Tuesday, July 8, 2008

20க்கும் மேற்பட்ட ரஜினி படங்களின் கதை ஒரே பதிவில்...

ரஜினியின் 20 க்கும் மேற்பட்ட படங்களின் கதைகள்ன்னோன பதிவு ரொம்ப நீளமா இருக்கும்னு நினைக்கிறீங்களா? ரஜினி படங்கள்'ங்க... அப்படியெல்லாம் இருக்காது... சரி, கதை சுருக்கத்த சொல்றேன்...

"ஏழை பணக்காரனா ஆனா"

இதுதாங்க இருபதுக்கும் மேற்பட்ட படங்களின் கதை சுருக்கம். இதை திரைக்கதையில் "எப்படி ஆனாரு, ஆனா பிறகு என்ன ஆச்சு?"ன்னு வேற வேற மாதிரி சொன்னாக்க இருபது படம் ரெடி.

இதுல மொத வெரட்டி "ஹீரோ ஏழையா இருப்பாரு... ஆனா உண்மையில அவரு பெரிய பணக்காரரு". இந்த டைப்'ல சுமார் 7-8 படங்கள் தலைவரு நடிச்சி இருக்காரு... எதுன்னா, அருணாச்சலம், முத்து, உழைப்பாளி, அதிசய பிறவி, பணக்காரன், வேலைக்காரன், மிஸ்டர். பாரத், தாய் வீடு'ன்னு இப்படி லிஸ்ட் போகுது.

ரெண்டாவது வெரட்டி என்னனா, "பணக்கார, வசதியான ஹீரோ ஏழையாகி, திரும்ப கஷ்டப்பட்டு பணக்காரராகுறது". இந்த கதையில வந்த படங்கள் தான், சிவாஜி, படையப்பா, அண்ணாமலை, ராஜாதி ராஜா எல்லாம்.

அடுத்த வெரட்டி, இந்த ஸ்டோரி லைனையே திருப்பி போடுறது. "நல்ல வசதியா, அதிகாரமா பிறந்தவன் இல்ல இருந்தவன், ஏழையா இருந்தா" எப்படிங்கறது இந்த வகை. இந்த டைப்'ல வந்தது தான், இது எல்லாம். பாட்ஷா, தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மனிதன்.

அடுத்தது நார்மல் ஆனது. ஏழை ஹீரோ வளர்ந்து பணக்காரனாவது. (அய்யோ, இத தானடா பர்ஸ்ட் இருந்து சொல்ற'ங்கிறீங்களா? நல்ல வாசிச்சு பாருங்க :-)) இந்த வகை கதைகளில், நல்ல வழியாகவோ கெட்ட வழியாகவோ, செல்வம் ஹீரோ'க்கிட்ட வந்து சேரும். அப்ப அவர சுத்தி நடக்கிறது என்னங்கறது தான் திரைக்கதை. இப்படிக்கா தலைவரு நடிச்ச படங்கள், வீரா, நல்லவனுக்கு நல்லவன், தீ, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பாபா, மன்னன்.

என்னங்க ஆச்சரியமா இருக்கா? இத தான் நம்ம சூப்பர் ஸ்டார் எண்பதுகளில் இருந்து இப்ப வரை நடிச்சிக்கிட்டு இருக்காரு. அதுவும், வெள்ளி விழா படங்களா ஓடிக்கிட்டு இருக்கு. இத கின்னசுல போடலாம். இப்படி ஒருத்தர் ஒரே கதையில பல வருஷங்களா நடிச்சிக்கிட்டு இருக்காருன்னு ரஜினி'யா கின்னசுல சேர்க்கலாம். இல்லாட்டி, இப்படி ஒரே கதைய பல வருஷங்களா, சந்தோசமா பார்க்கிற மக்கள் இருக்குறாங்கன்னு, தமிழக மக்களை கின்னசுல சேர்க்கலாம்.:-) ஆனா இன்னொரு பக்கம், என்ன கதை, என்ன கதை'ன்னு ஒரு கூட்டம் மண்டைய ஒடைச்சிகிட்டு இருக்கு.

சரி, சரி, இப்ப அடுத்து வெளிவர போற குசேலன் கதை என்ன? இரண்டு ஏழை நண்பர்கள். அதுல ஒருத்தர் நடிச்சு பெரிய பணக்காரரு ஆகிடுறாறு. அது தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அடே, இதுலயும் அதுதானா? :-)

24 comments:

puduvaisiva said...

குமரன் குடில்,

"ஆபரேட்டர் “இப்ப என்ன செய்ய?” என்று கேட்க, வடிவேலு யோசித்து விட்டு சொல்லுவார்.

“அடுத்த வாரம் தியேட்டருல என்ன படம்?”

“பாட்ஷா”

“அதுல யாரு ஹீரோ-வில்லன்?”

“ரஜினி-ரகுவரன்”

“இதுல யாரு ஹீரோ-வில்லன்?”

“ரஜினி-ரகுவரன்”

“அப்ப அத எடுத்து இதுல போட்டுரு”

அவரும் அப்படியே செய்ய, படம் எந்த இடையூரும் இல்லாமல் முடிய, மக்கள் சந்தோஷமாக வெளியே செல்லுவார்கள்.

இதற்கு மேல் ரஜினி படத்தை எப்படி கிண்டல் செய்ய முடியும்?""

:-)))))))))))) super appuu

puduvai siva.

MyFriend said...

நான் ரொம்ப நாளா நெனச்சிட்டிருந்ததை போட்டிருக்கீங்க.. அதுவும் விருவிருப்பா சொல்லியிருக்கீங்க. :-)

இராம்/Raam said...

:)))

கோவை விஜய் said...

ரஜினியின் படங்கள் மட்டுமல்ல எல்லா மசாலாப் படங்களின் கதை பார்முலாவும் அப்படித்தான்.
வித்தியாசமாக நடித்தால் படம் பெட்டிக்குள் சுருண்டு கொள்கிறதே,


அவரின் வித்தியாசமான படங்கள்

1.முள்ளும் மல்ரும்
2ஆறிலிருந்து அறுபது வரை
3.ராஜ சின்ன ரோஜா
4.ராகவேந்தர்.
5.ஜானி
6.எஜாமான்
7.மாப்பிள்ளை.

இருந்தாலும் தாங்கள் சொல்வது போல்
ரஜினி பார்முலாக் கதைகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

rapp said...

செமக் கலக்கல் பதிவு. ரொம்ப சூப்பரா சொல்லிருக்கீங்க

சரவணகுமரன் said...

http://kumarankudil.blogspot.com/2008/06/30-06-08.html

என்னங்க சிவா, அந்த பதிவுல போட்டதுக்கு இந்த பதிவுல பின்னுட்டம்.

சரவணகுமரன் said...

மை ஃபிரண்ட், நீங்களும் நினைச்சிட்டு இருந்தீங்களா?

சரவணகுமரன் said...

நன்றி, இராம்

சரவணகுமரன் said...

நன்றி, விஜய்... கருத்துகளுக்கும் தகவல்களுக்கும்...

சரவணகுமரன் said...

நன்றி rapp

சரவணகுமரன் said...

வெற்றி பெறுவது சரி... யாரும் கண்டு கொள்ளாதது தான் ஆச்சரியம்...

BALAJI said...

ஒரு சின்ன தவறு. அண்ணாமலை படத்தில் ரஜினி ஏழையாக இருந்து பணக்காரர் ஆவார். நீங்கள் சொல்வதுபோல் இல்லை.

மற்றபடி அனைத்து ரஜினி படங்களயும் பார்த்த உங்களுக்கு ஒரு நல்ல விருது கொடுக்க விஜய் டிவீக்கு நான் பரிந்துரை செய்யட்டுமா?

சரவணகுமரன் said...

பாலாஜி, பதிவை கூர்மையாக படித்து பின்னுட்டமிட்டதற்கு நன்றி...

//ஒரு சின்ன தவறு. அண்ணாமலை படத்தில் ரஜினி ஏழையாக இருந்து பணக்காரர் ஆவார். நீங்கள் சொல்வதுபோல் இல்லை.//

அண்ணாமலை படத்தில் முதலில் ரஜினி வசதியாகதானே இருப்பார்? அண்ணா சாலை பக்கம் சொந்த வீடும், ஸ்டார் ஹோட்டல் கட்டும் அளவுக்கு இடமிருந்தால் அது வசதி தானே? நண்பனிடம் அதை இழந்து பின்பு பணக்காரனாவதால், அவ்வாறு கூறி இருந்தேன்.

//மற்றபடி அனைத்து ரஜினி படங்களயும் பார்த்த உங்களுக்கு ஒரு நல்ல விருது கொடுக்க விஜய் டிவீக்கு நான் பரிந்துரை செய்யட்டுமா?//

தமிழ்நாட்டில் அனைவரும் ரஜினி படம் பார்த்தாக வேண்டும் என்ற சூழ்நிலை வந்த பின்பு இதற்க்கெல்லாம் விருது கொடுத்தால் அவ்வளவுதான். :-)

தொடர்ந்து பின்னோட்டம் இடவும். நன்றி.

சித்தன் said...

ஒரே க‌தைய‌ பாத்துகிட்டு வ‌ர்ற‌ த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளுக்கு ம‌ட்டும் கின்ன‌ஸ் கொடுத்தா, அப்புற‌ம் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் கோச்சிக்க‌ மாட்டாங்க‌லா..? போன‌ வ‌ருஷ‌ம் ம‌லேசியால‌ சிவாஜி ப‌ட‌த்த‌ 1 ம‌ணி நேர‌ம் லேட்டா போட்டுட்டானுங்க‌ன்னு, தியேட்ட‌ர் திரைத் துணிய‌ கிழிச்சி, நாற்காலிய‌லாம் உடைச்சி, தியேட்ட‌ர் உரிமையாள‌ர் ம‌ண்ட‌யும் உடைச்சி.. என்னான்னே க‌ஷ்ட‌ப்ப‌ட்டுருக்காங்க‌ ந‌ம்ம‌ த‌மிழ‌ கூட்ட‌ம், அவுங்க‌ பெய‌ர்க‌ளும் கின்ன‌ஸ் புத்த‌க‌த்துல‌ இட‌ம்பெற‌னும்னு கேட்டுக்குறேன்.

சரவணகுமரன் said...

சித்தன், தகவலுக்கு நன்றி...

//அவுங்க‌ பெய‌ர்க‌ளும் கின்ன‌ஸ் புத்த‌க‌த்துல‌ இட‌ம்பெற‌னும்னு கேட்டுக்குறேன்.

சரி, உலக தமிழர்கள்ன்னு வச்சிக்கலாம்...

Raman Kutty said...

இதே ஃபர்முலாவை பின்பற்றி உள்ளாடையைக்கூட வெற்றிப் பட ஃபார்முலாவில் அணியும் விஜய்.. அவர்கள் என்னவாகப்போகிறார்.. அடுத்த சூப்பர் ஸ்டார்?? அல்லது அதற்குள் தமிழ் ரசிகர்கள் விழித்துகொள்வார்களா????.. எல்லாம் கெயாஸ் தியரி போல உள்ளது

கயல்விழி said...

நல்ல பதிவு.

அடுத்து குருவி விஜய் பற்றியும் எழுதுங்க :)

துளசி கோபால் said...

பணக்காரரா இருக்கும் காட்சிகளில் பின்புலத்தில் லலிதமஹாலைக் காமிச்சு அப்படியே சாரட் வண்டியில் ஸ்டைலா உக்காந்து வரும் சீன் கண்டிப்பா இருக்கணுங்க.

அதென்னவோ மைசூர் மகாராஜா மேலே அப்படி ஒரு அப்ஸஷென்.

மத்தபடி எல்லா கதைகளும் ஸேம் ஸேம் ஷேம்....

பதிவு அருமை.
ரசித்தேன்:-)

சரவணகுமரன் said...

//தமிழ் ரசிகர்கள் விழித்துகொள்வார்களா????..

வடிவேலு பாணியில், திரிஷா இல்லாட்டி திவ்யான்னு போய்ட்டே இருப்பாங்க... :-)

சரவணகுமரன் said...

நன்றி கயல்விழி...

சரவணகுமரன் said...

நன்றி துளசி கோபால்...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

டாக்டர் விஜய் இக்கும் இப்படித்தான் கதை ரெடி பண்ணுகிறார்கள் !

சரவணகுமரன் said...

நன்றி ARUVAI BASKAR

RAMASUBRAMANIA SHARMA said...

WHAT ABOUT SUPER STARS OUTSTANDING MOVIES(APART FROM HIS MASS CHARACTERS) LIKE THILLU MULLU, MOONRU MUGAM,ILAMAI UNJALADUKIRATHU, NINAITHALE INIKKUM, PIRIA, NETRI KANN, MOONRU MUDICHU, ABORVA RAGANGAL ..AVARKAL...ANNAI ORU ALYAM, ANBUKKUM NAN ADIMAI, AND SO ON....