Wednesday, December 28, 2011

வாழ்வின் சிறந்த நாள்

சென்ற வாரத்தில், என் வாழ்வின் சிறந்த நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். சென்ற வாரம், எனக்கு மகள் பிறந்தாள்.



---

சிலர் உசுப்பேற்றிவிட, பலர் ஆச்சரியப்பார்வை பார்க்க, மனைவியின் பிரசவத்திற்கு இந்தியா பயணித்தேன். கிளம்பும் சமயம், ஒரு சோக செய்தி வந்து சேர, பயணம் குழப்பத்துடன் அமைந்தது. இந்தியா வந்து சேரவும், நிம்மதியான செய்தி வர, குழப்பம் பயணத்துடன் சேர்ந்து முடிவு பெற்றது.

---

சென்ற சமயம், இந்தியா வந்திருந்த போது, வீட்டினர் அனைவருக்கும் சில பல பொருட்கள் வாங்கி வந்ததால், இந்த முறை அது இல்லை. ஆனால், இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்து சில பொருட்களையும், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் இந்தியாவில் இருந்து சில பொருட்களையும் வாங்கி வர சொல்லியிருந்ததால், குருவியாகி போனேன்.

---

என் மகள் எனக்காக காத்திருந்தாள் போலும். அப்படித்தான் பலர் சொன்னார்கள். நான் சென்று ஒருநாள் கழித்து அவள் பிறந்தாள். பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும் போது, முன்பும் பின்பும் நடக்க தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். உள்ளே குழந்தை அழுகை சத்தம் கேட்டதும், அடக்க மாட்டாமல் கதவருகே வந்து நின்றுக்கொண்டேன்.

நர்ஸ் வெளியே வந்து குழந்தையை என் கையில் கொடுக்கும் போது, நான் அடைந்த உணர்வை சொல்ல எனக்கு தெரியவில்லை. தாயிற்கும், சேயிற்கும் எந்த குறையும் இல்லாமல் பிரசவம் நிகழ்ந்தது.

---

அந்த பகுதி குளிர் பிரதேசம் என்பதால், குழந்தையை எல்லா பக்கமும் துணியால் சுற்றி கையில் கொடுத்தார்கள். அதுதான் அங்குள்ள வழக்கமாம். குழந்தையை தூக்க வசதியாக இருந்தது. முதலில், என்ன இது, குழந்தை கையை காலை அசைக்க முடியாமல் இப்படி கட்டி வைத்திருக்கிறார்களே? என்று தோன்றியது. பிறகு, அது தான் அவளுக்கு வசதி, சுகம் என்று புரிந்தது.

---

என்னை மாதிரியா? அல்லது, என் மனைவி மாதிரியா? நாங்கள் கேட்காமலேயே குழந்தையை பார்க்க வந்திருந்த பலரும் தெளிவாக ஒரு தெளிவில்லாத பதிலை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரெண்டு மூணு மாசம் ஆகணும் என்று முடிவில் ஒரு கருத்து தெரிவித்து சென்றார்கள்.

எனக்கென்னமோ என்னை போல் ஒரு சிந்தனைவாதியாக (!!!) வருவாள் போல் தெரிந்தது. விழித்திருக்கும் பெரும்பாலான நேரம், கண்களை உருட்டி கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலவே எங்காவது பார்த்துக்கொண்டிருக்கிறாள். :-)

---

”குமரனுக்கு மவா பொறந்திருக்கா.” “உன் மொவா என்ன சொல்றா?” என்பன போன்ற வார்த்தைகள் மனதிற்கு குளிர்ச்சியை கொடுத்தது.

---

ஒரு வாரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை. சுகமான நினைவுகளுடன் இங்கு திரும்பி இருக்கிறேன். அப்பாவான பிறகு, வேறு மாதிரி மாற வேண்டுமா என்று தெரியவில்லை. அதே போல் தான் இருக்கிறேன். என்னையறியாமலேயே மாறி விடுவேன் என்று நினைக்கிறேன்.

---

அடுத்து பெயர் தேடும் படலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட பெயராக இருக்க வேண்டும். இதில் எவ்வளவு கம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்கிறதோ? குழந்தை பிறக்கும் போதே, ஒரு பெயரை சொல்லிக்கொண்டு வந்தால், எவ்வளவு நல்லாயிருக்கும்?

---

குழந்தை வளர்ப்பில் இருக்கும் இனிமையையும், சவால்களையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன். அவளிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன், அவளின் வருகைக்காக.

.

23 comments:

Anonymous said...

Congrats! Unga wife oorukku anupchapothe guess pannen...

கிரி said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன் :-)

உங்க மனைவியும் பொண்ணும் வர எப்படியும் குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து மாதம் ஆகும் என்று நினைக்கிறேன்.. அது வரை அங்கே இருப்பது உங்களுக்கு கடினமான ஒன்று தான். குழந்தையுடன் இருப்பது சுகமான அனுபவம்.

குழந்தைகள் சுவாரசியமானவர்கள்.. நாம் அவர்களை சரியாக ஹேண்டில் பண்ண தெரிந்து கொண்டால் மிக மிக அற்புதமான அனுபவத்தை கொடுப்பார்கள். என்னுடைய அறிவுரை குழந்தைகளிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள்.. அன்பாக புரியும்படி கூறினாலே போதும் அவர்கள் நமக்கு பல விசயங்களை கற்று தருவார்கள்.

கணேஷ் said...

Congrats buddy! Looks like you're narrating my story. I'm also recently blessed with a baby girl. She is now 7 months and both mom & baby are staying with me in US.

Anonymous said...

வாழ்த்துக்கள் குமரன். Neenga unga santhosatha pakirnthirukka vidham miga arumai. intha posta padichi mudikkara varaikkum oru santhosam melliya punnaigai ennudan irunthathu...

Naanga ungaloda athi theevira rasigan.. infact last 3years blogs padichittu varen and yours is one of the early blogs i started reading and recommended to many of my friends. and like them, i also want to ask you to write more. everyday i come and check your blog, whether you've posted any new posts. keep writing boss... sema skill ungalakku... congrats again and happy days are awaiting for you in the new year. wish you and your family all the very best and a happy new year... - Jana.

Mohan said...

வாழ்த்துகள் சரவணகுமரன்!

ராமலக்ஷ்மி said...

இனிய வாழ்த்துகள்!!

/என்னையறியாமலேயே மாறி விடுவேன் என்று நினைக்கிறேன்./

நிச்சயம் மாறி விடுவீர்கள்:)!

சரவணகுமரன் said...

நன்றி அனானி... நல்லா யூகிச்சீங்க போங்க :-)

சரவணகுமரன் said...

நன்றி கிரி.

ஆமாம். நாலைந்து மாதங்கள் ஆகும். கஷ்டம் தான்.

மிக சரியாக சொன்னீர்கள். கோபிக்காமல் பார்த்துக்கொள்கிறேன், கிரி. :-)

சரவணகுமரன் said...

நன்றி ஜனா. சந்தோஷத்தை கொடுத்தது உங்கள் வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

nellai அண்ணாச்சி said...

வாழ்த்துகள் சரவணகுமரன்!

சரவணகுமரன் said...

நன்றி அண்ணாச்சி

ஆயில்யன் said...

வாழ்த்துகள் பாஸ் :)

Kartheeswaran said...

//எனக்கென்னமோ என்னை போல் ஒரு சிந்தனைவாதியாக (!!!) வருவாள் போல் தெரிந்தது. விழித்திருக்கும் பெரும்பாலான நேரம், கண்களை உருட்டி கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலவே எங்காவது பார்த்துக்கொண்டிருக்கிறாள். :-)// Arumai... Vazhthukkal nanbaa...!

Anonymous said...

Congrats Saravanakumaran..
First daughter will give prosperous in your life...

Sampathkumar..

அமுதா கிருஷ்ணா said...

மகளின் பெயரை சீக்கிரம் தேர்வு செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

நன்றி ஆயில்யன்

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

சரவணகுமரன் said...

நன்றி சம்பத்குமார்

சரவணகுமரன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா. தேர்வில் மும்முரமாக இருக்கிறோம்.

ஜமீல் said...

Hearty Congrats sir...!!! Enjoy the real experience of "Abiyum Nanum" :)

சரவணகுமரன் said...

நன்றி ஜமீல்

sakthipriya said...

wow , very very happy
sorry
i am to late

any way congrajulations u & ur sweet baby
sorryyy