Saturday, February 21, 2009

ரசிகர்கள் நடிகர்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

ரசிகர்கள் நடிகர்களிடம் (நாக்க புடிங்கிக்கிற மாதிரி) கேட்க விரும்பும் 10 கேள்விகள்

1) தலைவா, நான் படிக்கும் போதுதான் ஒரு இருபது வயசு பொண்ணு கூட ஆடிட்டு இருந்த. இப்ப என் மவனும் படிச்சு முடிச்சிட்டான். இன்னமும் அதே மாதிரி இன்னொரு இருபது வயசு பொண்ணு கூட ஆடிட்டு இருக்கியே. ஏன் இப்படி?

2) ஒரு படம் ப்ளாப் ஆன பின்னாடியும், ஒரு தயாரிப்பாளரின் வாழ்க்கையை ஒழிச்சு கட்டுன பின்னாடியும், எப்படி அதே சம்பளத்தை, கோடிகளில, உங்களால எந்த சங்கடமும் இல்லாம கேட்க முடியுது?

3) சார். உங்க வயசு எங்களுக்கு தெரியும். உங்க வயசுக்காரங்க முடி என்ன கலர்ல இருக்கும்ன்னு எங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் இன்னமும் டை அடிச்சிக்கிட்டு? நிஜ வாழ்க்கையிலும் இந்த மேக்கப் தேவையா?

4) அது என்னப்பா, உங்களுக்கெல்லாம் பொது மக்கள் மேல சேவை உணர்வு உங்க மார்க்கெட் போனதுக்கப்புறம் தான் வருது?

5) உங்க பையனுக்கு ஒண்ணும் தெரியாது, நடிக்க வாரான். சரி. அது என்ன, நீங்களும் உங்க பையனும் ஒரே பொண்ணு கூட ஆடிட்டு. அசிங்கமா இல்ல?

6) உங்களுக்கு இன்னொரு நடிகனை பிடிக்கலைன்னா, அதுக்கு ஏங்க கதைக்கு சம்பந்தமே இல்லாமே, அவுங்களை திட்டி டயலாக் பேசிட்டு? நாங்க காசு கொடுத்து படம் பார்க்க வருறது, உங்க சில்லறைத்தனமான சண்டைய பார்க்கவா?

7) காமெடி பண்ணனும்ன்னா யாரையாவது அடிச்சோ, உதைச்சோ, திட்டியோ, கிண்டல் பண்ணியோ, கேவலப்படுத்தியோ, கெட்ட வார்த்தையில பேசியோ தான் சிரிக்க வைக்க முடியுமா? வேற முறையே இல்லையா? டீ.ஆர்., ஜே.கே.ஆர் இவுங்கள பார்த்தாவது திருந்த வேண்டியதுதானே?

8) உங்க பேருக்கு முன்னால ஒரு பட்டப்பேரு வச்சிருக்கீங்களே? அதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?ன்னு என்னைக்காவது யோசிச்சியிருக்கீங்களா?

9) படத்துல நடிக்குறதுக்கு முக்கியமான தகுதிகள்ன்னு, டான்ஸ் ஆடுறது, சிலம்பம் சுத்துறது, கராத்தே போடுறது, குதிரை ஓட்டுறதுன்னு, இதையெல்லாம் யாருய்யா சொன்னது? நடிக்குறது தானே முக்கியம்?

10) யக்கா, எப்படித்தான் நடிக்க வந்திருக்காட்டி டாக்டர் ஆகிருப்பேன், வக்கீல் ஆகிருப்பேன்ன்னு உங்களாலே புளூக முடியுது? அதான், உங்களுக்கு நடிக்க வரலில்ல? டாக்டர் ஆகிருக்க வேண்டியது தானே?

36 comments:

அப்பாவி தமிழன் said...

நான் தான் 1st
/////எப்படித்தான் நடிக்க வந்திருக்காட்டி டாக்டர் ஆகிருப்பேன், வக்கீல் ஆகிருப்பேன்ன்னு உங்களாலே புளூக முடியுது? அதான், உங்களுக்கு நடிக்க வரலில்ல? டாக்டர் ஆகிருக்க வேண்டியது தானே?////////

அதான் ஒருத்தர் நடிக்க வரலைனு டாக்டர் ஆயிட்டாரே ....நான் மேலோட்டமா தான் பா சொல்றேன் எந்த ரசிகரும் வீடு புகுந்து வில்லால ச்ச கல்லால அடிச்த்ராதிங்க

Anonymous said...

என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க..

சரவணகுமரன் said...

வாங்க அப்பாவி தமிழன்...

ஹி... ஹி... நல்லா சொன்னீங்க...

சரவணகுமரன் said...

புகழினி,

ஏம்ப்பா நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா? ஒ.கே. தானே?

வெட்டிப்பயல் said...

//அப்பாவி தமிழன் கூறியது...
நான் தான் 1st
/////எப்படித்தான் நடிக்க வந்திருக்காட்டி டாக்டர் ஆகிருப்பேன், வக்கீல் ஆகிருப்பேன்ன்னு உங்களாலே புளூக முடியுது? அதான், உங்களுக்கு நடிக்க வரலில்ல? டாக்டர் ஆகிருக்க வேண்டியது தானே?////////

அதான் ஒருத்தர் நடிக்க வரலைனு டாக்டர் ஆயிட்டாரே ....நான் மேலோட்டமா தான் பா சொல்றேன் எந்த ரசிகரும் வீடு புகுந்து வில்லால ச்ச கல்லால அடிச்த்ராதிங்க//

சூப்பர் :)

வெட்டிப்பயல் said...

நிறைய கேள்விகள் ஒரே நடிகரை டார்கெட் பண்ற மாதிரி இருக்கு :)

அப்பாவி தமிழன் said...

ஹி ஹி நன்றி சரவணகுமரன்

பிரேம்குமார் அசோகன் said...

//உங்களுக்கு இன்னொரு நடிகனை பிடிக்கலைன்னா, அதுக்கு ஏங்க கதைக்கு சம்பந்தமே இல்லாமே, அவுங்களை திட்டி டயலாக் பேசிட்டு? நாங்க காசு கொடுத்து படம் பார்க்க வருறது, உங்க சில்லறைத்தனமான சண்டைய பார்க்கவா?//

சரியான பாய்ன்ட்...

அருமையான பதிவு

பூங்குழலி said...

நல்லா கேட்டீங்க ...எனக்கு ஒரு கேள்வி .
எப்படி உங்களுக்கு நாயகியா நடிச்சவங்கள அம்மாவாவும், மகளா நடிச்சவங்கள நாயகியாகவும் நடிக்க கூச்சமில்லாம கூப்பிடுரீங்க ...
அம்மணிகளே ஏன் சம்மதிக்கிறீங்க?

தாமிரபரணி said...

//** தலைவா, நான் படிக்கும் போதுதான் ஒரு இருபது வயசு பொண்ணு கூட ஆடிட்டு இருந்த. இப்ப என் மவனும் படிச்சு முடிச்சிட்டான். இன்னமும் அதே மாதிரி இன்னொரு இருபது வயசு பொண்ணு கூட ஆடிட்டு இருக்கியே. ஏன் இப்படி? **//
ஏன் இப்படினு அந்த பொண்ணு கிட்ட கேளுங்க
//**ஒரு படம் ப்ளாப் ஆன பின்னாடியும், ஒரு தயாரிப்பாளரின் வாழ்க்கையை ஒழிச்சு கட்டுன பின்னாடியும், எப்படி அதே சம்பளத்தை, கோடிகளில, உங்களால எந்த சங்கடமும் இல்லாம கேட்க முடியுது**//
எப்படி அதே சம்பளத்தை தயாரிப்பாளரால் கொடுக்க முடியுது
//**சார். உங்க வயசு எங்களுக்கு தெரியும். உங்க வயசுக்காரங்க முடி என்ன கலர்ல இருக்கும்ன்னு எங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் இன்னமும் டை அடிச்சிக்கிட்டு? நிஜ வாழ்க்கையிலும் இந்த மேக்கப் தேவையா? **//
நடிகர்கள் மட்டும்தான் டை அடிச்சிக்கிட்டு அலைரானுங்களா
//***உங்க பையனுக்கு ஒண்ணும் தெரியாது, நடிக்க வாரான். சரி. அது என்ன, நீங்களும் உங்க பையனும் ஒரே பொண்ணு கூட ஆடிட்டு. அசிங்கமா இல்ல?**//
உங்களுக்கு தொழிலுக்கும் வாழ்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல, என்ன கேட்ட சினிமாவில் நடிகர் நடிகையை கட்டிபிடிப்பதே பாதி விபசாரத்துக்கு சமம்
நால் சுவற்றுக்குள் கட்டிபிடித்தால் விபசாரம், கேமராவுக்கு முன்னாடி சினிமாங்கர போர்வைக்குள் கட்டிபிடித்தால் அதற்கு பெயர் நடிப்பு
//***காமெடி பண்ணனும்ன்னா யாரையாவது அடிச்சோ, உதைச்சோ, திட்டியோ, கிண்டல் பண்ணியோ, கேவலப்படுத்தியோ, கெட்ட வார்த்தையில பேசியோ தான் சிரிக்க வைக்க முடியுமா? ***//
அதுவும் ஒருவகையான சிரிப்புதான்
உங்களுக்கு அப்படிபட்ட காமெடி பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிகொள்ளுங்கள்
//***உங்க பேருக்கு முன்னால ஒரு பட்டப்பேரு வச்சிருக்கீங்களே? அதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?ன்னு என்னைக்காவது யோசிச்சியிக்கீங்களா? ***//
இது யோசிக்க வேண்டியது
//***படத்துல நடிக்குறதுக்கு முக்கியமான தகுதிகள்ன்னு, டான்ஸ் ஆடுறது, சிலம்பம் சுத்துறது, கராத்தே போடுறது, குதிரை ஓட்டுறதுன்னு, இதையெல்லாம் யாருய்யா சொன்னது? நடிக்குறது தானே முக்கியம்? ***//
அது எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிகொள்வதும் ஒரு வகை நடிப்புதான்

முரளிகண்ணன் said...

super

"உழவன்" "Uzhavan" said...

நண்பரே.. இன்னொரு கேள்வி..

* ஏண்டா டேய்.. கேமரா முன்னால எவளோ ஒருத்தியோட கொஞ்சிக்கிட்டு இருக்க; ஒரு நாளைக்கு ரெண்டு மூணு சூட்டிங் இருந்தா, ரெண்டு மூணு பேரோட உருண்டு புரளுர..
எப்படிடா உன் பொண்டாட்டி இதுக்கெல்லாம் சம்மதிக்கா?? கேட்டா எல்லாம் நடிப்புனு சொல்லுவ.

உழவன்
http://tamizhodu.blogspot.com

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா :D

சரவணகுமரன் said...

வாங்க வெட்டிபயல்...

//நிறைய கேள்விகள் ஒரே நடிகரை டார்கெட் பண்ற மாதிரி இருக்கு :)//

அப்படியெல்லாம் நான் ஒருத்தர மட்டும் டார்கெட் பண்ணலீங்க... எல்லோருக்கும் சரி சமமா பிரிச்சி கொடுத்திக்கேனே? :-)

சரவணகுமரன் said...

நன்றி பிரேம்

சரவணகுமரன் said...

பூங்குழலி, நல்லா நறுக்குன்னு கேட்டீங்க...

இப்ப, கன்னடத்துல ஒரு படத்துல நிஜமான அப்பா-பொண்ணு, நாயகன் - நாயகியா நடிக்குறாங்க... அதுக்கு என்ன சொல்ல?

சரவணகுமரன் said...

கேள்விகள இப்படி திருப்பி விட்டுட்டீங்களே, தாமிரபரணி?

சரவணகுமரன் said...

//ஏன் இப்படினு அந்த பொண்ணு கிட்ட கேளுங்க//

ரெண்டும் வேற வேற பொண்ணாச்சே?

அவுங்கக்கிட்டயும் கேட்கலாம். நீயா பணம் கொடுப்பன்னு கேட்பாங்க. நடிகர் கிட்ட போயி ஏன் இந்த வயசுல நடிக்கறீங்கன்னோ, உங்க வயசு நாயகி கூட நடிக்க வேண்டியது தானேன்னோ கேட்டா, ரசிகர்கள் ’நடிச்சா உனக்கு என்ன?’ன்னு கேள்வி கேட்பாங்க. இப்படி மாத்தி மாத்தி கேட்டுட்டே இருக்க வேண்டியது தான்.

சரவணகுமரன் said...

//நடிகர்கள் மட்டும்தான் டை அடிச்சிக்கிட்டு அலைரானுங்களா//

நீங்க கேட்கறது சரிதான். நாட்டில பல பேரு இப்படி தான் இருக்காங்க. எல்லோர்க்கிட்டயும் கேட்கலாம். நடிகர்கள்கிட்டயும் கேட்கலாம். :-)

சரவணகுமரன் said...

//உங்களுக்கு தொழிலுக்கும் வாழ்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல, என்ன கேட்ட சினிமாவில் நடிகர் நடிகையை கட்டிபிடிப்பதே பாதி விபசாரத்துக்கு சமம்
நால் சுவற்றுக்குள் கட்டிபிடித்தால் விபசாரம், கேமராவுக்கு முன்னாடி சினிமாங்கர போர்வைக்குள் கட்டிபிடித்தால் அதற்கு பெயர் நடிப்பு
//

கலக்கிட்டீங்க... முடிவுல என் பார்வைதான் தப்புன்னுட்டீங்க... :-)

சரவணகுமரன் said...

//அதுவும் ஒருவகையான சிரிப்புதான்
உங்களுக்கு அப்படிபட்ட காமெடி பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிகொள்ளுங்கள்//

யாரோ கலைவாணர்ன்னு ஒரு நடிகராம். இப்படி எதுவுமே இல்லாம, சிரிக்க வைப்பாராம். அப்படி ஒரு நகைச்சுவையை பார்க்கலாம்ன்னு ஆசைப்பட்டேன். முடியாது போப்பாங்கிறீங்க.

சரவணகுமரன் said...

//அது எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிகொள்வதும் ஒரு வகை நடிப்புதான்//

சூப்பரு... :-)

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

உழவன் சார்,

சூடான கேள்வி.

இப்படி கேட்டா, உங்க பார்வை சரியில்லைன்னு சொல்லிடுறாங்க...

சரவணகுமரன் said...

நன்றி ரிஷான் ஷெரீப்

வினோத் கெளதம் said...

//உங்க பேருக்கு முன்னால ஒரு பட்டப்பேரு வச்சிருக்கீங்களே? அதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?ன்னு என்னைக்காவது யோசிச்சியிருக்கீங்களா?//

இணையதள "தளபதி"
பதிவுலக "சூப்பர் ஸ்டார்"
வலையுலக "கேப்டன்"
சரவண குமரன் வாழ்க வாழ்க..

Thamira said...

ஒன்றுக்கொன்று சளைக்காத கேள்விகள்.. கலக்கல்.!

சின்னப் பையன் said...

ஹாஹா..


சந்தடிசாக்கில் எங்க தல ஜேகேஆரை இழுத்ததற்கு மென்மையாக கண்ணடிக்கிறேன்....

:-)))

சரவணகுமரன் said...

vinoth gowtham, ஏன் இந்த கொலைவெறி? :-))

சரவணகுமரன் said...

நன்றி தாமிரா

சரவணகுமரன் said...

ச்சின்னப் பையன், இவ்ளோ கேள்விக்கு எந்த நடிகரோட ரசிகரும் கேள்வி கேட்கலை. ஒரே ஒரு நடிகருக்கு தான் ஆதரவு குரல் வந்திருக்கு.

இதுல இருந்தே புரிஞ்சிக்குறேன், அவர் பவரை... :-))

கண்ணடிக்கிறதோட நிறுத்துக்கோங்க... :-))

ஸ்ரீதர்கண்ணன் said...

10) யக்கா, எப்படித்தான் நடிக்க வந்திருக்காட்டி டாக்டர் ஆகிருப்பேன், வக்கீல் ஆகிருப்பேன்ன்னு உங்களாலே புளூக முடியுது? அதான், உங்களுக்கு நடிக்க வரலில்ல? டாக்டர் ஆகிருக்க வேண்டியது தானே?

:))))

RAMASUBRAMANIA SHARMA said...

இதல்லாம் சினிமாவில் சாதாரணம்...அவங்க எல்லாம் அப்படித்தான்...எல்லாம் காலப்போக்கில் சரியாகி விடும் என்று நம்புவோம்..

சரவணகுமரன் said...

நன்றி ஸ்ரீதர்கண்ணன்

சரவணகுமரன் said...

RAMASUBRAMANIA SHARMA, அப்படியே நம்புவோம்...

Anonymous said...

சரவண குமரன்,

கேள்விகள் ஒவ்வொன்றும் அருமை...

நானும் பத்து கேள்வி கேட்டுட்டு, வலைப்பக்கத்தை மேஞ்சா ந்னக்கு முன்னாடியே ‘அராஜகம்' பண்ணியிருக்கீங்க...