
திரையரங்கு சென்று பார்த்தால் தான், படம் பார்த்ததாக ஒரு உணர்வு. இணையத்தில் பார்ப்பது தவறு என்றாலும், வேறு வழி இல்லாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இது தவறு என்பதாலும், இப்படி பார்த்துவிட்டு படத்தை பற்றி எழுதுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதாலும், படங்கள் பற்றிய பதிவுகளை பெரும்பாலும் இந்த வருடம் எழுதவில்லை. (பெரும்பாலும் எழுதுவதே இல்லை என்பதும் சரிதான்.)
---
வருடதொடக்கத்தில் இந்தியாவில் இருக்கும் போது, பொங்கலுக்கு வந்த எல்லாப்படங்களையும் பார்த்தேன். ஆடுகளம், சிறுத்தை, காவலன். சிலக்காரணங்களால் இந்த படங்களை இருமுறை பார்க்க வேண்டி இருந்தது.
அதன்பிறகு டென்வர் வந்தப்பிறகு, இங்கு பார்த்த முதல் திரைப்படம் - அவன் இவன்.
தெய்வத்திருமகள் மிகவும் தாமதமாக வந்ததால், திரையரங்கு சென்று பார்க்கவில்லை.
அதன்பிறகு, மங்காத்தா. தீபாவளிக்கு ஏழாம் அறிவு.
நடுவில் இந்தியா சென்றிருந்தபோது, முதல் சமயம் ‘எங்கேயும் எப்போதும்’ படமும் தற்சமயம் ‘ராஜபாட்டை’யும் பார்த்தேன். எ.எ. பார்த்தது லேட் என்பதால் எழுதவில்லை. ராஜபாட்டை? ம்க்கும்! (ஆனாலும் சுசிந்திரன் மதனிடம் ஓப்பனாக தான் காம்பரமைஸ் செய்தது பற்றி பேசியது பிடித்திருந்தது.)
----
நான் இந்தியாவில் இருந்தவரைக்கும் இணையத்திலோ, டிவிடியிலயோ உக்கார்ந்து படங்களைப் பார்த்ததில்லை. தற்சமயம், வேறு வழியில்லாமல் பார்த்தாலும், பல அசவுகரியங்கள் இதில் இருக்கிறது. மட்டமான க்வாலிட்டி, சில சமயம் தொடர்ச்சியாக பார்க்க இயலாமல் போவது, சில நல்ல லோ-பட்ஜெட் படங்கள் காணக்கிடைக்காதது என்று தொல்லைகள் பல. இப்படி பார்க்கும் போது, சரியான மூடும் செட் ஆகாது. இப்படி பார்ப்பதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ள முடியாது.
மொத்தத்தில் படங்கள் விஷயத்தில், இந்த வருடம் எனக்கு இழப்பே. (நான் படம் பார்த்துக்கொண்டிருந்த தியேட்டர்களுக்கும் தான்!)
.
5 comments:
சேம் பிளட்
nice
வாங்க முரளிகண்ணன்
நன்றி அமுதா கிருஷ்ணா
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
Post a Comment