Thursday, July 24, 2008

ரஜினி ரஜினிதான்…

ஆரம்பிச்சிட்டாங்கப்பா…

நேத்துத்தான் குசேலன் டிரேய்லர் ரிலிஸ் பண்ணினாங்க. அதுக்குள்ள வட இந்திய சேனல்களான என்டிடிவி, ஹெட்லைன்ஸ் டுடேயில் படத்தைப் பற்றிய செய்தி, நிகழ்ச்சின்னு அமர்க்களப் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.




இதுக்கும் இது ஒரு முழுமையான ரஜினி படம் கிடையாது.


ரஜினி பற்றிய டப்பா செய்திகளுக்கு தமிழ்நாட்டில் தான் வரவேற்பு என்று நினைத்தால், இப்போது இந்திய அளவிலா?



இனி இத பாத்து மத்த சேனல்களும் ஆரம்பிப்பாங்க. அடுத்த வாரம் படம் ரிலிஸா? களைக்கெட்ட போகுது.



தசாவதாரத்தில் கமல் பத்து வேடத்தில் நடித்ததை குறிப்பிட்டு, இந்த படத்தில் ரஜினி இருபது வேடத்தில் நடித்திருப்பதாக கூறி, கமலை ஒரு நொடியில் காலி பண்ணிவிட்டார்கள்.ஹைய்யோ… ஹைய்யோ…

நல்லவேளை, ஒரு நாள் முன்னாடி இந்த டிரேய்லர ரிலிஸ் பண்ணலை. பாராளுமன்றத்தை கவர் பண்ணாம இத கவர் பண்ணிருப்பானுங்க. :-)

10 comments:

VSK said...

"ரஜினி ரஜினிதான்…"

ரிப்பீட்டேய்ய்!!

முரளிகண்ணன் said...

பேசாம கமல் மன்றத்துல இருந்து கழன்டுக்கிட்டு ரஜினி கூட்டத்துல ஐக்கியமாகிடலாம்னு தோனுது.

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................இருபது வேஷம் போட்டிருக்காரா, இதென்ன கொடுமையான வதந்தி

சரவணகுமரன் said...

ஆமாம், vsk...

ரஜினி ரஜினிதான்... :-)

சரவணகுமரன் said...

//பேசாம கமல் மன்றத்துல இருந்து கழன்டுக்கிட்டு ரஜினி கூட்டத்துல ஐக்கியமாகிடலாம்னு தோனுது.//

:-)

ரஜினியின் புகழ்ப் பரப்ப "அன்புள்ள ரஜினிகாந்த்"ன்னு ஒரு ப்லாக் ஆரம்பிக்கலாமா? :-)

சரவணகுமரன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................இருபது வேஷம் போட்டிருக்காரா, இதென்ன கொடுமையான வதந்தி//

ராப், ஏதாவதொரு பாட்டுல இருபது சட்டைய மாத்தி போட்டு இருப்பாரு... அதுக்கு இப்படி ஒரு பில்-டப் :-)

ரங்கநாதன் தெருவுல வாங்குன சட்டைகளே, ரெண்டு வருஷம் போட்ட ஹாலிவுட் மேக்-அப்ப தூக்கி சாப்பிடுதுன்னா, பார்த்துக்கோங்க? ரஜினி ரஜினிதான்... :-)

கிரி said...

தலைய புகழ்கிறேன்னு!!! சொல்லி போட்டு வாரிட்டு இருக்கீங்க :-))))

//ரஜினியின் புகழ்ப் பரப்ப "அன்புள்ள ரஜினிகாந்த்"ன்னு ஒரு ப்லாக் ஆரம்பிக்கலாமா? :-)//

எதுக்கு? சேம் சைட் கோல் போட்டு தாக்காவா :-))))))))))))))))))

இருங்க நான் தொடங்க போறேன்..பதிவுலகம் முழுவதும் தலைவருக்கு எதிர்ப்பு மற்றும் கிண்டல்..அசராம அடிக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு.. ஹி ஹி ஹி

சரவணகுமரன் said...

//சொல்லி போட்டு வாரிட்டு இருக்கீங்க :-))))
பாருங்க! உண்மைய சொன்னா வாருன்ன மாதிரி இருக்கு...

//எதுக்கு? சேம் சைட் கோல் போட்டு தாக்காவா :-))))))))))))))))))
:)

//அசராம அடிக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு..
அடிச்சி ஆடுங்க... வாழ்த்துக்கள்...

Elango said...

இது டிவி விருப்பப்பட்டு செய்வதில்லை. தயாரிப்பு கம்பனி செய்யும் விளம்பரம்தான்.

சரவணகுமரன் said...

இருக்கலாம் இளங்கோ... எல்லாரும் ரஜினியை குசேலனை திட்டிட்டு இருக்க, Headlines today இல், ரஜினியையும் படத்தையும் இன்னமும் புகழ்ந்துட்டு இருக்காங்க... "The greatest superstar India has ever produced" ன்னு...