Sunday, August 26, 2012

டிஸ்னிலேண்ட் - குழந்தைகளின் மாய உலகம்

முந்திய பதிவின் தொடர்ச்சி.

டிஸ்னி நிறுவனத்திற்கு உலகம் முழுக்க தீம் பார்க்குகள் இருந்தாலும், கலிஃபோர்னியாவில் இருக்கும் டிஸ்னிலேண்ட் தான், அவர்களது முதல் தீம் பார்க். இது முழுக்க முழுக்க டிஸ்னியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு, 1955 ஆம் ஆண்டு திறக்கப்ப்ட்டது.


இங்கு டிஸ்னிலேண்ட், கலிஃபோர்னியா அட்வெஞ்சர் பார்க், டிஸ்னி ரிசார்ட்ஸ் என்று ஒரு வாரம் முழுக்க இருந்து தங்கி பார்ப்பதற்கு நிறைய இருந்தாலும், நான் ஒருநாள் மட்டுமே இங்கு திட்டமிட்டிருந்தேன்.

கலிஃபோர்னியா அட்வெஞ்சர் பார்க் என்பது முழுக்க அட்வெஞ்சர் ரைடுகள் உடையது. இது டிஸ்னிலேண்டிற்கு எதிர்புறம் தான் இருக்கிறது. கைக்குழந்தையுடன் அங்கு சென்றால் வேஸ்ட் என்பதால், 50களில் துவங்கப்பட்ட சரித்திர புகழ்பெற்ற டிஸ்னிலேண்டிற்கு செல்ல முடிவெடுத்திருந்தோம்.

 
பார்க்கிங் இடத்தில் இருந்து, தீம் பார்க்குகளுக்கு செல்ல ட்ரம்கள் இருக்கிறது. பார்க்கிங் கட்டிடங்களை, டிஸ்னியின் கற்பனை கதாபாத்திரங்களின் பெயரால் அழைக்கிறார்கள். எங்கே காரை நிறுத்தியிருக்கிறோம் என்பதை பார்க்கிங் சீட்டின் குறித்துக்கொள்ள வசதியாக, அதை அச்சடித்திருக்கிறார்கள்.நாங்கள் ஏற்கனவே ஆன்லைனில் தீம் பார்க்கிற்கான டிக்கெட்டை எடுத்திருந்தோம். அதை காண்பித்து உள்ளே நுழைந்தோம். ‘நீங்கள் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கும், வருங்காலத்திற்கும், இல்லாத காலத்திற்கும் நுழைகிறீர்கள்’ என்று வரவேற்கிறார்கள்.
டிஸ்னியின் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வேடமணிந்து ஆங்காங்கே சுற்றிக்கொண்டு இருந்தார்கள். மக்கள், அவர்கள் பக்கமிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் பாப்பா, அந்த பொம்மைகளின் முடியை, மூக்கை பிடித்து விளையாடினாள். நாங்கள் பயப்படுவாளோ என்று நினைத்தால், நடந்தது வேறு மாதிரியாக இருந்தது.இங்கு இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஹீரோ, மிக்கி மவுஸ்தான். அதனுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க, ஏகப்பட்ட பில்ட்-டப். அதற்கென இங்கே ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டின் இறுதியில் மிக்கி மவுஸுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க, லைனில் அனுப்புகிறார்கள்.டிஸ்னி கார்ட்டூனில் வரும் வீடுகள், கடைகள் எல்லாம் மெகா சைஸில் நாம் சென்று பார்க்கும் வகையில் இங்கு இருக்கின்றன. அதனால் தான் இது டிஸ்னிலேண்ட். அவருடைய கற்பனை உலகை, அப்படியே நிஜத்தில் உருவாக்கியிருக்கிறார். டிஸ்னி கார்ட்டூனை விரும்பி பார்க்கும் குழந்தைகளுக்கு ஒரே ஜாலியாக இருக்கும்.பெரும்பாலான இக்கடைகளில் டிஸ்னியின் விற்பனை பொருட்களான பொம்மைகள், உடைகள் போன்றவையே இருந்தது.

ஆனால், நானெல்லாம் டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய் அளவுக்கு டிஸ்னி கார்ட்டூன்கள் பார்த்ததில்லை. இப்பவும், எனக்கு தெரிந்த குழந்தைகள், இதை பார்ப்பது போல் தெரியவில்லை. ஆனால், இங்கு வரும் குழந்தைகள் ரொம்பவும் ஆர்வத்துடன் வருகிறார்கள். அதை போல் ட்ரெஸ் அணிந்து வருகிறார்கள்.

இங்கு இருக்கும் பெரும்பாலான ரைடுகளில் (Ride), குழந்தைகளையும் அனுமதித்தது, நல்லதாக போனது.இது விடுமுறை வாரயிறுதியாக (Long Weekend) இல்லாவிட்டாலும், எங்கும் கூட்டம். குழந்தைகளுக்கான ஸ்ட்ராலரை ஆங்காங்கே பார்க் செய்துவிட்டு மக்கள் விளையாட செல்ல, அந்த தள்ளுவண்டிகளின் கூட்டமே பெரும் கூட்டமாக இருந்தது.வெயிலும் கொஞ்சம் காட்டமாகவே இருந்தது. தண்ணீர், குளிர்பானம் வாங்கி குடித்து,  தாகத்தை தணித்துக்கொண்டோம். எல்லாம் யானை விலை என்றாலும், வேறு வழி இல்லை.
அப்படியே சாயந்தரம் வரை சுற்றி சுற்றி வந்தோம். சில ஷோக்கள் பார்த்தோம். வந்திருந்த குழந்தைகளை வைத்தே, ஸ்டார் வார்ஸ் தீமில் ஒரு ஷோ நடத்தினார்கள்.அன்று சாயந்தரம், நியூலேண்ட் பீச் என்னும் இடத்தில் படகில் சென்று திமிங்கலம் பார்க்கும் அனுபவத்திற்கு வேறு செல்லலாம் என்று நினைத்திருந்தேன். சரி, அதையும் ட்ரை செய்யலாம் என்று கிளம்பினோம். அங்கே எங்களுக்கு காத்திருக்கும் சிக்கலைப் பற்றி தெரியாமல்.

.

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

‘நீங்கள் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திருக்கும், வருங்காலத்திற்கும், இல்லாத காலத்திற்கும் நுழைகிறீர்கள்’ என்று வரவேற்கிறார்கள்.

சிறப்பான பட்ங்கள்..
பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

Unknown said...

என்னென்ன ரைட்ஸ் போனீங்க?

ARIVU KADAL said...

சுவாரசியமான பயணக் கட்டுரை அருமை தொடருங்கள்.

Anonymous said...

Just one more week left to go to Oralando....

LA is in Nov....

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கட்டுரை
படங்கள் அருமை


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சரவணகுமரன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி

சரவணகுமரன் said...

ரொம்ப இல்லீங்க... குழந்தைகளை அனுமதித்த சாத்வீக ரைடுகள் மட்டுமே, பகோடா

சரவணகுமரன் said...

நன்றி அறிவு கடல்

சரவணகுமரன் said...

orlando'வில் என்ஜாய் செய்ய வாழ்த்துக்கள்

சரவணகுமரன் said...

நன்றி ஜோசப்