Friday, September 26, 2008

இன்டர்நெட் அட்ரஸ் காலியாகுதுங்கோ

எந்தவொரு கணினியும், தகவல் தொடர்பு சாதனமும் இணையத்தில் பங்குகொள்ள, அதற்கு ஐ.பி. அட்ரஸ் அவசியம். இப்போது உள்ள முறைப்படி, ஒவ்வொரு முகவரியும், 32 பைனரி எண்களால் ஆனது. அதாவது அதிகபட்சம் எண்களாக 255.255.255.255 என்று இப்படி இருக்கும்.

இந்த முறைப்படி 4.2 பில்லியன் முகவரிகளே சாத்தியம். இணையத்தின் முன்னேற்றத்தாலும், புது புது தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையாலும், பெரும்பாலான முகவரிகள் உபயோகப்படுத்தபட்டாயிற்று. இன்னும், மிச்சம் இருப்பது பதினாலு சதவிகிதம் மட்டுமே. அதுவும், 2010 க்குள் காலியாகிவிடுமாம்.

புது முகவரிகள் இல்லாவிட்டால், புதியதாக யாராலும் இணையத்தில் உலாவ முடியாது. கிலியா இருக்குமே? புதுசா தங்க இடம் இல்லாமல் கூட இருக்கலாம், இன்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் பலர் இருக்கிறார்கள்.இதற்கு ஏற்கனவே தீர்வு கண்டுப்பிடித்தாயிற்று. இப்போது உள்ள, IPV4 முறைக்கு அடுத்தக்கட்டமாக IPV6 என்று இதற்கு பெயர். இதன் மூலம், 340 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் புதிய முகவரிகள் கிடைக்கும். இது, இன்னும் சில பல்லாண்டுகளுக்கு தாக்கு பிடிக்கும். அதுக்குள்ளே, உலகம் அழிஞ்சிடாது?

இதில், என்ன பிரச்சினை என்றால், இது பரவலாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்த வகை முகவரி உள்ளவர்களால், இணையத்தை உபயோகப்படுத்த முடியாது. இது, இணைய உலகத்தை மிகவுமே பாதிக்கும்.

அதனால், இணைய தந்தை என்றழைக்கப்படும் வின்ட் செர்ப் என்ன சொல்கிறார் என்றால், பயனாளிகள் அனைவருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இருக்கவேண்டும் எனவும், இம்முறைக்கு சாதகமான சாதனங்களையே இனி வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஸோ மக்களே, புதுசா ஏதும் கம்ப்யூட்டர் வாங்குறீங்கன்னா "IPV6 Compatible" ஆ பார்த்து வாங்குங்க.

20 comments:

Anonymous said...

me the first

rapp said...

me the first?

rapp said...

ஓகே, அப்டியே செஞ்சிடலாம்.

முரளிகண்ணன் said...

மிக உபயோகமான தகவல். நன்றி

முரளிகண்ணன் said...

very useful information. Thankyou

சரவணகுமரன் said...

வாங்க rapp

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி முரளிகண்ணன்

Anonymous said...

IP 256.256.256.256 is not a valid one. The reason is it is equivalent of 0.0.0.0, which is a valid IP

The max possible is 255.255.255.255

Anonymous said...

Only the combination can be of 256X256X256X256 possibilities. The 256 numbers will be in the range of 0 (binary 00000000) to 255(binary 11111111).

சரவணகுமரன் said...

பிழை திருத்தலுக்கு நன்றி, அனானி...

சரவணகுமரன் said...

திருத்தியாச்சி...

Anonymous said...

Appreciate it.

வெங்கட்ராமன் said...

நானும் IP அடரஸ் பத்தி படிக்கும் போது இதப் பத்தி யோசிச்சிருக்கேன்.
எப்படி இத செயல் படுத்தப் போறாஙகன்னு தெரிஞ்சா விரிவா எழுதுங்க. . .

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி வெங்கட்ராமன்.

இது ஏற்கனவே பிரபலமான நிறுவனங்களின் சாதனங்களில் உள்ளது. நாம் செய்ய வேண்டியது, இது போன்ற சாதனங்களை வாங்குவதும், ரௌடேர் போன்றவற்றை இதற்க்கு ஏற்ப மாற்றியமைப்பதும் ஆகும். முடிந்தால், மேலும் இதை பற்றி தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.

ISR Selvakumar said...

எளிமையா புரியற மாதிரி எழுதியிருக்கீங்க!
இன்னும் இதைப்போல டெக்னிகல் விஷயங்களை இதே ஸ்டைல்ல உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

நன்றி.

ஆமாம் google adsense/ advertisement எப்படி இணைப்பது?

google adsense apply செய்தால்

Issues:

- Unsupported language

அப்படின்னு வருது

சரவணகுமரன் said...

நன்றி selvakumar. கண்டிப்பா எழுதுறேன்...

சரவணகுமரன் said...

வாங்க கடைசி பக்கம்.

இப்போதைக்கு கூகிள் அட்சென்ஸ் சில அனுமதிக்கபட்ட மொழிகளில் உள்ள தளங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் வரும் விளம்பரங்கள், அந்தந்த பக்கத்தில் உள்ள விஷயங்களுக்கு ஏற்ப வருவதால், அந்த மென்பொருளுக்கு அந்த மொழி புரிந்தாக வேண்டும். தற்போது அதற்க்கு தமிழ் தெரியாது. :-)

ரிஷி (கடைசி பக்கம்) said...

நன்றி சரவணன்.

ஆனால் மற்றவர்கள் தமிழ் ப்ளாகில் உபயோகபடுத்துகிறார்களே? அது எப்படி என்று தெரியுமா?

நீங்கள் கூட விளம்பரம் கொடுத்து இருக்கிறீர்களே? தெரிந்தால் சொல்லவும்.

சரவணகுமரன் said...

என்னுடையதில் உள்ளது அட்சென்ஸ் அல்ல. இது, AdsforIndians என்னும் தளம் வழங்கும் விளம்பரங்கள்.