Monday, October 4, 2010

எந்திரன் - கமல் நடித்திருந்தால்?

ஷங்கர் ‘ரோபோ’ கதையை முதலில் சொன்னது கமலிடம் என்பதை நாமறிவோம். ஒருவேளை கமலே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?



1) ரோபோ மாதிரியே இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு இயந்திரத்தனமான அசைவை படம் முழுக்க முகத்தில் காட்டிக்கொண்டே இருந்திருப்பார். அவர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடிக்க, இவ்ளோ வேலை செய்கிற ரோபோ இதை மட்டும் ஏன் இப்படி செய்கிறது? என்று நாம் விமர்சித்திருப்போம். உ.தா. அன்பே சிவம் - வெட்டுப்பட்ட மீசை.

2) ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.

3) ரோபோ அறிமுகக்காட்சியில், ”கடவுள் இருக்காரா? இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லைன்னு சொல்ல மாட்டேன். இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று பதில் சொல்லி குழப்பியிருக்கும்.

4) வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ரோபோ வேடத்திற்கு குரல் கொடுக்கும்போது ஒரு தகர வாய்ஸ் கொடுத்திருப்பார்.

5) நடனக்காட்சிக்கும், சண்டைக்காட்சிக்கும் டூப் போடவோ, மாஸ்க் போடவோ, கிராபிக்ஸ் செய்யவோ மறுத்து, இதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து அவரே செய்திருப்பார்.

6) இப்ப ரோபோவை இயந்திரமாக காட்டும்போது, கிராபிக்ஸில் காட்டியுள்ளார்கள். கமல் நடித்திருந்தால், கிராபிக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மேலே மெட்டாலிக் தகடு பதித்துக்கொண்டு உள்ளூக்குள் இருந்துகொண்டு அவரே இயந்திரமாகவும் நடித்திருப்பார்.

7) ரோபோவை வெட்டிப்போடும் காட்சியில், விஞ்ஞானியாகவும், துண்டாக கிடைக்கும் எந்திரனாகவும் கமல் நடித்திருக்கும் நடிப்பைப் பார்த்து, தியேட்டரே கண்ணீரில் மிதந்திருக்கும்.

8) இறுதிக்காட்சியில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொல்வது ‘பாசிசமாக இருக்கிறதே?’ என்று இயக்குனரிடம் விவாதித்திருப்பார். நன்றி - இந்த பேட்டி.

9) டைட்டிலில் வசனம் என்று அவருடைய பெயரும் வந்திருக்கும்.

10) டைட்டிலில் பானு பெயர் வந்த இடத்தில் கௌதமி பெயர் வந்திருக்கும்.

11) சிட்டி வெர்ஷன் 2.0 கேரக்டருக்காக, பத்து மணி நேர மேக்கப்பில் அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பார்.

12) விக் வைத்து நடிக்காமல், முடியை குறைத்து, பிறகு வளர்த்து வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். இதனால், படத்தை முடிக்க இன்னும் ஒரு வருடம் அதிகமாயிருக்கும்.

13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின் கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில் சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும் படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

14) படம் நன்றாக வந்திருக்கும்பட்சத்தில், விமர்சகர்கள் அனைவரும் ஷங்கரைவிட கமலை புகழ்ந்திருப்பார்கள். ”கமலை விட்டா, இந்த படத்தில் நடிக்க ஆளே இல்லை!” என்று சொல்லியிருப்பார்கள்.

15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல், உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.

என்ன அப்படித்தானே?

அடுத்தது, அஜித் நடித்திருந்தால்? யாராவது சொல்லுங்களேன்.

.

16 comments:

வால்பையன் said...

//ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.//

இது தான் டாப்பு!

Sukumar said...

பாஸ் செம மேட்டரு..

எப்பூடி.. said...

//கமல் நடித்திருந்தால்//

கலாநிதிமாறன் தனது குழுமத்தில் இருந்து ஏதாவதொரு தொலைக்காட்சியை விற்று நஷ்டத்தை ஈடு செய்திருப்பார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அஜித் நடித்திருந்தால்..

அது அப்டின்னு ஒரு டயலாக்
ஹீரோ அஜித்தும் ரோபோ அஜித்தும் ஒரே மாதிரிதான் நடிப்பாங்க(எல்லா படத்துலயும் அஜித் ரோபோ மாதிரிதான நடிக்கிறார்)

Anonymous said...

super !!!!

Anonymous said...

enthiran

Bicentennial Man (1999) ,
Terminator 2: Judgment Day (1991) ,
I, Robot (2004)

hollywood padangalin kalavayil uruvanthu enbathai unarthuthan, kamal ippadathai thavirthirupar pol.

Ungallam partha sirippu sirippa varuthu.

SP said...

yen Vijay nadichuruntha (?) apadinu nenga ketu erukanum apa than correct-a erunthurukum.

Karthik said...

//Anonymous said... Ungallam partha sirippu sirippa varuthu.//

the godfather = nayagan
bourne identity = vetri vizha
what about bob = thenali
mrs.doubtfire = avvai shanmugi
rainman = guna
very bad things = pancha thanthiram
patch adams = munna bai mbbs = vasoolraja mbbs
planes, trains and automobiles = anbe sivam
hard core = maganadhi

ippo yaarai pathu sirikiradhunu theriyala ;-)

Anonymous said...

Very nice comments.

15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல், உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.

:)

Murli said...

எந்திரன் படம் பெரிய கமர்சியல் ஹிட். ஆனா எதோ மிஸ்ஸிங்.

”கமல் நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்....” என்று எழுததான் நினைத்தேன்..ஆனால் இது ரஜினியை குறை சொல்வது போலாகிவிடும்....

Vidhya Chandrasekaran said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_09.html

ம.தி.சுதா said...

நல்லாயிரக்கு... மற்றம்படி நொ கொமண்ட்ஸ்..

எஸ்.கே said...

கற்பனை அழகு!!

Bruno said...

//13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின் கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில் சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும் படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
//

நக்கல் !!

Bruno said...

கமல் நடித்திருந்தால் அந்த ம்ம்ம்மேஏஏஎ வசனம் கிடைத்திருக்குமா என்று தெரியாது

கமல் வில்லனாக நடித்த இந்திரன் சந்திரனும், ஆளவந்தானும்....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தசாவதாரத்தில் கூட பிடித்த கதாபாத்திரம் ப்ளெட்சர் என்று கூறுபவர்கள் மிகக்குறைவே (பலராமும், பூவராகனும், கிருஷ்ணவேனி பாட்டியும், ஏன் நரஹசி கவர்ந்த அளவு கூட ப்ளெட்சர் கவர வில்லை)

கமல் கதாநாயகன், கதாநாயகி !!, நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எந்த வேடம் என்றாலும் நன்றாக பொருந்தியுள்ளது

வில்லன் ????? ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

'பரிவை' சே.குமார் said...

kamal nadiththirunthal...

Rajini kooda paratti iruppaar illaiya...

Robo kasai varik koddinalum rajini endra nadigan tholakkap pattuvittan enpathey rajini rasigarkalin kootru.

kamalin Nadippil kurai solla mudiyathu irunthum vikramidamum sankar kettirunthar... avar nadiththirunthal eppadi irunthirukkum...