Wednesday, April 2, 2008

ஒகேனக்கல் பிரச்சினையின் காரணம்

இன்று ஒகேனக்கல் பிரச்சினையானதற்கு எடியுரப்பாவும் கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் தான் மூல காரணம் என்றாலும், அதை ஊதி பெரிய பிரச்சினையாக்குவதற்கு நம் நாட்டு மீடியாக்கள் பெரும் பாடு பட்டு வருகிறது. இந்த பிரச்சினை மட்டுமல்ல, நம் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு மீடியாக்களே முக்கிய காரணம்.

இவனுகளுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் பரபரப்பான நியுஸ் தேவை. அதுக்கு கிடைக்கிற சின்ன சின்ன செய்திகள எல்லாம் சேர்த்து, கோர்த்து பரபரப்பு தோரணம் ஆக்கிடுறாங்க.

ஒருத்தன் கருணாநிதி ஆவேசம், சுளுரைன்னு சொல்றான். அப்படி என்ன அவர் சொன்னார்ன்னு பார்த்தா அவர் ஒண்ணும் அப்படி ஆவேசமா எதுவும் சொல்லல. பஸ்ஸை எரித்தாலும் எலும்பை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம் ன்னு சொல்லி இருக்காரு. அவர் ஏதோ பஸ்ஸை எரிப்போம், எலும்பை உடைப்போம்னு சொன்ன ரேஞ்சுக்கு, கர்நாடகாவுல போராட்டம் பண்ண ஆரம்பிச்சுடானுங்க. இதுல கர்நாடகாவை சேர்ந்த கட்சி தலைவர்கள் "என்ன இருந்தாலும் கலைஞர் மாதிரியான ஒரு மூத்த அரசியல் தலைவர் இப்படி சொல்ல கூடாது"ன்னு அறிக்கை விடுறாங்க. அப்படி என்னய்யா அவர் சொல்லிட்டார்?

அடுத்த நாள் பேப்பருல கர்நாடகாவுல கலவரம், தமிழ் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து உடைக்க பட்டதுன்னு நியுஸ். கன்னட அமைப்பு தலைவர், "எங்க எதிர்ப்ப தெரிவிக்க தியேட்டர் நிர்வாகிகள் கிட்ட படங்களை நிறுத்த சொன்னோம். அவர்களும் சம்மதித்தார்கள்."ன்னு சொல்றாரு. இதுல எது உண்மை? (ஆமாம், எதிர்ப்ப தெரிவிக்க தமிழ் திரைப்படங்களுக்கு தடை, தமிழ் சேனல்களுக்கு தடை ன்னு போறிங்களே, எங்கள என்ன அவ்ளோ சினிமா பைத்தியங்கள் ன்னு நினைச்சிடிங்கள? இப்படி கேவல படுத்துனதுக்கே ஒரு போராட்டம் பண்ணலாம் :-)).

இத பார்த்துட்டு தமிழ்நாட்டுல உங்களுக்கு தான் போராட்டம் பண்ண தெரியுமா? நாங்களும் பண்ணுவோம்லன்னு பஸ் சிறை பிடிப்பு, பஸ் நிர்வாகி அறையில் அடைப்பு, திரையுலகினர் உண்ணாவிரதம் ன்னு ஆரம்பிச்சுடாங்க. அதுக்கு உடனே கர்நாடகாவுல பேரணி, பந்த் பதிலுக்கு கிளம்பிடாங்க.

என்ன தான் மீடியாக்கள் செய்திகளை உடனுக்குடன் வழங்குனாலும் அது ஆக்கபூர்வமாகவும் இருக்கணும். வெறும் பரபரப்புக்காகவும் விற்பனைக்காகவும் மட்டுமே செய்திகளை வெளியிட்டு கொண்டு இருந்தால் அதனால் எந்த உபயோகமமும் இல்லை. அதனால் சமூகத்துக்கு தொல்லைகள் மட்டுமே.

8 comments:

பினாத்தல் சுரேஷ் said...

நல்லாச் சொன்னீங்க! இவனுங்க கொஞ்சம் அடங்கினா நாடு முன்னேற வாய்ப்பு இருக்கு.

பினாத்தல் சுரேஷ் said...

நல்லாச் சொன்னீங்க.. இவனுங்க கொஞ்சம் அடங்கினாலே நாடு முன்னேற வாய்ப்பு இருக்கு!

மணியன் said...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. புகைகின்ற இடத்தில் எண்ணெய் விட்டு கொழுந்துவிட்டு எரிய செய்வதே ஊடகங்களின் பங்காய் போயிற்று :((

சரவணகுமரன் said...

பினாத்தல் சுரேஷ் & மணியன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

மங்களூர் சிவா said...

:))))))))))))))

இவனுங்க காமெடி அராஜகம் தாங்கலை சாமி!!!

மங்களூர் சிவா said...

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!

:)))))

bala said...

சரவண குமரன் அய்யா,

சரியாக சொன்னீங்கய்யா.இந்த மீடியாக்கள் கேவலமாக நடந்து கொண்டிருக்கின்றன.அதுவும் CNN IBN,Headlines Today,Times Now (in that order) கேவலத்திலும் கேவலம்.இந்த மூஞ்சிகளூக்கு மக்கள் தொல்லை காட்சியே தேவலாம்.

பாலா

ச.சங்கர் said...

சரவணகுமாரன்

நன்றாக சொன்னீர்கள், இது போலவே பத்திரிக்கைகளின் கீழ்த்தரமான செய்கைகள், விளம்பர உத்திகள் பற்றி 2005-ல் ஒரு பதிவு போட்டிருந்தேன் ( அப்போது டெல்லியில் இருந்தேன்)
http://ssankar.blogspot.com/2005/07/blog-post_22.html