Friday, July 18, 2008

தங்கத்தலைவி நயன்தாரா வாழ்க!!!


சேர காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் தமிழக-கேரள கலாச்சார கலை உறவின் தற்போதைய பிரதிநிதி, நயன்தாரா. சுமார் பத்து படங்களில் தான் நடித்து இருந்தாலும் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் இவர் பிரபலம். தொங்கலில் இருக்கும் மத்திய அரசை பற்றி செய்தி வருகிறதோ இல்லையோ, இவர் பற்றிய செய்தி இல்லாத பத்திரிகை தமிழகத்தில் இல்லை.

தமிழன் தன் அடையாளத்தை சிறிது காலம் இழந்து ஒல்லிபிச்சான் நடிகைகளுக்கு வேண்டாவெறுப்பாக வேறுவழியில்லாமல் ஆதரவு அளித்து கொண்டிருந்த போது, அவர்களுக்கு தன் புது பரிணாமத்தை ஐயா படத்தில் காட்டி, அவர்களின் தூக்கத்தை கெடுக்க தொடங்கியவர்தான் நயன்தாரா. பிரபல நடிகர்களே 'நயன்தாரா நயன்தாரா' என்று அலையும் போது, அவர்களையே உதாரண புருஷர்களாக கொண்ட நம் தமிழ் இளைஞர்கள் என்ன செய்வார்கள்?

மார்க்கெட்டை இழந்து கொண்டிருந்த பல நட்சத்திரங்களுக்கு இவர்தான் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்றால் அது மிகையில்லை. சந்திரமுகி படம் மூலம் ரஜினிக்கும், பில்லா படம் மூலம் அஜித்துக்கும் பெரும் வெற்றிகளை கொடுத்தவர். சிவாஜி, பில்லா படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கே பல தேசங்களை கடந்த புது திசையை காட்டியவர்.

தினத்தந்தி பத்திரிகை இவருக்கென ஒரு தனி செய்திதுறையையே அமைத்து, இவர் பற்றிய செய்திகளை துல்லியமாகவும், விரைவாகவும் வாசகர்களுக்கு அளித்து வருகிறது. சமீபத்தில் இவரது துணிச்சல், சாதனை பற்றிய செய்திகள் தமிழக வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இவருக்கென நியமிக்கப்பட்ட பிரத்யேக நிருபர் ஒருவர், விஷால், சிம்பு, திரிஷா போன்றோர்களை விரட்டி விரட்டி பேட்டியெடுத்து தினமும் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் திரை உலக வரலாறில் முதன்முதலில் ஒரு லட்சம் பணம் சம்பளமாக பெற்று சாதனை படைத்த நடிகை, கே. பி. சுந்தரம்பாள். சுமார், எழுபது வருடங்களுக்கு பிறகு அதுபோன்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்ற மைல் கல்லை தாண்டி சரித்திரத்தில் இடம் பிடித்தவர் நயன்தாரா. அவரை போலவே இவரும் அரசியலில் புகழ் பெறுவார் என்ற தொலைநோக்கு பார்வையிலையே, வருங்கால முதல்வர்களில் ஒருவரான நடிகர் விஜய், தான் வெளியிட்ட ரசிகர் மன்ற கொடி விழாவில் இவர் பக்கத்தில் இருக்கும்வாறு பார்த்துக்கொண்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இதுவரை நடிகைகளுக்கு தமிழகத்தில் கோவில்தான் கட்டப்பட்டு உள்ளது. முதன் முதலில் நயன்தாராவுக்கு தான் அனைத்து சாதி மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் சமத்துவ தலம் அமைக்க படும் என்று, நயன்தாராவின் முதல் படத்தில் நடித்த நடிகர் என்ற பெருமை கொண்ட நடிகர் சரத்குமார், தன் சமத்துவ கட்சியின் நாடளுமன்ற மன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி சேர்த்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அரசுடன் நடந்த ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டத்தில் கூட நயன்தாரா பேரில் உணவு பண்டங்கள் வெளியிட்டு, விலைவாசி உயர்விலிரிந்து மக்களைத் திசை திருப்ப ஆலோசனை கூறப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன.

இவ்வளவு சிறப்பு கொண்ட நயன்தாராவின் வெற்றி பயணம் தொடர வாழ்த்தி ஆதரவளிப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

வாழ்க நயன்தாரா...

வளர்க அவர்தம் கலை துண்டு... மன்னிக்க, கலைத்தொண்டு...

இவண்,
நயன்தாரா இளைஞர் பாசறை.

பின்குறிப்பு: எப்போதும் தமிழ்மணத்தின் இடதுபக்கம் மட்டும் உள்ள சூடு, தற்போது முழு பக்கத்திலும் பரவி கிடப்பதால், அதை தணிப்பதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.

16 comments:

Anonymous said...

Only one picture?
Too bad!

-Nayan veriyan

மங்களூர் சிவா said...

வளர்க அவர்தம் கலை துண்டு... மன்னிக்க, கலைத்தொண்டு...

இவண்,
நயன்தாரா இளைஞர் பாசறை.
மங்களூரு

Anonymous said...

super..

Syam said...

//வளர்க அவர்தம் கலை துண்டு... மன்னிக்க, கலைத்தொண்டு...

இவண்,
நயன்தாரா இளைஞர் பாசறை
ஆப்பிரிக்கா

Syam said...

//வருங்கால முதல்வர்களில் ஒருவரான நடிகர் விஜய்//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், டாக்டர் விஜய் என்று இருக்க வேண்டும் :-)

சரவணகுமரன் said...

நயன் வெறியரே,

கூகிள் ஆண்டவரிடம் கேட்டால் கொடுத்திட போகிறார்...

சரவணகுமரன் said...

சிவா,

நீங்க தான் மங்களுருக்கு இன்-சார்ஜ்'ஆ? நடத்துங்க... நடத்துங்க...

சரவணகுமரன் said...

ஆப்பிரிக்காவா? விட்டா வியாழன், சந்திரன்'ல எல்லாம் ஆரம்பிச்சுடுவாங்க போல..

rapp said...

ஹா ஹா ஹா, ரொம்ப ரொம்ப சூப்பர்ங்க.
//சந்திரமுகி படம் மூலம் ரஜினிக்கும், பில்லா படம் மூலம் அஜித்துக்கும் பெரும் வெற்றிகளை கொடுத்தவர். சிவாஜி, பில்லா படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கே பல தேசங்களை கடந்த புது திசையை காட்டியவர்.
//
அப்படிப் போடுங்க அருவாள. செம பன்ச்
//தினத்தந்தி பத்திரிகை இவருக்கென ஒரு தனி செய்திதுறையையே அமைத்து, இவர் பற்றிய செய்திகளை துல்லியமாகவும், விரைவாகவும் வாசகர்களுக்கு அளித்து வருகிறது//
அதனை நானும் தவறாமல் படித்து பயங்கரமாக புளங்காகிதம் அடைந்து பொது அறிவும் பெறுகிறேன் :):):)
//இவரும் அரசியலில் புகழ் பெறுவார் என்ற தொலைநோக்கு பார்வையிலையே, வருங்கால முதல்வர்களில் ஒருவரான நடிகர் விஜய், தான் வெளியிட்ட ரசிகர் மன்ற கொடி விழாவில் இவர் பக்கத்தில் இருக்கும்வாறு பார்த்துக்கொண்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்//
இதுக் கொஞ்சம் ஓவரு:):):) ஏன் எங்க தல ஜே.கே.ரித்தீஷை எல்லாம் இருட்டடிப்பு செய்யப் பாக்கறீங்க. இன்னைக்கு தமிழ்நாடே அவர் பின்னால்தான் இருக்குங்கறத மறந்திடாதீங்க

இங்ஙணம்
தலைவி
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

இவன் said...

தலைவி நயன்தாரா வாழ்க

பரிசல்காரன் said...

இந்தப்
பதிவை
நான்
பயங்கரமாக
கன்னாபின்னாவென்று
வன்மையாக
தீவிரமாக
மனப்பூர்வமாக
மொழிவழிகிறேன்!

(ஹி..ஹி.. நயந்தாரவைப் பாத்ததுல ”வழியறேன்”ன்னு வந்துடுச்சு!)

Syam said...

//ஆப்பிரிக்காவா? விட்டா வியாழன், சந்திரன்'ல எல்லாம் ஆரம்பிச்சுடுவாங்க போல..//

அங்க எல்லாம் முன்னமே இருக்கு...

சரவணகுமரன் said...

அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்ற தலைவியே, என்னை மன்னிச்சி விட்டுடுங்க... ரித்தீஷ் ஏற்கனவே பெரிய அரசியல் வாதி.... அவர போயி இவரு கூட கம்பேர் பண்ணிட்டு... ச்சே.. ச்சே...

சரவணகுமரன் said...

வாங்க இவன்... வந்து ஜோதில ஐக்கியமாகுங்க...

சரவணகுமரன் said...

//இந்தப்
பதிவை
நான்
பயங்கரமாக
கன்னாபின்னாவென்று
வன்மையாக
தீவிரமாக
மனப்பூர்வமாக
மொழிவழிகிறேன்!

ஜூப்பரு...

சரவணகுமரன் said...

//அங்க எல்லாம் முன்னமே இருக்கு...

ஒ... அது வேறயா? இந்த விஷயம் நாசாவுக்கு தெரியுமா?