முன்பே டிக்கெட் எடுத்துவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

---

இப்படி டிக்கெட் இல்லாத சமயங்களில், அன்-ரிசர்வ்டு கோச்களில் உட்கார்ந்தோ, பஸ்களில் மாறி மாறியோ வந்திருக்கிறேன். இந்த முறையும் அப்படி வந்திருக்கலாம். மழைக்காலத்தில் அப்படி வருவதை நினைத்துப்பார்த்தாலே, நசநசவென இருந்தது.

இன்று காலையில் நான் வந்ததில் இருந்து சாயங்காலம் இப்ப வரைக்கும் பெங்களூரில் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. ஊட்டி பிலிங் கிடைக்கிறது. வந்ததும் நல்லதிற்கு தான்.

இருந்தாலும், ஊரில் இருந்து சீக்கிரமே வந்துவிட்டதால், இன்னும் சில வாரங்களில் மீண்டுமொரு சென்று, சும்மாவாவது வீட்டில் தூங்கி விட்டு வர வேண்டும்.

---

வீட்டின் பொடிசுகளுடன் ‘எந்திரன்’ சென்றேன். இன்னமும் அறுபது ரூபாய் டிக்கெட். ஊரில் இருக்கும் ஐந்தாறு தியேட்டர்களில் மூன்றில் வெளியாகி, இரண்டில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பத்து, பதினைந்து பேர் இருந்திருப்போம். தொடர்ந்து ஒரு பத்து விளம்பரங்கள் போட்டிருப்பார்கள்.

பின்னால் இருந்த குடிமகன், அர்ச்சனை வார்த்தைகளால் ஆராதனை செய்ய தொடங்கிவிட்டார்.

“அறுபது ரூபா வாங்கிட்டு, விளம்பரமாடா போடுறீங்க... **********! முப்பது ரூபா வாங்கிட்டு போடு, தப்பில்லை... அறுபது ரூபா வாங்கிட்டு ஏண்டா போடுகிறீங்க? *******. தலைவன் படத்தை கேவலப்படுத்துறீங்களே, *******?”

---

இந்த தீபாவளிக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு படமும் வரவில்லை. ’வ’ குவார்ட்டர் கட்டிங் மட்டும் பார்த்தேன். நொந்தேன்.

வெறும் வசனங்களால் சிரிக்க வைக்க முயன்று, வளவளவென்று எல்லா கேரக்டர்களும் பேசுகிறார்கள். சிவா மட்டும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஜான் விஜய்க்காக தூத்துக்குடியில் ஆங்காங்கே பேனர்கள் வைத்திருக்கிறார்கள். மண்ணின் மைந்தன், சன் ஆப் த கன் (!) என்று அடைமொழிகள் வேறு.

ஸ்டோரி லைன் கேட்கும்போது வரும் சிரிப்பு, படம் பார்க்கும் போது வருவதில்லை. நிரவ்ஷா, ஆண்டனி, ஜிவி பிரகாஷ் போன்றவர்களால் கலர்புல்லாக, துள்ளலாக இருக்கும் படம், இயக்கிய தம்பதிகள் லோக்கலாக யோசித்திருந்தால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக வந்திருக்கும்.

.

8 comments:

எஸ்.கே said...

மழைக்காலத்தில் அன்ரிசர்வில் வருவது அதிலும் பஸ்ஸில் வருவது கொடுமையானது!
தாமதமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ம.தி.சுதா said...

தீபாவளியை ஒரு கலக்கு கலக்கீட்டிங்கள் போல...

ஆர்வா said...

தீபாவளி பயங்கர கொண்டாட்டம் போல. எனக்கு வ குவட்டர் கட்டிங் அவ்வளவா பிடிக்கலை

சரவணகுமரன் said...

நன்றி எஸ்.கே.

உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்... :-)

சரவணகுமரன் said...

சுதா, இதுக்கு பேரா கலக்குறது?

சரவணகுமரன் said...

கவிதை காதலன்,

கொண்டாட்டம் மட்டுமா, திண்டாட்டமும் தான் :-)

மாணவன் said...

பகிர்விற்கு நன்றி
வாழ்த்துக்கள்!

நட்புடன்
மாணவன்

Leo said...

நீங்க தூத்துக்குடியா? எந்த ஏரியா?